ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அடிக்கடி மறுபதிவு செய்வது என்பது மிக எளிதாக அனைவரும் மேற்கொள்ளும் ஒரு வேலையாக உள்ளது. வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதல், விண்டோஸ் பைல்கள் கெட்டுப் போதல் மற்றும் வேறு சில பிரச்னைகளால், விண்டோஸ் சிஸ்டம் முடங்கிப் போகும்போது, அனைவரும் விண்டோஸ் சிஸ்டத்தை மீண்டும் பதிந்து விடலாமே என்று எண்ணிச் செயல்படுத்து கின்றனர். பூட்டபிள் சிடி, ட்ரைவர்கள் தொகுப்பு தயாரித்தல் போன்றவைகள் இவர்களின் எண்ணத்தினை மிக எளிதாக்குகின்றனர்.
ஆனால் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீண்டும் பதித்தலில் எதுவும் சிக்கல் இருக்காது. அதன்பின்னரே, நாம் சில எதிர்பாராத பிரச்னைகளைச் சந்திப்போம். சில சாப்ட்வேர் புரோகிராம்களின் மூல சிடிக்கள் இல்லாமல் இருக்கலாம். சில பைல்களைத் தெரியாமல் அழித்திருப்போம். இது போன்ற சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க, ஆப்பரேட்டிங் சிஸ்டம் மறுபதிப்பிற்கு முன்னரும் பின்னரும் என்ன என்ன வேலைகளை மேற்கொள்ள வேண்டும் என இங்கு பார்க்கலாம்.
1. பைல் பேக் அப்: நீங்கள் உருவாக்கும் அனைத்து பைல்களையும் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்திடும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், அவற்றை நல்ல முறையில் பேக் அப் எடுக்கும் வேலையை மேற்கொள்ளுங்கள். மை டாகுமெண்ட்ஸ், மை பிக்சர், மை மியூசிக் மற்றும் மை வீடியோஸ் ஆகிய போல்டர்களில் உள்ள பைல்கள் மற்றும் எந்த வகை பைல்கள் எல்லாம் தேவையோ, அவை அனைத்தையும் வேறு ஒரு போல்டருக்கு மாற்றவும். இதனை மேற்கொள்ளவில்லை என்றால், இந்த பைல்களை நீங்கள் இழக்க வேண்டிய திருக்கும். ஏனென்றால், எந்த ட்ரைவில், சி ட்ரைவில், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மீண்டும் பதிய இருக் கிறீர்களோ, அந்த ட்ரைவிலேயே இவை ஏற்கனவே பதியப்பட்டு இருக்கும். எனவே இவை இழக்கப்படலாம்.
2.சாப்ட்வேர் தன் அமைப்பு: சாப்ட்வேர் புரோகிராம்களைப் பதிகையில், அதனை வடிவமைப்பதில் நம்முடைய விருப்பம் மற்றும் தேவைகளுக்கேற்ப வடிவமைத் திருப்போம். ஆங்கிலத்தில் இதனை Configuration and Profile என அழைக் கின்றனர். பல சாப்ட்வேர் புரோகிராம்கள் இவற்றிற்கான பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ளவும் வாய்ப்புகளைத் தருகின்றன. எனவே எப்போதும் இவற்றை ஒரு காப்பி எடுத்து வேறு ஒரு ட்ரைவில் வைத்திருப்பது நல்லது. ஓ.எஸ். மறுபதிவு முடிந்து, குறிப்பிட்ட சாப்ட்வேர் புரோகிராமினையும் இன்ஸ்டால் செய்தவுடன், இந்த பேக் அப் பைலை இயக்கினால் போதும்.
3. டவுண்லோட் போல்டர் மற்றும் பைல்கள்: இணையத்திலிருந்து நாம் டவுண்லோட் செய்திடும் பைல்கள் அனைத்தையும் என்ற போல்டரில் மாறா நிலையில் சேவ் ஆகும். இந்த போல்டரும் ஓ.எஸ். மறுபதிவில் அழிந்து போகும் என்பதால், இந்த போல்டர் மற்றும் அதில் உள்ள பைல்களை இன்னொரு ட்ரைவிற்கு மாற்றி சேவ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
4. ஹார்ட் டிஸ்க் பிரித்தல்: நீங்கள் உங்கள் ஹார்ட் டிஸ்க்கினை ஒரே ட்ரைவாக வைத்திருந்தால், மேலே சொன்ன அனைத்து பேக் அப் வேலைகளையும், தனியே இணைத்து இயக்கும் ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து மேற்கொள்வது நல்லது. அவ்வாறு செய்த பின்னர், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பதியும் முன்னர், ஹார்ட் டிஸ்க்கினைப் பல ட்ரைவ்களாகப் பிரித்துப் பதிவது நல்லது. பாதுகாப்பாக வைத்திருக்க எண்ணும் பைல்களை அப்போதுதான் சி ட்ரைவ் இல்லாமல் வேறு ட்ரைவ்களில் சேவ் செய்து பாதுகாக்க முடியும். விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில், வேறு சாப்ட்வேர் எதனையும் பயன்படுத்தாமல், ஹார்ட் டிஸ்க்கில் காலியாக இருக்கும் இடத்தைப் பயன்படுத்தி, புதிய ட்ரைவ்களை உருவாக்குவது குறித்து தகவல் தரப்பட்டுள்ளது.
