தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும்.2 அல்ஹம்து
லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை
மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். சுப்ஹானல்லாஹி,
வல்ஹம்து லில்லாஹி (அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது) என்(று
அவனைத் துதிப்)பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய
(அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும். தொழுகை (வழிகாட்டும்) ஒளியாகும்.3
தானதர்மம் சான்றாகும்.4 பொறுமை ஒரு வெளிச்சமாகும்.5 குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான
சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும்.6 மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச்
சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து
தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை
அழித்துக்கொள்கின்றனர்.இதை அபூமாலிலிக் அல்அஷ்அரீ (ரலிலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.பாடம் : 2தொழுகைக்குத் தூய்மை அவசியம்.7முஸ்அப் பின் சஅத் (ரஹ்)
அவர்கள் கூறியதாவது:நோயுற்றிருந்த இப்னு ஆமிர் (ரஹ்) அவர்களை உடல்நலம்
விசாரிப்பதற்காக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் சென்றார்கள். அப்போது இப்னு
ஆமிர் (ரஹ்) அவர்கள், இப்னு உமர் அவர்களே! எனக்காகத் தாங்கள் அல்லாஹ்விடம்
பிரார்த்திக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள்
அங்கத் தூய்மை (உளூ) செய்யாமல் எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது; மோசடி செய்த
பொருளால் செய்யப்படும் எந்த தானதர்மமும் ஏற்கப்படாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். நீங்கள் பஸ்ராவி(ன் ஆட்சிப் பொறுப்பி)ல்
இருந்தீர்கள் என்று கூறி (மறுத்து)விட்டார்கள்.8இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்
தொடர்களில் வந்துள்ளது.- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப் பாளர்தொடர்கள்
வழியாகவும் வந்துள்ளது.382 ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இவை
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு
அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் ஒருவருக்கு சிறு துடக்கு (ஹதஸ்)
ஏற்பட்டுவிட்டால், அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ளாதவரை அவரது தொழுகை
ஏற்கப்படாது.9பாடம் : 3அங்கத் தூய்மை (உளூ) செய்யும் முறையும் அதன் நிறை(வான
அள)வும்.383 உஸ்மான் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்)
அவர்கள் கூறியதாவது:உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ)
செய்வதற்காகத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அங்கத் தூய்மை செய்தார்கள். (முதலில்)
தம்முடைய இரு முன் கைகளை மூன்று முறை கழுவினார்கள். பிறகு வாய் கொப்புளித்து
(மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று
முறை கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தை முழங்கை மூட்டுவரை மூன்று முறை
கழுவினார்கள். அடுத்துத் தமது இடக் கரத்தையும் அதைப் போன்றே (முழங்கை மூட்டுவரை
மூன்று முறை) கழுவினார்கள். பின்னர் தலையை (ஈரக் கையால் தடவி) மஸ்ஹு செய்தார்கள்.
பிறகு தமது வலக் காலை கணுக்கால்வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு இடக் காலையும்
அதைப் போன்றே (கணுக்கால்வரை மூன்று முறை) கழுவினார்கள்.பின்னர் நான் செய்த இந்த
அங்கத் தூய்மையைப் போன்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அங்கத் தூய்மை செய்ததை
நான் பார்த்தேன். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யார் நான் செய்த இந்த
அங்கத் தூய்மையைப் போன்று அங்கத் தூய்மை செய்து, பின்னர் வேறு எந்த (கெட்ட) எண்ணங்
களுக்கும் இடம் தாராமல் இரண்டு ரக்அத்கள் நின்று தொழுகிறாரோ அவர் முன்பு செய்த
(சிறிய) பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படும் என்று கூறினார்கள் என்றார்கள்.(இதன்
அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ -ரஹ்)
அவர்கள் கூறுகின்றார்கள்:இவ்வாறு அங்கத் தூய்மை செய்வதுதான் தொழுகைக்காக ஒருவர்
அங்கத் தூய்மை செய்யும் முறைகளிலேயே மிகவும் நிறைவானதாகும் என்று நம் அறிஞர்கள்
கூறுகின்றனர்.10இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.384 உஸ்மான்
(ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள்
கூறியாதாவது:உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்லி
(அங்கத் தூய்மை செய்தார்கள். ஆரம்பமாக) தம்முடைய முன் கைகளில் மூன்று முறை தண்ணீர்
ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தைப் பாத்திரத்தினுள் செலுத்தி (தண்ணீர்
அள்ளி) வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள்.
பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். மேலும், இரு (கைகளையும்) முழங்கை
மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை (ஈரக் கையால் தடவி) மஸ்ஹு
செய்தார்கள். பிறகு தம்மிரு கால்களையும் மூன்று முறை கழுவினார்கள்.பின்னர் யார்
எனது இந்த உளூவைப் போன்று உளூச் செய்து வேறு எந்த (கெட்ட) எண்ணங்களுக்கும் இடம்
தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ, அவர் முன்பு செய்த (சிறிய) பாவங்கள் அவருக்கு
மன்னிக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று
தெரிவித்தார்கள்.பாடம் : 4அங்கத் தூய்மை செய்வதன் சிறப்பும், அதன் பின் தொழுவதன்
சிறப்பும்.385 உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான ஹும்ரான் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் பள்ளிவாசலின் முற்றத்தில்
இருந்துகொண்டிருந் தார்கள். அப்போது அஸ்ர் நேரம். அவர்களிடம் தொழுகை அறிவிப்பாளர்
(முஅத்தின்) வந்தார். உடனே உஸ்மான் (ரலி) அவர்கள்அங்கத் தூய்மை செய்யத் தண்ணீர்
கொண்டுவரச் சொல்லி, அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு, அல்லாஹ்வின் மீதாணையாக! நான்
ஒரு நபிமொழியை அறிவிக்கப்போகிறேன். (குர்ஆனில்) ஒரு வசனம் (2:159) மட்டும்
இல்லையானால் இதை நான் உங்களுக்கு அறிவிக்கமாட்டேன்11 என்று கூறிவிட்டு
(பின்வருமாறு) கூறினார்கள்:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு
மனிதர் அழகிய முறையில் (நிறைவாக) அங்கத் தூய்மை செய்து, ஒரு தொழுகையை
நிறைவேற்றுவாராயின் அவருக்கும் அடுத்த தொழுகைக்கும் இடையிலான (சிறு) பாவங்களை
அவருக்காக அல்லாஹ் மன்னிக்காமலிருப்பதில்லை.இந்த ஹதீஸ் மூன்று
அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு
அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.அவற்றில் அபூஉசாமா (ரஹ்) அவர்களது
அறிவிப்பில், அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்த பின், கடமையாக்கப்பட்ட ஒரு
தொழுகையை நிறைவேற்றுவாராயின் என இடம்பெற்றுள்ளது.386 ஹும்ரான் பின் அபான் (ரஹ்)
அவர்கள் கூறியதாவது:உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்தபோது, அல்லாஹ்வின்
மீதாணையாக! நான் ஒரு நபிமொழியை உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். அல்லாஹ்வின்
மீதாணையாக! இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் மட்டும் இல்லையானால் இதை நான் உங்களுக்கு
அறிவிக்கமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஒரு மனிதர் அழகிய
முறையில் அங்கத் தூய்மை செய்து, பின்னர் தொழுகையை நிறைவேற்றுவாராயின் அவருக்கும்
அடுத்த தொழுகைக்கும் இடையிலான (சிறு) பாவங்கள் அவருக்காக
மன்னிக்கப்படாமலிருப்பதில்லை.இதன் அறிவிப்பாளரான உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)
அவர்கள் கூறுகின்றார்கள்:நாம் தெளிவான வசனங்களையும் நேர்வழி யையும் அருளியதுடன்
அவற்றை மக்களுக்கு வேதத்தில் விளக்கிய பின்னரும் அவற்றை யார் மறைக்கிறார்களோ
அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சபிக்கின்றான். இன்னும் சபிப்போரும் அவர்களைச்
சபிக்கின்றார்கள் எனும் (2:159 ஆவது) வசனமே (உஸ்மான் (ரலி) அவர்கள் குறிப்பிட்ட)
அந்த வசனமாகும்.387 அம்ர் பின் சயீத் பின் அல்ஆஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:நான்
(ஒரு முறை) உஸ்மான் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்கள் (அங்கத் தூய்மை
செய்வதற்காக ஒரு பாத்திரம்) தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள். பிறகு (பின்வருமாறு)
கூறினார்கள்:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமான மனிதர்
கடமையாக்கப்பட்ட ஒரு தொழுகை(யின் நேரம்) வந்ததும், அதற்காக அழகிய முறையில் அங்கத்
தூய்மை செய்து உள்ளச்சத்துடன் முறையோடு தொழுவாராயின், அந்தத் தொழுகை அதற்கு முந்தைய
(சிறிய) பாவங்களுக்குப் பரிகாரம் ஆகாமலிருப்பதில்லை; அவர் பெரும் பாவம் ஏதும்
செய்தால் தவிர. இது எல்லாக் காலத்திற்கும் பொருந்தும்.இந்த ஹதீஸ் இரு
அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.388 உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை
ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம்
அங்கத் தூய்மை செய்வதற்கான தண்ணீர் கொண்டுவந்தேன். அவர்கள் அங்கத் தூய்மை
செய்தார்கள். பிறகு அவர்கள் கூறினார்கள்: சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்கின்றனர். ஆனால், அவற்றின் நிலை என்ன என்று
எனக்குத் தெரியாது. ஆயினும், (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இதோ)
இப்போது நான் செய்த அங்கத் தூய்மை போன்று அங்கத் தூய்மை செய்ததை நான் பார்த்தேன்.
பிறகு யார் இவ்வாறு அங்கத் தூய்மை செய்கின்றாரோ, அவரது முந்தைய (சிறு) பாவங்கள்
மன்னிக்கப்பட்டுவிடும். பிறகு அவர் தொழும் தொழுகையும் பள்ளிவாசலை நோக்கி அவர்
நடப்பதும் அவருக்குக் கூடுதலா(ன வணக்க மா)க மாறிவிடும் என்று கூறினார்கள்.இந்த
ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது. அவற்றில், இப்னு அப்தா (ரஹ்)
அவர்களது அறிவிப்பில், நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள்
அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள் என்று ஹதீஸ் தொடங்குகிறது.389 அபூஅனஸ் (மாலிக்
பின் அபீஆமிர் -ரஹ்) அவர்கள் கூறியதாவது:(மதீனா பள்ளிவாசலுக்கருகில் உள்ள) மகாஇத்
எனுமிடத்தில் உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். அப்போது அவர்கள்,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை முறையை உங்களுக்கு நான்
காட்டட்டுமா? என்று கூறிவிட்டு, மும்மூன்று முறை (ஒவ்வோர் உறுப்பையும் கழுவி)
அங்கத் தூய்மை செய்தார்கள்.இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அவற்றில், குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அப்போது உஸ்மான் (ரலி) அவர்களின்
அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலரும் இருந்தனர் என்று
(அபூஅனஸ் (ரஹ்) கூறியதாக) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.390 ஹும்ரான் பின் அபான்
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்வதற்காக
அவர்களுக்குத் தண்ணீர் கொண்டுவந்து வைப்பவனாக நான் இருந்தேன். அவர்கள் தினமும்
சிறிதளவு நீரிலாவது குளிக்காமல் இருக்க மாட்டார்கள். மேலும் அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் (ஒரு நாள்) இந்தத் தொழுகையை -அதாவது அஸ்ர் தொழுகையை- முடித்துவிட்டுத்
திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
ஒன்றைப் பற்றி உங்களிடம் நான் அறிவிக்கலாமா? அல்லது வாய்மூடி இருந்து விடலாமா?
