மின் கட்டணத்தை அஞ்சல் நிலையத்திலேயே செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணி இம்மாதம் முதல் துவக்கப்படும்,'' என, அஞ்சல் அலுவலக கோவை மண்டல தலைவர் ராஜராஜன் கூறினார்.
அஞ்சல் அலுவலக கோவை மண்டல தலைவர் ராஜராஜன், நிருபர்களிடம் கூறியதாவது: அஞ்சல் துறையில் "ஏடிஎம்' முறை செயல்படுத்துவதற்காக முதல் கட்டமாக கோர் பேங்கிங் முறை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. ராசிபுரம் அஞ்சலகத்தில் "ஏடிஎம்' மையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.கிராமப்புறங்களில் அஞ்சலகத்தில் சேமிப்பு செய்யும் வாடிக்கையாளர்கள், பாஸ்புத்தகத்தை தங்கள் வசம் வைத்து கொள்வதோடு, அறிமுகம் இல்லாத நபர்களிடம் கொடுக்கக்கூடாது.
மேலும், ஆண்டுக்கு ஒரு முறை மார்ச் 31ம் தேதிக்குள் வட்டார அளவில் உள்ள அஞ்சலகத்தில் தங்களின் இருப்பு தொகை மற்றும் வட்டி விகிதம் குறித்த ரசீதுகளை பெற்று கொள்ளவேண்டும். புத்தகங்களை ஏஜன்டுகளிடம் கொடுக்கும் போது, "ஏஸ்லாஸ் 5' என்ற அட்டையை பெற்று கொண்டு கொடுக்கவேண்டும்.

அதன் முலம், முறைகேடுகள் குறையும். ராசிபுரம் அடுத்த புதுப்பாளையம் கிராம அஞ்சலகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில், 47 நபர்களுக்கு 65 ஆயிரத்து 860 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 67 பேருக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க பட்டு வருகிறது.
ஓ.ஏ.பி., (உதவித்தொகை) வழங்குவதில் பல்வேறு இன்னல்களை களைய எலக்ட்ரானிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம், 25 நாட்கள் நடைபெறவேண்டிய பணிகள் அரை மணி நேரத்தில் முடிவடைந்து, உரியவர்களுக்கு பணம் சென்றடையும். இப்பணிகளை உயர் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும், மக்களின் நலன் கருதி மின்சார கட்டணத்தை கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட அஞ்சல் அலுவலகத்திலேயே செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்கும், என்றார்.
|
No comments:
Post a Comment