Sunday, November 20, 2011

அதற்கும் ஒரு "ஜே' போடுங்கள்: கருணாநிதி

"எலைட் ஷாப்கள், பெரிய ஷாப்பிங் மால்களில், "ஏசி' பார் வசதியுடன் திறப்பதற்கான முயற்சி நடக்கிறது' என குற்றம் சாட்டியுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி, இதற்கும் ஒரு "ஜே' போடுங்கள் என காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:: தேர்வாணையக் கழகத் தலைவரும், உறுப்பினர்களும் தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள். தங்களுக்கு வேண்டியவர்களை இப்பதவியில் நியமிக்க வேண்டி, இவர்களை தாங்களாகவே பதவிகளிலிருந்து விலகிக் கொள்ளும்படி கேட்கப்பட்டதாகவும், அவர்கள் அதற்கு இசைவளிக்காததால், பழி வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சொல்கின்றனர். அதிகாரிகளின் இல்லங்களில் சோதனை நடத்தியுள்ளனர். அதோடு விட்டு விடாமல், அதிகாரிகளை தேர்வாணைய அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புப் போலீசார் அழைத்து வந்துள்ளனர். அவர்களது இருக்கைக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அவர்களது கோப்புகளை ஆய்வு செய்து கைப்பற்றியதாகவும், அதன் பின் ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அங்கேயும் விசாரணை நடத்தியுள்ளனர். இதை பார்க்கும் போது, ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கிறோமா அல்லது எமர்ஜென்சி காலத்தில் வாழ்கிறோமா என்று தெரியவில்லை.


சமச்சீர் கல்வித் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று செயல்பட்டதால், சுப்ரீம் கோர்ட் வரை சென்று ஏற்படுத்திய தேவையற்ற செலவோடு, கோர்ட் தீர்ப்பு வரை காத்திருக்காமல், அவசரம் அவசரமாக 200 கோடி ரூபாய் செலவில் ஆட்சியாளர்கள், பழைய பாடத் திட்டத்தின் கீழ் அச்சடிக்க சொன்ன புத்தகங்களின் கதி என்ன?இதுவரை அப்புத்தகங்களை அச்சிட்ட உரிமையாளர்களுக்கு பணம் வழங்கவில்லை. தலைமைச் செயலக கட்டடம் ஆறு மாதமாக அப்படியே கிடக்கிறது. செம்மொழித் தமிழாய்வு நூலகத்தின் நூல்கள் எங்கே என்று தெரியவில்லை.

குளிர் சாதன வசதியுடன் கூடிய புதிய மதுக்கடைகளை, "எலைட் ஷாப்' என்ற பெயரில் துவங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன் அருகிலேயே "ஏசி' பார் துவங்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. புதிய மதுக்கடைகளை அரசு நடத்தும் என்றாலும், "ஏசி' பார்கள் தனியாரால் நடத்தப்படும் என்றும் செய்திகள் வந்துள்ளன.சிறிது நாட்களுக்கு பின், இந்த புதிய மதுக்கடைகள் பெரிய ஷாப்பிங் மால்களில், "ஏசி' பார் வசதியுடன் திறக்கப்படவுள்ளன என்றும் தெரிகிறது. அதற்கான உரிமம் பெற இப்போதே ஷாப்பிங் மால் உறுப்பினர்கள் அதற்கான முஸ்தீபுகளுடன் மேலிடத்தைச் சந்திக்கத் துவங்கி விட்டார்களாம். அ.தி.மு.க.,விற்கு ஓட்டளித்த மக்களுக்காக ஜெயலலிதா அரசின் மற்றொரு சாதனைத் திட்டம் இது. இதற்கும் ஒரு, "ஜே' போடுங்கள்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

தூங்கியபடி பஸ்சை ஓட்டிய டிரைவர் : பீதியுடன் பயணம் செய்த பயணிகள்

ராசிபுரத்தில் இருந்து ஆத்தூருக்கு புறப்பட்ட அரசு பஸ்சை, அதன் டிரைவர், தூங்கிக் கொண்டு ஓட்டியதால், பல இடங்களில் பஸ் தாறுமாறாக ஓடியது. அதன் காரணமாக, பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பீதியில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.


