Tuesday, April 5, 2011

அந்தரங்கத் தகவல்களைத் திருடும் Malware.


மின் அஞ்சலுடன் இணைந்து வரும் கோப்புகளை Anti Virus கொண்டு சோதனை செய்த பிறகே அவற்றைத் திறக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். இது இணையத்தில் நீங்கள் தரவிறக்கம் செய்யும் எல்லா கோப்புக்கும் பொருந்தும். அதுவும், "இலவச தரவிறக்க வசதி" என்று விளம்பரப்படுத்தும் தளங்களில் இன்னும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

Software எனப்படும் மென்பொருட்கள்தாம் நம் கணினியை இயக்கி வருகின்றன. MS Office ல் இருக்கும் Word, Excel, Power point ஐ தெரியாதவர்கள் இருக்க முடியாது. கணினியே கதி என்று இருப்பவர்கள் பயன்படுத்தும் மென்பொருட்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். Flash, silverlight, photoshop, Visual Basic, Oracle, என்று சொல்லிக்கொண்டே போகலாம். எண்ணிக்கையில் அடங்காது. உங்களை இணையத்தில் சஞ்சரிக்கச் செய்வதும் இந்த மென்பொருட்களே. இப்படி நம்மை ஆட்டிப்படைக்கும் மென்பொருட்களை உருவாக்குவது மனித மூளையே. உயிர் காக்கும் பென்சிலின் ஆகட்டும், தலைமுறைகளை முடமாக்கின அணுகுண்டு ஆகட்டும் இரண்டுக்குமே மூல காரணம் இந்த மூளைதான்.
கணினிதுறையிலும் இந்த வாதம் பொருந்தும். நாம் தினம் உபயோகிக்கும் மென்பொருட்களை தயாரிப்பவர்கள் ஒரு பக்கம் இருக்க, நம்மை தொந்தரவு செய்யவே சிலர் மென்பொருள் தயாரித்து வெளியிடுவார்கள். இந்த மாதிரி (தீய) நோக்கத்துடன் வெளியிடப்படும் மென்பொருட்களைத் தான் Malware என்று சொல்கிறோம்
1. Malware என்றால் என்ன ?
தீங்கு செய்யும் நோக்கத்துடன் படைக்கப்பட்ட மென்பொருள் Malware என அழைக்கப்படும். உங்கள் அனுமதி இல்லாமல், உங்கள் கணினியிலிருந்து தகவல்களைச் சேகரிக்கவோ அழிக்கவோ பிறருக்கு அனுப்பவோ செய்வது இதன் வேலையாகும். தரவிறக்கம் செய்யப்படும் கோப்புகளில் பதுங்கி உங்கள் கணினியில் வந்திறங்கும்.
2. Spyware என்றால் என்ன ?

