Wednesday, January 12, 2011

10 ரூபாய் நாணயம் புழக்கத்துக்கு வரும்

பத்து ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் விட்டுள்ளது மத்திய ரிசர்வ் வங்கி.

பத்து ரூபாய் நோட்டுக்கள் அதிகப் புழக்கத்தில் உள்ளதால் குறுகிய காலத்திலேயே சேதமடைமந்து விடுகின்றன. எனவே இதைத் தடுக்க பத்து ரூபாயை நாணய வடிவில் அச்சடித்துள்ளது.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தை வலியுறுத்தும் இந்த நாணயங்கள் 27 மில்லிமீட்டர் விட்டமும் 7.71 கிராம் எடையும் கொண்டவை. வெண்கலம், செம்பு, அலுமினியம், நிக்கல் ஆகிய உலோகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயத்தின் முன்புறம் 2 குறுக்குக் கோடுகளால் 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மத்தியில் அசோகா தூணின் சிங்க முகமும் அதற்குக் கீழ் 'சத்யமேவ ஜெயதே' என்ற இந்தி வாசகமும் இடம் பெற்றுள்ளது.

நாணயத்தின் பின்புறத்தில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தை வலியுறுத்தும், ஒரே உடலில் 4 தலைகள் இருப்பது போன்ற சித்திரம் இடம் பெற்றுள்ளது. மேலும் பத்து ரூபாய் என்ற எழுத்து, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

பத்து ரூபாய் நாணயத்தை இந்திய நாணயத்துறை ஏற்கனவே அச்சடித்து புழக்கத்தில் விட்டிருந்தது. ஆனால் அவை மிகக் குறைந்த அளவே புழக்கத்தில் இருந்தன. 


சரியாக பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் முழு அளவில் 10 ரூபாய் நாணயங்களைப் பயன்பாட்டுக்கு விட்டுள்ளது ரிசர்வ் வங்கி.

இடுப்பு எலும்பு முறிவு

இடுப்பு எலும்பு முறிவு பெரும்பாலும் வயதானவர்களுக்கு எலும்பில் சத்துக்குறைவால் ஏற்படுகிறது.சாதாரண சிறு சறுக்கல்,தடுமாறி விழுவதுகூட போதும். தொடை எலும்பின் மேற்பகுதி எலும்பு(FEMUR) அதாவது இடுப்புப்பகுதி இரண்டு இடங்களில் உடையும்! 













1.சிகப்பு நிறத்தில் காட்டியிருக்கும் எலும்பின் கழுத்துப்பகுதி! 

2.ஊதா நிறத்தில் காட்டப்பட்டு இருக்கும் எலும்பின் கழுத்துப்பகுதிக்கு வெளியில் உள்ள (TROCHANTER) எலும்புப்பகுதி!!

ரொம்ப சாதாரணமான விஷயங்க.

சிகப்புநிறத்தில் உள்ள எலும்பின் கழுத்துப்பகுதிக்கு இரத்த ஒட்டம் ஊதா நிறப்பகுதியில்,அதாவது மூட்டின் வெளிப்பகுதியில் இருந்துதான் போகிறது.

இந்த இடம் புரிந்தால் எல்லாம் எளிமை. இல்லை புரியாம தலை சுத்துதா? 

எலும்பின் சிகப்புப் பகுதியான கழுத்துப்பகுதியில் எலும்பு உடைந்தால் அதற்கு மேல் உள்ள மூட்டு உருளை இரத்த ஓட்டம் இல்லாமல் பட்டுப்போகும்.

அப்படி ஏற்படும்போது நாம் உருளையை மாற்ற வேண்டும்!! 






















மேலே உள்ள படம் உருளை மாற்றிய பின்...

2.மூட்டின் வெளிப்பகுதியில்-அதாவது ஊதாநிறப்பகுதியில் உடைந்ததால் எலும்புக்கு இரத்த ஒட்டம் பாதிக்காது. ஆகையால் எலும்பு பட்டுப்போகாது!

