Friday, November 4, 2011

200 வயது வரை வாழ ஒரே மாத்திரையால் முடியும்


ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் யுனிவர்சிட்டி பேராசிரியர் பீட்டர் ஸ்மித் கூறுகையில், மனிதனுக்கு வயதாவதை ஒத்திப்போடும் மாத்திரையை கண்டுபிடிப்பது குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 200 ஆண்டுகளைத் தாண்டி வாழமுடியும். அதாவது வயதாவதைத் தடுக்கும். இதுமட்டுமல்லாமல் நோய்நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும் இந்த மாத்திரை உதவும். இந்த மாத்திரை உடலில் உள்ள செல்களை புதுப்பித்து உற்சாகமுடன் இருக்க வகை செய்யும் என்றார்.


மருத்துவத்துறை வளர்ச்சியின் காரணமாக, மனிதனின் சராசரி வயது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

கடந்த 2009ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்தியர்களின் சராசரி வயது 69 ஆக உள்ளது. இந்நிலையில், ஆரோக்கியமான உடல்நலத்துடன் 200 ஆண்டுகளைக் கடந்து வாழ்வதற்கான மாத்திரையை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது அடுத்த 5 ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஹார்வர்டு யுனிவர்சிட்டி பேராசிரியரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவருமான டேவிட் சின்க்ளெய்ர் கூறுகையில், மனிதன் வயதாவதற்கு உடலில் உள்ள ஜீன்கள் குழுவே முக்கிய காரணமாக உள்ளது. அவற்றை புதுப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பை நமது உடல் பெற்றிருக்கிறது. ரெட் ஒயினில் உள்ள ஒரு பொருள் ரெஸ்வரேட்டல் என்ற தாவரத்திலும் உள்ளது. இதை ஈஸ்ட், புழு, ஈ மற்றும் எலி ஆகியவற்றில் செலுத்தியபோது அதன் வாழ்நாள் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு மனிதனின் வாழ்நாளை அதிகரிப்பதற்கான மாத்திரையை தயாரிக்க முயற்சி நடைபெற்று வருகிறதுÕÕ என்றார்.

வணக்கம் முதல்வர் ஜெயலலிதா அவர்களே...

கன்னியாகுமரியில் இருக்கும் வள்ளுவர் சிலையை அப்புறப்படுத்தி விடுங்கள்..காரணம் கலைஞரின் சித்தப்பாதானே திருவள்ளுவர்...சமச்சீர் கல்வி புத்தகத்தில் அய்யன் வள்ளுவரின் புகைபடத்தை சலப்பன் டேப்பு போட்டு ஓட்டச்சொன்னவர்தானே நீங்கள்..இதை தமிழ்நாட்டில் மட்டுமே மிக தைரியமாக செய்ய முடியும்...நீங்கள் பிறந்து வளர்ந்த கர்நாடகாவில் திருவள்ளுவருக்கு இணையான கவிஞர் சர்வஞர் மீது இப்படி எல்லாம் லேபிள் ஒட்டமுடியாது....கர்நாடகம் ஸ்தம்பித்து போகும்...


1200 கோடி செலவில் கட்டப்பட்ட புது தலைமைசெயலகத்தை மருத்தவமைனையாக மாற்ற போகின்றேன் என்று ஆணை பிரப்பித்தீர்கள்..அந்த கட்டிடத்தின் மேல் உங்களுக்கு காழ்புணர்ச்சி வரக்காரணம் ..சிம்பிள் கலைஞர் கட்டியது என்பது மட்டுமே காரணம்.. இதில் ஒரு விஷயம் நீங்க கவனிக்க வேண்டும்.. அவர் கட்டிய பாலத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை..
கலைஞர் திறந்து வைத்த பாலங்கள் சென்னை முழுவதும் நிறையவே இருக்கின்றன..ஏன் இப்போது ஆட்சிக்கு வந்ததும் நிறைய பாலங்கள் நீங்கள் திறந்து வைத்தீர்கள்.கோயம் பேடு பேருந்து நிலையத்தை திறந்து விட்டு நான் திறந்தேன் என்ற பெரிய போர்டு வைத்துக்கொண்டீர்களே அது போலத்தான்...ஆனால் கோயம் பேடு பேருந்து நிலையம் யாரால் உருவாக்கப்ட்டது என்று எல்லோருக்கும் தெரியும்...அது உங்களுக்கு தெரியும்... முடிந்தால் அதையும் மாற்றுங்கள்..

