பத்தே நிமிடங்களில் போர்டபிள் சாப்ட்வேர்கள் உங்களுக்கும் உருவாக்கலாம்.
முதலில் போர்டபிள் சாப்ட்வேர் என்றால் என்ன என்று பார்போம்.
நாம் எப்போதும் ஒவ்வொரு காரியங்களுக்காக ஒவ்வொரு சாப்ட்வேர்களை செய்வோம். அதனால் சிஸ்டம் ஸ்லோ ஆவது மட்டுமல்லாமல் ஹார்ட்டிஸ்க் இடத்தையும் அடைத்துக்கொண்டு விடும். ஆனால் இன்ஸ்டால் செய்யாமலே பென் டிரைவிலோ, சிஸ்டத்திலோ நேரடியாக பயன்படுத்தக்கூடிய சாப்ட்வேர்கள் தான் போர்டபிள் சாப்ட்வேர்கள்.
உங்களுடைய சிஸ்டத்தில் அட்மினிஸ்ட்ரேட்டர் சாப்ட்வேர்கள் இன்ஸ்டால் செய்வது ப்ளாக் செய்து வைத்திருந்தால் இந்த போர்டபிள் சாப்ட்வேர்கள் அதற்கு பதிலாக பயன் படுத்தலாம்.
இந்த கட்டுரையில் சொல்லியிருப்பது, உங்களுக்கும் போர்டபிள் சாப்ட்வேர்கள் சுயமாக உருவாக்கலாம் என்பதைப் பற்றிதான். புத்தியும், விவரமும் இல்லாதவர்கள் இதில் கமன்ட்டோ, ஓட்டோ போடவேண்டாம் என தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலில் கேமியோ என்ற இந்த மென்பொருளை டவுன்லோட் செய்யவும். டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்.
இனி டவுன்லோட் செய்த பைலை டபுள் கிளிக் செய்து திறக்கவும்.
Capture installation என்ற பட்டனில் பிரஸ் செய்து சிறிது நேரம் காத்திருக்கவும்.
Install Done என்ற பாக்ஸ் வரும்போது நீங்கள் உங்களுடைய சிஸ்டத்தில் புதிதாக ஒரு சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யுங்கள். உதாரணமாக நிம்பஸ்
இன்ஸ்டால் செத பிறகு முன்பு கண்ட Install Done பட்டனை பிரஸ் செய்து,
சிறிது நேரம் காத்திருக்கவும்.
உங்களுடைய போர்டபிள் சாப்ட்வேர் இப்போது மற்றொரு விண்டோவில் ஓபன் ஆகியிருக்கும். அதை பென் டிரைவில் போட்டு நீங்கள் பயன்படுத்தலாம்.
|
No comments:
Post a Comment