Thursday, May 19, 2011

Internet Download Manager v6.04 License key யுடன்


யுடன் 
   இன்று நாம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் மென்பொருள் Internet Download Manager v6.04. இந்த internet download manager பற்றி நாம் அதிகமாக சொல்ல வேண்டிய தேவை இல்லை.ஏனெனில் உங்களில் அதிகமானவர்கள் இந்த மென்பொருளையே பயன்படுத்தி கொண்டிருப்பீர்கள். ஆனால் அதுவும் Trail version ஆக தான் இருக்கும். அந்த Trail version மென்பொருளை நாம் $ 29.95 வாங்கி உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். இந்த மென்பொருளை கீழே தரபட்டுள்ள link ஐ கிளிக் செய்து Download செய்து கொள்ளலாம்.

தரவிறக்க சுட்டி : Internet Download Manager v6.04



இம் மென்பொருளை Download செய்தால் .rar file ஆக zip செய்யப்பட்டு வரும். அந்த file ஐ extract செய்யும் போது ஒரு passward கேட்கும். அப்பொழுது நீங்கள் www.infotechportal.com என்று type செய்து இந்த மென்பொருளை download செய்து கொள்ளலாம்.உங்களுக்கு இந்த மென்பொருளுக்குரிய serial key உம் தரப்பட்டிருகிறது. இம் மென்பொருளை தரவிறக்கிய பின் அந்த மென்பொருளின் setup file ஐ double click செய்து run பண்ணத் தொடங்கும் போது கீழ் கண்டவாறு ஒரு dialog box வரும்.

இந்த dialog box இலே www.infotechportal.com எனும் passward ஐ type செய்து இம் மென்பொருளை install செய்து கொள்ளலாம்.

பயன்படுத்தி பாருங்கள். ஏதாவது இது தொடர்பான தொழில்நுட்ப சந்தேகங்கள் இருந்தால் 0094770741844 (இலங்கை) எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் செய்யுங்கள்.

Wednesday, May 18, 2011

உள்ளங்காலில் ஒரு கண்ணாடி


உங்கள் பாதங்களில் வெடிப்புகள் இருக்கின்றதா எனப்பாருங்கள். உங்கள் உள்ளங்காலினை ஒரு கண்ணாடியைப் பாவித்து வழமைக்கு மாறாக ஏதாவது கருப்பு புள்ளிகள் அல்லது வீக்கங்கள் தென்படுகிறாதா என்று கவனியுங்கள். கிருமிகள் பரவாமல் தடுக்கவும் தொற்றுக்கள் ஏற்படாமல் இருக்கவும் உங்கள் கால் நகங்களை பாதுகாப்பான சுத்தமான மற்றும் கூர்மையான நகம் வெட்டியைக் கொண்டு வெட்டுங்கள்.
பாதங்களைப் பராமரிப்பது அழகுக்காக மட்டுமல்ல, அது உங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவும். அன்றாடப் பாதப் பராமரிப்பு பிரச்சினைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக உங்கள் பாதங்களுக்கு பெடிகியூர் மற்றும் சரியான காலணி போன்றவை தேவைப்படுகிறது.

இதன் மூலம் பாதங்களில் ஏற்படும் சுளுக்குகள், பங்கல் இன்பெக்ஷன், கீழ்வாதம் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கும். குறிப்பாக நீங்கள் கீழ்வாதம் மற்றும் சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் உங்கள் பாதங்கள் ஆரோக்கியமாக இருப்பதை மருத்துவரிடம் அடிக்கடி காண்பித்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
பழைய செல்களை அகற்றி புது வளர்ச்சியை ஊக்குவிக்க ஸ்க்ரப் கொண்டு பாதங்களை மெருகூட்டுங்கள். புதுத் தோல் ஆரோக்கியமானது மட்டுமல்ல கையாள்வதற்கும் எளிதானது. உள்ளங்காலின் கடினத் தோல் பகுதியை ஸ்க்ரப் செய்து 10 நிமிடங்கள் வரையில் நீரில் வைத்திருந்து மிருதுவாக தேய்த்து இறந்த தோலை அகற்றுங்கள்.