என்று எனக்குத் தெரியவில்லை என்று சொன்னார்கள். உடனே நாங்கள், அல்லாஹ்வின் தூதரே!
அது நல்ல தகவலாக இருப்பின் எங்களுக்கு அறிவியுங்கள். இல்லாவிட்டால், அல்லாஹ்வும்
அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறினோம். அப்போது அவர்கள், ஒரு முஸ்லிம்
தம்மீது அல்லாஹ் கட்டாயமாக்கியுள்ள அங்கத் தூய்மையை (உளூவை) முழுமையாகச் செய்து,
இந்த ஐவேளைத் தொழுகைகளைத் தொழுவாராயின் அந்த ஐவேளைத் தொழுகைகளுக்கிடையே ஏற்படும்
(சிறு) பாவங்களுக்கு அவை பரிகாரமாக அமையாமலிருப்பதில்லை என்று கூறினார்கள்.இந்த
ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.391 ஜாமிஉ பின் ஷத்தாத் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:பிஷ்ர் பின் மர்வான் பின் அல்ஹகமுடைய ஆட்சிக் காலத்தில் ஹும்ரான் பின்
அபான் (ரஹ்) அவர்கள் இந்த (பஸ்ரா) பள்ளிவாசலில் வைத்து அபூபுர்தா (ரஹ்) அவர்களிடம்
(பின் வருமாறு) அறிவிப்பதை நான் செவியுற்றேன்:12உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)
அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப யார் முழுமையாக அங்கத் தூய்மை
செய்கின் றாரோ அவர் தொழும் கடமையாக்கப்பட்ட தொழுகைகள் (ஒவ்வொன்றும்) அவற்றுக்கு
இடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.இவ்வாறுதான் உபைதுல்லாஹ் பின் முஆத் (ரஹ்) அவர்களது
அறிவிப்பில் காணப்படுகிறது. ஃகுன்தர் முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது
அறிவிப்பில் பிஷ்ர் பின் மர்வான் ஆட்சிக் காலத்தில் எனும் வாசகமோ கடமையாக் கப்பட்ட
என்ற குறிப்போ இடம்பெறவில்லை.இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில்
வந்துள்ளது.392 உஸ்மான் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:ஒரு நாள் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அழகிய முறையில் அங்கத்
தூய்மை செய்தார்கள். பிறகு பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் (ஒரு முறை) அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்ததை நான் பார்த்தேன். பிறகு
யார் இவ்வாறு அங்கத் தூய்மை செய்துவிட்டுத் தொழுவதற்காக என்றே பள்ளிவாசலுக்குப்
புறப்பட்டுச் செல்கிறாரோ அவர், முன்பு செய்த (சிறு) பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.393 உஸ்மான் பின் அஃப்பான்
(ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: யார்
தொழுகைக்காக முழுமையான முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்து, கடமையான தொழுகைக்காக
நடந்துசென்று, மக்களுடன் தொழுகிறாரோ அல்லது கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்கிறாரோ
அல்லது பள்ளிவாசலில் தொழுகிறாரோ அவருக்கு அவருடைய பாவங் களை அல்லாஹ்
மன்னித்துவிடுகின்றான்.இதை உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுடைய முன்னாள்
அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் நான்கு
அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.பாடம் : 5ஐவேளைத் தொழுகைகளும், ஒரு
ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆவும், ஒரு ரமளானிலிருந்து அடுத்த ரமளானும் அவற்றுக்கிடையே
எற்படும் பாவங் களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்கள் நீங்கலாக.394
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆ
விலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப்
பரிகாரங்களாகும். பெரும்பாவங்களில் சிக்காதவரை.13இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.395 நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன
அவற்றுக்கிடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்.இதை அபூஹுரைரா
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.396 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ, ஒரு ரமளானிலிருந்து
மறு ரமாளான் ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும்
பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த
ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.பாடம் : 6அங்கத் தூய்மை (உளூ) செய்த
பின்னால் ஓதப்படும் விரும்பத் தகுந்த திக்ர்.397 உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள்
கூறியதாவது:நாங்கள் (முறைவைத்து) ஒட்டகங்கள் மேய்த்துவந்தோம். இந்நிலையில் எனது
முறை வந்தபோது மாலை நேரத்தில் நான் அவற்றை ஓட்டிக்கொண்டு மேய்ச்சல் நிலத்திற்குச்
சென்றேன். (பிறகு நான் திரும்பிவந்தேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
மக்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள், ஒரு முலிஸ்லிம்
அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப் படுத்தி
(பணிந்து, உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்ப
தில்லை என்று கூறுவதை நான் கேட்டேன். உடனே நான் என்ன அருமையான வார்த்தை! என்றேன்.
அப்போது எனக்கு முன்னால் இருந்த ஒருவர் இதற்கு முன்னர் சொன்ன வார்த்தை இதைவிட
அருமையானது என்றார். உடனே நான் (அவர் யார் என்று) பார்த்தேன். அங்கே உமர் (ரலி)
அவர்கள் இருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: சற்று
முன்னர்தான் நீங்கள் இங்கு வந்தீர்கள்; நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் (நீங்கள் வருவதற்கு முன் பின்வருமாறு) கூறினார்கள்:உங்களில் ஒருவர்
முழுமையான முறையில் அங்கத் தூய்மை செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ
அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும்,
முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும்
உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத்
திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்துகொள்ளலாம்.இந்த ஹதீஸ்
இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு
அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அங்கத் தூய்மை செய்துவிட்டு, அஷ்ஹது
அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ
ரசூலுஹு என்று கூறுவாராயின் என்று (சற்று வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது.
(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையானவர்
வேறெவருமில்லை என்று நான் உறுதிமொழிகிறேன். மேலும். முஹம்மத் (ஸல்) அவர்கள்,
அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள் என்றும் நான்
உறுதிமொழிகிறேன்.)14பாடம் : 7நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) முறை.398
யஹ்யா பின் உமாரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஸைத் பின்
ஆஸிம் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை
(உளூ) செய்ததைப் போன்று எங்களுக்கு நீங்கள் அங்கத் தூய்மை செய்து காட்டுங்கள்!
என்று கூறப்பட்டது. அப்போது அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள், ஒரு பாத்திரம்
(தண்ணீர்) கொண்டுவரச் சொல்லி அதிலிருந்து சிறிதளவு நீரை தம்மிரு (முன்) கைகளில்
ஊற்றி அவற்றை மூன்று முறை கழுவினார்கள். பிறகு (பாத்திரத்திற்குள்) தமது கையை
நுழைத்து ஒரு கையளவு நீர் அள்ளி, வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி)
மூக்குச் சிந்தினார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள். பிறகு
(பாத்திரத்திற்குள்) தமது கையை நுழைத்து நீர் எடுத்து மூன்று முறை முகத்தைக்
கழுவினார்கள். பின்னர் (பாத்திரத்திற்குள்) தமது கையை நுழைத்து நீர் எடுத்து தம்
இரு கைகளையும் முழங்கைகள்வரை இரண்டிரண்டு முறை கழுவினார்கள். பிறகு
(பாத்திரத்திற்குள்) தமது கையை நுழைத்தெடுத்து (ஈரக் கையால்) தமது தலையைத் தடவி
(மஸ்ஹு செய்யலா)னார்கள். (அதாவது) தம் இரு கைகளையும் முன்னிருந்து பின்னே
கொண்டுசென்றார்கள்; பின்னிருந்து முன்னே கொண்டுவந்தார்கள். பின்னர் இரு கால்களையும்
கணுக்கால்வரை கழுவினார்கள். பிறகு இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
அங்கத் தூய்மை (உளூ) செய்துவந்தார்கள் என்று கூறினார்கள்.15- மேற்கண்ட ஹதீஸ்
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு கணுக்கால்வரை எனும்
வாசகம் இடம்பெறவில்லை.- மேற்கண்ட ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும்
வந்துள்ளது. அதில், (அப்துல்லாஹ் பின் ஸைத்-ரலி) அவர்கள் மூன்று முறை வாய்
கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள் என்று
இடம்பெற்றுள்ளது. ஒரு கையளவு நீரினால் எனும் வாசகம் இடம்பெறவில்லை. மேலும், அந்த
அறிவிப்பில் முன்னிருந்து பின்னே கொண்டுசென்றார்கள். பின்னிருந்து முன்னே
கொண்டுவந்தார்கள் எனும் வாசகத்திற்குப் பிறகு தம் இரு கைகளையும் முன் தலையில்
வைத்து அப்படியே அவற்றைப் பிடரிவரை கொண்டு சென்றார்கள். பிறகு ஆரம்பித்த இடத்திற்கே
திரும்பவும் கொண்டுவந்தார்கள். பின்னர் இரு கால்களையும் கழுவினார்கள் என்று அதிகப்
படியாக இடம்பெற்றுள்ளது.- மேற்கண்ட ஹதீஸ் வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும்
வந்துள்ளது.அதில், மூன்று முறை கையால் நீர் அள்ளி வாய் கொப்புளித்தார்கள்;
மூக்கிற்கு நீர் செலுத்தி னார்கள் என்று காணப்படுகிறது. மேலும், மஸ்ஹு செய்யும்போது
ஒரேயொரு முறை முன்னிருந்து பின்னே, பின்னிருந்து முன்னே (ஈரக் கையைக்)
கொண்டுசென்றார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது.அறிவிப்பாளர் பஹ்ஸ் (ரஹ்) அவர்கள்
கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை எனக்கு உஹைப் (ரஹ்) அவர்கள் சொல்லிக்கொடுத்தார்கள்.
