Tuesday, November 29, 2011

லட்சுமி ராயை இனிவருங்காலங்களில் பிறந்த மேனியாகவும் பார்க்கலாம்

நடிகர் லாரன்ஸூடன் காஞ்சனா படத்திலும் அஜித்துடன் மங்காத்தா படத்திலும் நடித்த கதாநாயகி லட்சுமி ராய், படத்திற்கு தேவைப்பட்டால் நிர்வாணமாககூட நடிக்க தயார் என கூறியுள்ளார்.

இச்செய்தி மற்ற கதாநாயகிகள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் சேலையுடன் என்ட்டர் ஆகும் கதாநாயகிகள், ஓரிரு படங்கள் வெற்றி பெற்றவுடன் கவர்ச்சியாகவும், நிர்வாணமாகவும் நடிக்க தயார் என்கிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது நிர்வாணமாக நடிக்க என்ட்டர் ஆகி இருப்பவர் கவர்ச்சி கன்னி லட்சுமி ராய். இவருக்கு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாளைய கனவாம். ஆங்கிலப் படங்கள் என்றால் நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டுமே என்றால், தான் அதற்கும் தயார் என தயங்காமல் கூறுகிறார் இந்த கவர்ச்சி கன்னி லட்சுமி ராய்.

பாலியல் அடிமைகளாக விற்கப்படும் பெண்கள்! வீடியோ

இந்த 21 ஆம் நூற்றாண்டில்கூட இந்தியாவில் தலை விரித்து ஆடுகின்றது பெண்களை பணத்துக்கு விற்கின்ற பாலியல் வியாபாரம்.

சிறுமிகள், பெண்கள் ஆகியோர் தலா வெறும் 120 அமெரிக்க டொலருக்கு மணப் பெண் என்கிற பெயரில் ஆண்களுக்கு விற்கப்படுகின்றனர். விலை கொடுத்து வாங்குகின்ற ஆண்களால் இச்சிறுமிகள் மற்றும் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள் செய்யப்படுகின்றனர்.



கொலைவெறி பாடலை ஒரு "பெண்" பாடினால் எப்படி இருக்கும்?


Why this kola veri பாடலை ஒரு பெண் பாடினால் எப்படி இருக்கும்? இதோ பாருங்கள் இப்படிதான்.




"அந்த" ஆசையை தூண்டும் உணவுகள்!!

ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் செறிந்த உணவுகளை தேவையான கலோரிகளில் எடுத்துக் கொள்ளாவிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் பாலுணர்வு திறனும் சிதைந்து விடும்.

அதனால்தான் நம் முன்னோர்கள் உணர்வுகளை தூண்டும் உணவுகளை சமைத்து உட்கொண்டுள்ளனர். இதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து தம்பதியர் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கினர். இந்திய சமையலில் இடம்பெறும் மையலை அதிகரிக்கும் முக்கிய உணவுப் பொருட்களை தெரிந்து கொள்வோம்.

ஆண்மையை அதிகரிக்கும் பொட்டாசியம்

பொட்டாசியமும் பி விட்டமின்களும் செக்ஸ் ஹார்மோன் உற்பத்திக்கு இன்றியமையாதவை.காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ள பொட்டாசியம் ஆண்மையை அதிகரிக்கின்றன. வாழைப்பழம் ஆண்மையை பெருக்கும் முக்கியமான பழமாக கருதப்படுகிறது. வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும். பப்பாளி, மாம்பழம், கொய்யாபழம் இவைகளும் சிறந்த இளமை காக்கும் பழங்கள். கொய்யாப்பழம் பெண்களின் உறுப்புக்களின் தசைகளை வலுப்படுத்தும்.

மங்கனீஸ் சத்துக்கள்

மங்கனீஸ் அடங்கிய கொட்டைகள், விதைகள், முழுத்தானியங்கள் முதலியவைகளும் பாலியல் ஆற்றலுக்கு உதவும். பாஸ்பரஸ், தாதுப்பொருளும் தாது விருத்திக்கு உதவும். தொன்று தொட்டு ஆண்மையையும், மக்களைப் பெற சக்தி அளிக்கும் உணவாக பாதாம் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. கருமிளகு, தேன், மிளகாய் முதலியன பாலுணர்வை தூண்டும் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. வைட்டமின்கள் வைட்டமின் இ,சி,ஏ,பி காம்ப்ளெக்ஸ், ஃபோலிக் அமிலம், விட்டமின் பி 6, பி 12, இருக்கும் உணவுகள் உணர்வை தூண்ட உதவுகின்றன. பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள், பூமியின் சக்தியை உறிஞ்சி, அதை நமக்களிக்கும். கேரட், முள்ளங்கி போன்றவை ஆண்மையை பெருக்கவல்லவை. தக்காளியும் சிறந்த பாலுணர்வு ஊக்கி.

