Wednesday, November 23, 2011

சுண்டெலிகளை மிக்சியில் அரைத்து குடித்த இளைஞன்


தயவுசெய்து இதனை குழந்தைகள் முன்போ அல்லது அருவருப்புத்தன்மை கொண்டவர்களோ பார்ப்பதை தவிர்த்துக்கொள்ளவும் .


உயிருள்ள பூச்சிகள் மற்றும் பிராணிகளை உணவாக உட்கொண்டு மற்றவர்களை அசத்தும் பொழுதுபோக்கில் ஈடுபடுபவரே பிரித்தானியாவைச் சேர்ந்த இந்த இளைஞன். நாம் இதற்கு முன்னர் இவர் ஒரு உயிருள்ள தேள் ஒன்றை வாயில் போட்டு மென்று உண்ணும் காணொளியை தந்திருந்தோம். தற்போது அவர் 10 வெள்ளை நிற சுண்டெலிக்குஞ்சுகளை கிரைண்டரில் போட்டு அரைத்து அதை ஜூஸ் (பாணமாக) அருந்திக்காட்டும் காட்சிகள் பார்ப்பவர்களை நெகிழ வைக்கிறது.

இப்படியும் மனிதர்களா என எண்ணத்தோன்றுகின்றது இந்த இளைஞனுடைய ஒவ்வொரு செயற்பாடுகளும். இவர் எலிகளை அரைத்து பாணமாக அருந்தும் காணொளி தரப்பட்டுள்ளது. தயவுசெய்து இதனை குழந்தைகள் முன்போ அல்லது அருவருப்புத்தன்மை கொண்டவர்களோ பார்ப்பதை தவிர்த்துக்கொள்ளவும் .










-

-


பத்து வயதில் சிறுமி பெற்ற பிள்ளை

மெக்சிக்கோ நாட்டில் பத்து வயது சிறுமி ஒருவர் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். (குழந்தைக்கே குழந்தை என்பது துயரமான விடயம்)


31 வாரங்களாக பிள்ளையினை சுமந்து தனது 11வது வயதில் குழந்தையினை பெற்றெடுத்துள்ளார்.

Puebla என்னும் நகரத்தில் உள்ள பெண்கள் மருத்துவமனையில் இக் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை 3.3 பவுண்டு நிறையுடன் காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளது.

இக் குழந்தைக்கான அப்பா யார்? கற்பழிக்கப்பட்டாரா? அல்லது என்ன நடந்துள்ளது என ஆராய Puebla சட்டவாக்கல் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.






எனக்கு இன்னொரு முகம் இருக்கு. சிம்பு

தற்போது நடித்து முடித்திருக்கும் ஒஸ்தி படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடந்தபோது “ தினசரி கிரிகெட் விளையாட வசதியாக மலை 5 மணிக்கு மேல் நடிக்க முடியாது” என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாராம் தரணியிடம். அதேபோல கோ படத்திலும் ” தமன்னாவை ஹீரோயினாக புக் செய்தால் இந்தப் படத்தில் நடிக்கிறேன்” என்று கே.வி.ஆனந்துக்கு கடைசி நேரத்தில் தலைவலி கொடுத்தார் என்கிறார்கள்.


சிம்பு தான் இணைந்து வேலைசெய்யும் எந்த இயக்குனரோடும் வம்பு பண்ணாமல் இருந்ததில்லை. கௌதம் மேனனிடம் கூட “த்ரிஷாவுக்கும் எனக்குமான முத்தக்காட்சி இருந்தால் நன்றாக இருக்கும்” என்று குடைச்சல் கொடுத்துப் பார்த்தாராம். ஆனால் கௌதம் மசியவில்லை என்கிறார்கள்.
பெரிய இயக்குனர்களே சிம்புவுடன் இந்தப் பாடு படுகிறார்கள் என்றால் , அறிமுக இயக்குனர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஏற்கனவே மன்மதன் படத்தின் கதையால் முருகன் என்கிற இயக்குனருக்கும் சிம்புவுக்கும் முட்டிகொண்டு, பிரச்சனை இயக்குனர் சங்கம் வரை வந்து சமாதானமானது.

தற்போது ஜி.டி.நந்து என்பவரை சிம்பு மிரட்டுவதாக எல்லோரிடத்திலும் அவர் புலம்பிக் கொண்டிருப்பதாக ஹாட் தகவல் நம் காதுகளை எட்டியது. வின்னைத்தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு கெட்டவன் படத்தில் நடிக்க இருந்தார் சிம்பு. இந்த கெட்டவன் என்கிற படத்தின் இயக்குனர்தான் ஜி.டி.நந்து.

