Thursday, January 13, 2011

கமல் மீது அறிவுமதி ஆவேசம் = அது என்ன ஆத்திரம்!



                  மன்மதன் அம்பு படத்தில் நடிகர் கமல் ஈழத்தமிழர்களை சித்தரித்த விதம் குறித்தும், தமிழ் பற்றி எழுதியிருக்கும் வசனங்கள் குறித்தும் தமிழுணர்வாளர்கள் இடையே பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் கவிஞர் அறிவுமதி கமலுக்கு ஒரு கண்டனக் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது-

"என்னதான் நகைச்சுவை என்றாலும், ஈழத் தமிழனை, சினிமா பைத்தியமாகச் சித்தரித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்" என்கிற பத்திரிகை விமர்சனத்துக்கு நன்றிகளோடு 

30.12.2010. இரவு.. சத்யம் திரையரங்கு 
இரவுக் காட்சி
 உடன் பிறந்தார் அழைக்க.. 
கமல் படம் மன்மதன் அம்பு.

மார்கழி மாத சபா ஒன்றுக்கு
வந்து விட்டோ‌மோ‌ 
என்கிற அளவிற்கு
ஒரே கமலஹாஸன் களும்!
கமல ஹாஸிகளும்!
அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில்
பதுங்கிக் கொண்டு
நூல்தனம் காட்டும் அவரை
பரமக்குடி பையன் என்றும்
பெரியாரின் பிள்ளை என்றும்
பிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள்

இந்த அம்பு இராம பக்தர்களின் கைகளிலிருந்து
இராவண திசை நோக்கி
குறிவைக்கப் படுகிற அம்புகளில் ஒன்று
என்பதை உணர்ந்து திருந்துதல் நல்லது.

கவிஞர், அறிவுஜீவி, நாத்திகர் எனப்
பெரும்பகுதித் தமிழர்களுக்கு
அறிமுகமானவர்,
நவராத்திரித் தமிழனை
தசாவதாரத்தால் முறியடிக்கவும் முயன்றுபார்த்தவர் கமல்.

இந்த மன்மத அம்புவின் வாயிலாக
தமிழர்களை, தமிழர்கள் இன உணர்வை,
தாய்த் தமிழை இழிவு செய்வதில்
உயிரே.. மணிரத்னம், அங்கவை சங்கவை
புகழ் சுஜாதா ஆகியோரைத்
தாண்ட முயற்சி செய்திருக்கிறார்.

"தமிழ் சாகுமாம்
தமிழ் தெருப் பொறுக்குமாம். 
வீடிழந்து, நாடிழந்து,
அக்காள் தங்கைகளின்
வாழ்விழந்து
ஏதிலிகளாய் இடப்பெயர்வுற்று
கொத்துக் கொத்தாய்
தம்
சொந்தங்களை
மொத்தமாய்ப் பலியெடுத்த
கொடுமைகளுக்கு
இன்னும் அழுதே முடிக்காத
அவர்கள் வாழும் (அ) பிழைக்கும்
இடத்திற்கே போய்..

பனையேறி விழுந்தவரை
மாடு
மிதித்ததைப் போலஞ்
வாடகை வண்டி ஓட்டுகிறவராக
ஓர் ஈழத் தமிழரை.. தங்களிடம்..
பாத்திரம்.. பிச்சைக் கேட்பவராக..
கதா பாத்திரமாக்கி..
ஒரு செருப்பாக அன்று..
இரு செருப்பாகவும்
என்று
கெஞ்ச வைத்து.. 
இறுதியில்

அந்த எங்கள்
ஈழத் தமிழரை
செருப்பால் அடிக்கவும்
ஆசைப்பட்டு ஏதோவோர்
ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள
முயன்றிருக்கிறீர்களே
கமல்!

அது என்ன ஆத்திரம்! 
போர்க்குற்றவாளியாகிய அந்தக்
கயவனின் தானோடு ஆடுகிற
சதைதானா உங்களுடையதும்! ஆம்..
சதைதானே உங்களுடையதும்! 
அந்த உலகநாடுகளில் போய்.. பாருங்கள்.

அங்குள்ள கோயில்களில்
கழுத்துகள் நிறைய, கைகள் நிறைய
தங்க நகைகளாய்த் தொங்க விட்டு
உங்களவர்களை அர்ச்சகர்களாக
அவர்களைப் பார்த்து, பாதுகாத்து மகிழ்வதை!

தங்கள் பிள்ளைகளுக்கான
பரதநாட்டிய பயிற்சிக்காவும்,
அரங்கேற்றத்திற்காகவும்
இலட்சம் இலட்சமாய்க் கொட்டிக்
கொடுத்து அழைத்து, வரவேற்று,
சுற்றிக் காட்டி, கண்கலங்க 
வழியனுப்பி வைத்து நெகிழ்வதை!