ஆகையால் எலும்பை மாற்ற வேண்டிய தேவை இல்லை.

தகடு, திருகாணிகள் கொண்டு சரி செய்து விடலாம். 


Read more: http://therinjikko.blogspot.com/2009/04/blog-post_9089.html#ixzz1B7yPoaky

வலுச்சண்டைக்கு போவர் வட்ட முகம் உள்ளவர்

 “ எதற்கெடுத்தாலும் சுருக்…கென கோபம் வரும்.  வட்டமுகம் உள்ளவர்களுக்கு; வலுச்சண்டைக்கு போவர்!’ - பிரிட்டன் மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட வித்தியாசமான ஆய்வில் இப்படி ஒரு உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ப்ரூக் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிபுணர் செரில் மெக்கர்னிக் தலைமையில் நடந்த, இந்த ஆய்வில் தெரியவந்த உண்மைகளை “டெய்லி டெலிகிராப்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆண்களில் யாருக்கு அதிக கோபம் வரும் என்பது பற்றி ஒரு ஆய்வை நிபுணர்கள் மேற்கொண்டனர். பல துறையை சேர்ந்தவர்களை உதாரணமாக கொண்டும், இன்டர்நெட்டில் ஆன்-லைன் சர்வே நடத்தியும் ஆய்வு மேற்கொண்டதில் சில உயிரியல் உண்மைகள் தெரியவந்துள்ளன. ஆண்களில் வட்ட முகம் எந்த அளவுக்கு உள்ளதோ, அப்படிப் பட்ட ஆண்களுக்கு தான் “சுர்ர்ர்…’ ரென கோபம் வருகிறது. அவர்கள் தான், எந்த ஒரு விஷயத்திற்கும் வலுச்சண்டைக்கு போகின்றனர் என்று தெரியவந்துள்ளது. பிரபலமான விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உட்பட பல துறையினரின் பழக்கவழக்கத்தை இதற்கு சான்றாக ஆய்வுக்கு பயன்படுத்தியுள்ளனர் நிபுணர்கள்.
குறிப்பாக, 90 கால்பந்து விளையாட்டு வீரர்களின் மனப்போக்கை ஆய்வுக்கு முழுமையாக பயன் படுத்திக்கொள்ளப்பட்டது. இந்த விளையாட்டு வீரர்களில் பெரும்பாலோர், கோல் போடுவதில், எதிர் அணி வீரர்களுடன் மல்லுகட்டுவதில் சம்பந்தப்பட்டுள்ளனர். மிகவும் கோபக்காரர் என்று பெயர் பெற்றுள்ளனர். இவர்களில், பெரும்பாலோருக்கு வட்டமுகம் என்ற விஷயம் நிபுணர்களை அசர வைத்துள்ளது. இவர்களை சான்றாக வைத்து, மற்ற துறையினரையும் தேர்வு செய்து, அவர்களின் மனப்போக்கை ஆய்வு செய்தனர்.
ஆண்களில் வட்ட முகம் உள்ளவர்களுக்கு, கோபம் அதிகம் வரும் என்ற உறுதியான முடிவுக்கு நிபுணர்கள் வந்துள்ளனர். மனிதனின் போக்குக்கும்,அவனது முகத்தோற் றத்துக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. ஒவ்வொரு போக்கிலும், அவன் முகம் தான் முதலில் காட்டிக் கொடுக்கிறது. அந்த வகையில், அவன் முகத்தோற்றமும் அவன் சுபாவத்தை முடிவு செய்கிறது. வட்ட முகம் இல்லாமல், நீள முகம் கொண்ட பலர் சாந்த சொரூபராக உள்ளதும் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது
.
ஆண்களை பொறுத்தவரை தான் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. ஆனால், பெண்களின் சுபாவத்தை கண்டறிய அவர்களின் முக வடிவம் பயன்படவில்லை. பெண்களில் முகத்தை வைத்து அவர்கள் சாந்தமானவரா, கோபக்காரரா என்பதை அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. வட்ட, நீள முகம் கொண் டவர்களில் சரிசமமாக கோபக்காரராக இருப்பதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது

ஏமாறுவது எங்கள் வாடிக்கை +


*ரயில் பயண சிநேகிதனின் ரகசிய பிஸ்கட் தந்த மயக்கத்தில் பண்ப்பையை பறிகொடுத்து விட்டு ஏமாந்து நிற்போர்




*தொலைக்காட்சியின் விளம்பரம் கண்டு போலி மருந்தொண்று  வாங்கி உண்டு இருந்த உடல் நலத்தையும் இழந்து விட்டு ஏமாந்து நிற்போர்

*பதிவு செய்தால் வேளை என்ற அரசு உத்திரவாதத்தில் மயங்கி பதிவு செய்து வேலை கிடைக்காமல் ஏமாந்து நிற்போர்.

*பழைய நகையை பாதுகாக்கும் எண்ணத்தில் முன் பின் தெரியாதவனிடம் பாலிஷ் போட கொடுத்து விட்டு துரும்ப கிடைக்காமல் ஏமாந்து நிற்போர்

*அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு சிறுக சிறுக சேர்த்த பணத்தை சீட்டுக் காரனிடம் கொடுக்க அவன் அதை சீட்டிங் அடித்து விட அசலே கிடைக்காமல் ஏமாந்து நிற்போர்

*வெளிநாட்டு மோகத்தில், இருந்த ஓர் ஏக்கர் நிலத்தையும் ஏஜெண்டிடம் கொடுத்து விட்டு எந்த ஒரு விசாவும் வராமல் ஏக்கப் பெருமூச்சுடன் ஏமாந்து நிற்போர்

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு  விதத்தில் ஒவ்வொரு நாளும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு ஏமாற்று பவர்களிடமிருந்து ஏமாறாமல் நாம் தான் உஷார் நிலையில் இருக்க வேண்டும்

புகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வேறு பாடு இல்லை

1) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?




2) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் ஆயுளின் எட்டு நிமிடங்களை குறைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

3) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

4) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்கள் இதயத்தை எரித்துக்கரியாக்கி கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

5) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் பொருளாதார வீழ்ச்சிக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் கொள்ளி என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

6) நீங்கள் பொது இடங்களில் பிடிக்கும் புகையின் நெடி ஆறுமணி நேரம் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்பாவி மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

7) நீங்கள் உங்கள் பிள்ளைகளின் பார்வையில் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் அந்த இழம்பிஞ்சுகளுக்கு ஆரம்ப பாடமாக அமைகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

8) நீங்கள் புகைப்பிடிப்பதை உங்கள் மனைவியர்கள் கூட விரும்பாமல் மனம் குமுறுவதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

9) நீங்கள் புகைப்பிடிக்கும்போது உங்கள் அருகில் இருக்கும் நண்பர்கள் கூட உங்களை வேண்டா வெருப்போடு பார்ப்பதை பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா?

10) நீங்கள் புகைப்பிடித்து விட்டு வீசி எறியும் சிகரட் துண்டினால் எத்தனை குடிசைகளும், கிராமங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

11) நீங்கள் புகைத்துக்கொண்டே உங்கள் செல்வக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி மகிழும் போது அந்த புகையின் நெடியால் உங்கள் பிஞ்சு மழலைகள் நஞ்சை உட்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

12) நீங்கள் புகைப்பதால் உங்களை நீங்களே அழித்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

13) புகைப்பிடித்து பாதிப்புக்கு உள்ளாகி ஆண்டுதோறும் லட்சக்கணக்காண மக்கள் மரணத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
14) நீங்கள் புகைக்கும் புகையிலுள்ள நச்சுப்பொருள்கள் உங்கள் இரத்தத்தோடு கலந்து இரத்த நாளங்களை அடைக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

15) இளமையில் புகைத்து, புகைத்து தள்ளிவிட்டு முதுமையில் குரைத்து, குரைத்து அவஸ்தை படுபவர்களை பார்த்து நீங்கள் சிந்தித்தது உண்டா?

