Tuesday, April 5, 2011

ஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க…

 
முதலில் பார்டிசன் என்றால் என்ன என்பதை பார்ப்போம். கணினியில் உள்ள ஹார்ட்டிஸ்க் பெரிய கொள்ளளவில் வரும் போது அதனை நம் வசதிக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் பல பகுதிகளாக பிரித்து கொள்ளலாம்.
அதுதான் பாடிசன் எனப்படுகிறது. புரியும் படி சொல்ல வேண்டுமெனில் கணினியில் ஹார்ட்டிஸ்க் 80GB அளவுள்ளதாக கொள்வோம். அதனை நம் பயன்பாட்டுக்கு C: - 20GB , D: - 30GB , E: - 30GB என்று வேண்டிய அளவுகளில் பிரித்து கொள்ளலாம். உபயோகிக்கும் போது C: - இயங்குதளம் , D: - மென்பொருள்கள் , E: - பாடல்கள் , வீடியோ என்று சேமித்து விருப்பப்படி உபயோகித்து கொள்ளலாம்.

பெரும்பாலும் இவை நீங்கள் கணினி வாங்கும் போதே செய்யப்பட்டு வந்து விடும். இதில் எனக்கு ஒரு பிரச்சினை தோன்றியது. C: -ல் 20GB மட்டும் இருந்ததால் நிறுவும் மென்பொருள்களால் நிறைந்து நாளடைவில் Disk is full என்று வந்து விட்டது. D: -ல் அதிகமான இடம் இருந்தாலும் அதனை C: -க்கு நகர்த்துவது கடினமான காரியம்.

இது போன்ற தருணங்களில் முன்பு FDISK எனும் DOS டூலை உபயோகித்து வந்தேன். மொத்த ஹார்ட்டிஸ்க்கையும் திரும்ப பிரித்து C: அதிகமாகவும் D: , E: அளவு குறைவாகவும் நிறுவ வேண்டி இருந்தது. இந்த டூலை உபயோகிக்கும் போது ஹார்ட்டிஸ்க்கில் இருந்த அனைத்து தகவல்களும் அழிந்து விடும். மீண்டும் format செய்து புதியது போல் இயங்குதளம் நிறுவி உபயோக படுத்த வேண்டி இருக்கும். :(
ஆனால் Easeus Partition Master மென்பொருளை அறிந்து கொண்ட பிறகு இந்த வேலை மிக எளிதாயிற்று. இதன் மூலம் எளிய வழி முறைகள் மூலம் பார்டிசன் அளவுகளை கூட்டலாம் / குறைக்கலாம். பார்டிசன்களை அப்படியே காப்பி செய்து கொள்ளலாம். புதிய பாடிசன்களை உருவாக்கலாம். பார்டிசன்களை நீக்கலாம். ஏற்கனவே உள்ள பார்டிசன்களை இரண்டாக பிரிக்கலாம். மேலும் பல வசதிகள் உள்ளன. பார்டிசன்களை Format செய்து கொள்ளலாம்.

இவை அனைத்தையும் உங்கள் ஹார்ட்டிஸ்கில் எவ்வித தகவல் இழப்பும் (Data Loss) இன்றி செய்ய முடியும். இந்த மென்பொருள் இல்ல பயனர்களுக்கு (Home Use) முற்றிலும் இலவசம். இதனை இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இது விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 இயங்குதளங்களில் இயங்கும்.

மேலும் ஸ்க்ரீன்ஷாட்கள் .இத்தனை உபயோகித்து உங்கள் ஹார்ட்டிஸ்க் பார்டிசன்களில் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து கொள்ளுங்கள். மாற்றங்கள் செய்த பின்பு மாற்றங்கள் சேமிக்கப்பட்டு உங்கள் கணினியை மீண்டும் துவக்க (Restart) சொல்லும். கணினி மீண்டும் துவங்க ஆரம்பிக்கும் போது நீங்கள் செய்த மாற்றங்கள் செயல்படுத்த படும்.

முக்கிய குறிப்பு : சோதித்து பார்க்கும் போது உங்கள் கணினியில் ஏதேனும் முக்கியகோப்புகள் / தகவல்கள் இருந்தால் அவற்றை USB டிரைவிலோ, DVD யிலோBackup எடுத்து கொள்ளவும். நீங்கள் தெரியாமல் ஏதேனும் தவறுகள் செய்ததால்தகவல்களை இழக்க நேரிடலாம்.

கணினி முன் அமரும் போது கவனிக்க வேண்டியவை.



image

உலகின் அதிவேக மீக் கணிப்பொறி (Super Computer) – Road Runner.