உஹைப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு இந்த ஹதீஸை அம்ர் பின் யஹ்யா (ரஹ்)
அவர்கள் இரண்டு முறை சொல்லிக்கொடுத்தார்கள்.399 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)
அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்ததை
நான் பார்த்தேன். அப்போது அவர்கள் வாய் கொப்புளித்துவிட்டு (மூக்கிற்கு நீர்
செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள்;
தமது வலக் கையை மூன்று முறை கழுவினார்கள். மற்றொரு கையையும் மூன்று முறை
கழுவினார்கள். ஏற்கெனவே தமது கையிலிருந்த தண்ணீர் அல்லாத (புதிதாக எடுத்த)
தண்ணீரால் தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். மேலும், தம் கால்களை, அவை
சுத்தமாகும்வரை (நன்கு) கழுவினார்கள்.இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில்
வந்துள்ளது.பாடம் : 8மூக்குச் சிந்தும்போதும் (மல ஜலம் கழித்துவிட்டு) கற்களால்
துப்புரவு செய்யும்போதும் ஒற்றைப்படையாகச் செய்வது.400 நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:உங்களில் எவரேனும் (மல ஜலம் கழித்து விட்டு) கற்களால் துப்புரவு
செய்தால் அதை ஒற்றைப்படையாகவே செய்யட்டும். உங்களில் எவரேனும் அங்கத் தூய்மை (உளூ)
செய்தால் அவர் மூக்கிற்கு நீர் செலுத்திப் பின்னர் மூக்கைச் சிந்தட்டும்.இதை
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்
தொடர்களில் வந்துள்ளது.401 ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:இவை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு
அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரேனும் அங்கத் தூய்மை (உளூ) செய்தால் அவர்
தம்முடைய இரு மூக்குத் துவாரங்களுக்குள் நீர் செலுத்திப் பின்னர் சிந்தட்டும்.402
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:அங்கத் தூய்மை செய்பவர்,
(மூக்கிற்குள் நீர் செலுத்தி) மூக்குச் சிந்தட்டும்! (மல ஜலம் கழித்துவிட்டு)
கற்களால் துப்புரவு செய்பவர், ஒற்றைப்படையாகச் செய்யட்டும்!இதை அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) மற்றும் அபூசயீத்
அல்குத்ரீ (ரலி) ஆகியோரிடமிருந்து வேறு இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.403
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் ஒருவர் உறங்கியெழுந்ததும் (தமது
மூக்கிற்குள் நீர் செலுத்தி) மூன்று முறை மூக்குச் சிந்தட்டும். ஏனெனில், இரவில்
ஷைத்தான் அவரது உள்மூக்கில் தங்குகிறான்.16இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.404 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் ஒருவர்
(மல ஜலம் கழித்து விட்டுக்) கற்களால் துப்புரவு செய்தால் ஒற்றைப் படையாகச்
செய்யட்டும்.17இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த
ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.பாடம் : 9இரு கால்களையும் முழுமையாகக்
கழுவுவது கட்டாயம் (வாஜிப்) ஆகும்.18405 ஷத்தாத் பின் அல்ஹாத் (ரலி) அவர் களுடைய
முன்னாள் அடிமையான சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
அவர்கள் இறந்த தினத்தன்று நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி)
அவர்களிடம் சென்றேன். அப்போது (ஆயிஷா (ரலி) அவர் களுடைய சகோதரர்) அப்துர் ரஹ்மான்
பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் அங்கு வந்து அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது
ஆயிஷா (ரலி) அவர்கள், அப்துர் ரஹ்மான்! உளூவை நிறைவாகச் செய்! ஏனெனில், (உளூவில்
சரியாகக் கழுவப்படாத) குதிகால் களுக்கு நரக வேதனைதான் என்று அல்லாஹ் வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.இந்த ஹதீஸ் மூன்று
அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர்
வழியாகவும் வந்துள்ளது.- மேற்கண்ட ஹதீஸ் சாலிம் (ரஹ்) அவர் களிடமிருந்தே மேலும் இரு
அறிவிப்பாளர் தொடர்களிலும் வந்துள்ளது.அவற்றில், நானும் அப்துர் ரஹ்மான் பின்
அபீபக்ர் (ரலி) அவர்களும் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் இறுதித் தொழுகைக்
காக (ஜனாஸா) புறப்பட்டுச் சென்றோம். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களின் அறைவாயிலைக்
கடந்துசென்றோம். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் (மேற்கண்ட ஹதீஸிலுள்ளபடி) கூறினார்கள்
என்று இடம்பெற்றுள்ளது.இந்த அறிவிப்புகளில் மஹ்ரீ (ரலி) அவர்களுடைய (அதாவது ஷத்தாத்
பின் அல்ஹாத் அவர்களுடைய) முன்னாள் அடிமை சாலிம் (ரஹ்) அவர்கள் என்று
கூறப்பட்டுள்ளது.- மேற்கண்ட ஹதீஸ் சாலிம் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர்
அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.அதில், நான் ஆயிஷா (ரலி) அவர்களுடன்
இருந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்கள் நபி (ஸல்) அவர்கள் (மேற்கண்டபடி)
கூறினார்கள் என்று தெரிவித்தார்கள் என இடம்பெற்றுள்ளது.இந்த அறிவிப்பில் ஷத்தாத்
பின் அல்ஹாத் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமை சாலிம் என்று காண்பபடுகிறது.406
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:நாங்கள் (ஒரு பயணத்தில்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கித்
திரும்பிக்கொண்டிருந்தோம். சாலையிலிருந்த ஒரு நீர்நிலைக்கு நாங்கள்
வந்துசேர்ந்தபோது சிலர் அஸ்ர் (தொழுகை) நேரத்தில் அவசரப்பட்டனர். (அதற்காக) அவசர
அவசரமாக அங்கத் தூய்மை (உளூ) செய்தனர். நாங்கள் அவர்களிடம் போய்ச்சேர்ந்தபோது
அவர்களுடைய குதிகால்களில் தண்ணீர் படாமல் சொட்டையாக அவை காட்சியளித்தன. அப்போது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு
நரக வேதனைதான். உளூவை முழுமையாகச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.இந்த ஹதீஸ் இரு
அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்
பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில்,
உளூவை முழுமையாகச் செய்யுங்கள் எனும் வாசகம் இடம்பெறவில்லை.407 அப்துல்லாஹ் பின்
அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:நாங்கள் மேற்கொண்ட பயணமொன்றில் நபி (ஸல்) அவர்கள்
எங்களுக்குப் பின்னால் (சற்று தாமதமாக) வந்துகொண்டிருந்தார்கள். அஸ்ர் தொழுகையின்
நேரம் வந்துவிட்ட நிலையில் எங்களிடம் அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள்
(கால்களைக் கழுவாமல்) கால்களைத் தண்ணீர் தொட்டுத் தடவ (-மஸ்ஹு செய்ய) ஆரம்பித்தோம்.
(இதைக் கண்ணுற்ற) நபி (ஸல்) அவர்கள் (உளூவில் சரியாகக் கழுவப்படாத இத்தகைய)
குதிகால்களுக்கு நரக வேதனைதான் என்று அறிவிப்புச் செய்தார்கள்.19இந்த ஹதீஸ் இரு
அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.408 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:தம்
குதிகால்களைக் கழுவா(மல் உளூச் செய்துகொண்டிருந்)த ஒரு மனிதரை நபி (ஸல்) அவர்கள்
கண்டார்கள். அப்போது (உளூவில் சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக
வேதனை தான் என்று கூறினார்கள்.409 முஹம்மத் பின் ஸியாத் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:அபூஹுரைரா (ரலி) அவர்கள் நீர்குவளையில் இருந்து (தண்ணீர் ஊற்றி) அங்கத்
தூய்மை (உளூ) செய்துகொண்டிருந்த மக்கள் சிலரைக் கண்டார்கள். அப்போது, உளூவை முழுமை
யாகச் செய்யுங்கள். ஏனெனில், (உளூவில் சரியாகக் கழுவப்படாத) குதிகால் நரம்புகளுக்கு
நரக வேதனைதான் என்று அபுல் காசிம் (முஹம்மத் -ஸல்) அவர்கள் கூறுவதை நான்
கேட்டுள்ளேன் என்றார்கள்.20இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர் களில்
வந்துள்ளது.410 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:(உளூவில் சரியாகக்
கழுவப்படாத) குதிகால் களுக்கு நரக வேதனைதான்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.பாடம் : 10(அங்கத் தூய்மை செய்யும்போது) கழுவ வேண்டிய உறுப்புகள்
அனைத்தையும் சிறிதும் விடுபடாமல் முழுமையாகக் கழுவது கட்டாயம் (வாஜிப்) ஆகும்.411
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒரு மனிதர் அங்கத் தூய்மை (உளூ)
செய்தார். அப்போது அவர் தமது பாதத்தில் நகம் அளவு இடத்தை (கழுவாமல்)
விட்டுவிட்டார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், திரும்பிச் சென்று, சரியாக உளூச்
செய்யுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே அவர் திரும்பிச் சென்று (மீண்டும் உளூச்
செய்து) பின்னர் தொழுதார்.பாடம் : 11அங்கத் தூய்மை செய்த நீரோடு (சிறு) பாவங்களும்
வெளியேறுகின்றன.412 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஒரு முஸ்லிமான
அல்லது முஃமினான (இறைநம்பிக்கை கொண்ட) அடியார் அங்கத் தூய்மை (உளூ) செய்யும்போது
முகத்தைக் கழுவினால், கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக்
கழுவிய) நீருடன் அல்லது நீரின் கடைசித் துளியுடன் முகத்திலிருந்து வெளியேறுகின்றன.
அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக்
கழுவிய) தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசித் துளியுடன் வெளியேறுகின்றன. அவர்
கால்களைக் கழுவும்போது, கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக்
கழுவிய) நீரோடு அல்லது நீரின் கடைசித் துளியோடு வெளியேறுகின்றன. இறுதியில், அவர்
பாவங்களிலிருந்து தூய்மை அடைந்த வராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார்.இதை
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில்
வந்துள்ளது.413 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஒருவர் முறையாக அங்கத்
தூய்மை செய்யும்போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது
உடலிலிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்குக்
கீழேயிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன.இதை உஸ்மான் பின் அஃப்பான்
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.பாடம் : 12அங்கத் தூய்மை செய்யும்போது முகம், கை,
கால் ஆகிய உறுப்புகளைக் (கழுவ வேண்டிய எல்லையைவிடக்)கூடுதலாகக் கழுவுவது விரும்பத்
தக்கதாகும்.21414 நுஐம் பின் அப்தில்லாஹ் அல்முஜ்மிர் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:அபூஹுரைரா (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்ததை நான் பார்த்தேன்.
அப்போது அவர்கள் தமது முகத்தை முழுமையாகக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தை
புஜம்வரைக் கழுவினார்கள். பிறகு இடக் கரத்தை புஜம் வரைக் கழுவினார்கள். பிறகு (ஈரக்
கையால்) தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்யலா) னார்கள். பிறகு வலக் காலை கணைக்கால்
வரைக் கழுவினார்கள். பிறகு இடக் காலையும் (அவ்வாறே) கணைக்கால்வரைக் கழுவினார்கள்.
பின்னர், இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்வதை நான்
பார்த்தேன் என்று கூறினார்கள்.மேலும், அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:நீங்கள்
அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்தமையால் மறுமை நாளில் (பிரதான) உறுப்புகள்
பிரகாசிப்போராய் இருப்பீர்கள். எனவே, உங்களில் யாருக்கு முடியுமோ அவர் (தம் பிரதான
உறுப்புகளை) எல்லைக்கு மேல் அதிகமாகக் கழுவிக்கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறி னார்கள்.22இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர் களில்
வந்துள்ளது.415 நுஐம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அங்கத் தூய்மை செய்வதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தையும்
கைகளையும் கழுவிக் கொண்டே தோள்பட்டைவரை சென்றார்கள். பிறகு கால்களைக் கழுவிக்கொண்டே
கணைக்கால்வரை சென்றார்கள்.பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மறுமை நாளில் என்
சமுதாயத்தார் அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள்
பிரகாசிப்பவர்களாய் வருவார்கள். ஆகவே, உங்களில் எவருக்கு (உளூவில் தம் பிரதான
உறுப்புக்களை நீட்டிக் கழுவி) தமது ஒளியை நீட்டிக்கொள்ள முடியுமோ அவர் அதைச்
செய்துகொள்ளட்டும் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.416 அபூஹுரைரா (ரலி)
அவர்கள் கூறியதாவது:(மறுமையில் எனக்கு வழங்கப்படவிருக்கும் அல்கவ்ஸர் எனும்) எனது
நீர்த் தடாக(த்தின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென் அரபகத்திலுள்ள) அதன்
நகரத்திலிருந்து (வட அரபகத்திலுள்ள) அய்லா நகர(ம் வரையிலான தூர)த்தைவிட அதிகத்
தொலைவுடையதாகும். அ(தன் நீரான)து, பனிக்கட்டியைவிட மிகவும் வெண்மையானது; பால் கலந்த
தேனைவிட மதுரமானது. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கையைவிட அதிகமானவை.