சிம்பு மாறிவிட்டார் மென்மையான மனிதராகிவிட்டார் என்று சொன்னார்கள். ஆனால் இப்போதைய நிலைமை அதுவல்ல! சிம்பு தன்னை மாற்றிக் கொள்ளவே இல்லை என்பதுதான் கண்கூடு என்கிறார்கள் செய்தியாளர்கள் வட்டத்தில்.

அந்தப் படம் 15 நாட்கள் வளர்ந்த நிலையில் அப்படியே நிற்கிறது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் சிம்பு என்றும் இயக்குனர் நந்து என்றும் விளம்பரங்கள் வெளியிடப் பட்டன.. ஆனால், படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எல்லாமுமே இவரது தானாம்! இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எல்லாவற்றையும் தன்னுடையது என்று எழுதி வாங்கிக்கொண்டாராம், சிம்பு.

இந்தப் படத்தை பல நாட்களாக தொடங்காமல் விட்டு விட்டதால், இயக்குனர் தன் வாழ்க்கை எங்கேயும் நின்று விடக்கூடாதே என்று நடிகர் பரத்திடம் சொல்ல அவருக்கு கதை பிடித்துப் போக, சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிப்பில் கெட்டவன் படத்தை உருவாக்கக் நந்து ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த விஷயம் சிம்புவுக்கு தெரிந்ததும் சந்திரபிரகாஷ் ஜெயினிடம் பேசி “ கதை என்னுடையது “ என்று கதை விட்டு, படத்தை எடுக்காமல் செய்துவிட்டாராம்.

சிம்புவின் வம்பிலிருந்து தப்பிக்க ஆந்திராவுக்கு சென்று நடிகர் சிரஞ்சீவியின் மைத்துனர் மகனும் இளம் ஹீரோவான அல்லு அர்ஜுனிடம் கெட்டவன் கதையைச் சொல்லியிருக்கிறார் நந்து. அவருக்கு கதை பிடித்துப் போகவே சொந்தமாக தயாரிக்க முன்வந்திருக்கிறார். இந்த விஷயமும் சிம்புவுக்குத் தெரிந்ததும் அல்லு அர்ஜுனிடம் பேசி படத்தை எடுக்கவிடாமல் செய்து விட்டாராம், சிம்பு.

அதன்பிறகு நொந்துபோன இயக்குனர் நந்துவை அழைத்து சிம்பு மிரட்டியதாகவும் , நந்து செய்தியாளர்களிடம் தொலைபேசி வழியாக தெரிவிக்கிறார். என்னை சிம்புவிடமிருந்து காப்பாற்றுங்கள் என்று நெருக்கமான மீடியா நண்பர்களிடம் கதறி வருகிறார் நந்து! இந்த விவகாரத்தில் நந்து சொல்வது உண்மையா..…?

கூகிள் மூடிய கம்பெனிகள்


கூகிள் அடிக்கடி தனது வலைக்கட்டமைப்பை [Design]/ இடைமுகத்தை[interface] மாற்றி அமைக்கும் என்பது தெரிந்த விஷயம் தான் ஆனால் தற்போதெல்லாம் சில முக்கிய சேவைகளையே மூடிவிடுகிறது. மாற்றங்கள் என்பது மவுசை பிடித்து ஆனா போட்ட காலம் தொட்டே இருக்கிறது ஆனால் அவை மேம்படுத்தப் பட்டே வந்ததேயென்றி கைவிடப்படவில்லை. இங்கு கூகிள் கைவிடப்படும் சேவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நான் அதிகரிக்கவும் செய்கிறது. 