குளித்த பின்னர் பாதங்களுக்கு லோஷன் தடவுங்கள். அது உங்கள் பாதத்தின் ஈரலிப்புத் தன்மையைப் பாதுகாக்கும். ளுPகு 30 கலந்த மொய்சரைசரினை கோடைகாலங்களில் பாவியுங்கள். இது அதிக வெப்பத்தினால் தோல் எரிவு ஏற்படுவதைத் தடுக்க உதவும். அமரும்போது பாதங்களை மேல்நோக்கி வைத்திருப்பதால் இரத்த சுழற்சி சீராகும். நடக்கும் போது ஷூக்களைப் பாவியுங்கள். இதன் மூலம் உங்கள் பாதத்திற்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க முடியும்.

உங்க பாட்டன் வீட்டு சொத்தா?


 100 மில்லியன் டொலர் சொத்துக்கள் 92 வருடங்களின் பின்னர் பகிரப்பட்டுள்ளன. வெலிங்டன் பெர்ட் என்பவர் 1919ஆம் ஆண்டு அவருடைய 87வது வயதில் மிக்கிங்கனிலுள்ள சகினாவில் இறந்த போது உயில் ஒன்றை எழுதி வைத்தார்.

-அதில், பெரும்பாலான சொத்துக்கள் அவருடைய கடைசி பேரன் இறந்து 21 வருடங்கள் வரை எவருக்கும் பகிர்ந்தளிக்கப்படக்கூடாது என எழுதியிருந்தார்.

வெலிங்டன் பெர்ட் இறந்தபோது அமெரிக்காவின் 10 பணக்காரர்களில் இவரும் ஒருவர். ஆனால், இவர் ஏன் இவ்வாறானதொரு உயிலை எழுதினார் என்பதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை.

இவருடைய விருப்பமான மகன் ஒருவருக்கு மாத்திரமே ஒவ்வொரு ஆண்டும் 30,000 டொலர்கள் கிடைக்கும்படிச் செய்திருந்தார். அதேவேளை இவருடைய சொந்தப் பிள்ளைகளுக்கு ஆண்டொன்றிற்கு 1000 முதல் 5000 டொலர்கள் வரையே கிடைக்கிறது.

இவருடைய கடைசிப் பேரன் மரியான் லென்சில் 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார். அதன் பின்னர் கடந்த ஆண்டுதான் உயிலின் படி 21 வருடங்கள் கடந்தது. மொத்தமாக 19 முதல் 94 வயது வரையான இவருடைய 12 வாரிசுகள் இம்மாத இறுதியில் 16 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளார்கள். இவருடைய குடும்ப உறவுமுறைகளுக்கமைய சொத்துப் பகிர்வு வித்தியாசப்படுகிறது.

பெர்ட்டினின் மூன்றாம் தலைமுறைப் பேத்தியான 19 வயதுடைய கெமிலனுக்கு 2.9 மில்லியன் டொலர்கள் கிடைத்துள்ள நிலையில், பெர்ட் தனது குடும்பத்தவரை நேசிக்கவில்லை என்பது தெளிவாகத் தனக்குத் தெரிவதாக கெமில்லன் தெரிவித்துள்ளார்.

மிகத் தாமதமாகவே இந்த சொத்துக்கள் பகிரப்பட்டுள்ள நிலையில் பெர்ட்டின் 6 பிள்ளைகள், 7 பேரப்பிள்ளைகள், 6 பேரப் பிள்ளைகளின் பேரப்பிள்ளைகள் மற்றும் 11 பேரப்பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளின் பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கு இந்த சொத்துக்கள் கிடைக்கவில்லை. அவர்கள் தற்போது உயிரோடும் இல்லை.

இந்த சொத்துப் பகிர்வில் கடமையாற்றிய நீதிபதி மெக்கிராவ் தன்னுடைய 12 வருட அனுபவத்தில் இவ்வாறானதொரு கடினமான சொத்து வழக்கை தான் கையாண்டதில்லை என தெரிவித்துள்ளார்.