மேலும், பட்டணம், சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட வழித்தடங்களில் பயணிகளை இறக்கியும், ஏற்றியும் சென்ற பஸ், அவ்வப்போது தாறுமாறாக ஓடத்துவங்கியது. டிரைவர் தூக்கத்தில் ஓட்டுகிறாரா, அல்லது போதையில் ஓட்டிச் செல்கிறாரா என தெரியாமல், பயணிகள் பீதியில் உறைந்தனர்.அவ்வப்போது பஸ்சை, சாலையை விட்டு கீழே இறங்குவதும், பின் நேராக ஓட்டுவதுமாக இருந்தார். அதனால், பஸ்சில் பயணம் செய்த பயணிகள், டிரைவரை ஆவேசமாக திட்டினர்.



ராசிபுரத்தில் இருந்து ஆத்தூருக்கு, 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் (நவ., 18) இரவு 9.30 மணிக்கு, ஆத்தூருக்கு புறப்பட்ட அரசு பஸ்சில்( டி.என்-28, 560), 50க்கும் மேற்பட்ட பயணிகள் ஏறி பயணம் செய்தனர். டிரைவர் பஸ்சை மெதுவாக ஓட்டிச் சென்றதால், பயணிகள் அதிருப்தியடைந்தனர்.

இதுபோல், மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், பஸ் தாறுமாறாக ஓடியது.இரவு பயணம் மேற்கொள்ளும் பயணிகள், பஸ் டிரைவரை நம்பியே பயணம் செய்கின்றனர். இந்நிலையில், யாரைப்பற்றியும் கவலைப்படாத ஒருசில டிரைவர்கள், இஷ்டம்போல் குடித்துவிட்டும், தூங்கிக்கொண்டும் பஸ்சை இயக்குவதாலேயே, பல விபத்துகள் நடந்து வருகிறது. எனவே, "இரவு நேரத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களின் டிரைவர்களை, முழு சோதனை செய்த பின்னரே பணியில் ஈடுபடுத்த, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகைக்கும் இந்தியப் பெண்கள்

நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இது வேறு எந்த நாட்டிலுமல்ல. நம்முடைய இந்தியாவில் தான். 







என்னுடைய படத்துடன் ராணா போட்டியிட தயாரா? -கமல்

ரஜினியும் கமலஹாசனும் பழைய நினைவுகளில் மூழ்கினார்கள் என்றும், உணர்வு பூர்வமாக எண்ணங்களை பகிர்ந்து கொண்டதாகவும், ரஜினி விரைவில் புரண குணமடைய கமல் வாழ்த்தியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளளன.

உங்கள் படத்தை பார்க்கும் போதெல்லாம் நான் போட்டியாளனாக மாறி விடுகிறேன். என் படத்தையும் சிறப்பாக கொடுக்கவேண்டும் என்று கஷ்டப்பட்டு உழைக்கிறேன்.
எனது அடுத்த படத்துக்கு ராணாவைதான் போட்டியாக நினைத்துள்ளேன். குணமடைந்த திரும்பியதும் ராணா படத்தில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் ரஜினியிடம் கமல் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சந்திப்பு குறித்து கமல் தனது நெருக்கமான நண்பர்களிடம் ரஜினி விரைவில் குணமடைந்து திரும்பி ராணா படத்தில் நடிப்பார் என்று கூறி வருகிறார்.

மிகவும் ஆபத்தான 10 விலங்கினம் : வீடியோ இணைப்பு

மனிதன் பிறக்கும் போதே இறக்கும் திகதியோடு தான் பூமியை பார்க்கிறான். சாதாரணமாக சாகி்ன்றனர், அகால மரணமாகின்றனர். இனத்தோடு அடிபட்டு சாகின்றான் ஆனால்......


விலங்குகளினால் மனிதன் இறப்பதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் ஆனால் பார்த்ததுண்டாக பாருங்கள். விலங்குகளில் மிகவும் அதிக பயங்கரமான 10 விலங்குகளை பற்றி வெளியிடுகிறது.



இது பார்வைக்கு மட்டுமின்றி வாசகர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே எமது நோக்கம்.

அனைத்து வகையான கோப்புகளின் போர்மட்டுகளை மாற்றுவதற்கு


சில குறிப்பிட்ட நோக்கத்துக்காக பல வகையான கோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் நாம் குறிப்பிட்ட வகையான கோப்பினை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.


