சென்ற மார்ச் 22 அன்று பயர்பாக்ஸ் பிரவுசரின் நான்காம் பதிப்பு வெளியானது. வெளியிட்ட 3 மணி நேரத்தில், பத்து லட்சம் பேர் இதனை டவுண்லோட் செய்துள்ளனர். ஒவ்வொரு நிமிடத்திலும் சராசரியாக 6,500 பேர் டவுண்லோட் செய்து வந்தனர். இது தொடர்ந்து உயர்ந்து கொண்டும் இருந்தது. இந்த எண்ணிக்கை, மக்களுக்கு பயர்பாக்ஸ் பிரவுசரின் மீதுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. பாதுகாப்பான, வேகமான, எளிமையான இன்டர்நெட் அனுபவத்திற்கு இது வழி தரும் என்ற எண்ணத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு மாற்றாக, பயர்பாக்ஸ் பிரவுசரை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பதனை இது உறுதி செய்கிறது. புதிய பிரவுசரின் சிறப்பு அம்சங்களை இங்கு காணலாம்.
ஏறத்தாழ 70 கோடிக்கு மேலானவர்கள் பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் எதிர்பார்ப்பு களைத் தொடர்ந்து கணித்து வரும் மொஸில்லா நிறுவனம், பல புதிய அம்சங்களை, பதிப்பு 4ல் தந்துள்ளது.
எளிமையாக்கப்பட்ட இடைமுகம், அதிக திறனுடன் இயங்கும் ஜாவா ஸ்கிரிப்ட், எச்.டி.எம்.எல். 5 இயக்கம், எதனுடனும் இணைந்து செயல்படும் தன்மை, பரவலாக பனோரமா தோற்றம், பல வகைகளில் ஆயிரக் கணக்கில் தயாராகிக் கிடைக்கும் ஆட் ஆன் தொகுப்புகள், எந்த ஒரு இணைய தளத்துடனும் இணைந்து செயல்படும் தன்மை ஆகியவற்றை இந்த பிரவுசரின் சிறப்பு அம்சங்களாகக் கூறலாம்.
பயனாளர்களை வழிப்படுத்தும் "இடைமுகம்' எனப்படும் இன்டர்பேஸ் முற்றிலும் புதியதாக வடிவமைக்கப் பட்டுள்ளது. சட்டென உணரும் வகையில் வேகம் அதிகரிக்கப் பட்டுள்ளது. இன்னும் வளர்ந்து வரும் எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பம் முழுமையாக சப்போர்ட் செய்யப் படுகிறது. சிங்கரனைசேஷன் என அழைக்கப்படும், இணைந்து செயல்படுத்தப்படும் தன்மை, ஆட் ஆன் எனப்படும் துணைத் தொகுப்புகளைப் பதிந்த பின்னர், மீண்டும் ரீஸ்டார்ட் செய்யாமலேயே அவற்றை இயக்கும் தன்மை, டேப்களை குரூப் செய்து பயன்படுத்தும் வசதி ஆகியவைகள் குறிப்பிட்டுச் சொல்லும் வசதிகளாகும்.
இணைய தளங்கள் நம் பெர்சனல் தகவல்களைப் பின்பற்றிக் கைப்பற்று வதற்கான தடை (donottrack feature) இந்த பிரவுசரில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே நம்மைக் குறி வைத்து தரப்படும் விளம்பரங்கள் நமக்கு இடையூறாக இருக்காது. டேப்கள் அனைத்தும் மேலாக அமைக்கப்பட்டுள்ளன.
விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் இந்த பிரவுசர் இயங்குகையில், மெனு பாருக்குப் பதிலாக, பயர்பாக்ஸ் வழங்கும் பட்டன்கள் உள்ளன. ஏற்கனவே திறந்து இயக்கப்பட்ட டேப்களுக்கு ஸ்மார்ட் லொகேஷன் பார் மூலம் எளிதாகச் செல்லலாம். ஸ்டாப், ரெப்ரெஷ் மற்றும் ரீலோட் பட்டன்கள் ஒரே பட்டனாக, அட்ரஸ் பாருக்குள்ளாகத் தரப்பட்டுள்ளன. இதனால், அட்ரஸ் பார் மற்றும் சர்ச் பார், சற்று நீளமாகக் காட்சி தருகிறது.
புக்மார்க்ஸ் டூல்பார், புக்மார்க்ஸ் பட்டனாக மாற்றப்பட்டுள்ளது. நமக்கு பழையபடி டூல்பாராகத்தான் வேண்டும் என்றால், மாற்றிக் கொள்ளலாம்.