ஒருவர் தமது நீர்த் தொட்டியை விட்டும் (பிற) மக்களின் ஒட்டகங்களைத் தடுப்பதைப்
போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் மக்கள் சிலரைத் தடுப்பேன் என்று அல்லாஹ்
வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அன்றைய தினம்
(உங்கள் சமூகத்தாராகிய) எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா? என்று
கேட்டார்கள். அதற்கு அவர்கள், ஆம்; வேறெந்தச் சமுதாயத்தாருக்கும் இல்லாத ஓர்
அடையாளம் உங்களுக்கு இருக்கும். அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக(ப் பிரதான)
உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். (அதை வைத்து உங்களை
நான் அடையாளம் கண்டுகொள்வேன்) என்று கூறினார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்
களில் வந்துள்ளது.417 அபூஹரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள், (மறுமை நாளில்) எனது சமுதாயத்தார் எனது (அல்கவ்ஸர் எனும்) தடாகத்திற்கு
வருவார்கள். ஒருவர் தமது ஒட்டகத்தை விட்டும் பிறரது ஒட்டகத்தை விரட்டிவிடுவதைப்
போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் சிலரை விரட்டுவேன் என்று கூறினார்கள்.
மக்கள், அல்லாஹ்வின் நபியே! எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா? என்று
கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆம்;
வேறெவருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். அங்கத் தூய்மை செய்ததன்
அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள்.
உங்களில் ஒரு குழுவினர் என்னைவிட்டுத் தடுக்கப்படுவர். அவர்களால் (என்னருகில்)
வந்து சேரமுடியாது. அப்போது நான், என் இறைவா! இவர்கள் என் தோழர்கள் என்பேன்.
அப்போது வானவர் ஒருவர் என்னிடம், உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாய்
உங்களது மார்க்கத்தில்) என்னென்ன உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?
என்று கேட்பார்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.418 ஹுதைஃபா பின்
அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனது
(அல்கவ்ஸர் எனும்) தடாக(த்தின் இரு கரை களுக்கிடையேயான தூர)மானது, (தென்
அரபகத்திலுள்ள) அதன் நகரத்திலிருந்து (வட அரபகத்திலுள்ள) அய்லா நகர(ம் வரையிலான
தூர)த்தைவிட அதிகத் தொலைவுடையதாகும். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது
சத்தியமாக! ஒருவர் தமது நீர்த் தொட்டியை விட்டு மற்றவர்களின் ஒட்டகத்தை
விரட்டுவதைப் போன்று, அந்தத் தடாகத்திலிருந்து சிலரை நான் விரட்டிவிடுவேன் என்று
கூறினார்கள்.மக்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா?
என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம்; நீங்கள் அங்கத்
தூய்மை செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம்
வருவீர்கள். இந்த அடையாளம் வேறெவருக்கும் இருக்காது என்று கூறினார்கள்.419
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
(முஸ்லிம்களின்) பொது மையவாடிக் குச் சென்று அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின்
முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹிகூன் (அடக்கத் தலங்களிலுள்ள
இறைநம்பிக்கையாளர்களே! உங்கள்மீது இறைச்சாந்தி பொழியட்டும். இறைவன் நாடினால்
நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தாம்) என்று கூறி விட்டு, நம்
சகோதரர்களை (இவ்வுலகிலேயே) பார்க்க நான் ஆசைப்படுகிறேன் என்று சொன் னார்கள்.
மக்கள், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் சகோதரர்கள் இல்லையா? என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் என் தோழர்கள்தாம். (நான் கூறுவது)
இதுவரை (பிறந்து) வந்திராத நம் சகோதரர்கள் என்று கூறினார்கள். மக்கள், உங்கள்
சமுதாயத்தாரில் இதுவரை (பிறந்து) வராதவர்களை நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்வீர்கள்,
அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
ஒரு மனிதரிடம் முகமும் கை கால்களும் வெண்மையாக உள்ள குதிரை ஒன்று இருந்தது. அது
கறுப்புக் குதிரைகளுக்கிடையே இருந்தால் தமது குதிரையை அவர் அறிந்துகொள்ள மாட்டாரா,
கூறுங்கள் என்று கேட்டார்கள். மக்கள், ஆம் (அறிந்து கொள்வார்), அல்லாஹ்வின் தூதரே!
என்று பதிலளித்தனர். (அவ்வாறே) அவர்கள் அங்கத் தூய்மையினால் (பிரதான) உறுப்புகள்
பிரகாசிக்கும் நிலையில் (மறுமையில்) வருவார்கள். நான் அவர்களுக்கு முன்பே
(அல்கவ்ஸர் எனும் எனது) தடாகத்திற்குச் சென்று அவர்களுக்கு நீர் புகட்டக்
காத்திருப்பேன். அறிந்துகொள்ளுங்கள்! வழி தவறி(விளைச்சல் நிலத்திற்குள்
நுழைந்து)விட்ட ஒட்டகம் துரத்தப்படுவதைப் போன்று, சிலர் எனது தடாகத்திலிருந்து
துரத்தப்படுவார்கள். அவர்களை நான் வாருங்கள் என்று சப்தமிட்டு அழைப்பேன். அப்போது,
இவர்கள் உங்களுக்குப் பின்னால் (உங்களது மார்க்கத்தை) மாற்றிவிட்டார்கள் என்று
சொல்லப்படும். அப்போது நான் (இவர்களை) இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்து
வானாக; அப்புறப்படுத்துவானாக! என்று கூறுவேன்.இந்த ஹதீஸ் நான்கு
அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு
அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.அவற்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் (ஒரு நாள்) பொது மையவாடிக்குப் புறப்பட்டார்கள். (அங்கு போய்) அஸ்ஸலாமு
அலைக்கும் தார கவ்மின் முஃமினீன்; வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹிகூன் என்று
கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது. (அறிந்துகொள்ளுங்கள் என்பதற்கு பதிலாக)
உறுதியாக என்று காணப் படுகிறது.பாடம் : 13உளூவின் நீர், (உறுப்புகளில்) எங்கெல்லாம்
படுகிறதோ அங்கெல்லாம் (மறுமையில்) வெண்மையும் பரவும்.420 அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டிருந்த அபூஹுரைரா (ரலி)
அவர்களுக்குப் பின்னால் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தமது கையை
அக்குள்வரை நீட்டிக் கழுவினார்கள்.நான், அபூஹுரைரா (ரலி) அவர்களே! இது என்ன அங்கத்
தூய்மை? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஃபர்ரூகின் மக்களே! (பாமரர்களான) நீங்கள்
இங்குதான் இருந்தீர்களா? நீங்கள் இங்குதான் இருக்கிறீர்கள் என்று நான்
அறிந்திருந்தால் இவ்வாறு அங்கத் தூய்மை செய்திருக்கமாட்டேன். என் உற்ற தோழர் (ஸல்)
அவர்கள், இறைநம்பிக்கையாளரின் உறுப்பு களில் எங்கெல்லாம் உளூவின் நீர் படுகிறதோ
அங்கெல்லாம் வெண்மை பரவும் என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.பாடம் :
14சிரமமான சூழ்நிலைகளிலும் முழுமையாக அங்கத் தூய்மை செய்வதன் சிறப்பு.421 அபூஹுரைரா
(ரலி) அவர்கள் கூறியதாவது:(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (உங்கள்)
தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான்
சொல்லட்டுமா? என்று கேட்டார்கள். மக்கள், ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!
என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும்
அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை
எடுத்துவைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை
எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும் என்று
கூறினார்கள்.23இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.- மேற்கண்ட
ஹதீஸ் இன்னும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், ஷுஅபா
(ரஹ்) அவர்களது அறிவிப்பில் கட்டுப்பாடு பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை. மாலிக்
(ரஹ்) அவர்களது அறிவிப்பில் இவைதாம் கட்டுப்பாடுகளாகும்; இவைதாம்
கட்டுப்பாடுகளாகும் என்று இரு முறை (அல்லாஹ்வின் தூதர்) கூறியதாக இடம்
பெற்றுள்ளது.பாடம் : 15பல் துலக்குதல்24422 நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லது என் சமுதாயத்தாருக்குச் சிரமம்
ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சாமலிருந்தால் ஒவ்வொரு தொழுகையின்போதும் பல்
துலக்குமாறு அவர்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.423 ஷுரைஹ்
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள்
வீட்டுக்குள் நுழைந்ததும் அவர்கள் செய்யும் முதல் வேலை எது? என்று கேட்டேன். அதற்கு
ஆயிஷா (ரலி) அவர்கள், பல் துலக்குவது என்று பதிலளித்தார்கள்.424 ஆயிஷா (ரலி)
அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் பல்
துலக்குவார்கள்.இதை ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.425 அபூமூசா அல்அஷ்அரீ
(ரலி) அவர்கள் கூறியதாவது:நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது பல்
துலக்கும் குச்சியின் முனை அவர்களின் வாயில் இருந்தது (அவர்கள் பல்
துலக்கிக்கொண்டிருந்தார்கள்).25426 ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள்
கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை (தஹஜ்ஜுது)க்காக
எழுந்ததும் பல் துலக்கும் குச்சியால் தமது வாயைத் தேய்ப்பார்கள்.- மேற்கண்ட ஹதீஸ்
மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் இரவில் எழுந்தால்... என ஹதீஸ் தொடங்குகிறது; இரவுத்
தொழுகைக்காக எனும் குறிப்பு இடம்பெறவில்லை.26427 ஹுதைஃபா (ரலி) அவர்கள்
கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல்
துலக்கும் குச்சியால் தம் வாயைத் தேய்ப்பார்கள்.இந்த ஹதீஸ் பல
அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.428 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
கூறியதாவது:நான் (என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில்) நபி (ஸல்)
அவர்களுடன் ஓர் இரவு தங்கினேன். இரவின் இறுதிப் பகுதியில் நபி (ஸல்) அவர்கள்
எழுந்து வெளியே சென்று வானத்தைப் பார்த்தார்கள். பிறகு திண்ணமாக வானங்கள் மற்றும்
பூமியின் படைப்(பு அமைப்)பிலும், இரவு-பகல் மாறி மாறி வருவதிலும்... என்று தொடங்கி
நரக வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாயாக என்பதுவரை இந்தக் குர்ஆன் வசனங்களை
(3:190,191) ஓதினார்கள். பின்னர் வீட்டிற்குள் திரும்பிவந்து பல் துலக்கி, அங்கத்
தூய்மை செய்தார்கள். பிறகு நின்று தொழுதார்கள். பின்னர் சாய்ந்து
படுத்துக்கொண்டார்கள். பிறகு எழுந்து (வீட்டிற்கு) வெளியே சென்று வானத்தைப்
பார்த்தபடி இந்த (3:190,191) வசனங்களை (மீண்டும்) ஓதினார்கள். பிறகு திரும்பி வந்து
பல் துலக்கி, அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பின்னர் நின்று தொழுதார்கள்.பாடம் :
16இயற்கை மரபுகள்27429 நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:இயற்கை மரபுகள் ஐந்தாகும்
அல்லது ஐந்து செயல்கள் இயற்கை மரபுகளில் (-இறைத் தூதர்கள் வழியில்) அடங்கும்.