உங்கள் கணினியில் உளவாளியைப் போல் பதுங்கி இருக்கும். உங்களது நடவடிக்கையை கூர்ந்து கவனித்து உங்களுக்கு தெரியாமலேயே தன் எசமானுக்குத் தகவல்களை அனுப்பும். உதா: எம்மாதிரியான தளங்களை நீங்கள் அதிகம் பார்வையிடுகிறீர்கள், அத்தளங்களில் நீங்கள் பயன்படுத்தும் கடவுச்சொல் (password), Credit card Number, Bank account Number போன்ற தகவல்களைச் சேகரிக்கும். Spyware இன் ஆதிக்கம் இருக்கும் கணினியில் வேகம் குறைவது, வழக்கத்துக்கு அதிகமான, தொடர்பேயில்லாத Pop up வருவது, ஓர் இணையமுகவரியைத் தட்டினால் தானாகவே வேறு முகவரிக்குப் போவது போன்ற புதிரான நடவடிக்கைகளைக் காணலாம்.
3. Adware என்றால் என்ன ?
இது நம் வீட்டுத் திண்ணையிலே கிடக்கும் பிட்-நோட்டீஸ் மாதிரி. அதாவது தானாகவே விளம்பரங்கள் வந்து குவியும். அதிலும் முக்கியமாக, விளம்பரங்களில் தட்டினால் விற்கப்படும் பொருளுக்கு 50% - 70% தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கும். இம்மாதிரி நடந்துகொள்ளும் மென்பொருட்கள் Adware என அழைக்கப்படும். பூட்டிக்கிடக்கும் வீட்டில் பிட்-நோட்டீஸ் குவிந்து கிடப்பது போல, முறையே கணினியைச் சுத்தம் செய்யாவிட்டால், இம்மாதிரி Adwares இன் தாக்கமும் அதிகரிக்கும்.
4. Phishing என்றால் என்ன ?
Fishing என்றால் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது, Phising என்றால், தூண்டில் போட்டுத் தகவல்களை உங்களிடமிருந்தே பெறுவது. உண்மையான வர்த்தகத் தளங்களைப் போலவே வடிவமைக்கப்பட்ட போலிதளங்கள்தாம் இம்மாதிரி முறைகேடான செயல்களின் அரங்கம்.
உதா: - உண்மையான ICICI வங்கியின் முகப்பு முகவரிhttp://www.icicibank.com/. இதே ICICI வங்கியின் Login தளமுகவரிhttps://infinity.icicibank.co.in என்று துவங்கும். கவனிக்க வேண்டியது முகவரியை மட்டுமன்று, முகவரிக்கு முன்னால் வரும் HTTP - HTTPS என்பதைத்தான். காரணம், திடீரென்று உங்களுக்கு " ICICI Bank" இலிருந்து வந்தது போல் தொற்றுவிக்கும் ஒரு கடிதம் வரும்.
" எங்களது வங்கியில் / தளத்தில் சில தொழில்நுட்ப மாற்றங்கள் செய்கிறோம். அதன் காரணமாக உங்கள் பயணர் கணக்கைப் பாதுகாத்துக்கொள்ள கீழே இருக்கும் சுட்டியில் வங்கிக் கணக்கு எண் – கடவுச்சொல் – விலாசம் – credit card number போன்ற தகவல்களைத் தந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்."
உண்மையான வங்கியிலிருந்து வந்தது போல் தோன்றும் இந்த அஞ்சலில் இருக்கும் சுட்டியைச் சொடுக்கினால், ICICI வங்கியின் தளத்தைப்போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் தளம் உங்களை வரவேற்க்கும். கூர்ந்து கவனித்தால், தள முகவரியில் HTTPS க்கு பதில் HTTP என்று இருக்கும்.
HTTPS – Hyper Text Transfer Protocol Secure
HTTP – Hyper Text Transfer Protocol
Secure " என்பது இல்லாத தளங்களில் எக்காரணம் கொண்டும் உங்கள் Credit card தகவல்களை அல்லது Banking மற்றும் அந்தரங்கத் தகவல்களை அளிப்பதைத் தவிர்க்கவும். ஒரு முறை உங்கள் கடவுச்சொல் மற்றும் கணக்கு எண் கைமாறிவிட்டால், என்ன நடக்கும் என்பதை விவரிக்க முடியாது.
இம்மாதிரி வரும் அஞ்சல்களை எக்காரணம் கொண்டும் நம்பி விடாதீர்கள். நேரடியாக தொடர்புடைய அலுவலகம் செல்ல முடியுமென்றால், சிரமம் பார்க்காமல் போய் சந்தேகத்தைத் தெளிவுபடுத்தவும். இது முடியாத பட்சத்தில், சம்பந்தபட்ட HTTPS தளத்துக்குச் சென்று, உதவிப் பக்கத்தில் இருக்கும் தொலைபேசி எண் அல்லது Instant Messenger ID இருந்தால், நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். இதுவும் இல்லையென்றால், Contact Customer support என்பதைச் சொடுக்கி மேற்படி விவரங்கள் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல்


வகுப்பில் உள்ள கணினியில் பென் டிரைவை உபயோகித்துவிட்டு பின்னர் வீட்டிலோ வேறு கணினியிலோ இணைத்து திறந்து பார்த்தால் சில சமயம் உள்ளே ஒன்னும் இருக்காது. Shoe hidden Files இனை ஆக்டிவ் பண்ணியிருப்பினும் வேலைக்காவாது. சில malicious களின் வேலையிது. இதிலிருந்து format பண்ணமுதலில் கோப்புகளை மீளப்பெறவேண்டுமல்லவா? அதற்கத்தான் இந்த வழிமுறை.