அடோப் பிளாஷ், ஆப்பிள் குயிக் டைம் அல்லது மைக்ரோசாப்ட் ப்ளக் இன் இயங்கும்போது, அவற்றில் கிராஷ் ஏற்பட்டால், பயர்பாக்ஸ் பாதுகாக்கப் படும். கிராஷ் ஆகாது. அந்த தளம் மட்டும் முடங்கும். HD HTML5 WebM பார்மட்டிற்கு சப்போர்ட் வழங்கப்படுகிறது.
முக்கிய மெனுக்கள் எல்லாம், ஆப்பரா பிரவுசரில் உள்ளது போல மேலாக இடது பக்கம் ஒரு பட்டனில் கிடைக்கிறது. மெனுவுக்குள் மெனுவாக அனைத்து மெனுக்களும் உள்ளன. ஆனால் பழைய முறையில் தான் மெனு வேண்டும் என விருப்பப்படுபவர்கள், அந்த முறைக்கு மாறிக் கொள்ளலாம். இந்த வகையில் தன்னுடன் போட்டியிடும் மற்ற பிரவுசர்களில் உள்ள நல்ல அம்சங்கள் அனைத்தையும், பயர்பாக்ஸ் 4 கொண்டுள்ளது. எளிமையாகக் குறைந்த இடத்தைப் பயன்படுத்தி, இணைய தளக் காட்சிக்கு அதிக இடம் தருகிறது.
டேப்கள் அனைத்தும் அட்ரஸ் பாருக்கு மேலே அமைக்கப்பட்டுள்ளன. டேப்களை எங்கும் நகர்த்தலாம். மொஸில்லா இவற்றை அப்ளிகேஷன் டேப் என அழைக்கிறது. இவற்றை எங்கு வேண்டுமானாலும் பின் அப் செய்து கொள்ளலாம். டேப் பாரில் இவை அப்படியே நிற்கின்றன. பிரவுசரை மூடித் திறந்தாலும், அவை அங்கேயே காட்சி தருகின்றன.
வலது ஓரத்தில் ஒரு புதிய டேப் பட்டன் ஒன்று காட்டப்படுகிறது.
பயர்பாக்ஸ் பனோரமா (Firefox Panorama) என்ற புதிய வசதி ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் மூலம் டேப்களைக் கையாளலாம். இtணூடூ + குடடிஞூt + உ கீகளை அழுத்தினால், இந்த பனோரமா செயல்படுகிறது. திறந்திருக்கும் அனைத்து டேப்களையும் காட்டுகிறது. அனைத்து டேப்களின் தளங்களும், நக அளவில் காட்சிகளாகக் காட்டப் படுகின்றன. இதனைப் பயன்படுத்தி, டேப் குரூப்களை உண்டாக்கலாம். ஏற்கனவே அமைக்கப்பட்ட குரூப்களிலிருந்து டேப்களை நீக்கலாம் மற்றும் இணைக்கலாம். ஒரு குரூப்பில் உள்ள டேப்பில் கிளிக் செய்தால், அந்த குரூப்பில் எந்த டேப்கள் உள்ளனவோ, அதற்கான இணைய தளங்கள் மட்டுமே காட்டப்படும். டேப் ஒன்றில் ரைட் கிளிக் செய்து, நேராக அதனை ஒரு குறிப்பிட்ட குரூப்பில் சேர்க்கலாம். இதன் மூலம் நாம் நம் வேலைகளுக்கேற்றபடி, இணைய தளங்களை குரூப்களாகப் பிரிக்கலாம். பத்திரிக்கை தளங்கள், இசை தளங்கள், நம் அலுவலக வேலை சார்ந்த தளங்கள் என வகைப்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.
ஆட் ஆன் மேனேஜர் வசதியும் இப்போது ஒரு டேப்பாகக் கிடைக்கிறது. இதன் மூலம், பிரவுசரில் நிறுவப்பட்டுள்ள பெர்சனாஸ், ஆட் ஆன் தொகுப்புகள் மற்றும் ப்ளக் இன் புரோகிராம்கள் காட்டப்படுகின்றன.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 மற்றும் குரோம் 10 பிரவுசர்களில் இருப்பது போல, பயர்பாக்ஸ் பிரவுசரில் ப்ளோட்டிங் ஸ்டேட்டஸ் பார் ஒன்று தரப்பட்டுள்ளது. இணைய தளம் ஒன்று இறங்கும்போதும், கர்சரை லிங்க் ஒன்றின் மீது கொண்டு செல்லும் போது மட்டும் இந்த ப்ளோட்டிங் ஸ்டேட்டஸ் பார் காட்டப்படுகிறது.
