மருத்துவமனையில் தங்கவேண்டிய அவசியம் இல்லை... அறுவை சிகிச்சை தேவை இல்லை... வலி இல்லை... தழும்பு இல்லை... உணவுக் கட்டுப்பாடு இல்லை என்பதுபோன்று ஏகப்பட்ட 'இல்லை’களுடன் அறிமுகம் ஆகி இருக்கிறது செரோனா பாடி லிப்போ சிகிச்சை! அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட இந்த லேசர் சிகிச்சை, இப்போது தமிழகத்திலும் வந்துவிட்டது. இந்தக் கருவியை, சென்னை, தி.நகரில் உள்ள லைஃப் அலைவ் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தி உள்ளனர். இதனுடன் இணைந்த, புதிய மெடிக்கல் வெயிட் லாஸ் முறையும் அறிமுகம்.
இதுகுறித்து, டாக்டர் சுனிதா ரவி சொல்கிறார்.
''உடல் எடை கூடுவது, இன்றைய உலகில் மனிதனுக்கு மிகப் பெரிய பிரச்னையாக, கவலையாக உள்ளது. உடல் எடை திடீரென்று ஒரே நாளில் அதிகரித்துவிடுவது இல்லை. ஆனால், உடல் எடை குறைப்பு மட்டும் ஒரு சில நாளில் நிகழ்ந்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இதற்காகப் பல்வேறு உடல் எடைக் குறைப்பு முறைகளை மேற்கொள்கின்றனர்.
ஜிம்முக்குச் சென்று தொடர்ந்து உடற்பயிற்சி செய்து, ஓரளவு எடையைக் குறைக்கிறார்கள். உடல் எடை குறைந்ததும், 'ஆஹா சாதித்து விட்டோம்’ என்ற சந்தோஷத்தில் பயிற்சியை நிறுத்துகிறார்கள். அதனால் உடல் எடை மீண்டும் அதிகரிக்கிறது. பல நேரங்களில் உடல் எடையைக் குறைக்கிறோம் என்ற பெயரில், புரதம் மற்றும் ஊட்டச் சத்துகளை வெளியேற்றிவிடுகிறார்கள். கொழுப்பைக் குறைக்கிறோம் என்று, உடலில் உள்ள நல்ல கொழுப்புகளையும் வெளியேற்றி விடுகிறார்கள். இதனால் வேறு சில பாதிப்புகளும் உடலுக்கு ஏற்படுகிறது.
|
No comments:
Post a Comment