Thursday, December 2, 2010

நமக்கு தேவையான கோப்புகளை குறுவட்டு இயக்கியில் (cd-player) படிப்பது எப்படி?


 How to read all type of documents in a cd-player?

என் அண்ணன் ஒரு ஆசிரியர் போல (ஆனால் ஆசிரியர் அல்ல!). அவர் தனது மாணவர்களுக்கு சில புத்தகங்களை இணையத்தில் தரவிறக்கம் செய்து தருவார். அவ்வாறு அவர் தரும்போது ஒரு மாணவன் "என் வீட்டில் கணினி இல்லை" என்று கூற உடனே ஒரு மென்பொருள்......

 என் அண்ணன் ஒரு ஆசிரியர் போல (ஆனால் ஆசிரியர் அல்ல!). அவர் தனது மாணவர்களுக்கு சில புத்தகங்களை இணையத்தில் தரவிறக்கம் செய்து தருவார். அவ்வாறு அவர் தரும்போது ஒரு மாணவன் "என் வீட்டில் கணினி இல்லை" என்று கூற உடனே ஒரு மென்பொருள் இணையத்தில் தேடிக் கொடுத்து என் அண்ணன் உதவினார் (ரொம்ப நல்லவருங்க). அதை அப்படியே எனக்கும்  சொன்னார் அதனை நான் இங்கு உங்களுக்கு கூறுகிறேன்! :)

(கீழ்கண்ட மென்பொருள் உங்கள் கோப்புகளை   ஒரு படமாக மாற்றிவிடும்,அதனால் நீங்கள் எளிமையாக குறுவட்டு இயக்கியில் படிக்கலாம்)
முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்யுங்கள்http://www.geardownload.com/system/imageprinter-free-download.html
பிறகு அதனை கணினியில் நிறுவுங்கள். நிறுவிய பிறகு உங்கள் கணினியின் முகப்பு பக்கம் சென்று பாருங்கள் அங்கு  


இது போன்ற குறுக்கு வழி குறும் படம் (icon) இருக்கும். அதனை சொடுக்கி உங்களின் விருப்பம் போல அமைத்து கொள்ளுங்கள். அதில் SYSTEM என்ற தத்தலில் (Tab ) OUTPUT FOLDER என்ற இடத்தில் நீங்கள் படமாக மாற்றிய கோப்பை எங்கு சேமிக்க வேண்டும் என்று குறிப்பிடுங்கள். FILE FORMAT என்ற தத்தலில் இவ்வாறு செய்யுங்கள்.

இவ்வாறு .jpg வடிவில் கோப்புகளை மாற்றுவதால் அதன் தரம் மாறாமல் அதனின் அளவும் சிரியாதாக இருக்கும். Quality of compression என்ற இடத்தில் உங்களின் தொலைகாட்சி பெட்டியின் அளவிற்கு ஏற்றவாறு வைத்துக்கொள்ளவும்.சரி இப்பொழுது உங்கள் கோப்புகளை எப்படி குறுவட்டு இயக்கியில்  காண வைப்பது என்பதனை பார்ப்போம்!
இதற்கு நீங்கள் மாற்ற விரும்பும் கோப்பை ஒரு சன்னலில் திறக்க வேண்டும். திறந்த பிறகு Ctrl + P அழுத்தவும்,அதில் 

NAME என்ற இடத்தில் Image Printer என்று சொடுக்கி OK அழுத்தவும். இப்பொழுது நீங்கள் OUTPUT FOLDER என்ற இடத்தில்  குறிப்பிட்ட முகவரியில் சென்று பாருங்கள்! அங்கு நீங்கள் விரும்பிய அனைத்து கோப்பும் .jpg என்ற வடிவில் மாறி இருக்கும்.அதனை அப்படியே உங்கள் குறுவட்டில் சேகரித்து குறுவட்டு இயக்கியில் பாருங்கள்! மேலும் இதனை நான் உபயோகப் படுத்தி பார்த்ததில் POWER POINT கோப்பு மட்டும் படமாக மாறவில்லை மற்ற எல்லா கோப்புகளும் மாறுகிறது. மேலும் இந்த மென்பொருள் .pdf கோப்பாகவும் மாற்றுகிறது! இதனை நீங்கள் நேரலையில் கூட செய்யலாம்http://www.convertpdftoimage.com/ . 

பெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்?

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. (குறிப்பாக காதலர்களுக்கிடையில்) இந்தப் பிரச்சினை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....



1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மோர்னிங்'ன்னு ஒரு சின்ன SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபா செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விடயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..
2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வைச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)

3. அவங்க பெயரோட முதல் எழுத்தை பைக் கீ-செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...


4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிடத்துக்கு ஒரு தடவை அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலொக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

5. அவங்க பெயர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வைச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கோல் பண்ண சொல்லுங்க. அந்தப் பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.

6. கவிதைங்கிற பெயர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஓடர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஓடர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)


9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், "இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வைச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விடயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சினைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விடயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுவாங்க
http://www.blogcatalog.com/blog/httpkt-saranganblogspotcom/e7204b607ccb27c83f838115828b7660

http://1.bp.blogspot.com/_Tk8jhWZJJSs/Swut3hKNRBI/AAAAAAAAAIg/AxLfRb1Hoz4/s1600/lovefaili.jpg

Photobucket

ஹஜ் - முக்கிய விஷயங்கள்

ஹஜ்ஜுக்கு ஸ்பெஷல் பாஸ்போர்ட் என்று இருந்த நிலைமை மாறி, தற்சமயம், பொது பாஸ்போர்ட் என்று கொண்டு வந்து விட்டதால், முன்கூட்டியே பாஸ்போர்ட் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

சூட்கேஸ்களின் எடை 25 கிலோவுக்கு......
மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், கஸ்டம்ஸில் பிரச்சினை வரும்.