பயர்பாக்ஸ் சோதனைத் தொகுப்பில், ஒவ்வொரு இணைய தளத்திற்கான டேப்பும், தனியாக சிஸ்டத்தின் டாஸ்க் பாரில் காட்டப்பட்டிருந்தது. ஆனால் இறுதித் தொகுப்பில் இது எடுக்கப்பட்டு மொத்தமாகவே காட்டப்படுகிறது. விண்டோஸ் 7 போன்ற சிஸ்டங்களில் இது நன்றாகச் செயல்படும். ஏனோ, மொஸில்லா இதனை நீக்கிவிட்டது. குரோம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9ல் இது கிடைக்கிறது. ஒவ்வொரு டேப்பிற்கான இணைய தளமும் தனியே ப்ராசஸ் செய்யப்படுகிறது. ஆனால், இதனால், மெமரி அதிகம் எடுத்துக் கொள்ளப்படும். ஒருவேளை, இதனைத் தவிர்க்க, மொஸில்லா, இந்த வசதியை எடுத்திருக்கலாம்.
இந்த பிரவுசரில் Firefox Sync என்ற ஒரு வசதி தரப்படுகிறது. பிரவுசரின் புக்மார்க்ஸ், ஹிஸ்டரி, பாஸ்வேர்ட், மற்றும் திறந்திருக்கும் டேப்கள் கூட, இதன் மூலம் ஒருங்கிணைக்கப்படும். அடுத்தடுத்து, வெவ்வேறு கம்ப்யூட்டர் களில் பணியாற்று பவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக, அலுவலகம் மற்றும் வீடுகளில் கம்ப்யூட்டர்களில் பணி மேற்கொள்பவர்களுக்கு இந்த வசதி அவசியம் தேவைப்படும்.
இதுவரை இது ஒரு ஆட் ஆன் தொகுப்பாக இருந்து வந்தது. பயர்பாக்ஸ் பதிப்பு 4ல்,இது ஒரு உள்ளார்ந்த வசதியாகத் தரப்பட்டுள்ளது.
முன்பெல்லாம், பேக் கிரவுண்ட் படங்களுடன் ஓர் இணைய தளம் டவுண்லோட் ஆகும் போது, பயர்பாக்ஸ் பிரவுசர் சற்று திணறும். ஆனால் தற்போது பிரவுசரில் இயங்கும் புதிய ஜெக்கோ 2.0 (Gecko 2.0) இஞ்சின், எந்த சுமையுள்ள தளத்தையும் எளிதாக இறக்கிக் காட்டுகிறது. இதுவரை இயங்கிய பயர்பாக்ஸ் பிரவுசர்கள், கம்ப்யூட்டர் மெமரியில், மற்ற பிரவுசர்களைக் காட்டிலும் அதிக மெமரியை எடுத்துக் கொண்டன. ஆனால் பயர்பாக்ஸ் 4, மற்ற பிரவுசர்களைப் போல நியாயமான அளவிலேயே மெமரியைப் பயன்படுத்துகிறது. இந்த வகையில், குரோம், அது மல்ட்டி ப்ராசஸ் சிஸ்டம் பயன்படுத்துவதால், அதிக மெமரியை எடுத்து இயங்குகிறது. ஆனால் இதே வகையில் இயங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர், மிகக் குறைந்த அளவிலேயே, மெமரியைப் பயன்படுத்துகிறது.
மற்ற பிரவுசர்களைக் காட்டிலும், அனைத்து வகைகளிலும் சிறப்பான பிரவுசராக, பயர்பாக்ஸ் பிரவுசரைக் கருத முடியாது. இருப்பினும், இதன் முந்தைய பதிப்பைக் காட்டிலும், வியக்கத்தக்க வகையில் பல முன்னேற்றங்களை பயர்பாக்ஸ் பதிப்பு 4 கொண்டுள்ளது. எனவே பயர்பாக்ஸ் ரசிகர்களும், புதிய பிரவுசர் ஒன்றைப் பயன்படுத்திப் பார்க்க விரும்புபவர்களும், இதனை மொஸில்லா வின் தளத்திலிருந்து டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து பார்க்கலாம்.
நீங்கள் பயர்பாக்ஸ் 3.6 பிரவுசரி லிருந்து, பதிப்பு 4க்கு மாறுவதாக இருந்தால், அதிக மாற்றங்களை எதிர்கொள்ளத் தயாராகுங்கள். மாற்றங் களுடன் செயல்படுவது கடினமாக இருந்தால், மெனு டூல் பாரினை இயக்கிக் கொள்ளவும். அதே போல புக்மார்க்ஸ் மெனு பார் தேவை என்றாலும், மெனு பாரினை இயக்கி பயன்படுத்த வேண்டும்.
|
No comments:
Post a Comment