ஃப்ரான்ஸில் இதை காதல் ஆப்பிள் என்பார்கள்.இவை தவிர குடமிளகாய், இஞ்சி, செலரி, வெள்ளரி, தனியா இவைகளும் உதவும்.உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் துளசி ஆண்களின் பாலுணர்வு ஆர்வத்தை தூண்டுகிறது. வெங்காயம் தொன்றுதொற்று இந்தியாவில், எகிப்தில், அரேபியாவில் ஆண்மை ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறியாகும். அதுவும் வெள்ளை வெங்காயம் சிறந்தது.

வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண வேண்டும். ஆனியன் சூப் புத்துணர்ச்சி ஊட்டும். பாலுணர்வை தூண்டுவதில் வெள்ளைப்பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. மீன், நண்டு,முத்துச்சிப்பி செலினியம் உள்ள வெண்ணெய், மீன்கள், முழுக்கோதுமை, எள் முதலியவைகளும் காதல் உணவுகளாகும். மாமிச வகைகளில் நீர் வாழ் பிராணிகளின் மாமிசம் உண்பது நல்லது. கடல் மீன்களை விட நதிமீன்கள் பாலியல் உணர்வை தூண்டுபவை.

கடல் முத்துசிப்பி, சிறந்த ஆண்மை பெருக்கியாக கருதப்படுகிறது. வாசனைப் பொருட்கள் கோதுமை அரிசி, உளுத்தம் பருப்பு இவை ஆண்மையை ஊக்குவிக்கும், விந்துவின் தரத்தை உயர்த்தும். ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, இலவங்கப் பட்டை இவைகளும் ஆசையை அதிகரிக்கும் குறிப்பாக ஜாதிக்காய் விந்து முந்துதலை தடுக்கும்.

இந்த வாசனை திரவியங்களை பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். இலவங்கப்பட்டை தான் ஆசைய ஊக்குவிக்கும். ஆலிவ் எண்ணெய் உணர்வுகளை தூண்டும் முக்கிய உணவுப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. வெற்றிலை � உணவுக்கு பின் தாம்பூலம் தரிப்பது உடலுறவு ஆசையை தூண்டும். ஆனால் பாக்கு, புகையிலை, ஆல்கஹால் இவை எதிர்மாறான விளைவுகளை உண்டாக்கும்.

முல்லைப் பெரியாரின் முழு வரலாறு - வீடியோவில்

'டேம் 999' என்ற பெயரில் ஓர் ஆங்கிலப் படத்தை எடுத்து, முல்லைப் பெரியாறு அணையையே உடைக்கும் அளவுக்கு கேரள மக்களை தூண்டிக்கொண்டிருக்கிறார்கள் சிலர்.

ஆனால், உண்மையில் இந்த அணைக்கும், திருவாங்கூர் சமஸ்தானத்துக்குமே வரலாற்று ரீதியில் தொடர்பே இல்லை. 

அந்தக் காலத்தில், திருவாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுகளுக்கு தவறாக ஒப்பந்தம் போட்டுவிட்டது ஆங்கிலேய அரசு. ஆனால், ஒரு காலத்தில் சேர நாட்டுப் பகுதியில் இருந்த பூனையாற்று சமஸ்தானம் எனும் தமிழ்ப் பகுதியை ஆண்ட, பூனையாற்று தம்பிரான் என்பவருக்குத்தான் முல்லைப் பெரியாறு பகுதியே சொந்தமாக இருந்தது.

இந்த பகீர் உண்மைகளை குறும்படமாக எடுத்து வெளியிட்டிருக்கிறது, தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம்!

இந்தக் வீடியோவைப் பாருங்கள்... பகிருங்கள்.


சினேகன் பெண்கள் விசயத்தில் எப்படிப்பட்டவர் ?? அவரின் உண்மையான முகத்தைகாட்டும் சம்பவம்!

கடந்த சில காலங்களாக கள்ளத்தொடர்பு வழக்கில் பேசப்படும் சினேகன் - கலாதேவி பற்றி எல்லோரும் அறிவர் ,

இதில் கலாதேவி சினேகன் குற்றமற்றவர் என்றும் தன் கணவர் தான் சைகோ என்று குறிப்பிட்டிருந்தார் , ஆனால் நான்கு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் சினேகனின் உண்மையான முகத்தை வெளிக்காட்டுகிறது, அதாவது சினேகன் பெண்கள் விசயத்தில் அப்படி இப்படி ,

உண்மைகளை வெளியிட ஒரு போதும் தயங்காத குசும்பு இணையம் இம்முறையும் ஆதாரங்களுடன் வெளியிடுகிறது , இது ஏற்கனவே வேறொரு தலைப்பில் வெளியான காணொளி, சினேகன் விசயத்தில் மீண்டுமொருமுறை , இதற்கு பிறகு நீங்களே தீர்மானியுங்கள்


வருகிறது இன்னொரு கறுப்புச் சட்டம்! BRAI...

ஜி.எம். விதைகள்' எனப்படும் மரபணுமாற்றம் செய்யப்பட்ட விதைகளை, எப்பாடுபட்டாவது இந்தியாவில் விதைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கியிருக்கின்றன பன்னாட்டு விதை நிறுவனங்கள். அந்த நிறுவனங்களுக்கு கைகட்டி சேவகம் செய்து கொண்டிருக்கும் இந்திய அதிகார வர்க்கமோ... நரித்தந்திர வேலைகளில் இறங்கி, 'உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையச் சட்டம்’ (BRAI -Bio Technology Regulatory Authority of India Bill) எனும் சட்டத்தை நீட்டுவதற்கு தயாராகி வருகின்றது!