                                     முழு ஆல்பத்தைக் காணவும்



சூப்பர் கணினிகளை உருவாக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த அமெரிக்கா, சமீபத்தில் வினாடிக்கு 1000 ட்ரில்லியன் கணக்கீடுகளை நிகழ்த்தும் அரிய சூப்பர் கணினியை அறிமுகம் செய்துள்ளது.
லாஸ் அலமாஸ் தேசிய பரிசோதனைக் கூடமும், ஐ.பி.எம். நிறுவனமும் இணைந்து இந்தக் கணினியை உருவாக்கியுள்ளன. `ரோட் ரன்னர்' என்று அழைக்கப்படும் இந்த கணினி 100 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஐபிஎம் இதற்கு முன் உருவாக்கிய அதிவேக கணினியான ப்ளூ ஜீன் சிஸ்டத்தைக் காட்டிலும் இது, இருமடங்கு வேகமாக செயல்படும். இந்தக் கணினியை அணு ஆயுதப் பராமரிப்பு, மற்றும் அணுகுண்டு வெடிப்பு பிம்ப மாதிரிகளை உருவாக்க பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெறும் அணு ஆயுதப் பராமரிப்பு பணி மட்டுமல்லாது இந்த கணினி சிவில் எஞ்சினியரிங், மருத்துவம், விஞ்ஞானம், இயற்கை எரிபொருள் உருவாக்கம், எரிபொருளை மிச்சப்படுத்தும் போக்குவரத்து வாகனங்களை வடிவமைத்தல், மருத்துவ சிகிச்சை, மற்றும் நிதித்துறை சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட பல பயன்பாடுகளுக்காகவும் இந்த சூப்பர் கணினியைப் பயன்படுத்தலாம் என்று அமெரிக்க தேசிய அணு பாதுகாப்பு நிர்வாக தலைவர் தாமஸ் அகஸ்டினோ தெரிவித்துள்ளார்.

இந்தக் கணினியின் வேகத்தை எளிதாக விளக்க வேண்டுமென்றால், 6 பில்லியன் மக்கள் 24 மணி நேரமும் தங்களது சொந்தக் கணினிகளில் செய்யும் வேலைகள் அனைத்தையும் இந்த ரோட் ரன்னர் சூப்பர் கணினி ஒரே நாளில் தனியாக செய்து முடித்து விடும்.

இந்தக் கணினியை உருவாக்க சுமார் 6 ஆண்டுகள் பல விஞ்ஞானிகள் மண்டையை உடைத்து இறுதியில் உருவாக்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கணினியை இணைக்கும் அமைப்பு 6000 சதுர அடி இடத்தை நிரப்பியுள்ளது. 5 லட்சம் பவுண்டுகள் எடையுள்ள 57 மைல்களுக்கு ஃபைபர் ஆப்டிகல் போடப்பட்டுள்ளது. இந்த கணினியில் 6948 டியூயெல் கோர் கணினி சிப்கள் உள்ளன. 12,960 செல் எஞ்சின்களுடன் 80 டெராபைட்டுகள் மெமரியைக் கொண்டுள்ளது.

சூப்பர் கணினிகள் இயங்கும் வேகத்தை "ஃப்ளாப்" என்று அழைப்பர். அதாவது ஃப்ளோட்டிங் பாயிண்ட் ஆபரேஷன்ஸ் (வினாடிக்கு) என்பதன் சுருக்கமே ஃபிளாப் ஆகும். இந்தக் கணினியின் செயல் திறன் வேகம் "பெட்டாஃபிளாப்" (Petaflop) என்று அழைக்கப்படுகிறது. அதாவது 1000 ட்ரில்லியன் செயல்களை ஒரு வினாடியில் நிகழ்த்த முடிவது என்பதைத்தான் "பெட்டாஃபிளாப்" என்று அழைக்கின்றனர்.

மே மாதம் 25-ம் தேதி இந்தக் கணினியை சோதனை செய்ததில் 1000 ட்ரில்லியன் பணிகளை சீராகவும் வெற்றிகரமாகவும் நிறைவேற்றியது இந்த ரோட் ரன்னர் கணினி.

இக் கணினியின் வடிவம்: (Configuration)

Architecture:

12,960 IBM PowerXCell 8i CPUs, 6,480 AMD Opteron dual-core processors, Infiniband, Linux

Power: 2.35 MW

Space: 296 racks, 560 m2 (6,000 sq ft)

Memory: 103.6 TiB

Speed: 1.71 petaflops (peak)

Cost: US$133M (Rs.6,65,00,00,000…)

Monday, April 4, 2011

DVD படத்தை வெட்டியெடுக்க


DVD Cutter என்பது ஒரு எளிய சிறிய மென்பொருள். ஒரு DVD யில் ஏற்றப்பட்டுள்ள படக் கோப்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் நமது கணினியில் பதிவு செய்வதற்கு இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.
DVD Cutter மூலம் ஒரு .VOB கோப்பின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுத்து தனியாகப் பதிவு செய்திட இயலும். ஒரு திரைப்படத்தில் இருந்து குறிப்பிட்ட நகைச்சுவைக் காட்சியையோ, அழகான காதல் காட்சியையோ, நகைச்சுவையையோ கணினியில் பதிவு செய்வதற்கு இந்த மென்பொருள் உதவும்.
 