இந்தப் படம் எடுக்கப்போன
இடங்களில் கூட நீங்கள்
பெரிய நடிகர் என்பதற்காக
உங்களுக்காக
தங்கள் நேரத்தை வீணாக்கி
தாங்கள் சம்பாதித்த பணத்தை வீணாக்கி,
எவ்வளவோ உதவியிருப்பார்களே! 
அத்தகைய பண்பாடு மிக்க
எங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்கு
நீங்கள் காட்டுகிற
நன்றி இதுதானா கமல்!
செருப்புதானா கமல்! 
ஈழத் தமிழ் என்றால்
எங்களுக் கெல்லாம்
கண்ணீர்த்
தமிழ்!
குருதித்
தமிழ்!

இசைப்பிரியா என்கிற
ஊடகத் தமிழ்த்தங்கை
உச்சரித்த
வலிசுமந்த
தமிழ்!

ஆனால்.. உங்களுக்கு மட்டும்
எப்படி கமல்
அது
எப்போதும்
நகைச் சுவைத்
தமிழாக மட்டுமே
மாறிவிடுகிறது!

பேசி நடிக்கத் தமிழ் வேண்டும்.
தாங்கள் நடித்த
படத்திற்குக் கோடிகோடியாய்
குவிக்க.. தமிழனின் பணம்
வேண்டும். 
ஆனால்

"அவன் தமிழ்
சாக வேண்டும்
அவன் தமிழ்
தெருப் பொறுக்க
வேண்டும்." 
தெருப் பொறுக்குதல்
கேவலமன்று.. கமல்.
அது
தெருவைத் தூய்மை
செய்தல்!

தோட்டி என்பவர்
தூய்மையின் தாய்..
தெருவை மட்டும் தூய்மை
செய்தவர்கள் இல்லை..

நாங்கள்
உலகையே
தூய்மை செய்தவர்கள்.. 
"யாதும் ஊரே யாவரும்‘
கேளிர்' என்று
உலகையே பெருக்கியவர்கள்

எங்களைப் பார்த்து
உங்கள்
செருப்பைத் தூக்கிக்
காட்டிய
கமல் அவர்களே..
உங்களை
தமிழ்தான்
காப்பாற்றியது.
பசி நீக்கியது. நீங்கள்
வாழ்கிற வீடு, நீங்கள் போகிற
மகிழ்வுந்து,‘
நீங்கள் உடுத்துகிற உடை
அனைத்திலும்..
உங்கள்
பிள்ளைகள் படிக்கிற
படிப்பில்.. புன்னகையில்
எல்லாம்
எல்லாம்!

கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட
எங்கள்
ஈழத் தமிழ் உறவுகளின்
சதைப் பிசிறுகள்

இரத்தக் கவுச்சிகள்
அப்பிக் கிடக்கின்றன.
அப்பிக் கிடக்கின்றன. 
மோந்து பாருங்கள்.

எங்கள் இரத்த வாடையை
மோந்து பாருங்கள்
மோந்தாலும்.. எங்கள் இரத்த வாடையை மீறி

உங்கள்
படத்தில் வருகிற 
கைபேசியின் மேல் வருகிற
மூத்திர வாடைதானே உங்களுக்கு
அதிகமாய் வரும். 
கமல்..

நகைச் சுவை என்பது
கேட்கும் போது
சிரிக்க வைப்பது!
நினைக்கும் போது
அழ வைப்பது!

ஆனால் உங்கள்
நகைச்சுவை
செருப்பால் அடித்து
எங்களைச்
சிரிக்கச் சொல்கிறதே!

இதில் வேறு வீரம்..
அகிம்சைக்கான
வியாக்யானங்கள்!

அன்பான கமல்..
கைநாட்டு மரபிலிருந்து எங்களைக்
கையெழுத்து மரபிற்கு
அய்யாவும் அண்ணலும்
கரையேற்றி விட்டார்கள்.

இனியும் உங்கள்
சூழ்ச்சி செருப்புகளை
அரியணையில் வைத்து ஆளவிட்டு
அழகு பார்க்க மாட்டோம். 
சீதையைப் பார்த்து

"உயிரே போகுதே'
பாட மாட்டோம்.
சூர்ப்பநகையின் மூக்கறுபட்ட
வன்மம் அள்ளித்தான்
"உயிரே போகுதே'
பாடுவோம்.

ஆம்.. கமல்
தாங்கள் சொல்லியபடி..
எம்
தமிழ்
தெரு பொறுக்கும்!