5. இன்ஸ்டால் செய்ய வேண்டியதைக் குறித்துக் கொள்ளுங்கள்: எப்போது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மறுபடி இன்ஸ்டால் செய்தாலும், சாப்ட்வேர் புரோகிராம்கள் அனைத்தையும் மீண்டும் இன்ஸ்டால் செய்தாக வேண்டும். எனவே எம்.எஸ்.ஆபீஸ், பேஜ் மேக்கர் போன்ற பெரிய புரோகிராம்களிலிருந்து, சிறிய வேலைகளை நமக்காக மேற்கொள்ளும் சிறிய புரோகிராம்கள் வரை அனைத்தையும் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். அந்த பட்டியலில் இருக்க வேண்டிய முக்கிய பைல்களாக இவற்றைக் கொள்ளலாம் -- ட்ரைவர் பைல்கள், ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்கள், பிரவுசர்கள் மற்றும் சார்ந்த ஆட் ஆன் தொகுப்புகள், ஆபீஸ் தொகுப்பு, மீடியா பிளேயர்கள், அப்டேட்கள் மற்றும் பிற தேவையான தொகுப்புகள்.
6. ஓ.எஸ். மற்றும் சாப்ட்வேர் பதிதல்: ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மறுபடியும் பதிந்த பின்னர், பயன்படுத்தக் கூடிய அனைத்து சாப்ட்வேர் புரோகிராம்களையும் பதியவும். சில வேளைகளில் ட்ரைவர் புரோகிராம்களைப் பதிந்தவுடன், சிஸ்டத்தினை மீண்டும் ஸ்டார்ட் செய்திட வேண்டியதிருக்கும். எனவே அனைத்து இன்ஸ்டலேஷனையும் முடித்து, சிஸ்டத்தினை ரீஸ்டார்ட் செய்திடவும்.
7. பேக் அப் மீண்டும் காப்பி செய்தல்: ஏற்கனவே முதல் இரு நிலைகளில் கூறியபடி, பேக் அப் எடுத்து வைத்த பைல்களை, சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின்னர், அதன் போல்டர்களுக்கு மாற்றுங்கள். இந்த பைல்களை, நீங்கள் பயன்படுத்தும் வகையில் பிரிக்கலாம். மியூசிக், படம், இணையம் சார்ந்தது எனவும், டாகுமெண்ட் பைல்களில், அலுவலகப் பணி மற்றும் தன் சொந்த பைல் எனவும் பிரித்து வெவ்வேறு ட்ரைவ் அல்லது போல்டர்களில் போட்டு வைக்கலாம். இந்தபோல்டர்களை, ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்த ட்ரைவில் உருவாக்காமல், வேறு ட்ரைவ்களில் ஏற்படுத்தவும்.
8. ரெஸ்டோர் பாய்ண்ட்: அனைத்தும் முடிந்து, உங்களுக்குத் திருப்தி அளிக்கும் வகையில் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கினால், அந்நிலையில் ஒரு ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றை உருவாக்கி வைக்கவும். இதன் மூலம், இன்னொரு நாளில் விண்டோஸ் இயங்குவதில் பிரச்னை ஏற்பட்டால், அந்த நாளில் கம்ப்யூட்டர் இருந்த நிலைக்குக் கொண்டு வந்து பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.
9. ஒரு முறைக்கு இரு முறை சோதித்தல்: இதுவே இறுதியான செயல்பாடு. அனைத்தையும் இன்ஸ்டால் செய்து, இயக்கிய பின்னர், ஒருமுறைக்கு இருமுறை அனைத்தையும் சோதித்து, தேவையான அனைத்தும் சரியான முறையில் கம்ப்யூட்டரில் அமைந்து விட்டதா எனப் பார்த்து உறுதி செய்து கொள்ளவும். செய்த பின்னர், கம்ப்யூட்டரில் இன்னொரு ட்ரைவில் இருந்த பேக் அப் பைல்கள் அனைத்தை யும் நீக்கிவிடவும். இல்லையேல், ஒரே பெயரில் இரண்டு ட்ரைவ்களில் பைல்கள் தங்கி, ஹார்ட் டிஸ்க்கின் இடத்தைப் பிடிப்பதோடு, எது அப்டேட்டட் பைல் என்பதில் நமக்கும் சிக்கலைத் தரும்.
|
No comments:
Post a Comment