இப்போது 180 கோடி செலவில் கட்டப்பட்ட ஆசியாவின் பெரிய நூலகம் மருத்துமனையாக மாற்றப்போவதாக அறிவித்து இருக்கின்றீர்கள்..

உங்கள் வீட்டை நீங்கள் வாழ யோசித்து யோசித்து கட்டி இருப்பீர்கள்..திடிர் என்று அதில் சர்வதேச தரத்தில் ஓட்டல் அமைக்க முடியுமா?? கிச்சனில் எப்படி பெட்ரூம் அமைக்க முடியாதோ அது போலத்தான் தலைமைசெயலகம், மற்றும் அண்ணா நூற்றாண்டு நுலகத்தை மருத்துவமணையாக மாற்ற முடியாது...

நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்லும் முதல்வர் நீங்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்...ஆனால் இதனை கண்டிப்பாக வலுக்கட்டாயமாக மாற்றலாம்.. ஆனால் அந்த நிறைவு வராது என்பதே உண்மை...பல கோடி மக்கள் வரிப்பணம் விரயம் செய்து நீங்கள் நினைத்ததை நிச்சயம் அடைய முடியும்...வாழ்த்துகள்.. இன்னும் நான்கு வருடங்கள் இருக்கின்றது...

மூன்றாவவது முறையாக பதவி ஏற்றதில் இருந்து நீங்கள் பொது மக்களின் வருத்தங்களை அதிகம் சம்பாதித்து கொள்ளுகின்றீர்கள்..

ஹரி ஓம் என்று சம்ச்சீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று மாதகாலம் பிள்ளைகளை முடக்கினீர்கள்...திரும்ப திரும்ப உச்சநீதிமன்றம் விடாமல் சென்றீர்கள்..உச்சநீதி மன்றத்தின் கதவை அதிகம் முறை தட்டியது உங்கள் ஆட்சியில்தான் என்று நினைக்கின்றேன்...ஆனால் உச்சநீதிமன்றம் உங்களுக்கு குட்டு வைத்தபின்தான் நீதிக்கு தலைவணங்குவதாக சொன்னீர்கள்...ஆனால் இன்னும் சரியான படி சமச்சீர்கல்வி பிள்ளைகளுக்கு புத்தகம் கிடைக்கவில்லை என்பதே உண்மை..

அடுத்ததாக வரி உயர்வு 12 பர்சென்ட் வாட் வரி விதிப்பை 14 சதவீதமாக மாற்றி உத்தரவிட்டீர்கள்.. இதில் கொடுமை 4 பர்சென்ட் வரி விதிப்பில் இருந்த பொருட்களை எல்லாம் 14 பர்சென்ட்க்கு உயர்த்தினீர்கள்..

புது தலைமைசெயலகம் வேண்டும் இடம் போறவில்லை என்று முதல் முதலாக கோரிக்கை எழுப்பியது நீங்கள்தான்.. ஆனால் என்னவென்றே தெரியவில்லை இருக்கும் கட்டிடத்தை இடித்து நாஸ்த்தி பண்ணுவதில் அப்படி உங்களுக்கு என்ன சந்தோஷமோ? ..அல்லது உங்களுக்கு ஐடியா கொடுக்கும் அல்லக்கைகளை நினைத்தால் வெறுப்பாக இருக்கின்றது..

நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் போய்ஸ் தோட்டத்து வீட்டில் வேறு ஒருவர் குடி புக அனுமதிப்பீர்களா? அது போலத்தான் ராணிமேரி கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள். நீங்கள் பின் வாங்கினீர்கள்.. அதுக்கு யார் என்ன செய்ய முடியும்...???

உங்களை பற்றித்தான் எத்தனை சர்ச்சைகள்... நீங்கள் முதலைமைச்சராக இருந்த போது இதே சென்னையில் உங்களால் ஏற்படுத்தப்பட்ட டிராபிக்கில் மூச்சு திணறிய லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்..

இப்போதைக்கு சொத்து குவிப்பு வழக்கு பிரச்சனை காரணமாக ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து போய் இருக்கலாம்.. 1982ல் எங்கள் ஊர் கடலூரில் எம்ஜிஆர் தலைமையில் நடந்த அதிமுக மாநாட்டில் அதிமுக கொள்கை பரப்பு செயலராக உங்களை நியமித்து, உங்கள் அரசியல் பயணத்தை தொடங்கி வைத்தார்...

அன்றைய தினம் நீங்கள் ஊர்வலமாக சென்று மாநாடு நடந்த மஞ்சை நகர் மைதானத்தை அடைந்தீர்கள்... எங்கள் ஊர் கூத்தப்பாக்கத்தில் இருக்கும் பொன்விளைந்த களத்தூர் அம்மன் கோவிலில் இருந்துதான் உங்கள் ஊர்வலம் தொடங்கியது...

