Showing posts with label அதிசயம். Show all posts
Showing posts with label அதிசயம். Show all posts

Saturday, July 9, 2011

823 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசயம்

2011 ம் ஆண்டில் ஜூலை மாதத்தில் ஒரு அதிசயம் இருக்கிறது. அதாவது இந்த ஜூலை மாதத்தில் 3ம் திகதி, 10ம் திகதி ,17ம் திகதி, 24ம் திகதி மற்றும் 31ம் திகதி ஆகிய தினங்கள் ஞாயிற்றுக் கிழமைகளாகும். அதாவது ஒரு மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகள் வருவதற்கு பதிலாக 5 ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன.
 
 
அதுமட்டுமா ? சனிக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் கூட இம் மாதத்தில் 5 தரம் வருகின்றது ஒரு பெரும் அதிசயமாகும். வழமையாக சிலவேளைகளில் கிழமைகளில் 1 நாள் கூடிக்குறையலாம். 
 
ஆனால் வெள்ளி, சனி , ஞாயிறு ஆகிய தினங்கள் இம் மாதத்தில் 5 தரம் ஒருமித்து வருகிறது. இது 823 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வரும் என்கிறார்கள் எண் கணித வல்லுனர்கள்.
சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் வேலைசெய்தால் சம்பளம் ஒன்றரை மடங்காக வழங்கப்படும் கம்பெனிகளில் வேலைசெய்வோருக்கு இம் மாதம் குரு உச்சம்தான், ஆனால் சனி ஞாயிறு தினங்களில் ஓய்வு எடுப்போர் இம் முறை கொஞ்சம் நீண்ட நாட்கள் எடுப்பர். எப்படிப் பார்த்தாலும் இம் மாதம் ஒருவகையில் யோகம் தான்

Monday, June 27, 2011

அழாதே அம்மா. கனிமொழியின் மகன் உருக்கம்

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மே 20ல் அவர் சிறையில் அடைக்கப்பட்ட போது, "வெளியே வந்து விடுவோம்' என்ற, நம்பிக்கையில் புன்னகையுடன் தான் இருந்தார்.சி.பி.ஐ., கோர்ட், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என, அனைத்தும், அவரது ஜாமின் மனுவை நிராகரித்து விட்டன. இதனால், நம்பிக்கை இழந்த கனிமொழி, சிறையில், 15 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறை அதிகாரி சுனில் குப்தா தெரிவித்ததாவது:எப்போதும் வருத்தம் தோய்ந்த முகத்துடன் காணப்படுகிறார். "சில நேரங்களில் தன் மகன் ஆதித்யாவை நினைத்து அழுகிறார். அவரது அறையில், 28 சேனல்கள் கொண்ட, "டிவி' வைக்கப்பட்டுள்ளது. எப்போதாவது அதைப் பார்க்கிறார். சில நேரங்களில் எதையாவது எழுதிக்கொண்டிருக்கிறார்.அவர் கவிதை எழுதுகிறாரா அல்லது தன் அனுபவங்களை எழுதுகிறாரா என்பது தெரியவில்லை. அவரை சந்திக்க வருபவர்களுடம் பெரும்பாலும் மகனை பற்றியே பேசுகிறார்.இவ்வாறு சுனில் குப்தா தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட் ஜாமின் மறுத்த நிலையில் கடந்த, 23ல், மகளை சென்று பார்த்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் மகள் கனிமொழி மிக மோசமான சூழ்நிலையில் சிறையில் வாடுவதாக தெரிவித்தார். டில்லி வெயிலின் வெப்பம் தாங்காமல் கனிமொழியின் உடலில் கொப்புளங்கள் தோன்றியுள்ளன என்றும் கூறினார்.
இதற்கு பதிலளித்துள்ள திகார் சிறை அதிகாரி சுனில் குப்தா, " நாட்டில் உள்ள அனைத்து சிறைகளுக்கும் முன் உதாரணமாக திகார் சிறை உள்ளது. இதை தேசிய மனித உரிமை கமிஷனும், ஐகோர்ட்டும் ஏற்றுக் கொண்டுள்ளன. திகார் சிறை வளாகத்தில் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற, சிறை அதிகாரிகளின் அனுமதியை பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. கனிமொழிக்கு மன வருத்தம் இருந்தாலோ, உடலில் கொப்புளங்கள் இருந்தாலோ, அதற்கு அவர் தாராளமாக சிகிச்சை பெறலாம்' என்றார்.

Sunday, April 24, 2011

பிரமிடுகள் அதிசய தகவல்கள் !!!!

தற்கால எகிப்து தலை நகர் கைரோவின் புற பகுதியில் அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலக புகழ் பெற்றவை . 

 உலக ஏழு அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் பிரமிடுகள் மிக விந்தையான,இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத விழயங்களை உள்ளடக்கியது

ஐநூறு அடி உயரம் கொண்ட இந்த பிரமிடுகள் ,இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்பு பாறை கற்களால் எழுப்பப்பட்டது .
இவ்வளவு எடை கொண்ட கற்களை ஐநூறு அடி உயரத்திற்கு கொண்டு சென்ற விந்தையை வரலாற்று நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டுள்ளனர். 