எவன்
தெருவில்
எவன் வந்து
வாழ்வது
என்று
தெரு பொறுக்கும்!

அப்புறம்
எவன் நாட்டை
எவன்
ஆள்வது
என்ற
விழிப்பில்
நாடும்
பொறுக்கும்.

அதற்கு
வருவான்‘
வருவான்
வருவான்
"தலைவன்
வருவான்!'

இந்தத் தலைப்பையாவது
கொச்சை செய்யாமல்
விட்டுவிடுவது நல்லது கமல்.

நீங்கள் பிறந்த இனத்திற்கு
நீங்கள்
உண்மையாக
இருக்கிறீர்கள் கமல்!

நாங்கள்
பிறந்த
இனத்திற்கு
நாங்கள்
உண்மையாக இருக்க வே‌ண்‌டா‌மா‌?

ஏன் கமலுக்கு இத்தனை கோபம்?


       'வாலி 80'  கொண்டாட்டம். காவியக் கவிஞராக விளங்கும் வாலியின் 80வது பிறந்தநாள் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. தமிழ் திரையின் துருவ நட்சத்திரங்களான ரஜினி, கமல் இந்த விழாவில் பங்கேற்றனர். விழாவில் வாலி எழுதிய பாடல்களில் 1000 பாடல்களை தேர்வு செய்து அதை புத்தகமாக வெளியிட்டனர். இந்த 'வாலி 1000'  புத்தகத்தை கமலஹாசன் வெளியிட அதை இயக்குனர் ஷங்கர் பெற்றுக்கொண்டார். இதில் கவிபேரரசு வைரமுத்துவும் கலந்து கொண்டார் என்பது இன்னொரு சிறப்பு.

 

கமல் புகைப்பட நிருபர்களிடம் ஏதோ ஒரு கோபத்துடனே இருந்தார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. கமல் காரில் இருந்து இறங்கியவுடன் பளீர் என வெளிச்சம் அவர் முகத்தில் பட்டது. அது வீடியோ காமிராவின் ஸ்பாட் லைட்.  சட சடவென ஸ்டில் கேமராக்களின் ப்ளாஷ். வெளிச்சம் தன் மீது படுவதை விரும்பாத கமல் கையை வைத்து முகத்தை மறைத்துக் கொண்டார். லைட்டை அணைக்க சொல்லி கோபத்துடன் கை அசைத்தார். ஆனால் பளீர் வெளிச்சம் படர்ந்தபடியே இருந்தது. 'லைட்டை ஆப் பண்ணுங்கப்பா...' என்று அங்கிருந்தவர்கள் கூச்சல் போட... லைட் அணையவில்லை.

 

லைட்டை நிறுத்தினால் தான் இந்த இடத்தை விட்டு நகர்வேன் என கமல் கோபத்துடனே தன் கையை அசைத்தபடி சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு வழியாக லைட் அணைக்கப்பட்டது. கமலும் விழா அரங்கிற்குள் சென்றார். 'பளிர்னு லைட் பட்டதினாலே கோபப் பட்டுட்டாரு போலப்பா! என்று புகைப்பட நிருபர்கள் பேசிக் கொண்டார்கள். 

விழா அரங்கில் 'வாலி 1000'  புத்தகம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. கமல் எழுந்தார், மேடையில் இருக்கும் அனைவரும் எழுந்தார்கள். மீண்டும் புகைப்பட நிருபர்கள் க்ளோசப்பில் போட்டோ கிடைக்கும் என்று கமலை மேடைக்கு முன்பாக அழைத்தார்கள். 'ஏன் இங்கே நின்னா எடுக்கமுடியாதா?' என கேட்டார் கமல். கமலை வாலி முன்னுக்கு அழைத்தார். அதை மறுத்த கமல், 'இல்லைப் பரவாயில்லை...' என்று கையசைத்தப்படியே சொன்னார். புத்தகம் வெளியிடப்பட்டது. ஏன் நம்ம மேல இவ்வளவு கடுப்பா இருக்காரு என்று புகைப்படக் நிருபர்கள் பேசிக் கொள்ள...  அருகில் அமர்ந்திருந்த சூர்யாவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார் கமல். 

வாலியைப் பற்றி மேடையில் இருந்தவர்கள் பாராட்டிப் பேசினார்கள். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாலி எழுதி அவர் பாடிய பாடல்களை மேடையில் பாடிக் கொண்டிருந்தார். பாடல்களுக்கு மெய்மறந்து கைத்தட்டிக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள். திடீரென விண்ணைப் பிளக்கும் அளவிற்கு கைத்தட்டல் சத்தம், மேடையில் ரஜினி! ரசிகர்களுக்கு வணக்கம் வைக்கிறார். (எப்போ வருவாரு எப்படி வருவாரு என யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவாரு... உண்மைதான்). இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. ரஜினியுடன் வைரமுத்துவும் வந்திருந்தார். இன்னும் ஆச்சர்யம்! வாலி பாராட்டு விழாவில் வைரமுத்துவா? 


