Friday, November 25, 2011

சந்தேகத்தால் சிதறும் தாம்பத்யம்.


சம அந்தஸ்து, படிப்பு, சொந்தவீடு, அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற பையனின் தந்தை என்று நல்ல இடமாகத்தேடி அந்த பெண்னுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.இனி தன் பெண்ணுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை என்று பெற்றொருக்கு சந்தோஷம்.குறை வைக்காமல் பார்த்து பார்த்து செய்தார்கள்.

ஒரு வாரத்தில் வீட்டுக்கு வந்த பெண் அம்மாவைக்கட்டுக்கொண்டு அழ ஆரம்பித்தார். ”எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுகிறார். வெளியே எட்டிப்பார்த்தால் யாரைப்பார்க்கிறாய் என்கிறார்.என்னுடைய செல்போனை எடுத்து யார்யாருடன் பேசியிருக்கிறேன் என்று பார்க்கிறார், வாழ்க்கையை நினைத்தால் பயமாயிருக்கிறது’’

மேலே சொல்லப்பட்ட்து கொஞ்சம்தான்.தன்னை விட அழகான மனைவி அமைந்த்தால் சந்தேகம் ஏற்பட்டு மனநோயாளியானதை சினிமாவில் பார்த்திருக்கிறோம்.நிஜத்திலும் உண்மையில் மனநோய் ஏற்படும் அளவுக்கு பிரச்சினையை தரும் ஒன்றுதான் இந்த சந்தேகம்.தீவிரமான உணர்ச்சிப்போராட்ட்த்தை தரும் பயங்கரம் இது.

ஆண் மட்டுமல்ல கணவன் மீது சந்தேகம் கொள்ளும் மனைவியும் உண்டு.இரு பாலருக்கும் பொதுவான இந்த பிரச்சினைக்கு அழகான மனைவி,அழகான கணவன் என்ற தாழ்வு மனப்பான்மை மட்டும் காரணமல்ல! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம்.ஒரு வகை மனநோயிலும் இந்த பிரச்சினை வரலாம்.


தனது பாலியல் திறன் மீது அவநம்பிக்கை உள்ளவர்கள்,உண்மையிலேயே பாலியல் குறைபாடு கொண்டவர்கள் சந்தேகம் உள்ளவர்களாக இருப்பார்கள்.பருவ வயதில் திருமணமான நபர்களின் கள்ளக்காதல் பற்றி நண்பர்கள் சொன்ன பல விஷயங்களும் இப்போது மனதைக்குழப்பும்.சில விஷயங்களை இவர்களே பார்த்திருப்பார்கள்.கடந்த கால சம்பவங்களோடு மனம் ஒப்பிட்டுக் கொண்டிருக்கும்.

பாலியல் குறைபாடு உள்ளவர்கள் கூட தனது இணை தனக்கு மட்டுமே உரியவர் என்பதில் தீவிரமாக இருப்பார்கள்.பல எண்ணங்கள் தவறு என்றாலும் அவர்களது மனம் படும்பாடு கொடூரமான அனுபவமாக இருக்கும் என்கிறார்கள்.சந்தேகமும்,பொறாமையும்,கோபமும் அதிகரிக்கும்போது பாலியல் உணர்வும் மூர்க்கத்துடன் இருக்க வாய்ப்புண்டு.

பலரது சந்தேகங்கள் உண்மையல்ல என்பதே நிஜம்.உணர்ச்சி அளவில் அதிகம் பாதிக்கப்படுவது சந்தேக புத்தி உள்ளவர்கள்தான்.அவர்களது கணவனோ,மனைவியோ ஒரு பைத்தியத்தை பார்ப்பதுபோலவே பார்ப்பார்கள்.ஆனால் கலாச்சாரம் சார்ந்து மனதளவில் சந்தேகப்படும் கணவனைப்பெற்ற பெண் அதிகளவு பாதிக்கப்படுகிறார்.

கொலை செய்யும் அளவுக்கு,தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கும் இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுப்பதுண்டு.கவனமாக கையாண்டால் வெளியே வர உறவினர்களும்,நண்பர்களும் உதவ முடியும்.காரணத்தைக்கண்டறிந்து உரிய ஆலோசனை வழங்கினால் பல குடும்பங்களை உடையும் ஆபத்திலிருந்து மீட்க முடியும்.

திரும்பும் திசை எங்கும் காக்கி கும்பல்கள்

பரமக்குடி, மதுரை, இராமநாதபுரம் என தொடரும் கலவரங்கள். அங்கும் இங்கும் அலைந்து திரியும் அப்பாவி மக்கள். நினைவு தினத்தை அனுசரிக்க வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டதால் செய்வதறியாது திகைத்து நிற்க்கும் கூட்டங்கள். வீட்டுக்கு உபயோக பொருள்கள் வாங்க, குழந்தைக்கு மருத்துவம் பார்க்க, உறவினர் வீட்டிற்கு என்று வந்த பெண்கள், குழந்தைகள் திரும்பி செல்ல பேருந்து இல்லாமல் அலையும் அவலம். கடைகள் அனைத்தும் மூடப்பட்டும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அடித்து நொறுக்கப்பட்டு, அலறி ஓடும் ஆண்களை கண்டு அஞ்சி நடுங்கி சாலையின் ஓரங்களிலும், பேருந்து நிலையங்களின் இடுக்குகளிலும் நுழைந்து மரண பீதியில் கதறும் குடும்பங்கள். கையில் நீண்ட லத்தி, தங்களை பாதுகாத்து கொள்ளும் கவச ஆயுதம், துப்பாக்கி முழக்கம், திரும்பும் திசை எங்கும் காக்கி கும்பல்கள் என ஒரு கனம் நம் கண்முன் கஷ்மீரின் அவலநிலை வந்து சென்றது.