(அவையாவன:) விருத்த சேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களை(ந்திடச் சவரக்
கத்தியைப் பயன்படுத்து)வது, நகங்களை வெட்டிக்கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது,
மீசையைக் கத்தரித்துக்கொள்வது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.28இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.430
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த
சேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களை(ந்து கொள்வதற்காகச் சவரக் கத்தியைப்
பயன்படுத்து)வது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது, நகங்களை வெட்டிக்கொள்வது, அக்குள்
முடிகளை அகற்றிக்கொள்வது ஆகியவைதாம் அவை.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.431 அனஸ் பின்
மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள்
முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது ஆகிய வற்றில் நாற்பது
நாட்களுக்கு மேல் விட்டு வைக்கக் கூடாதென எங்களுக்குக் கால வரம்பு
விதிக்கப்பட்டிருந்தது.29இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.432
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள்.இதை
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில்
வந்துள்ளது.433 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள் மீசையை ஒட்ட
நறுக்குமாறும் தாடியை வளர்க்குமாறும் கட்டளையிட்டார்கள்.434 அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்:இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: மீசையை ஒட்ட
நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள்.இதை இப்னு உமர் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.30435 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:மீசையை ஒட்டக்
கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். அக்னி ஆராதகர் (மஜூசி) களுக்கு மாறு
செய்யுங்கள்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.436 அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்:பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன:)
மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, பல் துலக்குவது, நாசிக்கு நீர்
செலுத்துவது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, அக்குள் முடிகளை
அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது, (மல ஜலம் கழித்த பின்) தண்ணீரால்
துப்புரவு செய்வது.இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.இந்த ஹதீஸ் மூன்று
அறிவிப்பாளர்தொடர் களில் வந்தள்ளது.(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸகரிய்யா பின்
அபீஸாயிதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) முஸ்அப்
பின் ஷைபா (ரஹ்) அவர்கள், பத்தாவது விஷயத்தை நான் மறந்துவிட்டேன். அது வாய்
கொப்புளிப்பதாய் இருக்கலாம் என்று கூறினார்கள்.குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில்,
(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) இன்திகாஸுல் மாயி எனும் சொற்றொடருக்கு (மல ஜலம் கழித்த
பின்) துப்புரவு செய்தல் என்று பொருள் எனவும் அதிகப்படி யாக இடம்பெற்றுள்ளது.-
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.அதில்,
அறிவிப்பாளர் ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்) அவர்கள், தம் தந்தை அபூஸாயிதா (ரஹ்)
அவர்கள்தாம் அந்த பத்தாவது விஷயத்தை மறந்துவிட்டேன் எனக் கூறியதாக
இடம்பெற்றுள்ளது.பாடம் : 17கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல்31437 அப்துர் ரஹ்மான்
பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்களிடம், மல ஜலம்
கழிக்கும் முறை உட்பட அனைத்தையுமே உங்கள் இறைத்தூதர் உங்களுக்குக்
கற்றுத்தந்திருக்கிறார்(போலும்) என்று (பரிகாசத்துடன்) கேட்கப்பட்டது. (இணை
வைப்பாளர்கள்தாம் அவ்வாறு கேட்டனர்.)அதற்கு சல்மான் (ரலி) அவர்கள், ஆம்
(உண்மைதான்); மல ஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்க வேண்டாமென்றும் (மல ஜலம்
கழித்த பின்) வலக் கரத்தால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும், மூன்றை விடக் குறைவான
கற்களால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும், கெட்டிச் சாணத்தாலோ எலும்பாலோ துப்புரவு
செய்ய வேண்டாமென் றும் எங்களை (எங்கள் நபி) தடுத்தார்கள் என்று கூறினார்கள்.இந்த
ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.- சல்மான் அல்ஃபார்சீ (ரலி)
அவர்கள் கூறியதாவது:எங்களிடம் இணைவைப்பாளர்கள் (சார்பாக ஒருவர்) உங்கள் தோழர் (நபி
(ஸல்) அவர்கள்) உங்களுக்கு மல ஜலம் கழிக்கும் முறையைக்கூட கற்றுத்தருவதாக நான்
கருதுகிறேன் என்று கூறின(ô)ர். அதற்கு நான் ஆம்(உண்மைதான்); எங்களில் ஒருவர் வலக்
கரத்தால் துப்புரவு செய்யக் கூடாதென்றும் (மல ஜலம் கழிக்கும்போது) கிப்லாவை
முன்னோக்கக் கூடாதென்றும், கெட்டிச் சாணம், எலும்புகள் ஆகியவற்றை (துப்புரவு
செய்வதற்காக)ப் பயன்படுத்தக் கூடாதென்றும் அன்னார் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.
மேலும், உங்களில் ஒருவர் மூன்றைவிடக் குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாம்
என்றும் கூறினார்கள் என்றேன்.438 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள்
கூறியதாவது:(மல ஜலம் கழித்த பின்) எலும்பாலோ கெட்டிச் சாணத்தாலோ துடைத்துத்
துப்புரவு செய்யப்படுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.32439 நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்:நீங்கள் கழிப்பிடத்திற்குச் சென்று மல ஜலம்
கழிக்கும்போது கிப்லா (கஅபா)த் திசையை முன்னோக்கவும் வேண்டாம்; அதைப் பின்னோக்கவும்
வேண்டாம். மாறாக, கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள்.33இதன்
அறிவிப்பாளரான அபூஅய்யூப் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:நாங்கள் ஷாம் (சிரியா)
நாட்டிற்குச் சென்றிருந்தபோது அங்குள்ள கழிப்பறைகள் கிப்லாவை முன்னோக்கி (அமரும்
விதத்தில்) கட்டப்பட்டிருந்ததைக் கண்டோம். ஆகவே, நாங்கள் (கிப்லாவின்
திசையிலிருந்து) திரும்பிக் கொண்டோம்; அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோரினோம்.இதன்
அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:நான்
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம் மேற்கண்ட ஹதீஸை வாசித்துக் காட்டி, இதை அதாஉ
பின் யஸீத் (ரஹ்) அவர்களிடமிருந்து ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்ததை நீங்கள்
செவியுற்றீர்களா? என்று கேட்டேன். அதற்கு சுஃப்யான் (ரஹ்) அவர்கள், ஆம் என்று
பதிலளித்தார்கள்.இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.440
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.உங்களில் ஒருவர் இயற்கைக் கடனை
நிறைவேற்ற அமர்ந்தால் அவர் கிப்லாவை முன்னோக்கவும் வேண்டாம்; அதைப் பின்னோக்கவும்
வேண்டாம்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.441 வாசிஉ பின் ஹப்பான்
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:நான் பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கிப்லாத் திசையில் தமது முதுகைச் சாய்த்து
அமர்ந்திருந்தார்கள். நான் தொழுகையை முடித்துக்கொண்டு என் இடத்தில் இருந்தவாறே
அவர்களைத் திரும்பிப் பார்த்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்
கூறினார்கள்: நீங்கள் உங்களது இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்தால் கிப்லா
(கஅபாவின்) திசையையோ பைத்துல் மக்திஸையோ முன்னோக்கி அமரக்கூடாது என்று மக்கள் சிலர்
கூறுகின்றனர். ஆனால், நான் (என் சகோதரி ஹஃப்ஸா) வீட்டின் கூரை மீது (ஒரு வேலையாக)
ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு செங்கற்கள்மீது பைத்துல்
மக்திஸின் திசையை முன்னோக்கியபடி இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்திருப்பதை
(தற்செயலாகக்) கண்டேன்.34442 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:நான் என்
சகோதரி(யும் நபியவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா (ரலி) அவர் களது வீட்டின்
(கூரை)மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
(பைத்துல் மக்திஸ் உள்ள) ஷாம் நாட்டின் திசையை முன்னோக்கியபடியும்
கிப்லா(-கஅபா)வைப் பின்னோக்கியபடியும் இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்திருந் ததைக்
கண்டேன்.35பாடம் : 18(மல ஜலம் கழித்த பின்) வலக் கரத்தால் துப்புரவு
செய்யலாகாது.443 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் ஒருவர்
சிறுநீர் கழிக்கும்போது அவர் தமது பிறவி உறுப்பை வலக் கரத்தால் பிடிக்க வேண்டாம்.
மல ஜலம் கழித்த பின் வலக் கரத்தால் சுத்தம் செய்ய வேண்டாம். நீங்கள் (ஏதேனும்
பருகும்போது) பாத்திரத்தினுள் மூச்சுவிட வேண்டாம்.இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.36444 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.உங்களில்
ஒருவர் கழிப்பிடத்திற்குச் சென்றால் அவர் தமது வலக் கரத்தால் பிறவி உறுப்பைத் தொட
வேண்டாம்.இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.445 அபூகத்தாதா (ரலி)
அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள், ஒருவர் (ஏதேனும் பருகும்போது)
பாத்திரத்தினுள் மூச்சுவிட வேண்டாம் என்றும், (இயற்கைக் கடனை நிறைவேற்றும்போது)
வலக் கரத்தால் பிறவி உறுப்பைத் தொட வேண்டாம் என்றும், வலக் கரத்தால் துப்புரவு
செய்ய வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள்.பாடம் : 19தூய்மைப்படுத்தல் உள்ளிட்ட
செயல்களை வலப் பக்கத்திலிருந்து ஆரம்பித்தல்.446 ஆயிஷா (ரலி) அவர்கள்
கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உளூ மற்றும் குளியல் மூலம்) தம்மைத்
தூய்மைப்படுத்திக்கொள்ளும்போதும், அவர்கள் தலை வாரிக்கொள்ளும்போதும், காலணி அணியும்
போதும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பிவந்தார்கள்.37447 ஆயிஷா (ரலி)
அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் செயல்கள் அனைத்திலும் வலப்
பக்கத்தை(க் கொண்டு தொடங்குவதை)யே விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள்; காலணி
அணியும்போதும், தலை வாரிக்கொள்ளும்போதும், (உளூ மற்றும் குளியல் மூலம் தம்மைத்)
தூய்மைப்படுத்திக்கொள்ளும்போதும் (வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே
விரும்பிவந்தார்கள்).38பாடம் : 20நடைபாதைகளிலும் நிழல்(உள்ள இடங்) களிலும் மலம்
கழிப்பதற்கு வந்துள்ள தடை.448 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள், சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள் என்று
கூறினார்கள். மக்கள், சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே?