1. பென் டிரைவை இணைத்து drive letter இனை குறித்துக்கொள்ளுங்கள். உதா- J:
2. Windows + R ன் மூலமோ வேறு வழியிலோ விண்டோஸ் ரன் கட்டளையை செயல்படுத்தவும். அங்கு cmd என டைப் செய்து என்டராக்கவும்.
3. command Window வந்ததும் இந்த command இனை செயல்படுத்தவும்.
attrib -s -h -r f:/*.* /s /d
இங்கு f: வருமிடத்தில் Thumbdrive ன் drive letter வரும்.
அவ்வளவே.
backup ன் பின்னர் தேவையெனில் format பண்ணலாம்.

உங்கள் கணினியின் வேகத்தை கூட்ட – CCleaner.



image
உங்கள் கணினியில் உள்ள தேவையில்லாத, கோப்புக்களை நீக்கி கணினி வேகமாக செயல்பட உதவும் மென்பொருள் இது. மேலும் இதனால் உங்கள் கணினியின் Hard disk space குறையும். இவ்வாறு தேவையில்லாத கோப்புகளை நீக்குவதால் வைரஸ், மால்வேர் (Malware) இருந்து தப்பிக்கலாம். இன்னும் நீங்கள் இண்டெர்நெட் உபயோகித்தால், அதிலிருந்ந்து வரும் வைரஸ்களையும் இந்த ccleaner கட்டுப்படுத்தும்.

உங்கள் கணினியில் தேவையில்லாத கோப்புகள்:
Internet Explorer
Temporary files, history, cookies, Autocomplete form history, index.dat.
 Firefox
Temporary files, history, cookies, download history, form history.
 Google Chrome
Temporary files, history, cookies, download history, form history.
 Opera
Temporary files, history, cookies.
 Safari

Temporary files, history, cookies, form history.
 Windows
Recycle Bin, Recent Documents, Temporary files and Log files.
 Registry cleaner
Advanced features to remove unused and old entries, including File Extensions, ActiveX Controls, ClassIDs, ProgIDs, Uninstallers, Shared DLLs, Fonts, Help Files, Application Paths, Icons, Invalid Shortcuts and more... also comes with a comprehensive backup feature.
 Third-party applications
Removes temp files and recent file lists (MRUs) from many apps including Media Player, eMule, Kazaa, Google Toolbar, Netscape, Microsoft Office, Nero, Adobe Acrobat, WinRAR, WinAce, WinZip and many more...
 100% Spyware FREE
This software does NOT contain any Spyware, Adware or Viruses.

இவை அனைத்தையும் CCleaner நீக்கி உங்கள் கணினியின் வேகத்தை கூட்டும்.

மேலும், விவரங்களுக்கு.,
இதை சொடுக்கவும்

இலவச பதிவிறக்கம்:
இணைப்பு

குறிப்பு:
உங்களுடைய கருத்துக்களை இடவும். உங்களுக்கு தேவையாண மென்பொருளை குறிப்பிடவும், என்னால் முடிந்தால் Full Version எடுத்து தருகிறேன்.

ட்ரைவ் ஒன்றை மறைப்பது எப்படி?