நாம் எந்த வகையான கோப்பினையும் நாம் விரும்பும் வண்ணம் பயன்படுத்தலாம். அந்த அளவுக்கு பல வடிவங்களில் கோப்புகள் நிறைய உள்ளன.

நம் கோப்புகளை பிறருக்கு தரும்போது அதனை அவர்கள் விரும்பிய வகையில் விரும்பும் வடிவத்தில் கொடுக்கலாம். அதற்காக பல வகையான மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாகவும், கட்டண அடிப்படையிலும் இருக்கின்றது.

அதுமட்டுமல்ல ஓன்லைனில் கூட பல வடிவங்களை மாற்றும் மென்பொருள்கள் செயல்படுகின்றன. அதில் இந்த தளம் பல வசதிகளை தன்னில் கொண்டுள்ளது.

இந்த தளத்தில் நாம் படம், வீடியோ, ஓடியோ மற்றும் ஆவணங்களையும் பல வடிவங்களில் மாற்றலாம். இந்த வசதியை பயன்படுத்துவதும் மிகவும் எளிது.

குறிப்பிட்ட தளத்திற்கு செல்லுங்கள். பின்னர் அதில் உள்ள BROWSE என்ற பொத்தானை அழுத்துங்கள்.

அதில் உங்கள் கோப்பினை தேர்வு செய்யுங்கள். பின்னர் உங்களுக்கு தேவையான வடிவத்தை தேர்வு செய்யுங்கள்.

பின்னர் CONVERT NOW என்ற பொத்தானை அழுத்துங்கள். அவ்வளவு தான் உங்கள் கோப்பின் வடிவம் மாற்றப்படும். அதனை தரவிறக்கி கொள்ளுங்கள்.

அதுமட்டுமல்ல இந்த தளத்தில் நாம் நேரடியாக பதிவிறக்க முகவரியையும் கொடுத்து கோப்பின் வடிவத்தை மாற்றலாம். இந்த தளம் மூலம் ZIP, RAR ARCHIVE, PDF, XPS, PPT போன்ற பல வகையான கோப்புகளின் வடிவத்தையும் மாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பைலை திறக்க முடியவில்லை


கணணியில் திறக்க இயலாத கோப்புகளின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு

பலவகையான கோப்புகளை திறக்க நம் கணணி துணை புரிந்தாலும் சில வகையான கோப்புகளை எந்த மென்பொருளில் திறப்பது என்ற சந்தேகம் வரலாம்.

காரணம் சில வகையான கோப்புகளை இனம் கண்டறிந்து திறப்பது சிரமமாக இருக்கலாம். இப்படி இருக்கும் கோப்புகளின் முழு விபரம் மற்றும் எந்த மென்பொருளில் திறக்காலம் என்பது பற்றிய அனைத்து தகவல்களையும் சொல்ல ஒரு தளம் உள்ளது.
பலவகையான காரணத்திற்காகவும் பல வகையான கோப்புகளின் வகைகள்(File Format) உருவாக்கப்பட்டுள்ளது, இதில் நம்மிடம் இருக்கும் கோப்புகளின் File format என்ன என்பதை வைத்து அந்த Format பற்றிய முழுவிபரங்களும் நமக்கு காட்டி ஒரு தளம் உதவுகிறது.

இத்தளத்திற்கு சென்று நம் கணணியில் திறக்காத கோப்புகளின் Extension -ஐ Search என்ற கட்டத்திற்குள் கொடுத்து தேட வேண்டும். அடுத்து வரும் திரையில் நாம் தேடிய File Format பற்றிய முழு விபரங்களும் நமக்கு காட்டப்படும், தனித்தனி வகையாக கோப்புகளின் Extension -ஐ வகைப்படுத்தி எளிதாக நமக்கு காட்டுகின்றனர்.

உதாரணமாக ஒரு வீடியோ கோப்பு திறக்கவில்லை என்றால் Video Files என்ற வகையை தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் பல வகையான வீடியோ Format பற்றி விரிவாக தெரிந்து கொண்டு எந்த மென்பொருளில் அந்த கோப்பு திறக்கும் என்று எளிதாக அறிந்து கொள்வதோடு அந்த மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பும் அதனுடன் கொடுக்கப்பட்டுள்ளது.