என்ன நடக்கிறது என்பதனை யூகிப்பதற்குள் 5 பேரின் உயிர் பலிகொடுக்கப்பட்டுவிட்டது. ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது. அப்படி என்ன? நடந்தது பரமக்குடியில்.

ஒரு இனம் ஆண்டாண்டு காலம் அடிமைப்படுத்தப்பட்டு, அநியாயதிற்குள்ளாக்கபட்டு, அடக்குமுறைகளுக்குட்பட்டு கிடந்தது. அதிலிருந்து விடுதலை பெற, உரிமைகளை மீட்டெடுக்க வழிதெறியாது விழி பிதுங்கி நிண்ட நேரத்தில். அவர்களுக்காய் குரல் கொடுத்து, உரிமையை பறித்தெடுக்க போராடியவர் இமானுவேல் சேகரன்.

சுதந்திர போராட்ட தியாகி, இராணுவ வீரன் என தனது இளமை பருவம் தொட்டு போராட்ட களத்தை நோக்கி பயனித்தார் இமானுவேல். இரட்டை குவளை, நாய் குளத்தில் தண்ணீர் அருந்த அனுமதிக்கும் கூட்டம் மனிதன் தண்ணீர் எடுக்க தடைவிதிப்பதா? என்று ஆதிக்க சக்திகளை எதிர்த்து விவேகத்துடன் போராட்டத்தை தொடங்கினார். 1950-ல் “ஒடுக்கப்பட்டோரின் விடுதலை இயக்கம்” என்று ஆரம்பித்து ஒரு சில வருடங்களுக்குள் தன் சமூக பலத்தை அரசியல் சக்தியாக மாற்றினார். 1957-ல் நடந்த தேர்தலில் ஆதிக்க சக்திகளுக்கு எதிரான கடும் உழைப்பினால் தங்கள் இனத்தின் சக்தியை நிரூபித்தார்.

அதன் பின் பல பிரச்சனைகள், சமரச கூட்டங்கள், சிறைகள் என கழிந்து கொண்டிருந்தன நாட்கள். 5-9-1957 அன்று லாவி என்னும் கிராமத்தில் குடிநீர் கிணறு அசுத்தம் செய்யப்படுகிறது. அதனால் ஏற்பட்ட பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண 10-9-1957 அன்று பணிக்கர் என்னும் உயர் அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்த இமானுவேல் வருகிறார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்ற போதிலும் இரு தரப்பினருக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக அங்கே தங்கிய இமானுவேல் அடுத்த நாள் 11-9-1957 பரமக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதன் பின் சுமார் 9 மணி அளவில் தன் சொந்த கிராமத்திற்க்கு புறப்பட்ட இமானுவேல் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அன்று முதல் தங்கள் சமூகத்திற்காக தனது உயிரை கொடுத்த வீரர்களின் பட்டியலில் சேர்ந்து தலித் சமூக மக்கள் மனங்களில் என்றும் மறையா இடத்தை பிடித்தார்.

இதன் காரணமாக ஒவ்வொரு 9/11 போது இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு நாள் அமைதியான முறையில் நீண்ட காலம் நடைபெற்று வந்தது குறிப்பிடதக்கது. அதன் பின் சுமார் 4 வருடங்களாக 1000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி மரியாதை செய்யும் நிகழ்சியாக உருவெடுத்தது.

இதற்கு அரசியல் ரீதியான பல காரணங்கள் மறைந்து கிடக்கின்றன. பொதுவாகவே ஆண்டாண்டு காலமாக தேவர்-பள்ளர் பிரச்சனை வழக்கத்தில் இருந்து வருகிறது. எதேனும் விழாக்கள் நடத்தப்பட்டு மக்கள் அதிகமாக கூடும் காலங்களில் இது கலவரமாக வெடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அப்படியிருந்தும். தேவர்கள் தங்கள் இனத்தலைவரான் முத்துராமலிங்க தேவர் நினைவாக ஒவ்வொரு அக்டோபர்-2 அன்று தேவர் குருபூஜை என்று விழா எடுப்பதும். அதில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை அசிங்கபடுத்துவதும், அவர்களை வம்புக்கிழுப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த நேரங்களில் காவல் துறை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகிறோம் என்ற போர்வையில் கலவரம் செய்பவர்களை கட்டுப்படுத்தாமல் தலித் மக்கள் வாழும் பகுதிக்குள் போலீஸை குவித்து வழக்கம் போல் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, பேருந்து செல்ல தடை என பதற்றம் பற்றி கொள்ளும். ஆனாலும் அரசியல் தலைவர்கள் பாகுபடின்றி இப்பூஜையில் கலந்து கொண்டு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றி செல்வர். அதில் ஜெ, ஸ்டாலின், காங்கிரஸ்காரர்கள், விஜயகாந்த், சரத்குமார் உட்பட அனைவரையும் அங்கு காணலாம்.

இதற்கு மாற்றமாக தலித் மக்கள் சார்பில் இமானுவேல் சேகரனது நினைவு தினம் விமர்சியாக்கப்பட்டது. ஆனால் தேவர் குரு பூஜைக்கு கொடுத்த முக்கியத்துவமும், அந்தஸ்தும் இமானுவேல் சேகரனது குரு பூஜைக்கு கொடுக்கபடவில்லை. அதை எந்த அரசியல் கட்சி தலைவர்களும் கண்டுகொள்வது கூட இல்லை. தலித் கட்சி தலைவர்களைத் தவிர. இது அம்மக்கள் மத்தியில் குமைச்சலாக புகைந்து கொண்டிருந்ததை யாரும் மறுக்க முடியாது.

