ஒரு கைக்குழந்தையின் மேல் ஒரு (ஆ)சாமி நின்று கொண்டிருக்கிறான். இந்த கொடுமை நடந்தது கிழக்கு பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் (Katihar) என்ற ஊரில்.
அந்த கதிஹார் ஊரில் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்கின்றபோதும் ஊருக்கு அருகில் உள்ள கிராமத்து மக்கள் தங்களின் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் நவீன மருத்துவரிடம் காட்டி மருந்து எடுப்பதற்குப்பதிலாக அந்த ஊரில் உள்ள (ஆ)சாமியிடம் தான் காட்டுவார்களாம். அந்த (ஆ)சாமியின் பெயர் பாபா ஜாமூன் யாதேவ் (Baba Jamun Yadav ). இவன் தன்னிடம் உள்ள அபார சக்தி மூலம் malaria விலிருந்து malnutrition வரை எல்லா வியாதிகளையும் குணப்படுத்த முடியும் என்று அங்குள்ள அப்பாவி மக்களை கடந்த 20 வருடகாலங்களாக ஏமாற்றி வந்துள்ளான்.
இவன் செய்யும் வைத்தியம் என்னவென்றால் சுகயீனமான குழந்தைகளை நிலத்தில் கீழே போட்டு தனது உடம்பின் முழுப்பலத்துடன் அந்த குழந்தைகளின் உடம்பின் மீது ஏறி நின்றுகொண்டு ‘Jai Ho’ என்று பெரிதாக சத்தமிட்டு அந்த குழந்தைகளை மிதிப்பதுதான். அவன் மிதிக்கும் இடங்கள் குழந்தைகளின் கழுத்து மற்றும் புறப்பாலுறுப்புகள் (genitals) மீது. அப்பாவி கிராம மக்களும் அந்த (ஆ)சாமிக்குள் இருக்கும் சக்தி அவன் கால்கள் வாயிலாக வெளிப்பட்டு தங்களின் குழந்தைகளின் வியாதிகளை குணப்படுத்த முடியும் என்று நம்பி இப்படியான ஒரு காட்டுமிராண்டி பிரார்த்தனைக்கு அனுமதித்து தங்களின் குழந்தைகளை அவனிடம் காட்டி வந்துள்ளார்கள். இந்த காட்டுமிராண்டித்தனத்தால் இதுவரையில் எவ்வளவு குழந்தைகள் பலியானார்கள் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
இந்த காட்டுமிராண்டித்தனத்தை Headlines Today எனும் இந்திய தொலைக்காட்சி படம்பிடித்து ஒளிபரப்பி ஒரு நேரடி நிகழ்ச்சியொன்றும் ஸனல் எடமாருக்கு (Sanal Edamaruku ) என்பவரால் நடத்தப்பட்டு இப்படியான முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்தப்படவேண்டும், அந்த (ஆ)சாமியை உடனடியாக கைது செய்யப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதுடன், அதிகாரிகள் சமயத்தின் பெயரில் நடக்கும் இம்மாதிரியான குற்றங்களை அரசியல் காரணங்களுக்காக கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்கள் என்றும் குற்றம் சுமத்தினார்.
இத்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய பீகார் மாநில சுகாதார அமைச்சர் இந்த பிரச்சனையில் கலாச்சாரமும் மதமும் சம்பந்த பட்டிருப்பதால் இந்த (ஆ)சாமியார் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதை விட கொடுமை கதிஹார் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நிகில் சௌதிரி (Nikhil Chaudhary from the Hindu nationalist BJP) என்பவர் ”இந்தமாதிரியான சடங்கினால் மக்கள் பலன் அடைவார்களேயானால், இப்படியான சடங்குகளை நடத்துவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளார்” . இது ஒரு கண்ணியமான உள்ளூர் ஐதிக முறை என்று இந்த காட்டுமிராண்டி தனத்தை எந்த விதமான தயக்கமும் இல்லாமல் அந்த பாராளுமன்ற உறுப்பினர் நியாப்படுத்தி உள்ளார்.
மற்றும் ஸனல் எடமருக்கு அவர்கள் அதே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய காசி சுமேரு மடத்தின் தலைவர் சங்கராச்சரிய சுவாமியிடம் உங்களின் செல்வாக்கைப்பயன்படுத்தி இந்த காட்டுமிராண்டி தனத்தை தடுத்து நிறுத்துமாறு அந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தியுபோது, சங்கராச்சாரியும் அந்த காட்டுமிராண்டித்தனத்தை நியாயப்படுத்தியுள்ளார்.
(இந்த சங்கராச்சாரியையும் இந்த குழந்தையைப்போல் கீழே போட்டு ஏறி நாலு மிதிமிதித்தால் அப்ப தெரியும் சங்கராச்சாரிக்கு இந்த கள்ளச்சாமிகளின் மருத்துவம் எப்படிப்பட்டதென்று).இந்த காட்டுமிராண்டி தனம் ஒளிபரப்பான 24 மணி நேரத்திற்குள் அந்த காட்டுமிராண்டி (ஆ)சாமி கைது செய்யப்பட்டுள்ளார்.எனிமேல் இந்த ஆசாமி வெளியில் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டியது இந்திய அரசாங்கத்தின் கடமையாகும். ந்தியாவைப் பொறுத்தவரையில், நாட்டில் உள்ள சகல கள்ளச் சாமியார்களையும் பாரபடசம், தயவு தாட்சண்ணியமின்றி கைது செய்து உள்ளே தள்ளிவிட்டாலே இந்தியா 25 வீதம் முன்னேறி விடும்.

|
No comments:
Post a Comment