Thursday, November 17, 2011

திருடிய நகைகளை பாவாடைக்குள் ஒளித்து வைத்த கில்லாடிப் பெண்!


கடையொன்றில் நகைகளை திருடி பாவாடைக்குள் உள்ள இரகசிய பொக்கெட்டுக்களில் மறைத்து வைத்த பெண்ணொருவர் வசமாக மாட்டிக் கொண்டார். 

திருடிய தங்க நகைகளின் பெறுமதி 54000 ஸ்டேர்லிங் பவுண்கள். இவர் நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பெட்டியுடன் சேர்த்தே திருடி பாவடையில் இருந்த நீண்ட பொக்கெட்டுக்களில் மறைத்து வைத்துள்ளார். கண்காணிப்புக் கமரா காட்டிக் கொடுத்தமையால் Saina Sava என்ற குறித்த பெண் வசமாக மாட்டிக் கொண்டார்.




குறித்த பெண் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் ரோமானியா நாட்டைச் சேர்ந்தவராவார். திருடுவதிலும் திருடர்கள் நாளாந்தம் புது புது தொழிநுட்பங்களைக் கையாளுகிறார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டியது எல்லோருமே….

தூக்கில் போட்டால் தற்கொலை செய்வேன் - பெண்ணின் தீரச்செயல்

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக் கோரி காஞ்சிபுரம் பகுதியில் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.

காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த செங்கொடி ( வயது 27) என்பவரே இவ்வாறு தீக்குளித்து இறந்தவராவார்.

மக்கள் மன்றம் இயக்கத்தில் உறுப்பினராக உள்ள இவர், இன்று மாலை காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார்.
இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

செங்கொடி தீக்குளிப்பதற்கு முன்னர் எழுதி வைத்த கடிதம் தற்போது கிடைத்துள்ளது.

21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இந்த விடயத்தில் தலையிட்டு தூக்குத் தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

குடிக்கும் கணவனை அடிக்கும் மனைவிக்கு பரிசு : அமைச்சர் அதிரடி அறிவிப்பு


குடிக்கும் பழக்கம் உள்ள கணவரை, பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து, அவரை அவமானப்படுத்தும் விதத்தில் அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம், 10 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்” என, ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்தார். ஆந்திரா கர்னூல் நகரில், நேற்று முன்தினம் (வெள்ளியன்று) நடந்த விவசாயப் பெண்கள் கருத்தரங்கில், கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: 


பெண்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை, மது குடிக்கும் பழக்கமுள்ள, கணவர்கள் வீணாகச் செலவிடுகின்றனர். கணவர்கள் மது அருந்துவதால், பெண்களின் வருமானம் எல்லாம், சாராயத்திற்குச் சென்று விடுகிறது.மது குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்களை, அவர்களது மனைவியர், இதுபோன்ற பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வந்து, மக்கள் மத்தியில் நிற்க வைத்து, அடிக்க வேண்டும்.

கணவரை அவமானப்படுத்தும் விதத்தில், இப்படி அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு 1,000 ரூபாய்க்கு குறையாமல், 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசாக, அந்த இடத்தில் வழங்கப்படும்.

கணவரை 10 அடி அடிக்கும் பெண்கள், 10 ஆயிரம் ரூபாயை பம்பர் பரிசாக பெற்றுக் கொள்ளலாம். தெலுங்கானா பகுதியில், போராட்டங்கள் தொடர்ந்தாலும், மதுக்கடைகள் மட்டும், முழுவீச்சில் செயல்படுகின்றன. இவ்வாறு, வெங்கடேஷ் கூறினார்
.

FACEBOOK ACCOUNT ஐ HACK செய்து உள்ளே நுழைந்து - அடுத்த வைரசா?


FACEBOOK இல் யாரோ ஒருவர் என்னுடைய போட்டோக்களை வைத்து அசிங்கம் அசிங்கமாக EDIT செய்து அதை மற்ற நண்பர்கள் பார்க்கும் படி செய்கிறார். இதனால் எனக்கு பாரிய பிரச்சினையாக உள்ளது ஆகவே அந்த நபரின் FACE BOOK Account ஐ HACK பண்ணும் வழிமுறைகளை தயவு செய்து எனக்கு கூறவும் .

எனக்கு Facebook account ஐ HACK செய்வது பற்றி எதுவும் தெரியாது என்பதை முதலில் உங்களிடம் கூறிக்கொள்கிறேன் நண்பரே!

உங்களுக்காக Google இல் தேடி பார்த்தேன் ஒரு தளம் கிடைத்தது, அவர்கள் எப்படி Facebook account ஐ Hack செய்வது என்று சொல்லி இருந்தார்கள் வீடியோ மூலம்...அப்படியே அதிர்ச்சி அடைந்து விட்டேன்....நம்மலும் மற்றவர் FB கணக்கை திருடுவோம் என்று . ஆவலுடன் அவசர அவசரமாக அந்த தளத்தில் ஒரு கணக்கு திறந்து நண்பர்களுடைய Facebook ID ஐ கொடுத்து தேடினேன் எல்லா வேலைகளும் முடிந்தது. Password உம் கிடைத்தது encrypt செய்த நிலையில் அதை decrypted செய்ய வேண்டும் என்றால் பணம் தரவேண்டும் என்று சொன்னார்கள்...போங்கடா நீங்களும் உங்கட சேவை என்றும் உதாசீனம் செய்து விட்டு வந்தேன். காரணம் இது உண்மையா? பொய்யா? இவர்கள் பணத்துக்காக பந்தா காட்டுகிறார்களா? என்று தெரியவில்லை தள முகவரி இதோ...http://learntohackv3.com

பேஸ்புக்கில் உங்கள் போட்டோ ஆபாசமாக எடிட் செய்யப்பட்டு வந்தால் என்ன செய்வது?