இந்நிலையில் 9/11 குருபூஜைக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் பாதுகாப்பு என்கிற போர்வையில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தார்கள். இந்நிகழ்வில் தமிழக மக்கள் கழக தலைவர் ஜான் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிரார் என அறிவிக்கப்பட்டிருந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக நினைவிடத்தை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். தீடீர் என ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி கூட்டத்தில் கசிந்தவுடன் “தாங்களும் வருவதில்லை வருபவனையும் விடுவதில்லையா?” என்று ஆத்திரம் கொண்ட மக்கள் பரமக்குடியின் முக்கு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த ஆதிக்க சக்தியின் கைக்கூலிகளான காக்கிகள் கூட்டத்தை களைக்க தடியடியை தொடங்கியிருக்கிறார்கள்.

கூட்டத்தை கலைக்கிறோம் என்று ஆரம்பிக்கப்பட்ட தடியடி தான், மறியல் போராட்டம் மிகப்பெரும் கலவரமாக மாற வித்திட்டது. அதன் பின் போலீஸ் வாகனம் எரிப்பு, கல்வீச்சு, அதிகாரிகள் காயம் என அனைத்தும் ஒன்று சேர்ந்து 7 அப்பாவிகளின் உயிர் துப்பாக்கிக்கு இரையாக்கப்பட்டுவிட்டது.

பலமுல்ல காவல்துறை கையில் தடி, பாதுகாப்பு கவசம், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகணம், கண்ணீர் புகை குண்டு, ரப்பர் குண்டு என கலவரத்தை தடுக்க பல வழிகள் இருந்தும் போராடியவர்கள் சிறுபான்மை சமூக மக்கள் ஆதாலால் தனது ஆதிக்க வெறியை தன் கையில் இருந்த துப்பாக்கியின் மூலம் தனித்து இருக்கின்றனர். துப்பாக்கியால் மனித உயிர்களை காவு கொண்டது நிச்சயம் கண்டனத்திற்குரியது.

மற்ற சமூகத்தை இழிவுபடுத்துவதற்காகவும், மனித சமூகத்தை பிரிவினைபடுத்தி கலவரங்களை ஏற்படுத்த கொண்டாடப்படும் விழாக்களுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கிறது. வட நாட்டின் இறக்குமதியான விநாயகர் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்து ஆரத்தியெடுத்து பாதுகாப்பு கொடுக்கும் ஆதிக்க, பார்ர்ப்பன சக்திகள் மற்றும் அதன் கைகூலிகள் அமைதியான முறையில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு அனுமதிமறுப்பதும், அதுவே சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களாக இருந்தால் அடக்குமுறைகளை கையாள்வதும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.

சமீபத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்னும் அமைப்பு சுதந்திர தினத்தை கொண்டாட சட்ட ரீதியான அனைத்து ஒழுங்குகளையும் கடைபிடித்து, அரசிடம் உரியமுறையில் அனுமதி பெற்றிருந்தும் கடைசி தருவாயில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்று உப்பு சப்பில்லாத காரணங்களை காட்டி சுதந்திர தின கொண்டாட்டதை தடை செய்தது. அத்துடன் நிகழ்ச்சி நடக்கயிருந்த மேலப்பாளையத்தில் ஆயிரக்கணக்கான காவல்துறையினரை குவித்து பதட்டமான சூழ்நிலை போல் படம் காட்டியது குறிப்பிடதக்கது.

இதை நான் இங்கு குறிப்பிட காரணம் இத்தடையை கண்டித்து பாப்புலர் ப்ரண்ட் தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இதில் அதன் பொது செயளாலர் ஹாலித் முஹம்மது இராமநாதபுரத்தில் கண்டன உரை நிகழ்த்தும் போது உங்கள் தடைக்கு பயந்து நாங்கள் எங்களது விழாவை நிறுத்திவிடவில்லை. எங்கள் தலைமை எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. ஏனென்றால் நாங்கள் சட்டம் ஒழுங்கை பேணுபவர்கள். சுதந்திர தின விழாவை தடைசெய்தது போன்று தேவர் குரு பூஜையையோ அல்லது விநாயகர் ஊர்வலத்தையோ தடை செய்து பாருங்கள் என்ன நடக்கும் என்று தெரியும். சட்டம் ஒழுங்கு பற்றி புரியும் என்று அவர் கூரிய வரிகளின் எதிரொளியை இன்று நாம் காண்கின்றோம்.

சட்டத்தை மதிப்பவர்களை சட்டம் மேலும், மேலும் நசுக்குகிறது. சட்டத்தை மீறுபவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. இன்று பரமக்குடியில் நடந்த கலவரத்திற்கும், உயிர் பலிக்கும் காவல்துறை சட்டம் ஒழுங்கை மீறியதே காரணம். விழாவிற்கு அனுமதி அளித்துவிட்டு இறுதி தருவாயில் அதற்கு வந்த தலைவரை கைது செய்யாமல் இருந்திருந்தால் இப்படி ஒரு கோர சம்பவம் நடந்தேறி இருக்காது. உயிர்களும் போயிருக்காது.

அநீதி இழைத்த போதும், அடக்குமுறைகளை கையாண்ட போதும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இஸ்லாத்தின் அடிப்படையில் அமைதி காத்த இஸ்லாமியர்களிடமிருந்து கற்று கொள்ளட்டும் சட்டம் ஒழுங்கை !

பாலா படம் மிரள வைக்கும் ! : விஷால்

'அவன் இவன்' படத்தினை தொடர்ந்து பாலா இயக்கத்தில் நடிக்க மீண்டும் ஒப்பந்தமாகி இருக்கிறார் விஷால். தற்போது நடித்து வரும் 'சமரன்', அடுத்ததாக லிங்குசாமி படம், அதனைத் தொடர்ந்து பாலா படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்து இருக்கிறார்.