கணினியில் என்ன நடக்கிறது?

உங்கள் கணினியில் விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்துவீர்கள் எனில் இந்தப் பதிவு உங்களுக்காகவே!

விண்டோஸ் இயங்குதளத்தில் (OS) என்ன நடந்துகொண்டு இருக்கிறது?

என்னென்ன செயல் (Process) கணினியில் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது?

ஒவ்வொரு செயலுக்குப் பின்னனியில் இருக்கும் மர்மம் என்ன?

எவ்வளவு நினைவகம் (Memory) ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது?

Micro Processorன் உபயோகம் எந்த அளவுக்கு உள்ளது?

எந்தெந்த dll கோப்புகள் தற்சமயம் உபயோகத்தில் உள்ளன?

எந்தெந்த IP முகவரியுடன் உங்கள் கணினி தற்போது இணைப்புடன் உள்ளது?

உங்கள் கணினியுடன் இணைந்துள்ள தொலைவில் உள்ள கணினிகளின் (Remote PC) IP முகவரிகள்?

தற்சமயம் ஓடிக்கொண்டிருக்கும் சேவைகளும், நிறுத்தப்பட்ட சேவைகளும் யாவை?

விண்டோஸ் ஆரம்பிக்கும்போது(Startup) எந்தெந்த செயல்களும் சேர்ந்து (Auto-start) ஆரம்பிக்கின்றன?

இயங்குதளத்தின் version, பயனர் பெயர் (User name), நினைவகக் கொள்ளளவு, Processor ஆகிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்துகொள்வது எப்படி?

இது போன்ற பல வினாக்களுக்கு உரிய விடைகளை அறிய ஒரு இலவச மென்பொருள் இங்கே

What's Running is a product that gives you an inside look into your Windows 2000/XP/2003 system.

Explore processes, services, modules, IP-connections, drivers and much more through a simple to use application. Find out important information such as what modules are involved in a specific process.

Control your system by starting and stopping services and processes. Configure your startup programs easily.

சாதாரணமாக Task Manager காட்டாத பல செய்திகளை இந்த மென்பொருள் காட்டிக் கொடுக்கின்றது. இதனால் ஏதேனும் virus பின்னணியில் இயங்குகின்றதா? Registry மூலம் தானாக இயங்கும் மென்பொருட்கள் எவை? IP தொடர்புகள் எத்தனை உள்ளது? போன்ற பல System தொடர்பான தகவல்களைப் பெறுவதுடன், உங்களால் எளிதில் அவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியும்.

இது தனிப்பட்ட உபயோகத்திற்கு இலவசம் (Free for non commercial / personal use) ஆகும்.

ஆக மொத்தத்தில் கணினியை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய நினைப்பவர்களுக்கு மிகவும் தேவையான மென்பொருள்!

சுட்டி இதோ :

http://www.whatsrunning.net/whatsrunning/download.aspx


பழுதடைந்த CD / DVD களை இயக்க


மென்பொருள் உலகில் தகவல்களைப் பராமரிப்பதற்கு அடிக்கடி நகல் எடுத்துவைத்துப் பயன்படுத்துகிறோம். அப்படி நகல் எடுத்து வைப்பதற்கும், படி எடுப்பதற்கும் CD / DVD களைப் பயன்படுத்துகிறோம். குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு அவற்றில் பழுதேற்பட்டு 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட CD / DVD களைப் பயன்படுத்த இயலாத நிலைமை ஏற்பட்டுவிடுகிறது. கணினியில் இவற்றை இயக்கிப் பார்க்கவும் இயலாமல் போகிவிடுகிறது.
 

பைல்களைச் சுருக்கும் Zip Folder


இணையத்திலிருந்து அடிக்கடி பைல்கள் மற்றும் மென்பொருள்களை பதிவிறக்கம் செய்பவரா நீங்கள்? அப்படியானால் ஸிப் பைல்கள் பற்றி நிச்சயம் அறிந்திருப்\ர்கள். இந்த பைல்களைச் சுருக்கும் முறையானது இணைய பயனர்களுக்கு மிக உபயோகமான ஒரு கண்டுபிடிப்பென்றே சொல்லலாம். ஏனெனில் இந்த ஸிப் பைல்கள் ஒரு பைலின் அளவை கணிசமாகக் குறைத்து விடுகிறது. அதன் மூலம் ஒரு பைலை வேகம் குறைந்த இணைய இணைப்பிலும் கூட பறிமாற முடிகிறது.