சில மாதங்களுக்கு முன் இணைய பயனர்கள் குறிப்பாக தமிழர்களும் மிகவும் கவலைப்படும்படியாக கூகிள் அகராதியை மூடியது. அதற்கு மாற்றாக கைகாட்டப்பட்ட கூகிள் மொழிமாற்றி[google translate] இன்னும் மொக்கையாகவே உள்ளது. கொடுக்கும் வார்த்தைகளுக்கு பொருள் கூட சரியா காட்டுவதில்லை. அதனுடன் கூகிளின் translate சேவைக்கான API அதாவது developer/பயனர்கள் அபிவிருத்தி செய்யவுதவும் வசதியையும் நிறுத்திவைத்துள்ளது. அதனால் தமிழில் மொழிமாற்றும் உபகரணங்களை யாரும் மேம்படுத்தவும் அல்லது எளிமைப்படுத்திக் கொள்ளவும் முடிவதில்லை. 
சற்று காலண்டரை பின்னோக்கி திருப்புங்கள், கூகிள் பவர்மீட்டர், வலைத் தளங்களின் டிரெக்டரி, டெக்ஸ்டாப் கட்ஜெட், ஜிடிரைவ், ஸ்லைட் app, கூகிள் பேக், கூகிள் sets மற்றும் சில என மாற்று சேவைகள் இல்லாமல் மூடப்பட்டு போனவை இவைகள். பல சேவைகள் மூடப்பட்டாலும் மாற்று சேவையில் இணைத்துவிட்டதுண்டு உதாரணமாக ஸ்பிரட்ஷீட், page creator[2009 வாக்கில்] என்று சொல்லலாம். இந்தப்பட்டியல் நீண்டு தற்போது கூகிள் buzzம் 'அடக்கம்' என்பது புதிய செய்தி -கூகிள்+ க்கு வலுசேர்க்க இந்த முடிவு. நம்ம அம்பானி கம்பெனிகாரர்கள் முதலில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி பங்குகளை உயர்த்தி மற்றவொன்றுடன் சேர்க்கும் டெக்னிக்கே. இதுவரை buzzல் போட்டவை பாதுகாக்கப்ப்படுமாம் புதியவைகள்தான் இனி சில வாரங்களில் போடமுடியாதாம். வேண்டியவர்கள் இதன் https://www.google.com/takeout/ மூலம் பேக்கப் எடுக்கலாம் என்று சொல்கிறது.

சரி, இம்மாதிரி சேவைகளை மூடுவதால் என்னயென்ன பின்னடைவுகள்? 
முதலில் எல்லாருக்கும் மூடப்படும் சேவை பிடிக்காமல் இருப்பதில்லை, விரும்புபவர்களுக்கு இழப்பாக அமையும். 

அந்நிறுவனத்தின் மற்ற பொருட்கள் மீது அதிகம் சார்ந்துயிருக்க முடியாது; எப்போது வேண்டமானாலும் நிறுத்தப் படலாம் என்கிற நினைப்பு வரும். 
அபிவிருத்தியாளர்களின் developmentகள் குறையும். 

கூகிள் தமிழ் அகராதி போன்றவைகள் மூடப்படும் போது பிராந்திய மொழி வளங்கள் குறையும். 

கூகிள் பஸ் போன்றவை மூடப்படும் போது கருத்துக் குழுக்கள்[நல்லதோ/கெட்டாதோ] சிதைய நேரிடும் 

Google Mash up போன்ற சேவைகள் மூடப்படும் போது yahoo pipes போல மற்ற நிறுவனங்களின் கிளை தயாரிப்புகள் மார்கெட்டை பிடிக்கும் 
புதிய பொருட்களின் அணிவகுப்பாகயிருக்கும் google labs போன்றவை மூடப்படும் போது புதுமைகள் காணமுடியாதா என்று தனித்தன்மை இழக்க நேரும். 

இம்மாதிரியான மூடு விழாக்கள் யாகூ, மைக்ரோசாப்ட் என பல இடங்களில் நடந்தாலும் அவை போனியாகவில்லை என்று கொள்ளலாம், ஆனால் கூகிள் போன்ற பரந்த பயனர்கள் கொண்டுள்ள நிறுவனம் செய்வது பாதிக்கக்கூடியவொன்று. இவ்விசயங்களை மீண்டு பரிசீலிக்கலாம் என்று சொல்லமுடியாது ஆனால் இவ்வசதிகளை பெற மாற்று சேவைகளை அறிமுகப்படுத்தலாம்.

பேஸ்புக்கு இது புதுசு.


பேஸ்புக் பாவனையாளர்களுக்கென அந்நிறுவனம் டைம்லைன் எனும் புதிய வசதியை அண்மையில் அறிமுகப்படுத்தியது.


இதை பற்றிய மேலதிக விபரங்கள் மற்றும் எவ்வாறு ஆக்டிவேட் பண்ணுவது போன்ற விபரங்களை இந்த இணைப்பில் காணலாம். இப்பதிவில் பேஸ்புக் டைம்லைன் 10 அசத்தல் டிசைன்களை பார்க்கலாம்.





















தமிழ்ப்படங்களைப் பார்த்து மலையாள ரசிகர்கள் மாறிவிட்டார்கள்.



கேரளாவில் நிறைய தமிழ்ப்படங்கள் வெளியாவதைப் போல, தமிழகத்திலும் நிறைய மலையாளப் படங்கள் வெளியாக வேண்டும் என்று மஜா படத்தை இயக்கிய டைரக்டர் ஷபி கூறியுள்ளார். விக்ரம் - அஸின் நடித்த "மஜா படத்தைத் தந்தவர் மலையாளத்தின் பிரபல இயக்குநரான ஷபி. "மஜாவுக்குப் பிறகு தமிழில் படம் எதுவும் இயக்காத ஷபி தற்போது மம்முட்டி, காவ்யா மாதவன், பூனம் பாஜ்வா என்று பெரும் நட்சத்திரப் பட்டாளத்தை வைத்து "வெனிசின்டே வியாபாரி என்ற படத்தை மலையாளத்தில் இயக்கிக் கொண்டிருக்கிறார்.


