Monday, December 5, 2011

பனி காலப் பிரச்சனைகளுக்கான தீர்வுகள்


காது, மூக்கு, தொண்டையை குளிர் அதிகம் தாக்குகிறது. குளிர்கால பிரச்னைகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி மருத்துவர்கள் விளக்குகின்றனர். குளிர் காலத்தில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தொற்று நோய்கள் எளிதில் தாக்குகிறது. அதற்கு காரணம் அவர்களிடம் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான்.

இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகம் இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சு திணறல், சளி என பிரச்னைகள் துவங்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் இதுவே காய்ச்சலாக மாறும். அதைத் தடுக்க இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் தாக்காத வண்ணம் காதுகளை மூடிக் கொள்ளலாம். குடிக்கும் தண்ணீர் சுத்தமானதாக இல்லாவிட்டால் தொண்டையில் நோய்த் தொற்று ஏற்பட்டு தொண்டை கட்டும். பேசுவதில் சிரமம் ஏற்படும். இருமல், வலியும் இருக்கும்.

ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சை அவசியம். கண்டுகொள்ளாமல் விட்டால் காய்ச்சலுடன் தொண்டை வலி, மூக்கு அடைப்பு, கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகளும் ஒட்டிக் கொள்ளும். பனிக்காலத்தில் ஏற்படும் சளி பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் விடுவதால் அது சைனசாக மாறுகிறது. மூக்கின் காற்றறைகளில் சளி சேருவதால் சைனஸ் பிரச்னை உண்டாகிறது.

இதற்கு சுய மருத்துவம் செய்து கொள்வது தவறு. அது நோயை முற்றிலும் குணப்படுத்தாமல் தலைவலியை உண்டாக்கும். சைனஸ் மற்றும் மூக்குத் தண்டு வளைவு உள்ளவர்களுக்கு குளிர்கால பிரச்னைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். கைகளை கழுவிய பின்னரே எதையும் தொட வேண்டும். இதன் மூலம் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கலாம்.

பாதுகாப்பு முறை: சளி பிடித்திருந்தால் நோய்த் தொற்றைத் தடுக்க திறந்த வெளிகளில் விற்கும் உணவு மற்றும் பழ வகைகள், பழச்சாறுகள் சாப்பிடக் கூடாது. பனியால் ஏற்படும் தோல் வறட்சியை விரட்ட வெளியில் சென்று வந்த பின்னர் தண்ணீரில் முகம் கழுவவும்.

மாய்சரைசிங் சோப்பை மட்டுமே பயன்படுத்தவும். வெயில் மற்றும் பனியால் தோலுக்கு ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க தரமான கிரீம்களை பயன்படுத்தலாம். பனிக்காலத்தில் முடி கொட்டும். இதைத் தடுக்க முடி வறட்சியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். குளிர் காலத்தில் அடிக்கடி நாக்கு வறட்சி ஏற்படும். தாகம் தீர நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுப் பொருட்களை அப்படியே சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அவற்றை சூடுபடுத்தி சாப்பிட வேண்டும். தலைவலி மற்றும் சளித் தொல்லையின் போது டீ, காபி தவிர்க்கவும்.

காபின் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் சளித்தொல்லை அதிகரிக்கும். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம் பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம்.

சின்ன குழந்தையை காரால் ஏற்றி கொலை செய்யும் சாரதி ..! (வீடியோ இணைப்பு)




வீதியில் நின்ற சின்ன குழந்தையினை பின்பக்கமாக காரை செலுத்திய சாரதி காரால் மோதி சாகடிக்கும் அதிர்ச்சி காணொளி …

23 வருடங்களாக சவப்பெட்டியினுள் தூங்கும் அதிசய மனிதர்! (படங்கள் இணைப்பு)


ஒரு வினோதமான மனிதரை இன்று சந்திக்கப் போகிறோம். நித்திரை வந்தால் மற்றவர்களைப் போல கட்டிலில் படுத்து உறங்காமல் வித்தியாசமாக உறங்கும் அதிசய மனிதரே இவராவார். கடந்த 23 வருடங்களாக சவப்பெட்டியினுள் உறங்கியும் வருகிறார். பிரேசிலைச் சேர்ந்த 61 வயதான Zeli Ferreira Rossi என்பவர் தூங்குவதற்கும் நியமான சவப்பெட்டியைப் பயன்படுத்துவது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.