அப்போதும் சசிக்கலாவுடன்தான் நீங்கள் அந்த பயணத்தை தொடங்கினீர்கள்..நான் சிறுவன் என்பதாலும் அந்த தொண்டர்படை கூட்டம் போன்றவற்றாலும்.எங்கள் ஊருக்கு திடிர் என்று ஒரு ஸ்டார் அஸ்தஸ்த்து கிடைத்து விட்ட காரணத்தாலும், எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி உற்சாகம்... உங்கள் அரசியல் பயணம் அந்த புள்ளியில் இருந்துதான் தொடங்கியது...அந்த இடத்தை நீங்கள் மறந்து போய் இருக்கலாம்..அப்போது உற்சாகமாக கையசைத்து நான் உட்பட எங்கள் ஊரே உங்களை வழி அனுப்பி வைத்தது...

அதே மாநாட்டுக்கு என் ஆயா அழைத்து கொண்டு போனதால் நான் அதில் கலந்து கொண்டேன்..கலை நிகழ்ச்சியில் பரதநாட்டியம் எல்லாம் ஆடினார்கள்..நீங்களும் முதல்நாள் நிகழ்ச்சியில் ஆடினீர்கள் என்று நினைக்கின்றேன்..

அதன் பிறகு நீங்கள் பல எற்ற இறக்கங்களையும் நம்பிக்கை துரோகங்களையும் சந்தித்து முதல்வராக வெற்றிவாகை சூடினீர்கள்..

இதோ மூன்றாவது முறையாக தமிழகத்தில் முதல்வராக பொறுப்பு ஏற்று இருக்கின்றீர்கள்..

பதவி ஏற்றதும் பத்திரிக்கையாளர்களை கூப்பிட்டு வாரத்துக்கு ஒரு நாள் உங்களிடம் உரையயாடுகின்றேன் என்று சொன்ன போது.. நெகிழ்ந்து போய் நீங்கள் மாறிவிட்டதாக சொன்னார்கள்..ஆனால் நீங்கள் மாற வாய்ப்பே இல்லை என்பதை நிரூபித்து விருகின்றீர்கள்.

நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும், தைரியமான முடிவுகள் என்று பலர் சொல்லக்கேட்டு இருக்கின்றேன்.. ஆனால் அதில் எனக்கு நம்பிக்கையில்லை..

அப்படி உண்மையில் உங்களுக்கு பெரிய கட்ஸ் இருப்பதாக வைத்துக்கொள்ளுவோம் கடைசி வரை சமச்சீர் கல்வியை அமுல்படுத்தாமல் இருந்து இருந்தால் கண்டிப்பாக ஒத்துக்கொள்ளலாம்...

ஆட்சியும் ,அதிகாரமும் ஆமாம் சாமி அமைச்சர்களும் இருக்கும் போது எந்த முடிவையும் நீங்கள் தடலடியாகவே எடுக்கலாம்..ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு கையெழுத்தில் ஒன்றரை லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பியவர் நீங்கள்.. இதை தைரியமான முடிவு என்று சொன்னால் நகைப்பாக இருக்கின்றது..அதிகாரம் என் கையில் இருந்தாலோ அல்லது சுப்பன் குப்பன் யார் கையில் அதிகாரம் இருந்து இருந்தாலோ..மனசாட்சியை கொஞ்சம் இழந்து இருந்தால் போதும், அப்படி ஒரு முடிவுகளை திடும் என்று யார் வேண்டுமானலும் எடுக்கலாம்..

ஆனால் அதே அரசு ஊழியர்கள் வாரிக்கொடுத்த கலைஞரை இந்த தேர்தலில் தூக்கி தூர எரிந்தார்கள்..காரணம் கலைஞரின் வயதை மனதில் வைத்து திமுகவின், வட்டம் மாவட்டம் என்று பலர் ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டார்கள்.. வாரிசு அரசியல், எல்லாம் பொதுமக்களின் எரிச்சலை ஏற்ப்படுத்த, அரசு ஊழியர்கள் உட்பட அதை மனதில் வைத்து, உங்களுக்கு வாக்கு அளித்து வெற்றிபெறச்செய்தார்கள்..

உங்களை வெற்றிபெறச்செய்தது நீங்கள் மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்ற நம்பிக்கைதான் ஆனால் நீங்கள் செய்து கொண்டு இருப்பது மக்கள் முகம்சுளிக்க வைத்துக்கொண்டு இருக்கின்றது..

