அண்மையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் நான்கு ஆண் ஆசிரியர்கள் பாடசாலை கணினியில் நீலப்படம் (sex film) பார்த்துள்ளமை பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கல்வித்திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுவருகிறது. மாணவர்களை ஒழுக்கமுள்ள நல்ல சமூகமாக வளர்த்தெடுக்கவேண்டிய சில ஆசிரியர்களே இவ்வாறு நடந்துகொண்டால் தமது பிள்ளைகளை எந்த நம்பிகையில் பாடசாலைக்கு அனுப்புவது எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தச்செயலில் ஈடுபட்ட நான்கு ஆசிரியர்களும் பிரபலமான ஆசிரியர்கள் என்பதோடு ஒருவர் கிளிநொச்சியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிலையத்தில் கணக்கியல் கற்பிக்கும் பிரபல ஆசிரியர் ஆவார். இச்செயற்பாடு சக ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரின் மத்தியிலும் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
|
No comments:
Post a Comment