ரஜினி பேசும் போது வாலியைப் பாராட்டி பேசியதோடு அவர் மீது எனக்கு ஒரு கோபம் என்று குண்டைத் தூக்கிபோட்டார்! எல்லோரும் புருவம் நிமிர்த்த... என் மகள் திருமணத்திற்கு நான் நேரில் சென்று வாலி சாருக்கு பத்திரிகை வைத்தேன். ஆனால் அவர் திருமணத்திற்கு வரவில்லை. அதனால் இந்த விழாவுக்கு வரமாட்டேன் என்று நான் மறுத்துவிட்டேன். வைரமுத்து தான் என்னை அழைத்து வந்தார் என்றார் ரஜினி. மேலும் 'நாம நண்பர்கள் மாதிரிதானே பழகுறோம்... இல்லையா என்னால வரமுடியாது என்று என்னிடம் நேராக சொல்லியிருக்கலாமே. அது பற்றி அவர் மீது எனக்கு ரொம்பவும் கோபம். இன்று வரை அவரிடம் நான் பேசவே இல்லை' என்று உரிமையாக தன் கோபத்தை வெளிப்படுத்தினார் ரஜினி. 

வாலி பேசும் போது, நேரில் வந்து பத்திரிகை வைத்தும் நான் திருமணத்திற்கு வரவில்லை என்று ரஜினி ஏன் மீது கோபப்படுகிறார். நான் அப்படி ஒன்றும் நாகரீகம் அற்றவன் அல்ல, அன்று தான் என் மனைவியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது என்று பதிலளித்தார். என்னைக் கோபக்காரன் என்று ரஜினி என்னிடம் ஒருமுறை சொன்னார் என்ற நிகழ்வை சொன்ன வாலி...  கோபப்படாமல் இருக்க நான் என்ன மண்புழுவா? மரவட்டையா? மனுஷன்யா என்று ஜாலியாக ஒரு பஞ்ச் வைத்தார். 

ரஜினி தன் கோபத்தை வெளிப்படையாக மைக் முன்பு பேசிவிட்டார். கமல் ஒரு விளங்க முடியா கவிதை

மின்சாரக் கட்டணம் சரிபார்போம் வாருங்கள்







மின்சார கணக்கை நாமே சோதனைசெய்யலாம் .
படத்தைச் சேர்
 பெரும்பாலும் நாம் மின்சார அலுவலர்

 ரீடிங் எடுத்து அவர் குறித்து கொடுக்கும்

 தொகையை கார்டில் குறித்து

 அதை அப்படியே மின் அலுவலகத்தில்

 சென்று பணம் கட்டி வருகிறோம். 

அந்த தொகை சரியானதா? ரீடிங் சரியா -

 மின்தொகை ரூபாய் சரியா என

 பெரும்பாலானோர் சரிபார்ப்பதில்லை.

 சரி அதை எப்படி சரிபார்ப்பது.

கீழே கொடுத்துள்ள கணக்கு அதற்கு உதவும்.

முதலில் தற்போதைய ரீடிங் அளவை

 குறித்துக்கொள்ளவும். 

அதன் கீழே முன்மாத அளவை

 குறித்துக்கொள்ளவும்.

 புதிய ரீடிங்கிலிருந்து பழைய ரீடிங் அளவை கழிக்கவும்.

உதாரணம்:-     தற்போதைய ரீடிங் 0516
                           
                           பழைய ரீடிங்  0330                                                                   
                                                         ----------
                                    ரீடிங் அளவு  186    யூனிட்கள்
                                                                    --------


 கணக்கு போட தோதாக ரவுண்ட் டாக

 மாற்ற (180யூனிட் என -கணக்கீட்டாளர்களும்

 கணக்கு போடஅப்படியே செய்வார்கள்)

180 என குறித்துக்கொள்ளுங்கள்.