இந்நிலையில், 'மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிர்ப்பே இல்லாமல் செய்வதற்காகவே, உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையச் சட்டம் என்ற பெயரில் மிரட்டல் வேலையை ஆரம்பித்துள்ளது மத்திய அரசு. இதை நாங்கள் சும்மா விடப்போவதில்லை' என்கிறபடி நாடு முழுக்கவே ஆங்காங்கே போராட்டங்கள் சூடுபிடித்து வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக, நவம்பர் 11-ம் தேதியன்று சென்னை, எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. விவசாயிகள், பத்திரிகையாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கருத்துகளைப் பதிவு செய்தனர்.

மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்துக்கு எதிரானப் போரில் முன்னிலையில் இருக்கும் சென்டர் ஃபார் சஸ்டைனபல் அக்ரிகல்ச்சர் (Centre for Sustainable Agriculture) அமைப்பின் ஆலோசகர் கவிதா குர்கந்தி பேசும்போது, ''மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்துக்காக இங்கே செயல்படும் 'மரபணு மாற்று அங்கீகாரக் குழு'வின் (GEAC -Genetic Engineering Approval Committee)செயல்பாடுகள், சந்தேகத்துக்கு இடமானதாகவே உள்ளன. பி.டி கத்திரிக்காய் பிரச்னையின்போது, அறிவியல்பூர்வமான முறைகளை மேற்கொள்ளாமல், நம்பகத்தன்மையற்ற முறைகளில், சுதந்திரமான ஆய்வுகளுக்கு இடம் கொடுக்காமல் இக்குழு செயல்பட்டது.


'மரபணு மாற்றுத் தொழில்நுட்பம்' இந்தியாவில் வலுவாக காலுன்றிவிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன், மத்திய அரசு அவ்வப்போது சட்டங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிடவே மத்திய அரசு நினைக்கிறது. இப்போதுகூட இந்த புதிய சட்ட முன்வரைவு அறிமுகம் செய்யப்பட்டதுமே... பீகார், மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், கேரளா, கர்நாடகா ஆகிய 7 மாநிலங்கள் மரபணு மாற்றுப் பயிர் கள ஆய்வுக்கு மறுப்பு தெரிவித்துள்ளன. ஆனால், அதையெல்லாம் அலட்சியம் செய்யவே நினைக்கிறது மத்திய அரசு.

இந்தச் சட்டம் நிறைவேறினால்... மாநில அரசுகளின் அதிகாரம் பறிபோய்விடும் என்பதே உண்மை. 'மாநில உயிரித் தொழில்நுட்பக் கட்டுப்பாடு ஆலோசனைக் குழு’ மூலம், ஆலோசனைகளை மட்டும்தான் மாநில அரசால் வழங்க முடியும். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும்போது, இதற்கு எதிராக, மாநில அரசு உருவாக்கிய எல்லா சட்டங்களும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும்.

உயிரின வளத்தைப் பாதுகாப்பதற்கான பன்னாட்டு மாநாட்டில் உருவான விதிகளின்படி, 'மரபணு மாற்று உயிரினங்கள் குறித்தவற்றில் முடிவெடுக்கும் செயல்பாட்டில் பொதுமக்களின் பங்கேற்பு இருக்க வேண்டும்’ என்கிறது. ஆனால், புதிய சட்டத்தில் இதற்கான வழிமுறைகள் இல்லை.


இச்சட்டத்தின்படி, மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் உயிரினங்கள் மீது செய்த ஆய்வு விவரங்களை பொதுமக்களின் பார்வைக்கு எட்டாமல் ரகசியமாக வைத்திருக்க முடியும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகக்கூட தகவல் பெற முடியாது. தவிர, இந்த ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு எந்த நீதிமன்றமும் தடைவிதிக்க முடியாது.

சிவில் நீதிமன்றங்கள் தலையிடவும் முடியாது. அதனால், பாதிக்கப்பட்ட எவரும் நீதிமன்றத்துக்கே போக முடியாது. இப்படிப் பல பிரிவுகள் அரசுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் துணை போகின்றனவே தவிர... பொதுமக்களுக்கோ, விவசாயிகளுக்கோ உதவக்கூடியவைகளாக இல்லை'' என்ற கவிதா,

''மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் என்பது அடிப்படையில் ஆபத்தான ஒன்று. நவீன உயிரித் தொழில்நுட்பத்திடமிருந்து எல்லா உயிரினங்களின் ஆரோக்கியத்தையும்... இந்தியாவின் இயற்கை வளப் பாதுகாப்பையும் நாம் உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதற்காக நாம் எதிர்பார்ப்பது... 'தேசிய உயிரினப் பாதுகாப்பு ஆணையம்’ (National Bio safety Protection Authority)என்கிற அமைப்பைத்தான்'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.

அரசு புரிந்து கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.