பாலா படத்தில் மீண்டும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறித்து விஷால் கூறியிருப்பது " அவன் இவன் படத்தினை தொடர்ந்து மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்று பாலா சார் கூறினார். ஆனால் அப்படம் இவ்வளவு சீக்கிரமாக ஆரம்பமாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

'அவன் இவன்' படத்தினை போல இந்த படத்தில் மாறுகண் உடையவராக எல்லாம் நடிக்கவில்லை. 
ஆனால் இந்த படத்தில் எனது பாத்திரப் படைப்பு படம் பார்ப்பவர்களை மிரள வைக்கும். இப்போதே அதைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது. கண்டிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புது விருந்தாக அந்த படம் அமையும் " என்று தெரிவித்துள்ளார்.

மாதவிலக்கை தள்ளிப்போட.....அவசர அலசல் !


தோழியின் திருமணம், குழந்தையின் பள்ளி விழா, குலதெய்வக் கோயில் உற்சவம், பக்கத்து வீட்டுக் கிரஹப்பிரவேசம்... இப்படி முக்கியமான நாட்கள் வரும்போது எல்லாம், 'அந்த நாளில் மாதவிலக்கு வந்துவிட்டால்...’ என்னாவது என்கிற பதற்றமும் பெண்களுக்குப் பற்றிக்கொள்வது அந்தக் காலம்.

இதுவோ.... ''மாதவிலக்கைத் தள்ளிப் போடக்கூடிய மாத்திரைகள் மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன. அவற்றைப் போட்டுக் கொண்டால்... மாதவிலக்கையே தள்ளிப்போட முடியுமே! விசேஷ நாட்களை யும் ஜாலியாகக் கொண்டாட முடியுமே!'' என்று குஷியாகும் பெண்களின் காலம்!

இவர்களில் பலரும், 'இப்படி மாத்திரைகளை இஷ்டத்துக்குப் பயன்படுத்துவது ஆபத்தானது' என்கிற அறிவுரைகளையெல்லாம் தெரிந்தோ... தெரியாமலோ கடந்து போய்க் கொண்டே இருக்க... கடைசியில் அதுவே பேராபத்தாக வந்து படுத்தி எடுக்க ஆரம்பித்துவிடுகிறது என்பதுதான் உண்மை.

'மாதவிலக்கைத் தள்ளிப்போட மாத்திரைகளைப் பயன்படுத்துவது எந்த அளவுக்கு சரி?' என்றபடி மகப்பேறு மருத்துவர் ஜெயம் கண்ணனிடம் பேசினோம்.

''மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள்... மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் மாத்திரைகளின் பெயரைச் சொல்லி வாங்கிக் கொள்கிறார்கள். இது உடலைப் பெரிய அளவில் பாதிக்கச் செய்யும். பீரியட்ஸ் வருவதே தெரியாத அளவுக்கு பாதுகாப்பான நாப்கின்ஸ் இப்போது கிடைக்கிறது. அப்படியிருக்க, மாத்திரைகளைப் பயன்படுத்தி மாதவிலக்கை ஏன் தள்ளிப்போட வேண்டும்? இயற்கைக்கு மாறாக நாம் நிகழ்த்தும் எந்தச் செயலுமே தவறானதுதான்'' என்ற டாக்டர்,

''விசேஷமான நாட்களில் மாதவிலக்கு ஏற்பட்டால், சங்கோஜமாகத்தான் இருக்கும். ஆனால், அதைத் தள்ளிப்போடும் எண்ணத்தில் மாத்திரைகளைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையற்ற சங்கடமாகிவிடும். மாதவிடாய் விஷயத்தில் மட்டும் அல்ல... எதற்காகவும் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது டாக்டரின் அறிவுரையை அவசியம் கேட்க வேண்டும்'' என்று அழுத்தமாகச் சொன்னவர், மாத்திரைகளைப் பயன்படுத்துவது பற்றிய விஷயத்துக்கு வந்தார்.

''கடைகளில், 'புரஜெஸ்ட்டரோன்' (progesterone) கலந்த மாத்திரைகள் கிடைக்கின்றன. மூன்று முதல் ஐந்து நாட்கள்வரை அதனை எடுத்துக் கொள்ளலாம். எந்தவித பக்கவிளைவும் இருக்காது. இருந்தும், ஒவ்வொருவரின் உடலும் ஏற்றுக்கொள்ளும் விதமாக மாத்திரைகளின் செயல்பாடு அமைவது இல்லை. இதனால், மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை போடுபவர்கள், முதலில் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து கொள்ளவேண்டியதுஅவசியம். யூட்ரஸின் நிலை, ஏதேனும் பிரச்னை இருக்கிறதா, வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு என எது வேண்டுமானாலும் நம்மை தாக்கி இருக்கலாம். அதுகுறித்து தெரியாமல் மாத்திரைகளைச் சாப்பிட்டால்... அத்தகைய பாதிப்புகள் பன்மடங்காகி, உடலை வருத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது. டாக்டரின் அட்வைஸ் இல்லாமல் மாதவிலக்கு மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு 'மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலியும் வர வாய்ப்பு இருக்கிறது.

இப்படி மாத்திரைகளைச் சாப்பிடும்போது... மாதவிடாய் சுழற்சியும் மாறுபடும். அடுத்த மாத சுழற்சியை உடம்பு டேக் ஓவர் பண்ணாது. 100 மீட்டர் ரிலே ரேஸ் போகும்போது, குறிப்பிட்ட இடத்தில் அந்த ஸ்டிக்கை இன்னொருவர் வாங்கவேண்டும். இல்லை என்றால், ஓடியவர் நின்று கொண்டேதான் இருக்கவேண்டும். அதேபோல்தான் அடுத்த மாதவிடாய் சுழற்சியை உடல் ஏற்றுக் கொள்ளாமல் போகும்போது... ரத்தப்போக்கு அதிகரிக்கும். நம் உடம்பின் உஷ்ணமும் அதிகமாகும்!'' என விளக்கமாகச் சொன்ன ஜெயம் கண்ணன்,