1< 50 unit வரை 0.75 காசு எனில் தொகை = ரூ.37.50 



51< 100 unit வரை 0.85 காசு எனில் தொகை =ரூ.42.50



 மீதி 80 unit  வரை 1.50 காசு எனில் தொகை=   ரூ.120.00
                                                       ---------
                                          மொத்தம்  ரூ.200.00

                           நிர்ணய கட்டணம்  ரூ.  10.00
                                                         ----------
                                 ஆக மொத்தம்  ரூ.210.00.
                                                        ----------

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை குறைந்த மின்கட்டண விகிதம்
       -----------------------------------------------------------------------------------

1 முதல் 50 யூனிட் வரை        - 0.75 (பைசா)  ஒருயூனிட்டுக்கு

51 முதல் 100யூனிட் வரை    -0.85 (பைசா)   ஒருயூனிட்டுக்கு

101 முதல் 200யூனிட் வரை ரூ -1.50     ஒருயூனிட்டுக்கு

201 முதல் 601யூனிட் வரை ரூ -2.20     ஒருயூனிட்டுக்கு

601யூனிட்டுக்கு மேல்         ரூ -3.05    ஒருயூனிட்டுக்கு

                                    
                                              -------0O0-------

யப்பா எனக்கு இந்த கணக்கெல்லாம்

 போட வராது. அட போப்பா வேறுவேலை

 இல்லை என்கிறீர்களா. 

 உங்களுக்கான அட்டவணையை

 இணைத்துள்ளேன். பார்த்து

 கணக்கை தெரிந்துகொள்ளுங்கள்.

 அடுத்த முறை கணக்கீட்டாளர்கள்

 வரும் சமயம் உங்கள் கணக்கு சரியா

 என சோதனை செய்து கொள்ளுங்கள்





உங்கள் மின்கட்டண அட்டவணை கொண்டு மின்கட்டணத்தை சரிபார்க்கவும்.

இந்த அட்டவணை வீட்டு உபயோகத்திற்கானது மட்டுமே.

ஆனந்தவிகடன் கவுரவித்த 5 வலைபூ எழுத்தாளர்கள்

ஆனந்தவிகடன் கவுரவித்த 5 வலைபூ எழுத்தாளர்கள்

ஆனந்தவிகடன் பத்திரிக்கை உலகின் ஜாம்பவான் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது.பல எழுத்தாளர்களை அது இலக்கிய உலகிற்கு அளித்துள்ளது.சினிமாத்துறையில் உள்ள ஷங்கர்,மணிரத்னம் போன்ற பெரிய இயக்குனர்கள் கூட விகடனில் சினிமாவிமர்சனம் படிக்கத்தவறுவது இல்லை.
விகடனில் ஒரு படம் 40 மார்க் வாங்கி விட்டால் அந்தப்படம் தேறி விடும் என்று ஒரு பேச்சு திரை உலகில் உண்டு.
உதிரிப்பூக்கள்(65 மார்க்),நாயகன்(60 மார்க்)அஞ்சலி,பசங்க (50 மர்க்) என சொல்லிக்கொண்டே போகலாம்.அவ்வளவு ஏன் அமரர் சுஜாதா கற்றதும் பெற்றதும் கட்டுரையில் ஏழைதாசன் என்ற சிற்றிதழை பற்றி ஒரு வார்த்தை எழுதினார்.அதுவரை 500 பிரதிகள் மட்டும் விற்ற புத்தகம் அந்த வாரம் மட்டும் 2400 பிரதிகள் விற்றது.வாரா வாரம் வியாழன் அன்று வெளியாகும் அது கிட்டத்தட்ட 7 லட்சம் பிரதிகள் வெளீயாகி 10 லட்சம் மக்களை சென்றடைகிறது.
அப்படிப்பட்ட இதழில் நாளை வெளிவரப்போகும் இதழில் சிறந்த 5 வலைப்பூ எழுத்தாளர்கள் பற்றி ஒரு கட்டுரை மினி பேட்டியுடன் வருகிறது.

1.கேபிள் சங்கர்-இயற்பெயர் சங்கரநாராயனன்.இவ்ர் சினி ஃபீல்டில் காலடி எடுத்து வைக்க பிளாக்ஸ்பாட் உத்வி இருப்பதாக பேட்டியில் கூறி உள்ளார்.

2.பரிசல்காரன் -இயற்பெயர் கே.பி.கிருஷ்ணகுமார்.திருப்பூர்.நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவரான இவர் ஆரம்ப காலத்தில் பத்திரிக்கைகளில் முத்திரை பதித்தவர்.

3.விக்னேஷ்வரி -பெண்களுக்கான சரியான உபயோகமான துறை வலைப்பூ என பேட்டியில் தெரிவித்துள்ளார்

4.சுந்தர்ராஜன் - இவர் மக்கள் சட்டம் என்ற வலைப்பூ நடத்தி மக்களுக்கு சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஊட்டி வருகிறார்.

5. தீபா-இவர் தனது பேட்டியில் தனது வலைப்பூ பெயரை குறிப்பிடவில்லை. 