மலையாள படவுலகம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், மலையாளத் திரையுலகம் இப்போது மாறிவிட்டது. முன்பெல்லாம் கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்கள் வெளிவந்தன. ஆனால், இப்போது பாட்டு, டான்ஸ், சண்டைக்காட்சி இருந்தால்தான் ரசிகர்களைக் கவர முடியும் என்ற நிலை வந்து விட்டது. இதையெல்லாம் தமிழ்ப் படங்களைப் பார்த்துதான் மலையாள ரசிகர்களும் கற்றுக் கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.

இது வியாபாரம் என்பதால் யாருமே நஷ்டப்பட விருப்பமில்லாமல் கமர்ஷியல் ஃபார்முலாவுக்கு மாறிவிட்டார்கள். இருந்தாலும் அவ்வப்போது கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களும் வெளியாகின்றன. ஆரம்ப காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் திரைப்படங்கள் வெளியாகும் நேரத்திலேயே, கேரளத்திலும் தமிழ்ப் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. தமிழகத்திலும் அதிக அளவில் மலையாளத் திரைப்படங்கள் வெளியாக வேண்டுமென்பதே எனது ஆசை, என்று கூறியுள்ளார்.

iPhone 4s வாங்காதீர்கள்.ஏன்?

உங்களுக்கு விபச்சார விடுதிக்கு போக விருப்பமா? உதவி செய்யும்! பேச, எஸ்எம்எஸ் அனுப்ப, அலாரம் வைத்துக் கொள்ள மட்டுமே செல்போன் பயன்பட்டது ஒரு காலம். அந்த செல்போன் இப்போது பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன், பேத்தி எடுத்துவிட்டது. பர்சனல் டிஜிட்டல் அசிஸ்டென்ட், போர்ட்டபிள் மீடியா பிளேயர், கேமரா, இடம் கண்டுபிடிக்க உதவும் ஜிபிஎஸ், மொபைல் இன்டர்நெட் வசதி.. உள்பட இன்னும் என்னென்னவோ வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் தற்போது அதிகம் வந்துவிட்டன. ஸ்மார்ட்போன்கள் இயங்குவதற்கு ஏராளமான ஆபரேடிங் சிஸ்டம்களும் உள்ளன.

 ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ், கூகுள் ஆண்ட்ராய்ட், மைக்ரோசாப்ட் விண்டோஸ் போன், நோக்கியா சிம்பியன், பிளாக்பெரி ஓஎஸ்.. என இந்த வரிசையும் நீள்கிறது. ஆப்பிள் ஐபோன்களில் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர் ‘சிரி’. கடந்த 14-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன்4எஸ்-சில் இந்த சாப்ட்வேர் உள்ளது.
பொதுவாக, ஜிபிஎஸ் வசதி என்பது இடம் கண்டுபிடிக்க உதவுகிறது. நாம் எந்த இடத்தில் நிற்கிறோம்.. நாம் போக வேண்டிய இடத்துக்கு அங்கிருந்து எந்த வழியாக செல்வது.. என ஜிபிஎஸ் மேப் உதவியுடன் தெரிந்துகொள்ள முடியும். இது மட்டுமின்றி, ஆப்பிள் ஐபோனில் சிரி சாப்ட்வேர் மூலம் செயல்படும் இன்னொரு சேவையும் வழங்கப்படுகிறது. போனில் ‘ஐம் ஹார்னி’ என்று சொன்னால் போதும்.. அடுத்த சில வினாடிகளில் அந்த ஏரியாவில் எங்கெங்கெல்லாம் விபசார விடுதிகள், கார்ல் கேர்ல்கள், இதற்கான ஏஜென்ட்கள் இருக்கிறார்கள் என்ற தகவல் முழு முகவரியுடன் வந்துவிடும். ஐம் ஹார்னி என்பதற்கு பதிலாக ‘டு ஐ மேக் யூ ஹார்னி’, ‘பேட் பாய். லுக்கிங் ஃபார் எஸ்கார்ட்ஸ்’ என்று சொன்னாலும் இந்த தகவல்கள் ஜிபிஎஸ் உதவியுடன் வருகின்றன. அமெரிக்காவில் பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டும் தற்போது இந்த சேவையை பெற முடியும். காமெடிக்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப சோதனைகள் முடிந்த பிறகு, முழு வீச்சில் அறிமுகப்படுத்தப்படும் என்கின்றனர் ஆப்பிள் இன்ஜினியர்கள்.