முக்கியமான தகவல்களை ஏனையோர் அணுகாமல் பாதுகாக்க விரும்புவோர்க்கு இது மிகவும் பயனுள்ள ஒரு குறிப்பு விண்டோஸ் இயங்கு தளத்தில் போல்டர்களை மறைத்து (Hide) வைக்கும் முறையை நீங்கள் அறிந்திருக்கலாம். போல்டர்களை மறைத்து வைப்பது போன்று கணினியிலுள்ள டரைவ்களையும் மறைத்து வைக்க முடியும். விண்டோஸில் இயங்கு தளம் மூலம் கணினியிலுள்ள எந்த ஒரு ட்ரைவையும் அடுத்த பயனர்களின் பார்வையிலிருந்து மறைத்து விடலாம். இதன் மூலம் உங்கள் அந்தரங்க தகவல்களுக்கு ஒரு பாதுகாப்புக கிடைக்கிறது. ஒரே நேரத்தில் எல்லா ட்ரைவ்களையுமோ அல்லது குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரமோ மறைத்து வைக்கலாம். அதற்கு நீங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் சிறிய மாற்றத்தைச் செய்து விட்டால் போதுமானது.

முதலில் விண்டோஸில் அட்மினிஸ்ட்ரேட்டராக லொக்-ஓன் செய்து கொள்ளுங்கள். அடுத்து ரன் (Run) பொக்ஸில் regedit என டைப் செய்து ஓகே சொல்லுங்கள். திறக்கும் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவில் கீழே காட்டப்பட்டுள்ள இடத்தை அணுகுங்கள்.

HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion \Policies\Explorer

இங்கு இறுதியாக Explorer ல் க்ளிக் செய்யுங்கள். அடுத்து விண்டோவின் வலப்புறம் ரைட் க்ளிக் செய்து புதிதாக NoDrives எனும் பெயரில் DWORD பெறுனமானத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். கணினியிலுள்ள ட்ரைவ் அனைத்தையும் மறைப்பதாயின் அதன் Value Data வாக 3FFFFFF எனும் பெறுமானத்தை வழங்குங்கள்.

அதேபோன்று குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரம் மறைப்பதாயின் அதாவது A, B, C, D, E, F, G, H என ஆங்கில் எழுத்துக்கள் மூலம் குறிக்கப்படும் ட்ரைவ்களை மறைக்க 2, 4, 8, 16, 32, 64, 128 எனும் ஒழுங்கில் வழங்குங்கள். உதாரணமாக F ட்ரைவை மறைத்து வைக்க வேண்டுமாயின் 32 எனும் இலக்கத்தை Value Data வாக வழங்க வேண்டும்.

அடுத்து ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவை மூடி விட்டு கணினியை மறுபடி இயக்க நீங்கள் மறைத்து வைத்த ட்ரைவை மை கம்பியூடர் விண்டோவில் பார்க்க முடியாது. மீண்டும் அதனைக் காண்பிக்க வேண்டுமானால் மேற் சொன்ன இதே வழியில் சென்று புதிதாக உருவாக்கிய DWORD பெறுமானத்தை அழித்து விட்டு கணினியை மறுபடி இயக்க வேண்டும்.



ஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க…

 
முதலில் பார்டிசன் என்றால் என்ன என்பதை பார்ப்போம். கணினியில் உள்ள ஹார்ட்டிஸ்க் பெரிய கொள்ளளவில் வரும் போது அதனை நம் வசதிக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் பல பகுதிகளாக பிரித்து கொள்ளலாம்.
அதுதான் பாடிசன் எனப்படுகிறது. புரியும் படி சொல்ல வேண்டுமெனில் கணினியில் ஹார்ட்டிஸ்க் 80GB அளவுள்ளதாக கொள்வோம். அதனை நம் பயன்பாட்டுக்கு C: - 20GB , D: - 30GB , E: - 30GB என்று வேண்டிய அளவுகளில் பிரித்து கொள்ளலாம். உபயோகிக்கும் போது C: - இயங்குதளம் , D: - மென்பொருள்கள் , E: - பாடல்கள் , வீடியோ என்று சேமித்து விருப்பப்படி உபயோகித்து கொள்ளலாம்.