ஆனந்த விகடன் கவுரவித்த இவர்களை நாமும் வாழ்த்துவோம்

சிடி தரும் சிக்கல்

இன்றைய சூழ்நிலையில் சிடிக்களைப் பயன்படுத்துவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. அன்றாடம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில், சிடிக்களைக் கையாளும் பிரச்சினையும் ஒன்று. 

பிளாஷ் டிரைவ் பயன்பாடு, பைல்களைக் காப்பி செய்து எடுத்துபோவதை மிக எளிதாக மாற்றியுள்ளது. இருப்பினும் ஓரிரு பைல்களை எழுதி, எழுதப்பட்ட மீடியாவினை யாருக்கேனும் தந்து விட்டு வர வேண்டும் என்றால் அதற்கு சிடிதான் சரியான வழி. எனவே சிடியைக் கையாள்வதில் உள்ள பிரச்சினைகளை இங்கு காணலாம்.


அவசரமாக ஏதேனும் பைலை சிடியில் எழுதி எடுத்துக்கொண்டு செல்லத் திட்டமிடுகையில் அது வெளியே வர மறுக்கும். அல்லது எழத மறுக்கும். எழுத மறுத்து வெளியே வந்துவிட்டால், இன்னொரு சிடியை உள்ளே செலுத்தி எழுதலாம்.

சிடி வெளியே வரவில்லை என்றால் என்ன செய்யலாம்? இந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ளலாம் என்று பார்க்கலாம். பல வேளைகளில் நாம் ஒரு சிடியை அதன் டிரைவில் போட்டு பயன்படுத்திய பின்னர் வெளியே எடுத்து பாதுகாப்பாக வைக்க மறந்துவிடுகிறோம்.

டிரைவ் பிரச்சினை தருவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு முறை அதன்பின் விண்டோஸ் எக்ஸ்புளோரரை இயக்குகையில் சிடியின் டிரைவ் இயங்கும். இது தேவையற்ற ஒன்றாக இருக்கும். இதனால் சிடி டிரைவ் இயக்கத்தில் சில தடங்கல்களை ஏற்படுத்தலாம்.

குறிப்பாக சிடியில் பைல்களை எழுதி முடித்துவிட்டால், உடனே எடுத்துவிட வேண்டும். இதனால் தான் சிடியில் எழுதுவதற்குப் பயன்படும் நீரோ போன்ற புரோகிராம்களில் சிடியில் எழுதும் வேலை முடிந்துவிட்டால், உடனே அதனை வெளியே தள்ளும் எஜெக்ட் என்னும் செயல்பாட்டினை செட் செய்திடும் வகையில் வழிகள் தரப்பட்டுள்ளன.

சிடி வெளியே வராத நிலையில் அந்த சிடியில் இன்னொரு பைலை எழுதிப் பாருங்கள். ஏற்கனவே எழுதிய பைல் பார்மட்டில் இல்லாமல் வேறு வகை பார்மட்டில் எழுதிய பைலை காப்பி செய்து பாருங்கள். காப்பி ஆனவுடன் சிடி வெளியே வர வாய்ப்புகள் உள்ளன.


வர மறுக்கும் சிடியை எடுக்க இன்னொரு சிறந்த வழி கம்ப்யூட்டரை ரீ பூட் செய்வதாகும். இதனால் சிடி வெளியே வரும் வாய்ப்புண்டு. மை கம்ப்யூட்டரை கிளிக் செய்து அதில் கிடைக்கும் விண்டோவில் சிடி டிரைவிற்கான இடத்தில் ரைட் கிளிக் செய்து அதில் Eject என்பதில் கிளிக் செய்து பார்க்கலாம்.

இதில் ஒரு முறை கிளிக் செய்தால் மட்டும் போதாது. பல முறை கிளிக் செய்தால் ஏற்படும் கட்டளைத் திணிப்பில் டிரைவ் வெளியே வரலாம். இத்தனை வழிகளையும் கையாண்டு வெளியே வரவில்லை என்றால் இறுதியாக நம் பலத்தை பிரயோகிக்க வேண்டியதுதான்.

அது ஒன்றுமில்லை; ஒரு சிறிய பேப்பர் கிளிப் என்ற ஜெம் கிளிப்பைப் பிரித்து நீட்டி டிரைவின் கதவில் தெரியும் சிறிய துவாரத்தில் மெதுவாகச் செருகவும். ஒரு இடத்தில் எதிராக ஒரு சிறிய தடுப்பில் நிற்கும். அதனை மெதுவாக அழுத்தினால் கதவு திறக்கப்படும். பின் சிடியை எடுத்துவிடலாம்.