இவருக்கு நோயைக் குணமாக்குவதிலும் தேர்ச்சி உண்டாம். ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு பீலிங்…



நன்றியுடன் ஸ்டாலின்.. இக்கட்டான நிலையில் ஜெயலலிதா செய்த உதவி!

வெள்ளிக்கிழமை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்று கைது செய்யுமாறு சவால் விட்டுத் திரும்பும்போது..சட்டசபை தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்தபின், ஸ்டாலினுக்கு இப்படியொரு எழுச்சியை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது. அப்படிக் கொடுத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. நில அபகரிப்பு புகார் ஒன்றில் ஸ்டாலின்மீது வழக்கு பதிவு செய்து, தி.மு.க.-வின் அடுத்த தலைவராகும் அளவுக்கு செல்வாக்கை எகிற வைத்திருக்கிறார் முதல்வர்.

முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின்மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) வழக்கு தொடுத்தவர்களே எதிர்பாராத ஒரு ட்டுவிஸ்டைச் சந்தித்தது. இதுவரை காலமும், நில அபகரிப்பு புகார்களில் குற்றம் சாட்டப்பட்ட தி.மு.க. புள்ளிகளை அவர்களது வீடுகளை போலீஸ் முற்றுகையிட்டு, ஜீப்பில் தூக்கிப் போட்டுக்கொண்டு வருவதுதான் செய்தி. ஸ்டாலின் அதிரடியாக தானே நேரடியாக டி.ஜி.பி. ஆபீஸில் போய் இறங்கி, “ஏங்க, நம்மைக் கைது செய்ய இப்ப வசதிப்படுமா?” என்று கேட்டுவிட்டு வந்திருக்கிறார்.

போலீஸ்தான் திருதிரு என்று விழித்து, மனுவை வாங்கிக்கொண்டு ஆளை வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

ஸ்டாலின் நில அபகரிப்பு செய்தாரா இல்லையா என்பதையெல்லாம் தாண்டி, ஸ்டாலின் அடித்திருப்பது அரசியல் ரீதியாக அட்டகாசமான அடி! கட்சிக்காரர்கள் மத்தியிலும் இதனால் அவரது இமேஜ் எகிறும். பொதுமக்கள் மத்தியிலும் வேறு விதமான ஒரு மெசேஜ் போய்ச் சேரும்.

பொதுமக்களைப் பொறுத்தவரை, தி.மு.க.-வினர் “எங்களை அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காக பொய் வழக்குகளைப் போடுகிறார்கள்” என்று சொல்லி வருவதை கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

ஸ்டாலினே நேரில் போலீஸிடம் சென்று, “முடிந்தால் கைது செய்து கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்திருப்பது, அவர்களுக்கு ஒரு லேசான சந்தேகத்தைக் கிளப்பப் போகின்றது – “ஆகா, இது போலி குற்றச்சாட்டு போலிருக்கிறது. இல்லாவிட்டால் இவர் தைரியமாக போலீஸிடம் போய் கைது செய்யும்படி சொல்லுவாரா? கேஸ் ஸ்ட்ராங்காக இருந்தால், போலீஸ்தான் அவரை திரும்பிச் செல்ல விட்டிருப்பார்களா?”

கட்சிக்காரர்கள் மத்தியில் ஸ்டாலினுக்கு ஏற்படக்கூடிய இமேஜைப் பாருங்கள்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்கள்கூட, ஜெயிலுக்குப் போகப் பயந்து தலைமறைவாகத் திரிந்த சூழ்நிலையில், ஸ்டாலின் போலீஸை தேடிச் சென்றது, அவருக்கு கட்சிக்குள் ஹீரோ அந்தஸ்தை ஏற்படுத்திவிடும். கட்சியின் அடுத்த தலைவர் என்ற பதவிக்குச் செல்லும் பாதையை சுலபமாக அமைத்துக் கொடுத்துவிடும்.

நேற்று திடீரென டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்ற ஸ்டாலின், “எங்கள் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக, டி.ஜி.பி.யை சந்திக்க வந்தேன். அவர் இல்லாததால், கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் மனு அளித்துள்ளேன். புகார் அளிக்கப்பட்டுள்ள சொத்துக்கும், எனது குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உதயநிதியின் திரைப்பட நிறுவனத்துக்காக வாடகை ஒப்பந்தம் போடப்பட்ட இடத்தில், என் மகளும், மருமகனும் குடியிருந்து வருகின்றனர்” என்று விளக்கம் கொடுத்து, அது பக்காவாக மீடியாக்களில் பிளாஷ் ஆகுமாறு செய்திருக்கிறார்.