''இந்தியாவில் வலி நிவாரணிக்கும், வைரஸ் பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கும் சேர்த்தே மாத்திரைகளைத் தயாரிக்கும் வழக்கம் இருக்கிறது. கடைகளிலும் தாராளமாகக் கிடைக்கிறது. இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகம். வெளிநாடுகளில் வலி நிவாரணி, ஹார்மோன் மாத்திரைகள் என எது கேட்டாலும், கடைகளில் கொடுக்க மாட்டார்கள். டாக்டரின் சிபாரிசு இருந்தால் மட்டுமே வாங்க முடியும். ஆனால், இங்கே மாதவிலக்கைத் தள்ளிப்போட நினைக்கும் ஒரு பெண் சர்வசாதாரணமாக அதற்கான மாத்திரைகளின் பெயரைச் சொல்லி மெடிக்கல் ஸ்டோரில் வாங்கிச் செல்கிறார். தான் செய்வது எவ்வளவு அபாயமானது என்பது பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை'' என்று கவலையை வெளிப்படுத்தியதோடு, தலைகோதும் தாயாகவும் மாறி இப்படிச் சொன்னார்-



''மாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவுக்கு ஆபத்தை விளைவிக்ககூடியது இல்லை. ஆனாலும், சிறு பாதிப்புகள்கூட ஏற்படாத அளவுக்கு நம் உடலைப் பாதுகாப்பது அவசியம். பெண்ணின் உடல் பூவுக்குச் சமமானது. மாத்திரைகளின் வீரியம் தெரியாமல், அவற்றைப் பயன்படுத்தும்போது அந்தப் பூ எத்தகைய அவதிக்கு உள்ளாகும் என்பதை உணரவேண்டும். முடிந்த மட்டும் இயற்கைக்கு மாறாக மாத சுழற்சியைத் தள்ளிப்போடுவதைத் தவிர்க்க வேண்டும். இக்கட்டான சூழலில் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது மருத்துவரின் உரிய அறிவுரையைப் பெற்றே பயன்படுத்த வேண்டும்!''

ஆண்களை கடத்தும் ஓரினச் சேர்க்கையாளர்கள் -அதிர்ச்சி ரிப்போர்ட்


வழக்கமாக பெண்களுக்குத்தான் நாட்டில் பாதுகாப்பில்லை.தனியாக செல்வது ஆபத்து என்ற நிலை இருந்து வந்தது.ஆனால் திருத்தணியில் நடந்த ஒரு சம்பவம் ஆண்களுக்கும் பாதுகாப்பில்லை என்பதை உணர்த்துகிறது.திருத்தணி முருகன் கோயிலுக்கு சொந்தமான தணிகை இல்லத்தில் நடைபெற்ற சம்பவம் இது. 

24 வயதான சந்துரு என்பவரை கடத்தி வந்து பாலியல் தொல்லை தந்திருக்கிறார்கள்ஒரு சிலர் .அவ்வாலிபருக்கு கட்டாயமாக மதுவையும் வழங்கியிருக்கிறார்கள்.அடிக்கடி நடந்துவந்த இந்த விஷயம் வாலிபரை கட்டாயமாக காரில் ஏற்றும்போது சிலர் பார்த்துவிட்டார்கள். விசாரித்து , காப்பாற்றி காவல்துறைக்கு தெரிவித்துள்ளார்கள்.காவல் துறை கடத்தியவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எனது முந்தய ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய பதிவில் தொண்டு நிறுவனத்தை சார்ந்த ஒருவர் குறிப்பிட்ட விஷயத்தை பகிர்ந்திருக்கிறேன்.ஆண் பிள்ளைகளை வெளியே விடுவதும் ஆபத்துதான் என்று சொல்லியிருந்தார்.அது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.சிறைச்சாலைகளும்,மாணவர் விடுதிகளும் தான் இதன் தோற்றுவாய்.வெகுநாட்கள் சிறையில் கழிக்கும் குற்றவாளிகள் மற்ற கைதிகளுடன் பழகி இந்த பழக்கத்துக்கு ஆளாகிறார்கள்.அடுத்து மாணவர் விடுதிகள்.

கல்லூரியில் சேரும் மாணவர்கள் அந்த வயதில் போதைக்கு அறிமுகப்படுத்தப் படுவதோடு ஓரினச் சேர்க்கை பழக்கங்களுக்கும் தள்ளப்படுகிறார்கள்.இது விரும்பி மேற்கொள்ளப்படும் செயலோ ,வியாதியோ அல்ல.பழக்கப்படுத்தப்படும் ஒன்றுதான்.புகை பிடித்தல்,மது,போதை மருந்துகள் போன்றவை கல்லூரி விடுதிகள்தான் அறிமுகப்படுத்துகின்றன .மிக நெருக்கமாக ஒரு அறையில் ஏராளமான மாணவர்கள் தங்குவது இந்த ஆபத்தை அதிகப்படுத்துகின்றன.பழகிவிட்டால் விடுவது மிக கஷ்டம் என்கிறார் மருத்துவர் ஒருவர்.

முதன் முதலில் உலகில் எய்ட்ஸ் கண்டறியப்பட்டதும் ஓரினச் சேர்க்கை யாளர்களிடம்தான்.இதில் பால்வினை நோய் தொற்றும் இவர்களால்அதிகம் பரவுகிறது.வீட்டில் சொல்ல முடியாமல் திருமணம் செய்துகொண்டு மனைவிக்கு நோய்களை கொடுத்து விடுகிறார்கள்.இந்தியாவைப் பொறுத்துவரை இதைப்பற்றிய புரிதல் இல்லாததே மேலும் மேலும் பிரச்சினைகளை கொண்டு வருகிறது.