சிடியைச் சரியாக அதன் டிரைவில் பொருத்தவில்லை என்றால் அது உள்ளே செல்லாமல் மீண்டும் மீண்டும் அதன் கதவு திறக்கப்படும். நாம் டிரைவின் கதவு மூடப்படுவதில்தான் பிரச்னை என்று முடிவு செய்து பலத்தைப் பயன்படுத்தி கதவை மூடக்கூடாது.

பொறுமையாக என்ன பிரச்னை என்று ஆய்வு செய்திட வேண்டும். அதன் முதலாவது செயல்தான் சிடியைச் சரியாக அதன் இடத்தில் வைப்பது. சிறிய அளவில் அது சரியாக இல்லை என்றால் அதன் உள்ளாக மோட்டார் ஸ்டெம் உட்காருகையில் அது தானே சரி செய்யப்படும்.

அப்படி சரி செய்திட முடியாத பட்சத்தில் சிடி டிரைவின் செயல்பாட்டில் மாறுதல் ஏற்படும். சரியாக இயங்காது. இதைப் போன்ற சூழ்நிலைகளில் சிடிக்கள் சில நொறுங்கிப் போன நிகழ்வுகளும் நடந்தது உண்டு. எனவே ஒரு சிடி டிரைவ் சரியாக இயங்கவில்லை என்றால் நாம் அதனைப் பயன்படுத்தும் முறைதான் சரியில்லை என்று பொருள்.

எனவே கம்ப்யூட்டரின் மீது கோபப்படுவதனை விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் அதனைச் சரியாக இயக்க முயற்சிக்க வேண்டும்.


சில வேளைகளில் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு ஒரு சிடியின் மீது இன்னொரு சிடியை போட்டு இயக்க முயற்சிப்பது; சிடியை தலைகீழாக வைத்து இயக்க முயற்சிப்பது; ஒரு சிடி என்று எண்ணிக் கொண்டு இரண்டு சிடிக்களை டிரைவில் வைப்பது போன் ற நிகழ்வுகள் நீங்களை நம்பாமல் இருக்கலாம்.

ஆனால் பல வேளைகளில் இவ்வாறு நடந்துள்ளது. நீங்களும் இந்த தவற்றை என்றாவது அவசரத்தில் செய்ய முற்படலாம். அவ்வாறு நேர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவே இந்த எச்சரிக்கை தரப்படுகிறது.

சிடிக்கள் டேட்டாவினைப் பதிந்து வைத்திட நம்பகமான மீடியம் என்றாலும் அவையும் என்றாவது ஒரு நாள் அல்லது ஒரு வேளையில் பயன்படுத்த முடியாமல் போகலாம். எனவே சிடியில் டேட்டாக்களை எழுதிவிட்டோமே என்று அந்த பைல்களை முற்றிலுமாக அழித்துவிடக்கூடாது.

வேறு ஒரு மீடியத்தில் எழுதி வைக்கலாம். இன்னொரு கம்ப்யூட்டரில் அல்லது ஹார்ட் டிஸ்க்கின் இன்னொரு டிரைவில் போட்டு வைக்கலாம். இவ்வாறு பேக்கப் எடுத்து வைப்பது நல்லது. பயன்படுத்த நல்ல தரமான நிறுவனங்கள் தயாரித்து வழங்கும் சிடிக்களையே வாங்க வேண்டும். விலை குறைவாக இருக்கிறது என்று தரம் குறைந்த சிடிக்களை வாங்கிப் பயன்படுத்துவது தவறு.

ISO பைல் என்றால் என்ன

ஐ.எஸ்.ஓ பைல் அல்லது ஐ.எஸ்.ஒ இமேஜ் என்பது ஒரு சிடி அல்லது டிவிடி யின் விம்பம் அல்லது பிரதி எனலாம். சிடி அல்லது டிவிடியில் அடங்கியிருக்கும் அனைத்து டேட்டாவையும் ஒரே பைலாக ஐ.எஸ்.ஒ பைலில் உள்ளடக்கி விடலாம்.

ISO என்பது International Organization for Standardization என்பதைக் குறிக்கிறது. இது .ISO எனும் பைல் `ட்டிப்பைக் (file extension) கொண்டிருக்கும். ஐ.எஸ்.ஓ பைல் என்பது ஒரு சிப் (zip) பைல் அல்லது கேப் (cab) பைலைப் போன்றதே. எனினும் இவை Hப் பைல் போன்று சுருங்கிய வடிவத்திலல்லாமல் சிடி அல்லது டிவிடியில் அடங்கியுள்ள மொத்த பைல்களின் கொள்ளளவில் இருக்கும்.