யார் அதனை செய்தார்களோ அவர்களுக்கு ஒரு எச்சரிச்கை செய்து, அந்த போட்டவை அழித்துவிடச் சொல்லுங்கள்.அந்த நபர் உங்களுக்கு தெரியாவிட்டடால் அல்லது எச்சரிக்கை செய்தும் அந்த நபர் போட்டோவை நீக்கா விட்டால் உடனே அதனை பேஸ்புக் நிறுவனத்துக்கு தெரியப்படுத்துங்கள்.எப்படி செய்வது என்று பார்ப்போம்.குறித்த போட்டோவை திறந்து கொண்டு "Report this photo"




அல்லது போட்டோவிற்கு நேரே இருக்கும் X என்பதை க்ளிக் செய்து

அந்த போட்டோ எந்த மாதிரி உள்ளடக்கத்தை கொண்டுள்ளது என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.






எனக்கு இந்த முறை மட்டும்தான் தெரியும்....உங்களுக்கு வேறு ஏதேனும் முறை தெரியுமா?

தன்னினச் சேர்க்கையாளருக்கு சித்திரவதை – மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி வீடியோ!


தன்னினச் சேர்க்கையாளர் என்கிற காரணத்தால் ஐவரி கோஸ் நாட்டில் பொதுமக்களால் ஆண் ஒருவர் அண்மைய மாதங்களில் சித்திரவதை செய்யப்பட்டு உள்ளார். இக்காட்சிகளை கொண்ட வீடியோ இணைய உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 ஐவரி கோஸில் தன்னினச் சேர்க்கையாளர்களால் கேவலமாக நடத்தப்படுகின்றனர் என்பதற்கு இவ்வீடியோ தக்க சான்று என்று மனித உரிமைகள் அமைப்புக்கள் சீறுகின்றன.

14 வயது சிறுவனுடன் தகாத உறவுகொண்ட பெண்ணுக்கு கொடுத்த தண்டனை!


பதினாலு வயது சிறுவனுடன் பாலியல் உறவுகொண்ட குற்றத்திற்காக அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயது பெண்ணொருவருக்கு 7 வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த என்ஜீ ஜென்கின்ஸ் என்ற பெண்ணுக்கே இத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இணையத்தளத்தில் விளையாடப்படும் ‘வேர்ல்ட் ஒவ் வோர்கிராப்ட்’ எனும் விளையாட்டின் ஊடாக குறித்த சிறுவனுடன் தொடர்பை ஏற்படுத்திய மேற்படி பெண், படிப்படியாக அவனுடனான உறவை வளர்த்துக்கொண்டு சென்றுள்ளார்.


அவர் கடந்த 2010 ஆம் ஆண்டு, காரொன்றினுள் வைத்து குறித்த சிறுவனுடன் பாலியல் உறவுக்கொண்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜென்கின்ஸ் சிறுவர் பாலியல் படங்களை பெற்றுக்கொண்ட குற்றசாட்டையும் கடந்த ஏப்ரல் மாதம் நீதிமன்றில் ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிறுவனுடன் பாலியல் உறவுகொண்ட குற்றத்திற்காக அவருக்கு 87 மாத கால சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் நியூயோர்க்கை சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 4,480 அமெரிக்க டொலர்களை அபராதமாக செலுத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த சிறுவனின் கையடக்கத் தொலைபேசிக்கு வெளிமாநில தொலைபேசி இலக்கத்திலிருந்து ஏராளமான அழைப்புகள் வந்தபோது சிறுவனின் பெற்றோர் அவதானிக்க தொடங்கினர். விசாரணையின்போது ஜென்கின்ஸின் தொலைபேசி இலக்கத்திற்கு அவரின் கோரிக்கையின் பேரில் அச்சிறுவன் அனுப்பிய பாலியல் படங்களையும் புலனாய்வுப்பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

சிறுவனின் தொலைபேசியை அவனின் பெற்றோர் துண்டித்தனர். ஆனாலும் ஜென்கின்ஸ் வேறு வழிகளில் தொடர்புகொண்டதுடன் அவனுக்காக புதிய தொலைபேசியையும் வாங்கிக் கொடுத்திருந்தார். ஜென்கின்ஸை உளவியல் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவுப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொது இடங்களில் ஆடைகளை அவிழ்க்கும் யுவதிகள்!! (படங்கள் இணைப்பு)


சீன நாட்டு இளம் யுவதிகள் மத்தியில் மிக வித்தியாசமான பேஷன் ஒன்று அதிவேகமாக பரவி வருகின்றது. பொதுப் பயணங்களின்போது பகிரங்கமாக ஆடைகளை களைந்து மாற்று ஆடைகளை உடுக்கின்றமையே இவர்களின் புதிய பேஷன். இணையங்களின் செல்வாக்கே இதற்கு காரணம் ஆகும். இணையங்கள் மூலம் குறுகிய நாட்களில் அதிக பிரசித்தியைப் பெறுகின்றமைக்காகவே இவ்விதம் நடக்கின்றனர்.