என்று கேட்டார்கள். அதற்கு, மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான)
நிழல் களில் மலம் கழிப்பதுதான் என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்
தார்கள்.39பாடம் : 21மலம் கழித்த பின் தண்ணீரால் துப்புரவு செய்வது.449 அனஸ் பின்
மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு
தோட்டத்திற்குள் சென்றார்கள். அப்போது எங்களில் வயதில் சிறியவரான ஒருவர் தம்முடன்
தண்ணீருள்ள பாத்திரம் ஒன்றை எடுத்துக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்தார். பின்னர்
அதை ஓர் இலந்தை மரம் அருகே வைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக்
கடனை நிறைவேற்றிய பின் அந்தத் தண்ணீரால் துப்புரவு செய்துவிட்டு எங்களிடம்
வந்தார்கள்.40450 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றால் நானும் என்னைப் போன்ற இன்னொரு சிறுவரும்
தண்ணீர் நிரம்பிய ஒரு தோல் பாத்திரத்தையும் (இரும்புப் பிடிபோட்ட) கைத்தடி
ஒன்றையும் எடுத்துக்கொண்டு செல்வோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இயற்கைக்
கடனை நிறைவேற்றிய பின்) அந்தத் தண்ணீரால் துப்புரவு செய்வார்கள்.இந்த ஹதீஸ் மூன்று
அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.451 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள்
கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற
ஒதுக்குப்புறங் களுக்குச் செல்வார்கள். அப்போது நான் அவர் களுக்காகத் தண்ணீர்
கொண்டு செல்வேன். அதன்மூலம் அவர்கள் கழுவி(த் துப்புரவு செய்து)கொள்வார்கள்.41இந்த
ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.பாடம் : 22காலுறைகள் (மோஸா)மீது ஈரக்
கையால் தடவி (மஸ்ஹு செய்து)கொள்வது.42452 ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர்
அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். (அப்போது கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக்
கையால்) தம் காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். அவர்களிடம் (இது
குறித்து), இவ்வாறு செய்யலாமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ஆம்
(செய்யலாம்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர்
அங்கத் தூய்மை (உளூ) செய்வதை நான் பார்த்தேன். (அப்போது) அவர்கள் தம் (கால்களைக்
கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள்
என்று பதிலளித்தார்கள்.(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்)
அவர்கள் கூறுகின் றார்கள்:(காலுறைகள்மீது மஸ்ஹு செய்து தொழலாம் எனும்) இந்த ஹதீஸ்
மக்களுக்கு மகிழ்ச்சியளிப்ப தாகவே அமைந்தது. ஏனெனில், ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)
அவர்கள் (குர்ஆனில்) 5:6ஆவது வசனம் அருளப்பெற்ற பின்னரே இஸ்லாத்தைத்
தழுவினார்கள்.43இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.- மேற்கண்ட
ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், ஈசா
பின் யூனுஸ் (ரஹ்) மற்றும் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில்,
அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய தோழர்களுக்கு இந்த ஹதீஸ்
மகிழ்ச்சியளித்துவந்தது. ஏனெனில், ஜரீர் (ரலி) அவர்கள் அல்மாயிதா எனும் (5ஆவது)
அத்தியாயம் அருளப்பெற்ற பின்னரே இஸ்லாத்தைத் தழுவினார்கள் என்று
இடம்பெற்றுள்ளது.453 ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:நான் நபி
(ஸல்) அவர்களுடன் (சென்றுகொண்டு) இருந்தேன். அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பைக்
குழிக்குச் சென்று (அங்கு) நின்றுகொண்டு சிறுநீர் கழித்தார்கள். உடனே நான் அவர்களை
விட்டும் சற்று ஒதுங்கிச் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அருகில் வா! என்று
கூறினார்கள். நான் அருகில் சென்று அவர்களுக்குப் பின்பக்கம் நின்று(அவர்களை
மறைத்துக்)கொண்டேன். பிறகு நபியவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது
தம் (கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு
செய்திடலா)னார்கள்.44454 அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் சிறுநீர் (துளிகள் தெறிக்கும்)
விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவராய் இருந்தார்கள். (மேனியில் சிறுநீர்
தெறித்துவிடக் கூடாது என்பதற்காக) அவர்கள் கண்ணாடிக் குடுவையில் சிறுநீர்
கழிப்பார்கள். மேலும், இஸ்ரவேலர்களில் ஒருவரது சருமத்தில் சிறுநீர் பட்டுவிட்டால்
அந்த இடத்தைக் கத்தரிக்கோலால் கத்தரித்து விடக் கூடியவராக அவர் இருந்தார் என்று
கூறுவார்கள். (இதை அறிந்த) ஹுதைஃபா பின் அல் யமான் (ரலி) அவர்கள், உங்கள் தோழர்
(அபூ மூசா) இந்த அளவு கண்டிப்பானவராய் இருக்க வேண்டியதில்லை என்றே நான்
விரும்புகிறேன். (ஒரு முறை) நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் நடந்து
சென்றுகொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சுவருக்குப்
பின்னாலிருந்த குப்பைக் குழிக்குச் சென்று உங்களில் ஒருவர் நிற்பதைப் போன்று
(சாதாரணமாக) நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள். உடனே நான் அவர்களைவிட்டும் சற்று
ஒதுங்கிச் சென்றேன். அப்போது அவர்கள் என்னை நோக்கி (தம் அருகில் வருமாறு) சைகை
செய்தார்கள். நான் அவர்களிடம் சென்று அவர்கள் தமது தேவையை முடித்துக் கொள்ளும்வரை
அவர்களுக்குப் பின்பக்கம் நின்று (மறைத்துக்)கொண்டிருந்தேன்.455 முஃகீரா பின் ஷுஅபா
(ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயறைகைக் கடனை
நிறைவேற்றுவதற்காகப் புறப்பட்டுச் சென்றார்கள். உடனே நான் தண்ணீர் குவளையுடன்
அவர்களைப் பின்தொடர்ந்தேன். அவர்கள் இயற்கைக் கடனை முடித்து (துப்புரவு செய்து),
திரும்பியபோது அவர்களின் (கை கால்கள்)மீது நான் தண்ணீரை ஊற்ற, அவர்கள் அங்கத்
தூய்மை (உளூ) செய்தார்கள். (தமது கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) தம்
காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள்.45இந்த ஹதீஸ் இரு
அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர்
வழியாகவும் வந்துள்ளது.அதில், நபி (ஸல்) அவர்கள் தமது முகத்தையும் கைகளையும்
கழுவினார்கள். மேலும், (ஈரக் கையால்) தமது தலையில் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள்.
பிறகு தம் காலுறைகள்மீது மஸ்ஹு செய்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது.456 முஃகீரா பின்
ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒரு நாள் இரவில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களுடன் (ஒரு பயணத்தில்) இருந்தேன். அப்போது அவர்கள் (தமது வாகனத்திலிருந்து)
இறங்கி இயற்கைக் கடனை நிறைவேற்றினார்கள். பிறகு (திரும்பி) வந்தார்கள். அப்போது
நான் என்னிடமிருந்த குவளையிலி ருந்து தண்ணீரை அவர்களின் (கை கால்கள்) மீது
ஊற்றினேன். அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். (கால்களைக் கழுவுவதற்கு
பதிலாக ஈரக் கையால்) தம் காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள்.457 முஃகீரா
பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:நான் நபி (ஸல்) அவர்களுடன் (தபூக் போர்)
பயணத்தில் இருந்தேன். அப்போது அவர்கள், முஃகீரா! தண்ணீர் குவளையை எடுங்கள்! என்று
கூறினார்கள். அதை நான் எடுத்துக் கொண்டு அவர்களுடன் புறப்பட்டேன். அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் நடந்து (என் கண்ணுக்கெட்டாத தூரத்திற்குச்) சென்று என்னைவிட்டு
மறைந்து இயற்கைக் கடனை நிறைவேற்றி விட்டு (திரும்பி) வந்தார்கள். அப்போது அவர்கள்,
கைப் பகுதி குறுகலான ஷாம் நாட்டு நீளங்கி அணிந்திருந்தார்கள். எனவே, தமது கையைச்
சட்டைக் கைகளிலிருந்து வெளியே எடுக்கப்போனார்கள். ஆனால், சட்டைக் கைகள் குறுகலாக
இருக்கவே, தமது கையை அதன் கீழிருந்து வெளியே எடுத்தார்கள். நான் அவர்களின் (கை,
கால்கள்)மீது தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்வதைப்
போன்று அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு (கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக்
கையால்) தம் காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்து)விட்டுப் பின்னர் தொழுதார்கள்.இந்த
ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.458 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள்
கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகப்
புறப்பட்டுச் சென்றார்கள். பிறகு அவர்கள் திரும்பி வந்தபோது தண்ணீர் குவளையுடன்
அவர்களைச் சந்தித்தேன். அவர்களின் (கை கால்கள்)மீது நான் தண்ணீர் ஊற்றினேன்.
அவர்கள் தம் (முன்) கைகளைக் கழுவிவிட்டுப் பிறகு முகத்தைக் கழுவினார்கள். பிறகு தம்
முழங்கைகளைக் கழுவப்போனபோது அவர்கள் அணிந்திருந்த நீளங்கி குறுகலானதாக இருந்தது.
எனவே, தம் கைகளை நீளங்கியின் கீழிருந்து வெளியே எடுத்து அவற்றைக் கழுவினார்கள்.
மேலும், (ஈரக் கையால்) தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள்; தம் காலுறைகள்
மீதும் (அவ்வாறே ஈரக் கையால்) தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். பிறகு எங்களுக்கு
(இமாமாக நின்று) தொழுவித்தார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில்
வந்துள்ளது.459 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:நான் ஒரு பயணத்தில்
ஓரிரவு நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், உம்மிடம் தண்ணீர்
இருக்கிறதா? என்று கேட்டார்கள். நான், ஆம்! (இருக்கிறது) என்று பதிலளித்தேன். உடனே
அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி இரவின் இருளில் என் பார்வையிலிருந்து மறையும்
அளவுக்கு நடந்தார்கள். (இயற்கைத் தேவையை முடித்த) பிறகு அவர்கள் வந்தார்கள். நான்
குவளையிலி ருந்த நீரை அவர்கள்மீது ஊற்றினேன். அவர்கள் தமது முகத்தைக் கழுவினார்கள்.
அப்போது கம்பளி நீளங்கி அணிந்திருந்தார்கள். ஆதலால், அங்கியிலிருந்து தம்
முழங்கைகளை வெளியே எடுக்க அவர்களால் இயலவில்லை. ஆகவே, முழங்கைகளை அங்கியின்
கீழிருந்து வெளியே எடுத்துக் கழுவினார்கள். பிறகு தமது தலையை (ஈரக் கையால்) தடவி
(மஸ்ஹு செய்திடலா)னார்கள். பிறகு நான் அவர்களின் காலுறைகள் இரண்டையும் கழற்ற
முனைந்தேன். அப்போது அவர்கள், அவற்றை விட்டுவிடுவீராக! ஏனெனில், நான் (என் கால்கள்)
இரண்டையும் தூய்மையான நிலையிலேயே (காலுறைகளுக்குள்) நுழைத்திருந்தேன் என்று சொல்லி,
(ஈரக் கையால்) அவற்றைத் தடவி (மஸ்ஹு செய்து)கொண்டார்கள்.460 முஃகீரா பின் ஷுஅபா
(ரலி) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்வதற்காக நான்
தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். (ஈரக் கையால்) தம்
காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்து)கொண்டார்கள். அப்போது நான் (காலுறைகளைக் கழற்ற
வேண்டுமல்லவா என்பது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், நான் (என்
கால்கள்) இரண்டையும் தூய்மையான நிலையிலேயே (காலுறைகளுக்குள்) நுழைத்திருந்தேன்
என்று சொன்னார்கள்.பாடம் : 23(ஈரக் கையால்) முன்தலையின் மீதும் தலைப்பாகையின்
மீதும் தடவி (மஸ்ஹு செய்து) கொள்வது.46461 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள்
கூறியதாவது:(ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்னால் (தாமதமாக)
வந்து கொண்டிருந்தார்கள். நானும் அவர்களுடன் வந்துகொண்டி ருந்தேன். அப்போது அவர்கள்
(வாகனத்திலி ருந்து இறங்கி) இயற்கைக் கடனை முடித்துக் கொண்டு வந்து, உம்மிடம்
தண்ணீர் உள்ளதா? என்று கேட்டார்கள். நான் தண்ணீர் குவளையை அவர்களிடம்
எடுத்துச்சென்றேன். அவர்கள் தம்முடைய முன் கைகளையும் முகத்தையும் கழுவினார்கள்.