16) புகைப்பதை நிறுத்த முடியவில்லையே என்று நொண்டிக்காரணங்களை கூறுபவர்களால் இந்த உலகத்தில் வேற என்னதான் சாதிக்க முடியும்? என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

17) புகைப்பிடிப்பது ஆபத்து என்று விளம்பரம் செய்துகொண்டே வளர்ந்து கொண்டிருக்கும் சிகரட் உற்பத்தியாளர்களையும், அதை புகைத்து, புகைத்து வீழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் எதிர்காலத்தை பற்றியும் நீங்கள் சிந்தித்தது உண்டா?

18) புகைப்பிடிப்பது நாகரீகம் என்ற நிலை மாறி, புகைப்பிடிப்பது அநாகரீகம் என்ற உணர்வுக்கு இளைஞர்கள் மாறி வருவதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

19) உலகில் முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகள் பலவும் புகைப்பிடிப்பதற்கு தடைபோட்டு சட்டம் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

20) புகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வேறுபாடு இல்லை என்பதை இப்போதாவது நீங்கள் சிந்தித்து பார்ப்பீர்களா?உங்கள் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் ஐந்தே ஐந்து நிமிடம் சிந்தனை செய்து புகை எனும் அரக்கனிடமிருந்து விடுதலை பெருங்கள்.


பதின் வயதினருக்கானது …


பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று இன்றைய பதின் வயதினரை ஒழுங்காகத் தூங்குங்கள் என எச்சரிக்கிறது

தூங்காதே தம்பி தூங்காதே என பாடியதெல்லாம் பழைய கதை. இப்போது இளைஞர்களையும், பதின் வயதினரையும் பார்த்து தூங்குங்கள், தூங்குங்கள் என துரத்தும் காலம். அவர்களைத் தூங்காமல் இருக்க வைப்பதற்காக ஊடகங்கள் பயனற்ற அரைகுறைக் கலாச்சார நிகழ்ச்சிகளை நிதமும் அரங்கேற்றிக் கொண்டே இருக்கின்றன.
நள்ளிரவுக்கு மேலும் விழித்திருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும், கணினியில் விளையாடுவதும், செல்போனில் அளவளாவுவதும் என இன்றைய இளசுகளுக்கு தூக்கத்தைத் தவிர்க்கும் வழிகள் ஏராளமாய் இருக்கின்றன.
இவையெல்லாம் உடல்நலத்துக்கு பெரிதும் தீங்கானது, போய் தூங்குங்கள் என பெரியவர்கள் சொன்னாலும் இந்த பதின் வயதினர் அவற்றைக் காதுகொடுத்துக் கேட்பதில்லை. அப்படிப் பட்டவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாய் வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.
பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த இந்த ஆய்வின் முடிவு ஒழுங்கான தூக்கம் இல்லாத பதின் வயதினருக்கு உயர் குருதி அழுத்த நோய் வரும் என அதிர்ச்சிச் செய்தியை அறிவித்திருக்கிறது.
ஒழுங்கான தூக்கம் இல்லாதவர்கள் அதிக எடையுடையவர்களாய் மாறும் அபாயம் இருப்பதாக முன்பு ஒரு ஆராய்ச்சி முடிவு வெளியிட்டிருந்தது. இப்போது அதைவிட அச்சுறுத்தல் தரும் இந்த ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது.
உயர் குருதி அழுத்தம் என்பது இதய நோய் உட்பட பல்வேறு பெரிய நோய்கள் வருவதற்கான காரணமாகி விடக் கூடும் என்பதால் இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில் முக்கியத்துவம் பெறுகிறது.
முழுக்க முழுக்க பதின் வயதினரின் உடல் நலம் தொடர்பாய் நிகழ்த்தப்பட்ட இந்த சோதனையில் கலந்து கொண்ட அனைவரும் 13 க்கும் 19க்கும் இடைப்பட்ட வயதினர் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களில் சுமார் நாற்பது விழுக்காடு பேர் குறைந்த தூக்கம், அல்லது நிம்மதியற்ற தூக்கத்தையே கொண்டிருப்பதாக தெரிய வந்திருப்பது கவலைக்குரியதாகும்.
பல்கலைக்கழக தூக்கம் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவு இயக்குனர் சூசன் ரெட்லைன் இது பற்றிக் குறிப்பிடுகையில், இதுவே முழுக்க முழுக்க பதின் வயதினரை வைத்து நிகழ்த்தப்படும் தூக்கம் தொடர்பான முதல் ஆராய்ச்சி என தெரிவித்தார். இதன் முடிவு தூக்கம் தொடர்பான மற்ற ஆராய்ச்சி முடிவுகளை விட அச்சுறுத்தக் கூடியது என அவர் கவலை தெரிவித்தார்.
தற்போதைய வாழ்க்கை முறை பதின் வயதினரை பல்வேறு விதமான கேளிக்கைகளுக்குள் இழுத்துச் சென்று அவர்களுடைய நேரத்தையும், உடலையும் வீணடிக்கிறது. கிடைக்கும் ஓய்வு நேரத்தில் உடலுழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளில் ஈடுபடுவது இரவில் நல்ல தூக்கத்துக்கு உத்தரவாதம் தரும். அதை விடுத்து வெறுமனே தொலைக்காட்சி எனும் தூக்குக் கயிற்றில் தொங்கினால் வாழ்க்கை நலமிழக்கும், அர்த்தமிழக்கும்.