Tuesday, May 17, 2011

மூளையின் மின்சார அதிர்ச்சி



    மூளையின் குறிப்பிட்ட பகுதியில் வலமிருந்து இடமாக, லேசாக மின்சாரம் பாய்ச்சப்பட்டால் கணித அறிவு தூண்டப்படுகிறது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

         (பிள்ளைகளே, இதைப் படித்துவிட்டு நேரடியாக பிளக்கிலிருந்து மின்சாரத்தை தலையில் பாய்ச்சி விஷப் பரிசோதனை செய்ய வேண்டாம், மேற்கொண்டு படியுங்கள்).

கணிதம் படிப்பதில் மந்தமாக இருக்கும் 15 மாணவர்களை (வயது 20 முதல் 21 வரை) குழுவாகத் தேர்வு செய்து, புதிய கணிதக் குறியீடுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி மூளையின் குறிப்பிட்ட பகுதியில் வலமிருந்து இடம் செல்லும் வகையில் லேசாக மின்சார அதிர்ச்சி அளித்தார்கள். பிறகு குறியீடுகளைக் கொண்டு விடை அளிக்குமாறு சில புதிர் கணக்குகளை வீட்டுப்பாடமாக அளித்தார்கள். 


                 அவர்கள் வெகு விரைவாகவும் சரியாகவும் அந்த கணக்குகளுக்கு விடைகளைக் கண்டுபிடித்தார்கள்.அதே வேளையில் அந்தக் குழுவிலேயே மற்றொரு பகுதியினருக்கு மூளையின் இடது புறத்திலிருந்து வலதுபுறமாக மின்சாரம் செல்லுமாறு செலுத்தினார்கள். பிறகு அவர்களுக்கும் அதே கணக்குப் புதிர்களைக் கொடுத்தார்கள். அவர்களால் வேகமாகவோ துல்லியமாகவோ கணக்குப் போட முடியவில்லை. 

               அவர்களுடைய கணித ஆற்றல் 6 வயதுக் குழந்தைக்குச் சமமாகவே (குறைவாக) இருந்தது. அவர்களுக்கு ஸ்ட்ரூப் சோதனையும் நடத்தினார்கள்.அதாவது சிவப்பு என்ற வண்ணத்தை பச்சை மையில் எழுதிக் காட்டி வாசிக்கச் சொல்வார்கள். பெரிய மதிப்புள்ள எண்களை மிகச் சிறிய வடிவிலும் சிறிய மதிப்புள்ள எண்களை மிகப் பெரிய எழுத்துகளிலும் எழுதிக்காட்டி விடை கேட்பார்கள். (சுருக்கமாகச் சொன்னால் குழப்புவார்கள்). 

                 மின்சாரத்தை வலமிருந்து இடமாகச் செலுத்தியவர்களின் கணித ஆற்றல் 6 மாதங்களுக்கு அப்படியே நீடித்தது. (கேரண்டி அவ்வளவுதான் போலிருக்கிறது!)இதிலிருந்து மூளை சிறப்பாக இயங்க மின்சாரம் பாய்ச்ச வேண்டும் என்ற தவறான முடிவுக்கு வந்துவிடாதீர்கள். 

             மூளையின் ஒரு பகுதி கணித அறிவுக்கு ஏற்றது, அதை சரியான வகையில் தூண்டிவிடலாம் என்பதே ஆய்வின் முடிவு. இந்த ஆய்வு தொடர்கிறது, அதுவரை வாய்ப்பாடுகளை ஒழுங்காகப் படித்து கணக்கு போட்டுக்கொண்டிருங்கள்
.