பிறகு தமது முழங்கையை வெளியே எடுக்கப்போனபோது சட்டைக் கை குறுகலாக இருந்தது. எனவே,
தமது கையை (அவர்கள் அணிந்திருந்த) நீளங்கியின் கீழிருந்து வெளியே எடுத்தார்கள்.
நீளங்கியைத் தோளில் போட்டுக்கொண்டார்கள். பிறகு தமது முழங்கை வரைக் கழுவினார்கள்.
பின்னர் (ஈரக் கையால்) தமது முன்தலையின் மீதும் தலைப் பாகைமீதும் காலுறைகள்மீதும்
தடவி (மஸ்ஹு செய்து) கொண்டார்கள். பிறகு வாகனத்தில் ஏறினார்கள். நானும்
ஏறிக்கொண்டேன். நாங்கள் (எங்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த) மக்களிடம்
வந்துசேர்ந்தோம். அவர்கள் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அப்துர்
ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (இமாமாக இருந்து)
தொழுவித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு ரக்அத் தொழுது முடித்திருந்தார்கள்.
(இதற்கிடையே) நபி (ஸல்) அவர்கள் வந்துவிட்டதை உணர்ந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்
(ரலி) அவர்கள் பின்வாங்கப் பார்த்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அங்கேயே
நின்று தொழுமாறு) சைகை செய்தார்கள். எனவே, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)
அவர்கள் (எஞ்சிய ரக்அத்தையும்) மக்களுக்குத் தொழுவித்தார்கள். அவர் (தொழுகையின்
இறுதியில்) சலாம் கொடுத்ததும் நபி (ஸல்) அவர்களும் நானும் எழுந்து எங்களுக்கு
விடுபட்டுப்போயிருந்த ஒரு ரக்அத்தைத் தொழுதோம்.462 முஃகீரா பின் ஷுஅபா (ரலி)
அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள் (ஈரக் கையால்) தம் காலுறைகள், முன்தலை
மற்றும் தலைப்பாகை ஆகியவற்றின் மீது தடவி (மஸ்ஹு செய்து)கொண்டார்கள்.இந்த ஹதீஸ் இரு
அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர்
வழியாகவும் வந்துள்ளது.463 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்)
அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தபோது (ஈரக் கையால்) தமது முன் தலையின்மீதும்
தலைப்பாகைமீதும் காலுறைகள் மீதும் தடவி (மஸ்ஹு செய்து)கொண்டார்கள்.இந்த ஹதீஸ் இரு
அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான பக்ர் பின்
அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த ஹதீஸை நான் முஃகீரா (ரலி)
அவர்களுடைய புதல்வர் உர்வா (ரஹ்) அவர்களிடம் செவியேற்றேன்.464 பிலால் (ரலி) அவர்கள்
கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஈரக் கையால்) தம்முடைய காலுறைகள்
மற்றும் தலைப்பாகையின் மீது தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள்.இந்த ஹதீஸ் மூன்று
அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், (மேற்கண்டவாறு) அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்தேன் என்று பிலால் (ரலி) அவர்கள் கூறியதாக
இடம் பெற்றுள்ளது.பாடம் : 24காலுறைகள்மீது மஸ்ஹு செய்வதற்கான காலவரம்பு.47465
ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம்
காலுறைகள்மீது மஸ்ஹு செய்வது குறித்துக் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள்,
நீங்கள் அலீ பின் அபீதாலிப் அவர்களை அணுகிக் கேளுங்கள். அவர்தாம் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களுடன் பயணம் செய்பவராய் இருந்தார்கள் என்று கூறினார்கள். எனவே, அலீ
(ரலி) அவர்களிடம் (சென்று) அதைப் பற்றிக் கேட்டோம். அப்போது அவர்கள்,
பயணத்திலிருப்பவருக்கு மூன்று பகல் மூன்று இரவுகளையும், உள்ளூரிலிருப்பவருக்கு ஒரு
பகல் ஓர் இரவையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்று
கூறினார்கள்.இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள்,
தமக்கு இந்த ஹதீஸை அறிவித்த அம்ர் பின் கைஸ் (ரஹ்) அவர்களைப் பற்றிக்
குறிப்பிடும்போது அன்னாரைப் பாராட்டுவார்கள்.- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்
தொடர் வழியாகவும் வந்துள்ளது.- மேற்கண்ட ஹதீஸ் ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்)
அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில்
பின்வருமாறு காணப்படுகிறது:ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: காலுறைகள்மீது மஸ்ஹு
செய்வதைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் வினவி னேன். அதற்கு அவர்கள், அலீ
அவர்களிடம் செல்லுங்கள். ஏனெனில், என்னைவிட அவர்தாம் இதுகுறித்து நன்கறிந்தவர்
என்று கூறினார்கள். ஆகவே, நான் அலீ (ரலி) அவர் களிடம் சென்றேன். அப்போது
மேற்கண்டவாறு அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.பாடம் : 25ஒரே உளூவினால் பல (நேரத்)
தொழுகைகளைத் தொழலாம்.48466 புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள்
மக்கா வெற்றி தினத்தன்று ஒரு முறை செய்த உளூவினால் பல நேரத் தொழுகைகளைத்
தொழுதார்கள். அப்போது (கால்களைக் கழுவாமல் ஈரக் கையால்) காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு
செய்து)கொண்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், முன்னெப்போதும் செய்யாத ஒன்றை
இன்றைக்குத் தாங்கள் செய்கிறீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
செய்ய வேண்டுமென்றுதான் செய்தேன், உமரே! என்று கூறினார்கள்.இந்த ஹதீஸ் இரு
அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.04.01.2010. 18:56பாடம் : 26 - பாடம் : 34பாடம்
: 26அங்கத் தூய்மை (உளூ) செய்பவரும் மற்றவர்களும் தமது கை அசுத்தம் அடைந்திருக்குமோ
என்று சந்தேகப்படும் போது, மும்முறை கையைக் கழுவாமல் பாத்திரத்திற்குள் நுழைப்பது
விரும்பத் தக்க செயலன்று.467 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் ஒருவர்
உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் தமது கையை மூன்று முறை கழுவாமல்
பாத்திரத்திற்குள் இட வேண்டாம். ஏனெனில், இரவில் அவரது கை எங்கே இருந்தது என்பதை
அவர் அறிய மாட்டார்.49இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் இரு
அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்
களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.அவற்றில்
அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள் என்று (வெளிப்படை யாகவு)ம், வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அபூஹுரைரா
(ரலி) அவர்கள் ஹதீஸை மர்ஃபூஉ (-நபியவர்கள் கூறியது) எனக் குறிப்பிட்டார்கள் என்றும்
காணப்படுகிறது.- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாகவே மேலும் நான்கு
அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.468 நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:உங்களில் ஒருவர் உறங்கியெழுந்ததும் பாத்திரத்திற்குள் கையை இடுவதற்கு
முன் மூன்று முறை தண்ணீர் ஊற்றிக் கையைக் கழுவிக்கொள்ளட்டும். ஏனெனில், இரவில்
அவரது கை எதில் கிடந்தது என்பதை அவர் அறியமாட்டார்.இதைஅபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே வேறு ஏழு
அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அந்த அனைத்து அறிவிப்புகளிலும் கை
களைக் கழுவுவதற்கு முன் (பாத்திரத்தினுள் இட வேண்டாம்) என்றே (பொதுவாக) வந்துள்ளது.
ஜாபிர் (ரலி), சயீத் பின் முஸய்யப் (ரஹ்), அபூசலமா (ரஹ்), அப்துல்லாஹ் பின் ஷகீக்
(ரஹ்), அபூசாலிஹ் (ரஹ்), அபூரஸீன் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புக்களில்தான் மூன்று
முறை கைகளைக் கழுவுவதற்கு முன் (பாத்திரத் தினுள் இடவேண்டாம்) எனும் குறிப்பு இடம்
பெற்றுள்ளது.பாடம் : 27(பாத்திரத்தில்) நாய் வாய்வைப்பது தொடர்பான சட்டம்.469
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய்
வாய் வைத்துவிட்டால் அவர் அதைக் கொட்டிவிட்டு ஏழு தடவை பாத்திரத்தைக்
கழுவிக்கொள்ளட்டும்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் இரு
அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி)
அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் அதை
அவர் கொட்டிவிடட்டும் எனும் குறிப்பு இடம்பெறவில்லை.470 அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் (வாய்வைத்துக்)
குடித்துவிடுமானால் அந்தப் பாத்திரத்தை அவர் ஏழு முறை கழுவிக்கொள்ளட்டும்.இதை
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.50471 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:நாய் வாய்வைத்துவிட்ட உங்களது பாத்திரத்தைச் சுத்தம் செய்யும் முறை
யாதெனில், அதை ஏழு தடவை தண்ணீரால் கழுவுவதாகும். முதல் தடவை மண்ணிட்டுக் கழுவ
வேண்டும்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.472 ஹம்மாம் பின் முனப்பிஹ்
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:இவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து
அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும்
ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நாய் வாய்வைத்துவிட்ட
உங்களது பாத்திரத்தைச் சுத்தம் செய்யும் முறை யாதெனில், அதை ஏழு தடவை
கழுவுவதாகும்.51473 அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி) அவர்கள்
கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பத்தில்) நாய்களைக் கொல்லுமாறு
உத்தரவிட்டார்கள். பின்னர் மக்களுக்கும் நாய்களுக்கும் என்ன நேர்ந்தது (அவர்கள்
நாய்களை ஏன் கொல்ல வேண்டும்)? என்று கேட்டார்கள். பின்னர் வேட்டை நாய்களுக்கும்
கால்நடைகளின் பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் நாய்களுக்கும் அனுமதியளித்தார்கள்.