நம்பினால் நம்புங்கள், பதினைந்து வினாடிகளில் ஒரு பயோடேட்டா அங்கீகரிக்க, அல்லது நிராகரிக்கப்படும்


அமெரிக்கப் பொருளாதாரம் அடியோடு சாய்ந்து அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு நீண்ட நெடிய நெருக்கடி நிலையில் விழுந்து கிடக்கிறது.


அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி உலகெங்கும் சல்லி வேர் பரப்பி உலகின் எல்லா பாகங்களிலும் அதன் பாதிப்பு பலமாகவே இருக்கிறது.
நிறுவனங்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு தினமும் ஆயிரக்கணக்கான ஆட்களை வேலையை விட்டு உதறிக்கொண்டே இருக்கிறது. வீதியில் வேலை தேடுவோர் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து கொண்டே இருக்கின்றன.
கடுமையான நெருக்கடியும்,வேலை வாய்ப்பின்மையும் மக்களை கலங்கடித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் உண்மையான திறமையும், அதை சிறப்பாக வெளிப்படுத்தத் தெரிந்திருத்தலும் அவசியமாகிறது.
அதற்கெல்லாம் முன்பு நமது கையிலிருக்கும் பயோடேட்டா மிகச் சிறப்பானதாக இருக்க வேண்டும். பயோடேட்டாவைப் பார்த்தவுடன், “இந்த நபர் தான் நமது வேலைக்குச் சரியான ஆள்” என நிறுவனங்கள் நினைக்க வேண்டும்.
நம்பினால் நம்புங்கள், பத்து முதல் பதினைந்து வினாடிகளில் ஒரு பயோடேட்டா அங்கீகரிக்கப்படும், அல்லது நிராகரிக்கப்படும் என்பது தான் பொதுவான உண்மை.
அதற்கு என்ன செய்யலாம் ?
1. நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஒரே செயலை அவரவர் பாணியில் பெயரிட்டு அழைப்பார்கள். எனவே நிறுவனங்கள் பயன்படுத்தும் சொற்றொடர்கள் உங்கள் பயோடேட்டாவில் இருப்பது அவசியம். உங்கள் பயோடேட்டாவில் இருக்கும் செய்திகளை வாசித்து அதன் வாக்கிய அமைப்புகள், பெயர்கள் போன்றவற்றை நிறுவனம் பயன்படுத்தும் பெயர்களாகவும், சொற்களாகவும் மாற்றுங்கள்.
2. நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட திறமையை எதிர்பார்ப்பார்கள். எனவே உங்கள் பயோடேட்டாவில் அந்தந்த செயல்களை முதன்மைப் படுத்துங்கள். உங்கள் பயோடேட்டா குறிப்பிட்ட வேலைக்கு நீங்கள் தகுதியானவரா என்பதை காண்பிக்கத் தான், உங்கள் வரலாறை எழுத அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். 