ஆங்கில மொழி கற்காதவன் பிச்சை எடுக்க கற்றுக்கொள்ள வேண்டு


கட்டாய மொழியான ஆங்கில மொழியினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் நகரத்துக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் தான் இன்றும் சில கிராமங்கள் காணப்படுகின்றது. கிராமப்புற பாடசாலைகளில் இதனை அதிகமாகக் காணமுடியும். பாடசாலைக் காலத்தில் பெறப்படும் ஆங்கில அறிவானது ஒரு கட்டடத்திற்கான அத்திவாரமாகவே அமைந்து விடும். அதாவது ‘ஜந்தில் வளையாதது ஜம்பதில் வளையுமா?’ என்பதற்கு அமைய பாடசாலைக் காலங்களில் அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ ஆங்கில மொழியினைக் கற்க வேண்டியது அவசியம்.
ஆங்கில மொழி கற்காதவன் பிச்சை எடுக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது எமது தேவையை பூர்த்தி செய்து வாழ்க்கைப் பாதையில் நகரவேண்டும் என்றால் எவரிடம் இருந்தாவது ஆங்கிலம் என்னும் அறிவை பிச்சை எடுக்கும் நிலையில்தான் வாழ வேண்டும் என்பது உறுதி.
‘அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்’ என்பர். பிறக்கும் போது உடலுடன் உயிர்தான் கூட வருகின்றது. பின்னர் பாடசாலைக் காலத்திலும் பிரதேச விருத்தியிலுமே அறிவு என்னும் விருத்தி பெறப்படுகின்றது. இவற்றின் ஒன்றாகவே ஆங்கில அறிவு விளங்குகின்றது. ஆங்கிலக் கல்வியானது ஆரம்பத்தில் கரும்பு நுனியை சுவைத்தாற் போல காணப்பட்டாலும் பின்னர் கரும்பின் அடிக்கு ஒப்பாகும். இது தனிமனிதன் ஒவ்வொருவரிடமும் காணப்படும் ஓர் உணர்வே…………!

இத்தகைய மனிதப் பிறப்புக்களை வெற்றி கொள்ள முடியவில்லை.




நவீன காலத்தில் மனிதப் பிறப்புக்களில் சில அபூர்வமானவையாக காணப்படுகின்றன. விஞ்ஞானத்தின் வளர்ச்சி பெரிதும் பாராட்டப்படுகின்ற இன்றைய கால கட்டத்தில் கூட இத்தகைய மனிதப் பிறப்புக்களை வெற்றி கொள்ள முடியவில்லை.
உலகின் சில அபூர்வமான பிறப்புக்களைக் கொண்ட மனிதர்கள் சிலரை நீங்கள் இங்கு பார்க்கலாம்.









Monday, May 16, 2011

கடந்த கால, நிகழ்கால, வருங்கால கணினி வரலாறு

1958 – டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட் இன் தொழிலாளி கில்பி உலகின் முதல் இன்டகிரேடட் சர்க்யூட்டினை (IC) கண்டுபிடித்தார். இதில் இரண்டு டடிரான்சிஸ்டர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. எல்லா நவீன கணணிகளும் இதன் அடிப்படையில் தான் வடிவமைக்கப்பட்டன.
1965 – இன்டெலினை ஸ்தாபித்தவர்களில் ஒருவரான மூர் கணணியின் ப்ரொசசிங் பவர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இரட்டிப்படையலாம் என முன்னறிவித்தார். அவர் குறிப்பிட்டது மிகத் துல்லியமாக உள்ளது.
1980 – IBM 3380 ஹார்ட் ட்ரைவ் வெளிவந்தது. இது ஒரு குளிர்சாதனப் பெட்டியின் அளவில் இருந்ததோடு 2GB சேமிப்பு செய்யக்கூடிய வகையிலும் இருந்தது.

1981 – IBM கணணி வெளிவந்தது. கணணியின் அளவு சிறிதாக்கப்பட்டது. முதல் லெப்டாப் (மடிக்கணணி) அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய விலையில் 4500 டொலராக இருந்த இந்த மடிக்கணணியின் அளவு 24.5 பவுண்ட்ஸ்.

1982 – 31ஃ2 அங்குல பிளாப்பி டிஸ்க் வெளிவந்து 8 மற்றும் 51ஃ2 அங்குல பிளாப்பி டிஸ்க்கினை வெளியேற்றியது. இது 400KB கொள்ளளவு கொண்டிருந்ததோடு வெளிவந்த இரண்டே ஆண்டுகளில் அப்பிள், அட்டரி மற்றும் கொமோடோர் ஆகியன இதனை சுவீகரித்துக்கொண்டன.

1984 – மெசின்டோஷ் 128k வெளிவந்தது. இதற்கு 125kb RAM சப்போர்ட் செய்யக்கூடியதாக இருந்தது.