வரிசையாக நடந்த முன்னாள் தி.மு.க. அமைச்சர்களின் கைது விவகாரங்களை ஓரிரு வரிகளில் நியூஸ் போடும் பிற மாநில பத்திரிகைகள்கூட, ஸ்டாலின் அதிரடியை பெரியளவில் கவர் பண்ணியிருப்பதைக் கவனியுங்கள்!

அவர் இதே விளக்கத்தை வீட்டில் இருந்து கொடுத்திருந்தாலோ, அல்லது கைது செய்யப்பட்டு ஜீப்பில் ஏற்றப்படும்போது கொடுத்திருந்தாலோ அதற்கு இந்தளவு மீடியா பிளாஷ் கிடைத்திருக்காது. தானே வலிய கைதாகப் போனதுதான் பிளாஷ்-பாயின்ட். அதில் சொல்பவை எல்லாமே சைக்காலஜிக்கலாக மக்கள் மத்தியில் எடுபடும்!

ஸ்டாலின் விவகாரம் இப்படி பேக்-ஃபயர் பண்ணும் என்பதை புரிந்து கொள்ளாமல் ஜெயலலிதா செய்தாரா, அல்லது, கிடைத்த சான்ஸை ஸ்டாலின் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாரா என்பதுதான் கேள்வி.

2 வயது குழந்தையின் நாக்கை அறுத்து சிகரெட்டால் சூடு போட்ட தந்தை!!


மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக 2 வயது குழந்தையின் நாக்கை அறுத்து, உடம்பெல்லாம் சிகரெட்டால் சூடு போட்டுள்ளார் ஒரு கொடூரமான தந்தை. குடும்ப பிரச்சினை காரணமாக குழந்தைகளை விட்டுவிட்டு முதல் மனைவி பிரிந்து சென்றதால் மனைவி மீதுள்ள கோபத்தை குழந்தை மீது காட்டியுள்ளார் அந்நபர். இந் நபர் 35வயதான பூமிநாதன். சாராய வியாபாரி. இவரது மனைவி 28 வயதான சங்கீதா. இவர்களுக்கு பூமிகா(4), புவனேஸ்வரி (2), சந்தோஷ் (1) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.


கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா 7 மாதங்களுக்கு முன்பு சங்கீதா தாயாருடைய வீட்டிற்கு சென்றுவிட்டார். குழந்தைகள் பூமிநாதனிடம் வளர்ந்தன. இதற்கிடையில் பூமிநாதன், சத்யா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று குழந்தை புவனேஸ்வரியை பூமிநாதன் சிகரெட்டால் உடம்பு முழுவதும் சூடு வைத்து அடித்துள்ளார். இதில் குழந்தைக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
மேலும் பிளேடால் குழந்தையின் நாக்கை அறுத்தார். இதையறிந்த குழந்தையின் தாய் சங்கீதா குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு குழந்தை புவனேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து சங்கீதா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் குறித்த குற்றவாளியை தேடிவருகின்றனர்.

Sunday, December 4, 2011

கழுத்து முற்றாக அறுபட்டும் சாதாரணமாக திரியும் அதிசய சேவல்!! (வீடியோ இணைப்பு)



சேவலின் கழுத்தினை வெட்டினாலும் சிறிது நேரத்திற்கு துடிதடித்து பின் இறந்துவிடும். எனினும் இந்த சேவலினை பாருங்கள் முற்றாக கழுத்து அறுபட்டும். சாதாரணமாக மேய்ந்து திரிகின்றது. முஸ்லீம்கள் இதனை அல்லாவின் அதிசயம் என்கின்றனர்.

இது யாருடைய அதிசயமோ அது தெரியவில்லை ஆனால் சேவல் உயிரோடு உள்ளது மட்டும் உண்மை.



ஆச்சரியம் தரும் வீடியோ - ஒளியை உணர வைக்கும் நிழலின் மாயை –




மனித மூளையை வெளிச்சம் மற்றும் அதன் நிழல்கள் மூலம்


குழப்பமடைய வைக்கலாம் என நிரூபிக்கிறார்கள் இந்த வீடியோ மூலம்.


இந்த வீடியோவில் வருகின்ற பாக்ஸில் நடுவில் இருப்பதும் ஓரத்தில் இருப்பதும் ஒரே நிறமாக இருந்தாலும் எமது கண்களுக்கு அது வெண்மையாகவே தெரியுமாம்.