3. குறிப்பிட்ட வேலைகளுக்கு மட்டுமே விண்ணப்பியுங்கள். குறிப்பாக இணையம் மூலமாக விண்ணப்பிக்கிறீர்களெனில் மிகவும் தேர்வு செய்து விண்ணப்பியுங்கள். நீங்கள் இலட்சிய வாதிபோல தோற்றமளிக்க வேண்டுமே தவிர, ஏதோ ஒரு வேலை  கிடைத்தால் போதும் என அலைந்து திரிபவராய் தோற்றமளிக்கக் கூடாது.
4. பயோடேட்டாவின் முதல் பக்கம் மிக மிக முக்கியமானது. பெரும்பாலான நிறுவனங்கள் முதல் பக்கத்தைப் பார்த்தவுடன் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ செய்கின்றன. எனவே முதல் பக்கத்தில் முக்கியமான அனைத்து செய்திகளும் இடம்பெறல் அவசியம். குறிப்பாக உங்கள் திறமை, அனுபவம், கல்வி, பெற்ற விருதுகள் போன்றவை
5. பயோடேட்டா தெளிவாக, போதிய இடைவெளியுடன் வாசிக்க மிகவும் எளிதாக இருக்க வேண்டும்.  எழுத்துருக்கள் தெளிவாகவும், கண்ணை உறுத்தாத அளவிலும் இருத்தல் அவசியம். தேவையற்ற அலங்கார எழுத்துருக்களை விலக்குங்கள்.
6. உங்களுக்கு திறமை எதிலெல்லாம் உண்டென நீங்கள் குறிப்பிடுகிறீர்களோ அந்தத் திறமை எப்படி வந்தது என்பதையும் குறிப்பிடுங்கள். அதுவே ஒரு முதல் நம்பிக்கை உருவாக காரணமாகும்.
7. தேவையற்ற பகுதிகளை வெட்டி விடுவதில் ஈவு இரக்கம் காட்டாதீர்கள். எது தேவையோ அது மட்டுமே உங்கள் பயோடேட்டாவில் இருக்க வேண்டும்.
8. ஓரிரு பக்கங்களில் உங்கள் பயோடேட்டாவை சுருக்க முடிந்தால் அதுவே மிகச் சிறப்பானது. முக்கியமான வாக்கியங்களை அல்லது வார்த்தைகளைத் தடிமனான எழுத்தில் போடுங்கள்.
9. எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருத்தல் மிக அவசியம். தெளிவான வாக்கிய அமைப்பு, நல்ல ஒளியச்சு அல்லது நகல் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்.
10. நீங்கள் முன்பு பணிபுரிந்த அலுவலகங்களின் தொடர்பு எண்கள், அதிலுள்ள முக்கியமான நபர்களின் தொடர்பு எண்கள் போன்றவற்றை அளிப்பதும் உங்கள் மீதான நம்பகத் தன்மையை அதிகப்படுத்தும்.

உங்கள் பயோடேட்டா உங்களுடைய வேலைக்கான முதல் சுவடு. அதைச் சரியான திசையில் எடுத்து வைப்பதில் தான் இருக்கிறது பயணத்தின் வெற்றியும் தோல்வியும்.