(முதலாளித்துவத்தின் அகோர பசிக்கு இரையாக ஆண்டுதோரும் எஜமானிய விசுவாசமிக்க நாடுகளில் ஒன்று கூடும் உலக அழகிகள் பற்றி – அதன் நோக்கம் பற்றி அலசுகிறது இந்தக் கட்டுரை)
உலக வர்த்தக சந்தையில் தட்டுப்பாடற்ற பொருளாகவும், நல்ல வருமானத்தை ஈட்டித் தரும் கவர்ச்சிப் பொருளாகவும் பெண் மாற்றப்பட்டு வருகிறாள். நல்ல வருமான உத்தியின் குறியீடாக ஆரம்பக் காலம் தொட்டே கருதப்பட்டு வருபவள் பெண்.
நில பிரபுகள் – பண்ணையார்கள் காலம் தொட்டு இன்றைய உலக மயமாக்கள் சிந்தனை வரை மாறா வருமான நியதியுடன் பல்லிளித்து நிற்பவள் பெண் தான். காலகட்டங்கள் – யுகங்கள் மாறினாலும் முதலாளித்துவ சிந்தனைவாதிகளின் மனநிலை மட்டும் மாறுவதேயில்லை.
அந்தபுரத்தை அலங்கரித்தல், வித – விதமான உடை, முடி அலங்காரங்களுடன் விருந்தினருக்கு மத்தியில் ஆடி அசர வைத்தல் என்று நில பிரபுகளின் காலத்தில் துவங்கிய அழகிப் போட்டி தன் எல்லையை கொஞ்சம் கொஞ்சமாக உலக அளவில் விரிவாக்கிக் கொண்டுள்ளது.
உலகமயமாக்களில் அழகிப் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. உலகமயமாக்களின் தத்துவம் என்ன? மிக சொற்பமான மக்களிடம் முடங்கிக் கிடக்கும் கணக்கிலடங்கா சொத்துக்களை எடுத்து அல்லது சொத்துக்களுக்குறிய வரியை கண்டிப்புடன் பிடுங்கி உலகிற்கு பகிர்ந்தளித்து வறுமையை விரட்டுவதா… நிச்சயமாக இல்லை. தாம் தயாரிக்கும் செயற்கை சாதனங்களை (கார் போன்ற பெரிய பொருளிலிருந்து ஐப்ரோ, ஊக்கு போன்ற அற்ப பொருள்கள் வரை) உலக அளவில் விற்பனை செய்து மேலும் மேலும் பணம் குவிப்பதே உலகமயமாக்களாகும். இந்த விற்பனை உலக அளவில் கலைகட்ட உலக அழகி? தன் உடலால் உதவுகிறாள்.
|
No comments:
Post a Comment