ஹேண்ட் லக்கேஜ் 10 கிலோ அளவிற்குள் இருந்தாலும், அளவு பெரியதாக இருந்தால், ப்ளைட்டில் நம்முடன் வைக்க அனுமதிக்க மாட்டார்கள். அதனால், இதில் கவனம் தேவை.

ஹேண்ட் லக்கேஜுக்கு ஸ்கூல் பேக் போல் முதுகில் மாட்டும் பை எடுத்துக் கொண்டால், அதிக தூரம் நடக்கும் போது சவுகரியமாக இருக்கும்.

நம்முடைய லக்கேஜுக்கு ஒரே கலரிலான ரிப்பன்கள் கட்டி, பெயர் மற்றும், நம்முடைய நம்பர் எழுத வேண்டும்.

பெண்களுக்கு நைட்டி ஏற்ற ஆடை. உள்ளே போட உள்பாவாடைக்குப் பதில் சுடிதார் பேண்ட் போல தைத்துக் கொண்டால், ரூமில் அந்நிய ஆண்கள் இருக்கும் போது, கஷ்டமில்லாமல் இருக்கும்.

நைட்டியில், மேல் பாக்கிட் வைத்துத் தைத்துக் கொண்டு, அதில், ஒட்டும் ஸ்டிராப் வைத்துத் தைத்துக் கொண்டால், பணம் பாதுகாப்பாக இருக்கும். அதோடு, புர்காவில் கீழே இரு புறமும் பெரிதாக பாக்கிட் வைத்துத் தைத்துக் கொண்டால், செல்போன், சிறிய முஸல்லா போன்றவை வைக்க ஏதுவாக இருக்கும்.

தலைமுடிக்கு வைக்க, ரிப்பன் ஒன்றிரண்டு எடுத்துச் சென்றால், இஹ்ராமில் முடி உதிராமல் கட்டிக் கொள்ளலாம்.

சைக்கிள் பூட்டு அல்லது சங்கிலி பூட்டு ஒன்று எடுத்து செல்வது, ஹரமிலும், மினாவிலும் மிக உபயோகமாக இருக்கும்.

போகும் போது, உறவுகள் ஏர்ப்போர்ட்டுக்கு வந்தாலும், ஒரிரு நிமிடமே பார்க்க முடியும். அதனால், ஹஜ் கமிட்டியோடு அனுப்பிவிட்டால், வீண் அலைச்சல் இல்லை.

பெட்ஷீட், ஜமுக்காளம் கொண்டு செல்ல தேவையில்லை. நான் கொண்டு சென்றதை மடிப்பு கலையாமல் திருப்பி கொண்டு வந்து விட்டேன்.

தற்சமயம் ஸ்கேன் வசதி வந்துவிட்டதால், கஸ்டம்ஸில் நம்ம பேக் பிரிக்கப்படுவதில்லை. சந்தேகத்துக்குரிய பொருள் இருந்தால் மட்டும் பிரிப்பார்கள்

மினாவில் நமக்கு ஆளுக்கொரு புது பெட்ஷீட், தலையணை தருவார்கள். அது நமக்கு சொந்தம். எடுத்து வராவிட்டால், டிஸ்போஸ் செய்து விடுவார்கள்.

நம்பர் லாக்(பூட்டு) எடுத்துச் சென்றால், மிகவும் உபயோகமாக இருக்கும். மினாவில் நம் உடைமைகளை, அங்கிருக்கும் இரும்பு தூணில் சங்கிலி பூட்டு, நம்பர் லாக் உதவியால் நான் பூட்டிக் கொண்டேன்.
பெண்கள் எக்ஸ்ட்ரா புர்கா ஒன்று எடுத்துச் செல்ல வேண்டும்.

மார்க்கிங் பேனா எடுத்துச் செல்வது அவசியம்.

கறி மற்றும் காய்கறிகளை, பொது பிரிஜ்ஜில் வைப்பதால், பாலிதீன்பையில் மேல் மார்க்கிங் பேனாவால் நம் பெயர் எழுதி வைத்து விட்டால், அநாவசிய குழப்பங்களைத் தவிர்க்கலாம்.

மக்காவில், டாக்ஸிக்கு, தனி நபர் தலை கணக்கு தான். அதாவது 10 ரியால் என்று கேட்டால், தலைக்கு பத்து ரியால் என்று பொருள்.

ரஷ்ஷான ஹஜ்ஜுடைய நேரத்தில், முடிந்தவரை எங்கு சென்றாலும் குழுவாக ( 6 அல்லது 8 பேர்) சென்றால், சுலபமாக டாக்ஸி கிடைக்கும். அதோடு, காசும் நியாயமாகக் கேட்பார்கள்.

ஒருவர், இருவர் என்றால் யாரும் இல்லாத டாக்ஸியில் ஏறாமல் இருப்பது நல்லது.

மினா சென்றவுடன் அங்கு கேட்டு, எப்படியாவது அச்சடிக்கப்பட்ட, மினாவின் மேப் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். மிகவும் உபயோகப்படும்.

ரூம் டு மினா, மினா டு அரபா, அரபா டு முஜ்தலிஃபா கண்டிப்பாக எல்லோருக்கும் பஸ் வசதி கிடைக்கும். அடுத்தவர் சொல்வதைக் கேட்டு அடித்துப் பிடித்து ஏற வேண்டியது இல்லை. ஆனால், சொன்ன நேரத்துக்குப் போகாவிட்டால், பஸ்ஸை தவற விட நேரும்.

(நினைவு வர வர இன்னும் எழுதுகிறேன்)