பெரும்பாலும் இவை நீங்கள் கணினி வாங்கும் போதே செய்யப்பட்டு வந்து விடும். இதில் எனக்கு ஒரு பிரச்சினை தோன்றியது. C: -ல் 20GB மட்டும் இருந்ததால் நிறுவும் மென்பொருள்களால் நிறைந்து நாளடைவில் Disk is full என்று வந்து விட்டது. D: -ல் அதிகமான இடம் இருந்தாலும் அதனை C: -க்கு நகர்த்துவது கடினமான காரியம்.

இது போன்ற தருணங்களில் முன்பு FDISK எனும் DOS டூலை உபயோகித்து வந்தேன். மொத்த ஹார்ட்டிஸ்க்கையும் திரும்ப பிரித்து C: அதிகமாகவும் D: , E: அளவு குறைவாகவும் நிறுவ வேண்டி இருந்தது. இந்த டூலை உபயோகிக்கும் போது ஹார்ட்டிஸ்க்கில் இருந்த அனைத்து தகவல்களும் அழிந்து விடும். மீண்டும் format செய்து புதியது போல் இயங்குதளம் நிறுவி உபயோக படுத்த வேண்டி இருக்கும். :(
ஆனால் Easeus Partition Master மென்பொருளை அறிந்து கொண்ட பிறகு இந்த வேலை மிக எளிதாயிற்று. இதன் மூலம் எளிய வழி முறைகள் மூலம் பார்டிசன் அளவுகளை கூட்டலாம் / குறைக்கலாம். பார்டிசன்களை அப்படியே காப்பி செய்து கொள்ளலாம். புதிய பாடிசன்களை உருவாக்கலாம். பார்டிசன்களை நீக்கலாம். ஏற்கனவே உள்ள பார்டிசன்களை இரண்டாக பிரிக்கலாம். மேலும் பல வசதிகள் உள்ளன. பார்டிசன்களை Format செய்து கொள்ளலாம்.

இவை அனைத்தையும் உங்கள் ஹார்ட்டிஸ்கில் எவ்வித தகவல் இழப்பும் (Data Loss) இன்றி செய்ய முடியும். இந்த மென்பொருள் இல்ல பயனர்களுக்கு (Home Use) முற்றிலும் இலவசம். இதனை இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இது விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 இயங்குதளங்களில் இயங்கும்.

மேலும் ஸ்க்ரீன்ஷாட்கள் .இத்தனை உபயோகித்து உங்கள் ஹார்ட்டிஸ்க் பார்டிசன்களில் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து கொள்ளுங்கள். மாற்றங்கள் செய்த பின்பு மாற்றங்கள் சேமிக்கப்பட்டு உங்கள் கணினியை மீண்டும் துவக்க (Restart) சொல்லும். கணினி மீண்டும் துவங்க ஆரம்பிக்கும் போது நீங்கள் செய்த மாற்றங்கள் செயல்படுத்த படும்.

முக்கிய குறிப்பு : சோதித்து பார்க்கும் போது உங்கள் கணினியில் ஏதேனும் முக்கியகோப்புகள் / தகவல்கள் இருந்தால் அவற்றை USB டிரைவிலோ, DVD யிலோBackup எடுத்து கொள்ளவும். நீங்கள் தெரியாமல் ஏதேனும் தவறுகள் செய்ததால்தகவல்களை இழக்க நேரிடலாம்.

கணினி முன் அமரும் போது கவனிக்க வேண்டியவை.



image

உலகின் அதிவேக மீக் கணிப்பொறி (Super Computer) – Road Runner.