ஓரினச்சேர்க்கை பாவமாகவும், குற்றச்செயலாகவும் கருதப்பட்டது. ஆனால் உலகம் முழுக்க 5 சதவீதம் பேர் இத்தகைய நடத்தை உள்ளவர்கள் என்கிறது ஆய்வுகள்.சட்டப்படி குற்றம் என்றானதால் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளாமல் விடுதிகளில் மற்றவர்களை கட்டாயப்படுத்தி அல்லது போதை தந்து தூண்டுவது போன்ற செயல்களை செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

இவர்களையும் சமூகம் ஏற்றுக்கொண்டால் குற்றங்கள் நடப்பது குறையும் என்ற விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.சில பொதுச் சேவை நிறுவனங்கள் ஓரினச் சேர்க்கையாளர்களை கண்டறிந்து அவர்களுக்குள் சங்கத்தை ஏற்படுத்தி நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன .இது எய்ட்ஸ் வந்த பிறகு ஏற்பட்ட மாற்றம்.மேலும் சட்டப்பூர்வமாக மாற்றங்கள் தேவைப்படுகிறது.

டெல்லி உயர்நீதிமன்றம் ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது நினைவிருக்கலாம்கவனிக்கவும்.ஓரினச் சேர்க்கைதான்.கடத்துவது அல்ல!.ஆனால் இன்னும் மக்களிடம் இத்தகைய மாற்றம் ஏற்படவில்லை.சட்டத்தை விட சமூக அங்கீகாரம் இவ்விஷயத்தில் அவசியமானது. -

கருணாநிதி முரசொலியில் எழுத நினைத்தது நான் இங்கே எழுதுகிறேன் (Just for fun)...

முக்கனிகள் மூன்று உண்டு -நான் படைத்த நான்காவது கனியே என் கனிமொழியே -உன் 
மூக்கிற்கு அழகூட்ட மூக்குத்தி போட்டு மகிழ்தோம் -எனக்கு அப்போது வலியில்லை-கட்டாயபடுத்தி கலட்டும்பொழுது-என் 
இதயம் இங்கே நொறுங்குதம்மா..

ஒவ்வொரு தாய் தந்தையும் தன் மகளை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய பின் மன மகிழ்ச்சி அடைந்திருவர் -மாமியார் வீட்டிற்குத்தான் சென்றிருகிறாய் 
மகிழ்ச்சி மட்டும் வரலையம்மா 

கொலுசு போடுவதை நிறுத்திவிட்டால் உன் அம்மா தயாளு -ஏன் தெரியுமா? அதன் சத்தத்தில் -உன் தூக்கம் கெடுமென்று -இன்று 
கொசுக்கடியில் எப்படியம்மா தூங்குகிறாய் ?
நீதிபதி சைனி வாசித்த தீர்ப்பு உனக்கு புரியாதது கண்டு என் மனம் பதை பதைதம்மா 
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் எவ்வளவு தவறு என்று காலம் எனக்கு உணர்த்தி விட்டதம்மா!!

பட்டக் காலிலே படுமென்பார் கெட்டக் குடியே கெடுமென்பார்--அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ எனக்கு பொருந்துமம்மா!!!

நீ கட்டும் சேலையின் நிறம் சொல்லும் உன் கைப்பையின் நிறம் என்னவென்று- இன்று நீ தின்னும் கம்மங்களியின் நிறம் மட்டுமே என் கண்களில் தெரியுதம்மா 
மாளிகை போல் மனையிருந்தும்" நம்பர்-6 திகார் ஜெயில்" உன் நிரந்த மனையானதம்மா 


"இது சன் டிவியின் தமிழ்மாலை" -உலக தமிழர்களின் மனைதோறும் கேட்கும் மங்கள வாத்தியம் -இதை உன்னால் கேட்க முடிகிறதாம்மா..
கலைஞர் மகளே உனக்கு வழங்கிய தொலைகாட்சியில் கலைஞர் டிவி தெரியுதாம்மா -----

நான் உங்களிடம் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான் -கனியை வெளியே விடவிட்டாலும் பரவாயில்லை -கழிவரைக்காவது ஒரு கதவு போட்டு தாருங்கள் ..
உங்கள் கருணாநிதி --

தமிழ் சினிமாவின் புதிய இளைஞர்கள்!

'கோவிந்தா... கோவிந்தா’, 'முழுமதி முழுமதி’, 'உன்னைக் கண்டேனே’, 'இதுவரை இதுவரை’, 'மருதாணிப் பூவைப் போல’, 'கன்னித் தீவுப் பொண்ணா..’, 'ஒரு முறைஇரு முறை பல முறை’, 'இதுவரை என் நெஞ்சில்’.... ராஜா, ரஹ்மான்களுக்கு இடையிலும் தங்கள் இருப்பை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும் இளைய தலைமுறை இசை யமைப்பாளர்களைச் சந்திக்கவைத்தோம். இது கலகலப்பான அரட்டை ஆர்கெஸ்ட்ரா!

அறிமுகப் படலத்தைத் தொடக்கிவைத்தார் 'எங்கேயும் எப்போதும்’ சத்யா. ''ஜிங்கிள்ஸ் பண்ணினேன். வித்யாசாகர் சார்கிட்ட கீ-போர்டு புரொகிராமரா இருந்தேன். 'ஆடுகிறான் கண்ணன்’ சீரியலில் முதல் வாய்ப்பு. அப்புறம் 'ஏன் இப்படி மயக்கினாய்’ படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனா, 'எங்கேயும் எப்போதும்’ அறிமுக அடையாளம் ஆகிவிட்டது. எனக்கு ஜி.ஆர் - டு - ஏ.ஆர். பிடிக்கும்... புரியலையா? ஜி.ராமநாதன் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை!'' என்றவரைத் தொடர்கிறார் 'முரண்’ சாஜன் மாதவ்.
''என் அப்பா ரவீந்திரன், மலையாளத்தில் பிரபல இசையமைப்பாளர். தமிழிலும் 'ரசிகன் ஒரு ரசிகை’, 'லட்சுமி வந்தாச்சு’னு படங்கள் பண்ணி இருக்கார். கர்னாட்டிக் மியூஸிக், பியானோ கத்துக்கிட்டு அப்பா வின் சிபாரிசு எதுவும் இல்லாமலேயே ஜிங்கிள்ஸ் பண்ணினேன். அப்படியே சினிமாவுக்கும் வந்தாச்சு. 'கதிர்வேல்’தான் முதல் படம். ஆனால், 'முரண்’ முந்திக்கிச்சு!'' என்றார்.