மேலும் பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்)
கழுவிக்கொள்ளுங்கள். எட்டாவது தடவை மண்ணிட்டுக் கழுவுங்கள் என்று கூறினார்கள்.-
மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அல்முஃகஃப்பல் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும்
மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் யஹ்யா பின் சயீத்
(ரஹ்) அவர்களது அறிவிப்பில் கால்நடைகளின் பாதுகாப்பிற்காக, வேட்டையாடுவதற்காக,
விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களுக்கு
அனுமதியளித்தார்கள் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.மற்றவர்களது அறிவிப்பில்
விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காக வைத்திருக் கும் நாய்கள் பற்றிய குறிப்பு
இடம்பெறவில்லை.பாடம் : 28தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழிக்க வந்துள்ள தடை.474
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்க
வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.இந்த ஹதீஸ்
மூன்று அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.475 நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:உங்களில் எவரும் தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்கவும்
வேண்டாம். பின்னர் அதில் குளிக்கவும் வேண்டாம்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.476 ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:இவை
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு
அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் நீ சிறுநீர்
கழிக்காதே! பின்னர் அதில் குளிக்காதே!52பாடம் : 29தேங்கி நிற்கும் தண்ணீரில்
(பெருந்துடக்கு உள்ளவர்) குளிப்பதற்கு வந்துள்ள தடை.477 அபுஸ் ஸாயிப் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:உங்களில் ஒருவர் பெருந்துடக்கு உள்ளவராய் இருக்கும்போது தேங்கி நிற்கும்
தண்ணீரில் குளிக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக
அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள். அப்போது நான், அவர் என்ன செய்ய வேண்டும்,
அபூஹுரைரா அவர்களே? என்று கேட்டேன். அதற்கு அவர் (அதிலிருந்து) தண்ணீரை அள்ளிக்
குளிக்க வேண்டும் என்று பதிலளித்தார்கள்.53இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்
களில் வந்துள்ளது.பாடம் : 30பள்ளிவாசலில் பட்டுவிட்ட சிறுநீர் முதலான அசுத்தங்களைக்
கழுவித் துப்புரவு செய்வது கட்டாயமாகும். நிலம் தண்ணீராலேயே தூய்மையாகிவிடும்;
அதைத் தோண்ட வேண்டியதில்லை.478 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒரு
கிராமவாசி பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கிச் சிலர் (வேகத்துடன்)
எழுந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அவர் சிறுநீர் கழிப்பதை) இடை
மறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். அவர் சிறுநீர் கழித்து
முடித்ததும் ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதைச் சிறுநீர்மீது
ஊற்றினார்கள்.54479 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒரு கிராமவாசி
பள்ளிவாசலின் ஒரு பகுதியில் நின்று சிறுநீர் கழித்தார். அப்போது அவரைப் பார்த்து
மக்கள் சப்தமிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள் என்று
கூறினார்கள். அவர் (சிறுநீர் கழித்து) முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள். அவ்வாறே (தண்ணீர் கொண்டுவரப்பட்டு)
அது சிறுநீர்மீது ஊற்றப்பட்டது.இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில்
வந்துள்ளது.480 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒரு முறை நாங்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அப்போது
கிராமவாசியொருவர் வந்து பள்ளி வாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் நிறுத்து! நிறுத்து! என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை
விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர்
சிறுநீர் கழித்து முடித்தார். பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து
இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகிய வற்றுக்குரிய
இடமல்ல. இவை இறைவனை நினைவு கூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற் கும் குர்ஆனை
ஓதுவதற்கும் உரியதாகும் என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ
அவரிடம் கூறினார்கள். பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளித் தண்ணீர் கொண்டுவரச்
சொல்லி அதை அந்தச் சிறுநீர்மீது ஊற்றச் செய்தார்கள்.55பாடம் : 31பால்குடி மாறாத
குழந்தையின் சிறுநீர் பற்றிய சட்டமும் அதைக் கழுவும் முறையும்.481 நபி (ஸல்)
அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களிடம் குழந்தைகள் கொண்டுவரப்படுவார்கள். அவர்களுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தித்து, இனிப்புப் பொருளை மென்று
அக்குழந்தைகளின் வாயிலிடுவார்கள். (ஒரு முறை) அவர்களிடம் ஓர் ஆண் குழந்தை
கொண்டுவரப்பட்டது. அது அவர்கள்மீது சிறுநீர் கழித்துவிட்டது. அப்போது அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி சிறுநீர் கழித்த இடத்தில் தண்ணீரை
ஊற்றினார்கள். அதைக் கழுவவில்லை.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில்
வந்துள்ளது.482 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்
பால்குடி மாறாத ஓர் ஆண்குழந்தை கொண்டு வரப்பட்டது. அது அவர்களது மடியில் சிறுநீர்
கழித்துவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரச்
சொல்லி சிறுநீர் கழித்த இடத்தில் ஊற்றி விட்டார்கள்.- மேற்கண்ட (481ஆவது) ஹதீஸ்
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.483 உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்
(ரலி) அவர்கள் கூறியதாவது:நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம், உணவு
உட்கொள்ளாத (பால்குடி மாறாத) என்னுடைய ஆண் குழந்தையைக் கொண்டுவந்து அவர்களது
மடியில் வைத்தேன். அது (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது) சிறுநீர்
கழித்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறுநீர் பட்ட இடத்தில்)
தண்ணீரைத் தெளித்துவிட்டதைத் தவிர வேறொன்றும் கூடுதலாகச் செய்யவில்லை.56- மேற்கண்ட
ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.அவற்றில்,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, அதை (சிறுநீர் பட்ட
இடத்தில்) தெளித்துவிட்டார்கள் என்று இடம்பெற்றுள்ளது.484 உபைதுல்லாஹ் பின்
அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி எடுத்துக்கொண்டவரும் ஆரம்பமாக நாடு துறந்து (ஹிஜ்ரத்)
சென்ற பெண்மணிகளில் ஒருவரும் பனூ அசத் பின் குஸைமா குலத்தாரில் ஒருவரான உக்காஷா
பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களுடைய சகோதரியுமான உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி)
அவர்கள் கூறினார்கள்:நான் (பாலைத் தவிர வேறு திட) உணவு உட்கொள்ளும் பருவத்தை அடையாத
என் ஆண் மகவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அக்குழந்தை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் சிறுநீர் கழித்துவிட்டது. அப்போது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி (சிறுநீர் பட்ட) தமது
ஆடையின் மீது தெளித்தார்கள். அதை(க் கசக்கி) அழுத்தமாகக் கழுவவில்லை.57பாடம் :
32விந்து பற்றிய சட்டம்485 அல்கமா (ரஹ்) மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோர்
கூறியதாவது:ஒரு மனிதர் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் (விருந்தினராகத்) தங்கினார்.
அவர் காலையில் தமது ஆடையைக் கழுவினார். (இதைக் கண்ட) ஆயிஷா (ரலி) அவர்கள், அது உமது
ஆடையில் தென்பட்டால் அந்த இடத்தைக் கழுவினால் போதும். அவ்வாறு அது தென்படாவிட்டால்
அந்த இடத்தைச் சுற்றிலும் தண்ணீர் தெளித்துவிடுவீராக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களின் ஆடையில் பட்ட இந்திரியத்தை நன்கு சுரண்டிவிடுவேன். அந்த ஆடையை
அணிந்துகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவார்கள் என்று கூறினார்கள்.இந்த
ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.486 அஸ்வத் (ரஹ்) மற்றும் ஹம்மாம்
பின் முனப்பிஹ் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:இந்திரியம் பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள்
கூறுகையில், அதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து
சுரண்டிவிடுவேன் என்று குறிப்பிட்டார்கள்.487 மேற்கண்ட (485ஆவது) ஹதீஸ் மேலும் ஆறு
அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.- மேற்கண்ட ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர்
தொடர் வழியாகவும் வந்துள்ளது.488 அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:நான்
சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர் களிடம் ஒருவரது ஆடையில் இந்திரியம் பட்டு விட்டால்
அ(து பட்ட இடத்)தை (மட்டும்) கழுவ வேண்டுமா? அல்லது அந்த ஆடையையே கழுவ வேண்டுமா?
என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு)
கூறினார்கள்:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஆடையில் பட்ட) இந்திரியத்தை
(மட்டும்) கழுவிவிட்டு அதே ஆடையில் தொழுகைக்காகப் புறப்பட்டுச் செல்வார்கள். அந்த
ஆடையில் கழுவியதற்குரிய அடையாளத்தை (ஈரத்தை) நான் காண்பேன்.58- மேற்கண்ட ஹதீஸ்
மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் இப்னு
அபீஸாயிதா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இந்திரிய(ம் பட்ட இட)த்தை அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கழுவுவார்கள் என்று இடம்பெற்றுள்ளது.இப்னுல் முபாரக் (ரஹ்) மற்றும்
அப்துல் வாஹித் பின் ஸியாத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களின் ஆடையிலிருந்து அதை நான் கழுவுவேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக
இடம்பெற்றுள்ளது.489 அப்துல்லாஹ் பின் ஷிஹாப் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர் களிடம் (ஒரு நாள் விருந்தினராகத்)
தங்கியிருந்தேன். இரு ஆடைகளில் (உறங்கிய) எனக்கு உறக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டது.
எனவே, அவ்விரு ஆடைகளையும் (கழுவுவதற்காகத்) தண்ணீரில் முக்கி வைத்தேன். இதை ஆயிஷா
(ரலி) அவர்களின் பணிப்பெண் பார்த்துவிட்டு(ப் போய்) ஆயிஷாவிடம் தெரிவித்துவிட்டார்.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் என்னை வரச்சொல்லி ஆளனுப்பி னார்கள். (நான் சென்றேன்.)
அப்போது அவர்கள், உங்கள் ஆடைகளை இவ்வாறு நீங்கள் செய்யக் காரணமென்ன? என்று
கேட்டார்கள். நான், தூங்கக்கூடியவர் கனவில் எதைக் காண்பாரோ அதை நான் கண்டேன் என்று
கூறினேன். அந்த ஆடைகளில் ஏதேனும் (இந்திரியம் பட்டிருக்கக்) கண்டீர்களா? என்று
கேட்டார்கள். நான் இல்லை என்றேன். அப்படியே எதையேனும் நீங்கள் பார்த்திருந்
தாலும்கூட அதைக் கழுவத்தான் வேண்டுமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில்
பட்டுக் காய்ந்துவிட்டிருந்த இந்திரியத்தை நான் என் நகத்தால் சுரண்டித்
தான்விடுவேன் (கழுவமாட்டேன்) என்று கூறினார்கள்.59பாடம் : 33இரத்தம் அசுத்தமாகும்
என்பது பற்றியும் அதைக் கழுவும் முறை பற்றியும்.490 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)
அவர்கள் கூறியதாவது:ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, எங்களில் ஒரு
பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் அவள் என்ன செய்ய வேண்டும்?
என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (அவ்வாறு பட்டுவிட்டால்) அவள் அதைச்
சுரண்டிவிட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் ஊற்றித் தேய்த்துக் கழுவட்டும்.
பின்னர் அந்த ஆடையிலேயே தொழுதுகொள்ளலாம் என்று கூறினார்கள்.60இந்த ஹதீஸ் இரு
அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்
பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.பாடம் : 34சிறுநீர் அசுத்தமாகும்; அதைத்
துப்புரவு செய்வது கட்டாயமாகும் என்பதற்கான சான்று.491 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு அடக்கத் தலங்களைக்
கடந்துசென்றார்கள். அப்போது அறிந்துகொள்ளுங்கள்! (இதோ) இவர்கள் இருவரும் (சவக்
குழிக்குள்) வேதனை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய (பாவச்)
செயலுக்காக இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. இவர்களில் ஒருவரோ (மக்களிடையே) கோள்
சொல்லித் திரிந்து கொண்டிருந்தார். மற்றொருவரோ சிறுநீர் கழிக்கும்போது (தமது உடலை)
மறைக்க மாட்டார் என்று கூறினார்கள். பிறகு பச்சை பேரீச்சமட்டை ஒன்றைக் கொண்டுவரச்
சொல்லி அதை இரண்டாகப் பிளந்து இவர் (சவக் குழி)மீது ஒரு துண்டையும் இவர் (சவக்
குழி)மீது மற்றொரு துண்டையும் ஊன்றிவைத்தார்கள். பிறகு இவ்விரண்டின் ஈரம் உலராதவரை
இவர்களின் வேதனை குறைக்கப்படலாம் என்று கூறினார்கள்.61இந்த ஹதீஸ் மூன்று
அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர்
வழியாகவும் வந்துள்ளது.அதில் மற்றொருவரோ சிறுநீர் கழித்துவிட்டுத் துப்புரவு
செய்யமாட்டார் என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக)
இடம்பெற்றுள்ளது.6204.01.2010. 18:57
|
No comments:
Post a Comment