1993 – இன்டெல்லின் முதல் பென்டியம் பிரான்ட் சிப் வெளிவந்தது. 6 வருடங்களின் பின்னர் 1999ஆம் ஆண்டு பென்டியம் III வெளிவந்தது.

2007 – ட்ரான்சிஸ்டர் தொழில்நுட்பத்தில் சிலிக்கனுக்குப் பதிலாக மெட்டல் பாவனை செய்யப்பட்டு கம்பேக்ட்னஸ் அதிகரிக்கப்பட்டது.

2010 – காவியர் கிரீன் ஹார்ட் ட்ரைவ் 2TB யினைப் பெற்றிருந்ததோடு இதனுடைய அளவு கையடக்கமானதாக இருந்தது. விலை 80 டொலர்களாக இருந்தது.

2023 – மைக்ரோபிக்ஸ் 2023ஆம் ஆண்டில் அதன் அளவு எல்லையினை எட்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சர்க்யூட்கள் மிக சிறிதாகும் எனவும் நம்பப்படுகிறது. கணணிகள் வேகமடைந்தால் சிலிக்கான் சிப்பிற்குப் பதிலாக வேறொன்றைக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கும்.

20XX- எதிர்காலத்திற்கான ஒரு சிறந்த தெரிவாக குவான்டம் கம்ப்யூட்டிங் இருக்கும். இதில் 1000 மடங்கு அதிகமான ப்ரொசசிங் பவர் இருக்கும்.

20XX- – மின்சாரத்திற்குப் பதிலாக வெளிச்சத்தைப் பாவித்து பயன்படுத்தக்கூடிய Fiber-optics கண்டுபிடிக்கப்படலாம்.

20XX- அடுத்ததொரு சாத்தியக்கூறு DNA வைப் பாவித்து பயன்படுத்தக்கூடிய கணணி. DNA மிக விலை குறைந்தது. உயிரியல் கணணிகள் இரத்த ஓட்டத்தில் கலந்து உடல் நோய்களை இலகுவாக குணப்படுத்தும் வாய்ப்புகள் உண்டு. இதற்கான அடித்தளத்தை விஞ்ஞானிகள் இப்போதே கொண்டுள்ளனர்.

கனணிகள் வெளியீட்டுப் பகுதி விரைவடைந்து வருகிறது. புதிய புதிய வழிகளில் தொடர்ந்து வேகத்தைக் கூட்டுவதற்கான, அளவைக் குறைப்பதற்கான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தாலும் 2013ஆம் ஆண்டு இறுதியில் நாம் இறுதிக்கட்ட processor வேகத்தினை அடைந்துவிடுவோம் போல் தெரிகிறது.

சிலர் இது குறித்துப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் நாமும் அப்படி இருக்க வேண்டுமா? உண்மை என்னவென்றால் எல்லாமே ஒரு காரணத்திற்காகத் தான் இருக்கிறது. மைக்ரோபிக்ஸ் மிகச்சிறியதாகி வருவதும் கூட எலக்ட்ரான்சைத் தொடர்ந்து processor வேகத்தை நிர்ணயிக்கத்தான்.

அப்படியானால் நாம் இந்த எல்லையை அடைந்த பின்னர் என்ன நடக்கும்? ஏதாவது புதிய வகை தொழில்நுட்பம் இந்த prosessor இன் வேகங்களை மேலதிகமாக அதிகரிக்கச் செய்யுமா? இந்தக் கேள்வி உண்மையில் விடையளிக்க கடினமானதொன்றுதான்.

ஆனால் சிலர் இன்னும் 12 வருடங்களில் புதிய தொழில்நுட்பம் கிடைக்கக் கூடியதாய் இருக்கும் எனவும் அவை முன்னேற்றத்திற்கு வழிகோலும் எனவும் தெரிவிக்கின்றனர். சிலர் இந்த வரலாற்று நேரக்கோடு தொடர்பில் மிக ஆர்வமாக உள்ளனர். அவர்கள் இதுபற்றிய தகவல் வரைகலையினை சேகரித்து வருவதோடு ஒன்லைன் கனணி அறிவியல் பட்டம் குறித்த அறிவினையும் பெற்றுள்ளனர்.

நமக்குத் தெரிந்த கணணியின் முடிவு இது தானா?