''ஜிங்கிள்ஸ், ராக் அண்ட் ரோல் பேண்ட்னு பிஸியா இருந்தேன். எய்ட்ஸ் விழிப்பு உணர்வு தொடர்பா மிஷ்கின், சசிகுமார், கிருத்திகா உதயநிதி மூணு பேரும் இயக்கிய குறும்படங்களுக்கு இசையமைச்சேன். அந்த அறிமுகம் மூலமா 'யுத்தம் செய்’ வாய்ப்பு கொடுத்தார் மிஷ்கின். கிருஷ்ணகுமாரோட சுருக்கம்தான் கே!'' என்று 'சுருக்’ பெயர்க் காரணம் சொன்னார் கே.

தொடர்ந்தார் அருள்தேவ். ''வித்யாசாகர் சார்கிட்ட கீ-போர்டு புரொகிராமரா 10 வருஷம் இருந்தேன். தென்னிந்திய மொழிகள் அத்தனையிலும் 500 படங்களுக்கு மேல் அவர்கூட வேலை பார்த்து இருக்கேன். யுவராஜ் சார், 'போட்டா போட்டி’ படத்தில் அறிமுகப்படுத்தினார். இப்போ எஸ்.பி.ராஜ்குமாரோட 'பார்க்கணும்போல இருக்கு’, 'பாரி’, 'நகர்ப்புறம்’ படங்கள் பண்றேன்'' என்றார்.

''நிறைய கிறிஸ்துவப் பாடல்களுக்கு இசை அமைச்சிருக்கேன். அந்த அனுபவம்தான் சினிமா வரை இழுத்துட்டு வந்திருச்சு'' - 'கண்டேன்’ விஜய் எபிநேசரின் ஒரே ஒரு வரி அறிமுகம் இது.

இந்த ஜமாவில் கொஞ்சம் சீனியர் எஸ்.எஸ்.குமரன். 'பூ’, 'களவாணி’ படங்களின் இசையமைப்பாளர் மற்றும் 'தேநீர் விடுதி’ படத்தின் இயக்குநர் ப்ளஸ் இசையமைப் பாளர்! ''செந்தில்குமரன்... சுருக்கமா எஸ்.எஸ்.குமரன். அடையார் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சினிமாட்டோகிராஃபி படிச்சேன். துறைமுகத்துல ஆபீஸர் ரேங்க்ல வேலைல இருந்தாலும், இசைதான் என்னோட முதல் சாய்ஸ். ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல யூனியன் சேர்மன் ஆகிட்டா, பிரபலங்கள்கூட போட்டோ எடுக்க வாய்ப்பு கிடைக்கும். அப்படி இளையராஜா சார்கூட போட்டோ எடுத்துக்கணும்னே சேர்மன் ஆனேன். 'என்னடி முனியம்மா ஒங்கண்ணுல மைய்யி’ பாட்டை 'செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா’ மெட்டில் பாடி பசங்களை கேன்வாஸ் பண்ணி சேர்மன் ஆனேன். அது ஒரு கனாக் காலம். இப்போ 'கேரள நாட்டிளம் பெண்களுடனே’, 'ரதம்’ படங்களுக்கு மியூஸிக் பண்ணிட்டு இருக்கேன்'' என்றார்.


மிக மென்மையான குரலில் பேசத் தொடங்கினார் தாஜ் நூர். ''ரஹ்மான் சார் கிட்ட 14 வருஷம் வேலை பார்த்தேன். 'தயவுசெஞ்சு தனியாப் பண்ணு. இப்படியே இருந்தா கம்போஸிங் மறந்துடும்’னு சொல்லி பிடிச்சுத் தள்ளிவிட்டார். அப்படித்தான் 'வம்சம்’ பண்ணினேன். இப்போ 'எத்தன்’, 'மல்லுக்கட்டு’, 'ஆயிரம் முத்தங் களுடன் தேன்மொழி’, 'ஓம்’னு நிறையப் படங்கள்'' என்று நிறுத்திக்கொண்டார். 'அவ்வளவுதானா?’ என்பதுபோல சதீஷ் சக்ரவர்த்தி பார்க்க, ''கிட்டத்தட்ட பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கம்ப்யூட்டர் மூலமா இசையமைக்கும் டிரெண்ட் தொடங்கியபோது, ஏறத்தாழ எல்லா இசையமைப்பாளர்களுடனும் வேலை பார்த்திருக்கேன்!'' என்றார்.

இப்போது திருப்தியான பார்வையோடு தொடர்ந்தார் சதீஷ் சக்ரவர்த்தி. ''என் அப்பா தாயன்பன் இசையமைப்பாளர். ரெண்டு வருஷம் ரஹ்மான் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்துட்டு, 'கனிமொழி’ பண்ணினேன். ஒரு முறை ராஜா சாரைப் பார்க்க அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போ அவர் வெஸ்டர்ன் கிளாஸிக்கல் மியூஸிக்கில் எக்ஸர்சைஸ் எழுதிப் பார்த்துட்டு இருந்தார். இவ்வளவு சாதிச்ச பிறகும் இன்னும் கத்துட்டு இருக்காரேனு எனக்குப் பயங்கர ஆச்சர்யம். ஒவ்வொரு நாளும் ஏதாவது கத்துக்கிட்டே இருக்கணும்னு நான் கத்துக்கிட்ட நாள் அது!'' என்றார் சதீஷ் சக்ரவர்த்தி.