இந்த ஐ.எஸ்.ஓ பைலை, பகுதி பகுதியாகப் பொருத்தி ஒன்று சேர்க்கும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களைத் தாஙகி வரும் ஒரு பெட்டிக்கு ஒப்பிடலாம். எமக்கு பயன்படுவது அந்தப் பெட்டிக்குள் அடங்கிருப்பவையே தவிர அந்தப் பெட்டியல்ல. ஐ.எஸ்.ஓ பைல்களும் இதே போன்றதே.

அதிக கொள்ளளவு கொண்ட மென்பொருள்களை இனையத்தின் வழியே பகிர்வதற்காகவே ஐ.எஸ்.ஓ பைல்கள் அனேகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு மென்பொருளுக்குரிய அனைத்து பைல்களும் போல்டர் களும் ஒரே பைலுக்குள் அடங்கி விடுவதாலும் இதன் மூலம் பைல் இழப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்பதனாலும் ஐ.எஸ்.ஓ பைலாக அவை இணையத்தில் பகிரப்படுகின்றன. உதாரணமாக 600 மெகாபைட்டுக்கு மேல் கொள்ளளவு கொண்ட லினக்ஸ் இயங்குதளத் தின் உபுண்டு பதிப்பு இணையத்தில் இருந்து டவுன் லோட் செய்து கொள்ளக் கூடியதாக ஐ.எஸ்.ஓ பைல் வடிவிலேயே கிடைக்கிறது.

ஐ.எஸ்.ஓ பைலில் என்ன அடங்கிIருக்கின்றன என நேரடியாகத் திறந்து பார்க்க விண்டோஸில் வழியில்லை. எனவே அவை வேறு வழிகளிலேயே கையாளப்படு கின்றன. அவற்றுள் முதலாவது வழி ஐ.எஸ்.ஓ பைலை கையாள்வதற்கான யூட்டிலிட்டிகளைப் பயன்படுத்துவதாகும். அதற்கென IsoBuster, CDmage ,Daemon Tools எனச் சில யூட்டிலிட்டிகலைப் பிற நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இவற்றின் மூலம் ஐ.எஸ்.ஓ பைலில் அடங்கியுள்ளவற்றை “சிப் பைல்” போல் வெறொரு போல்டருக்குள் விரியச் செய்து பார்க்கலாம்.

இரண்டாவது வழி அதனை சீடியிலோ அல்லது டிவிடியிலோ பதிவு செய்து பயன்படுத்துவதாகும். அனேகமாகப் பலரும் இந்த வழியையே கையாள்கின்றனர். எனினும் இந்த ஐ.எஸ்.ஓ பைலை சீடியில் பதிவு செய்வதென்பது வழமையான டேட்டா அல்லது வீடியோ பைலை பதிவு செய்வது போன்றதல்ல. இங்கு சீடி அல்லது டிவிடியில் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தும் மென்பொருள் ஐ.எஸ்.ஓ பைலை சீடியில் ஒன்று சேர்த்துப் பொருத்த வேண்டியிருக்கிறது. எனவே சீடியில் பதிவு செய்வதற்கான மென்பொருளில் ஐ.எஸ்.ஓ இமேஜ் பைலைப் பதிவு செய்வதற்கான வசதியும் (image burner ) இருந்தாலே அதனைப் பதியலாம்.

ஒரு ஐ.எஸ்.ஓ பைலை சீடியில் பதிவு செய்த பிறகு சீடியில் அந்த பைலைக் காண முடியாது. மாறாக சீடியில் வேறு சில பைல்களையும் போல்டர்களையும் மட்டுமே காணக் கூடியதாய் இருக்கும்.

ஐ.எஸ்.ஓ பைலைக் கையாளும் மூன்றாவது வL அதனை ஒரு வேர்ச்சுவல் சீடி ரொம்மில் ஏற்றிப் பார்வையிடுவதாகும். ஒரு சீடி ரொம்மிலிருந்து மட்டுமே இயங்கக் கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள்களை இயக்குவதற்கான ஒரு வழியே இந்த வேர்ச்சுவல் சீடி ரொம். Virtual CD-ROM Control Panel for Windows XP என்பது அவ்வாறான ஒரு இலவச யூட்டிலிட்டி.
ஐ.எஸ்.ஓ பைல்களை உருவாக்கவும் சிடி அல்லது டிவிடியில் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தும் மென்பொருள்களே உதவுகின்றன. ஒரு சிடி அல்லது டிவிடியில் அடங்கியிருக்கும் டேட்டாவை ஐ.எஸ்.ஓ பைல் வடிவில் சேமித்துக் கொள்வதன் மூலம் அந்த சிடி அல்லது டிவிடி இல்லாமலேயே பிரிதொரு நேரம் அதனை சிடியில் பதிவு செய்து கொள்ளும் வசதியை இந்த ஐ.எஸ்.ஓ பைல் தருகிறது.

சிலைகள்