 சுண்ணாம்பு கற்களின் மேலடுக்குகள் நன்றாக பாலிஷ் செயப்பட்ட க்ரநிடே சுண்ணாம்பு கற்களால் வெளிப்புறம் பதிக்கப்பட்டன .பின்னர் இக்கற்கள் (வெளிப்புற) பின்னர் வந்த அரப் சுல்தானால் பெயர்த்தெடுக்கப்பட்டு ,மசூதிகள் கட்ட கொண்டு செல்லப்பட்டதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.

இருபத்தி மூன்று லட்சம் சுண்ணாம்பு கற்கள் எவ்வாறு அவளவு உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பணிகள் முடிக்கபட்டன் என்பதும், அத்தகைய பாலைவன பரப்பில் எவ்வாறு சாத்தியம் என்பதும் ஆய்வில் உள்ள ஒன்று. 

 புற கற்களில் வித்தியாசமான எழுத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன இவை மட்டும் பதித்தால் பத்தாயிரம் பக்கங்கள் வரும் என்பது வராலாற்று அய்ய்வலர்கள் கருத்து .

இத்தகைய புற கற்களை அராபிய கொள்ளையர்கள் கொள்ளயடிதத்தின் விளைய்வாக அதனுடைய விழயங்கள் உலகத்திற்கு தெரியாமலே போய்விட்டன.

கிசவில் உள்ள மூன்று பிரமிடுகளும் .பைதொகராஸ் என்கிற கணித விதிகளிபடியும் ,பிரபஞ்சத்தில் உள்ள மூன்று ஓரின் நட்சத்திரங்களை குறிக்கின்ற துல்லிய கோட்பாட்டில் அமைக்கபட்டுலத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மற்றுமொரு அதிசய விழயம் என்னவென்றால் .உள்ளே வைக்கப்பட்ட உடல்கள் கேட்டு போகாமல் இருப்பதின் விந்தை தான். உள்ளே வைக்கப்பட்டிருந்த உடல்கள் கெடாமல் மாறாக முற்றிலும் உலர்ந்த நிலைக்கு உள்ளது .ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்கு பெருந்தினியாக உள்ளது !

இன்னும் முற்றிலுமாக பயன் பாடுகளை கண்டறியப்படாத உள் அறைகளின் பயன்பாடுகள் ,குஉருக்கும் நெடுக்குமாக செல்கின்ற சதுர துளைகளின் பயன் பாடுகள் மர்மங்கலகவே உள்ளன.

இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு இத்தகைய சதுர துளைகளின் ரகசியங்களை அறிந்து கொள்ள ரோபோட்களை உள் செலுத்தி உலகம் முழும் முழுதும் பல்லாயிரம் மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாக கண்டபோது.

உட்புறம் மேலும் சில வாயில்கள் அடைக்கபட்டிருந்ததை உலகம் கண்டு வியந்தது .இவற்றை திறக்கவும் அதற்கு பின்புறம் உள்ள மர்மங்களை அறிந்து கொள்ளவும் தற்பொழுதும் ஆய்வு குழுக்கள் மும்முரமாக மனிதனின் அதிசய தக்க ஆற்றல் ,அறிவியலுக்கும் ஆட்படாத அதிசயங்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும்..இன்னும் பல நுற்றாண்டுகளை கடக்க இருக்கும் பிரமிடுகளை எண்ணி நாம் ஆச்சரியபடுவதில் தவறு ஒன்றும் இல்லை.

Saturday, April 23, 2011

மனித உடம்பின் அதிசயம்!



மனித உடம்பு எனும் அதிசயம்!

நாம் எதையெதையோ அதிசயம் என்று சொல்கிறோம். ஆனால் நமது உடம்பே ஓர் அதிசயம்தான்.

கீழ்க்கண்ட உண்மைகளைப் படித்தால் நீங்களும் அதை ஒப்புக் கொள்வீர்கள்...

மனிதர்களுக்குச் சராசரியாக கனவு 2 முதல் 3 நொடிகளுக்கே நீடிக்கிறது.

மனித உடம்பில் பெரிய செல், பெண்ணின் அண்டம். சிறிய செல், ஆணின் உயிரணு.

நாம் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு 200 தசைகளைப் பயன்படுத்துகிறோம்.

சராசரியாக பெண்கள் ஆண்களை விட 5 அங்குலம் உயரம் குறைவாக இருக்கிறார்கள்.

உங்களின் கால் கட்டை விரலில் 2 எலும்புகள் இருக்கின்றன. மற்ற விரல்களில் 3 எலும்புகள் இருக்கின்றன.

நமது மூளை செல்லால் `என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா' கலைக் களஞ்சியம் போல 5 மடங்கு தகவல்களை வைத்திருக்க முடியும்.

இரண்டு பாதங்களிலும் 2 லட்சத்து 50 ஆயிரம் வியர்வைச் சுரப்பிகள் இருக்கின்றன.

உங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தால் ஒரு `பிளேடை' கரைத்துவிட முடியும்.

வாயில் இருந்து உணவு வயிற்றுக்குச் செல்வதற்கு 7 நொடிகள் ஆகின்றன.

நமது உடம்பு வெளியிடும் வெப்பத்தைக் கொண்டு 2 லிட்டர் தண்ணீரை அரை மணி நேரத்தில் கொதிக்க வைக்க முடியும்.

உங்கள் பல்லின் `எனாமல்'தான் உடம்பிலேயே கடினமான பொருளாகும்.

உங்களின் கட்டைவிரலும், மூக்கும் ஒரே நீளமாக இருக்கும்.----------------