பிடித்த இசையமைப்பாளர் குறித்துப் பேச்சுத் திரும்பியபோது அனைவரின் ஒருமித்த சாய்ஸ்... இளையராஜா!

''ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு பாட்டை ஹிட் அடிச்சுடலாம். ஆனா, ரீ-ரிக்கார்டிங்ல... ராஜா ராஜாதான்!'' என்கிறார்கள் கோரஸாக.

''யுவன்ஷங்கரோட பெஸ்ட் கம்போசிஷன் மெலடியில்தான் வரும். 'நினைத்து நினைத்துப் பார்த்தேன்’ என்ன ஒரு கிளாஸிக் பாட்டு! தி பெஸ்ட் மெலடி மாஸ்டர் அவர். ஆனா, டிரெண்ட்படி அவர்கிட்ட ஃபாஸ்ட் பீட் பாடல்கள்தான் நிறையக் கேட்டு வாங்குறாங்க. ராஜா சாரின் மெலடி திறமை அப்படியே அவர்கிட்ட இருக்கு'' என்றார் சதீஷ்.

சில சமயங்களில் நகல் எடுத்ததுபோல பாடல்களில் வருவது குறித்துப் பேசியபோது, ''டாக்டர்கிட்ட போய் நோய் என்னன்னு மட்டும்தான் சொல்லணும். 'பச்சை கலர்ல ரெண்டு மாத்திரை கொடுங்க’னு கேட்டா அது அபத்தம் இல்லையா? டைரக்டர் சிச்சுவேஷனை மட்டும்தான் சொல்லணும். அதை விட்டுட்டு, அந்தப் பாட்டு மாதிரி வேணும்னு கேட்கிறது நியாயமா?'' என்று கேள்வி எழுப்பினார் எஸ்.எஸ்.குமரன்.

சேட்டிலைட் சேனல்களின் பிரமாண்ட இசைப் போட்டிகள்பற்றி விவாதித்தார்கள். ''அந்தப் போட்டிகள் நிச்சயம் வரவேற்புக்கு உரியவைதான். ஆனா, அந்த ஷோக்களை முதல் படிக்கட்டா நினைக்கணுமே தவிர, வளர்ற குழந்தைங்க அதிலேயே திறமையின் உச்சத்தை அடைஞ்சுட்டோம்னு நினைச்சு தேங்கிடக் கூடாது'' என்றார் அருள்தேவ்.

''அந்தப் போட்டிகளில் ஜெயிப்பவர்களை உடனே சினிமாவில் பாடவைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. சினிமாவில் பின்னணி பாட டெக்னிக்கலா நிறையக் கத்துக்கணும். அப்படிக் கத்துக்கிட்டு வர்றவங்க மட்டும்தான் ஜெயிக்கிறாங்க'' என்ற சாஜன் மாதவை ஆமோதித்துத் தொடர்கிறார் சதீஷ்.

''ஒரு நிகழ்ச்சியில் போட்டியாளர், எஸ்.பி.பி-கிட்ட 'எப்படி மேடையில சுதி கலையாமப் பாடுறீங்க?’னு கேட்டார். அதிர்ச்சி அடைந்த எஸ்.பி.பி. 'அதைக்கூடக் கத்துக்கலைன்னா, அப்புறம் நான் எப்படி ஒரு பாடகர்னு சொல்லிக்க முடியும்’னு கேட்டார். இப்போ பின்னணி பாடும் கார்த்திக், ஹரிசரண், ரஞ்சித் போன்றவர்கள் இந்த டி.வி. நிகழ்ச்சிகள் மூலமா வந்தாலும் டெக்னிக்கல் அறிவை அப்டேட் பண்ணிக்கிட்டதாலதான் வெற்றியைத் தக்கவெச்சுக்க முடிந்தது'' என்றார் சதீஷ்.

''இன்னொரு விஷயம்... அப்படியான போட்டிகளுக்குப் பாடகர்களை எப்படி நீதிபதிகளா நியமிக்கலாம்? அவங்கள்ல சிலரே ரெக்கார்டிங்ல அவ்வளவு தப்பு பண்ணுவாங்க. அவங்க போட்டியாளர்களின் சின்னச் சின்னத் தப்புகளுக்குக்கூட 'அது சரியில்லை... இது சரியில்லை’னு பெரிசா ரியாக்ட் பண்றப்போ சிரிப்பாவும் வேதனையாவும் இருக்கு. நான்கூட வாய்ப்பு இல்லைன்னா ஜட்ஜா போயிடலாம்னு பார்க்குறேன்'' என்று அதிரடி ஸ்டேட்மென்ட் கொடுக்கிறார் எஸ்.எஸ்.குமரன்.

இசை தவிர, இன்ன பிற ஆர்வங்கள் குறித்துப் பேச்சுத் திரும்பியது. ஓவியம், பைக் சாகசம், நீச்சல் ஆகிய விருப்பங்களுக்கு மத்தியில் விஜய் எபிநேசரின் ஆர்வம் அனைவரையும் நெகிழவைத்தது. 

''பூந்தமல்லியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் நடத்திட்டு இருந்தேன். சென்னையின் குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த 600 குழந்தைகளுக்கு உதவிட்டு வர்றோம். 10 வருஷம் அந்த இல்லத்தைக் கவனிச்சுக்கிட்டு இருந்தேன். இப்போ இசை பக்கம் நான் கவனம் செலுத்த, நண்பர்களும் அன்பர்களும் அதைப் பார்த்துக்கிறாங்க. ஆனா, அடிக்கடி ஓடிப் போய் பார்த்துக்குவேன்'' என்று விஜய் நிறுத்த, உடனே வெடித்தெழுந்தது ஆரவாரக் கைத்தட்டல்!