                                     முழு ஆல்பத்தைக் காணவும்



சூப்பர் கணினிகளை உருவாக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த அமெரிக்கா, சமீபத்தில் வினாடிக்கு 1000 ட்ரில்லியன் கணக்கீடுகளை நிகழ்த்தும் அரிய சூப்பர் கணினியை அறிமுகம் செய்துள்ளது.
லாஸ் அலமாஸ் தேசிய பரிசோதனைக் கூடமும், ஐ.பி.எம். நிறுவனமும் இணைந்து இந்தக் கணினியை உருவாக்கியுள்ளன. `ரோட் ரன்னர்' என்று அழைக்கப்படும் இந்த கணினி 100 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஐபிஎம் இதற்கு முன் உருவாக்கிய அதிவேக கணினியான ப்ளூ ஜீன் சிஸ்டத்தைக் காட்டிலும் இது, இருமடங்கு வேகமாக செயல்படும். இந்தக் கணினியை அணு ஆயுதப் பராமரிப்பு, மற்றும் அணுகுண்டு வெடிப்பு பிம்ப மாதிரிகளை உருவாக்க பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெறும் அணு ஆயுதப் பராமரிப்பு பணி மட்டுமல்லாது இந்த கணினி சிவில் எஞ்சினியரிங், மருத்துவம், விஞ்ஞானம், இயற்கை எரிபொருள் உருவாக்கம், எரிபொருளை மிச்சப்படுத்தும் போக்குவரத்து வாகனங்களை வடிவமைத்தல், மருத்துவ சிகிச்சை, மற்றும் நிதித்துறை சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட பல பயன்பாடுகளுக்காகவும் இந்த சூப்பர் கணினியைப் பயன்படுத்தலாம் என்று அமெரிக்க தேசிய அணு பாதுகாப்பு நிர்வாக தலைவர் தாமஸ் அகஸ்டினோ தெரிவித்துள்ளார்.

இந்தக் கணினியின் வேகத்தை எளிதாக விளக்க வேண்டுமென்றால், 6 பில்லியன் மக்கள் 24 மணி நேரமும் தங்களது சொந்தக் கணினிகளில் செய்யும் வேலைகள் அனைத்தையும் இந்த ரோட் ரன்னர் சூப்பர் கணினி ஒரே நாளில் தனியாக செய்து முடித்து விடும்.

இந்தக் கணினியை உருவாக்க சுமார் 6 ஆண்டுகள் பல விஞ்ஞானிகள் மண்டையை உடைத்து இறுதியில் உருவாக்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கணினியை இணைக்கும் அமைப்பு 6000 சதுர அடி இடத்தை நிரப்பியுள்ளது. 5 லட்சம் பவுண்டுகள் எடையுள்ள 57 மைல்களுக்கு ஃபைபர் ஆப்டிகல் போடப்பட்டுள்ளது. இந்த கணினியில் 6948 டியூயெல் கோர் கணினி சிப்கள் உள்ளன. 12,960 செல் எஞ்சின்களுடன் 80 டெராபைட்டுகள் மெமரியைக் கொண்டுள்ளது.

சூப்பர் கணினிகள் இயங்கும் வேகத்தை "ஃப்ளாப்" என்று அழைப்பர். அதாவது ஃப்ளோட்டிங் பாயிண்ட் ஆபரேஷன்ஸ் (வினாடிக்கு) என்பதன் சுருக்கமே ஃபிளாப் ஆகும். இந்தக் கணினியின் செயல் திறன் வேகம் "பெட்டாஃபிளாப்" (Petaflop) என்று அழைக்கப்படுகிறது. அதாவது 1000 ட்ரில்லியன் செயல்களை ஒரு வினாடியில் நிகழ்த்த முடிவது என்பதைத்தான் "பெட்டாஃபிளாப்" என்று அழைக்கின்றனர்.

மே மாதம் 25-ம் தேதி இந்தக் கணினியை சோதனை செய்ததில் 1000 ட்ரில்லியன் பணிகளை சீராகவும் வெற்றிகரமாகவும் நிறைவேற்றியது இந்த ரோட் ரன்னர் கணினி.

இக் கணினியின் வடிவம்: (Configuration)

Architecture:

12,960 IBM PowerXCell 8i CPUs, 6,480 AMD Opteron dual-core processors, Infiniband, Linux

Power: 2.35 MW

Space: 296 racks, 560 m2 (6,000 sq ft)

Memory: 103.6 TiB

Speed: 1.71 petaflops (peak)

Cost: US$133M (Rs.6,65,00,00,000…)