மூன்றாவது முறையாக தமிழகத்தை நீங்கள் ஆளும் ஆட்சியில் உங்கள் மீதான விமர்சனங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல...

இந்த முறை ஆட்சிக்கு வந்தஉடன் வழக்கம் போல உங்கள் காழ்புணர்ச்சி அரசியலை கையில் எடுத்துக்கொண்டீர்கள்..

குழப்பில் உப்பு அதிகம் போய்விட்டால் எலுமிச்சை பழத்தை பிழிந்து விடும் கதை போல பேசுகின்றீர்கள்..

மீறி திமிரி தாரளமாக வீம்புக்கு செய்யலாம்... அதை ஆதரிக்க சில அல்லக்கைக்ள் இருக்கின்றார்கள்..

வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு உங்களின் துதி பாடிகள் வேண்டுமானால் நடுநிலை போர்வையில் புதிய தலைமைசெயலக கட்டிடத்தை எண்ணெய் சட்டி கட்டிடம் என்று சொல்லிக்கொண்டு இருக்கலாம்.. எங்களுக்கு அது பெரிய விஷயம்..

சென்னையில் தலைநகரில் நீங்கள் இருந்து கொண்டு பல கோடி செலவு செய்த எந்த கட்டிடத்தையும் நேரில் போய் பார்க்காமல், அதில் எந்த அளவுக்கு உள்கட்டுமானபணி நடந்து இருக்கின்றது.. என்று அறிந்துக்கொள்ளாமல் திடும் என்று மாற்றுவது சாத்தியமா? என்று நீங்கள் நேரில் ஒரு முறை பார்த்து விட்டு இதை மாற்றித்தான் ஆக வேண்டும் என்று சொன்னாலும் அதில் ஒரு நியாயம் இருக்கின்றது...

ஆனால் கலைஞர் கட்டினார் அது மட்டும்தான் உங்கள் கண்களை உறுத்துகின்றது அல்லவா??

இப்போதும் ஒன்றும் குடி முழுகி போய்விடவில்லை.. நேரில் போய் பாருங்கள் தலைமைசெயலகத்தை, நூற்றண்டு விழா நூலகத்தையும்...கலைஞர் எந்த கட்டடி வாசலிலும் காவல் காத்துக்கொண்டு இருக்க போவதில்லை...

உங்கள் ஈகோவுக்கு மக்களின் வரிப்பணத்தை காலி செய்ய போகின்றீர்கள்..மக்களின் வரிப்பணத்தை காலி செய்ய அவ்வளவு பேராசையா?

ஸ்பெக்ட்ரமில் அரசுக்கு வருமான இழப்பு என்றுதான் ராஜாவும் கனிமொழியும் சிறையில் இருக்கின்றார்கள்..

நீங்களும் அதைத்தான் செய்கின்றீர்கள்..

200கோடிக்கு வீம்புக்கு சமச்சீர்கல்வியை எதிர்க்க பழைய புத்தகங்களை அச்சடித்தீர்கள்..

1200கோடி தலைமைசெயலகத்தை வீணாக்கி இருக்கினறீர்கள்..

180 கோடி செலவில் கட்டப்பட்ட அண்ணா நுற்றாண்டு நூலகம்..

உங்கள் ஈகோவுக்காக எல்லாம் வீணாக்கபடுகின்றது..

இதை மாற்ற ஆகும் செலவு எத்தனை கோடி?? அதில் இருக்கும் பொருட்கள் விரயம் என்று கணக்கு போட்டால் தலை சுற்றுகின்றது...

நீங்கள் ஆட்சின்னு வந்து ஒரு வருடம் கூட ஆகிவில்லை...1500 கோடி ருபாய் வரிப்பணம் பாழ் செய்யது இருக்கின்றீர்கள்.

கட்டங்களை மாற்றுக்கின்றேன் இடிக்கவில்லை என்று நீங்கள் சொல்லலாம்..நீங்கள் அதையும் செய்வீர்கள்..அதனால்தான் இப்போதே சொல்லுகின்றோம்...

நம் நாடு செல்வம் கொழிக்கும் நாடு அல்ல...மக்களும் அப்படித்தான்...

முதல்வர் அவர்களே...பழைய சோற்றில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் வெங்காயம் கடித்து பழைய சோற்றை நீங்கள் சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

நீங்கள் சாப்பிட்டு இருக்க வாய்ப்பில்லை பார்ன் இன் சில்வர் ஸ்பூன் நீங்கள்..ஆனால் நம் மக்கள் அப்படி அல்ல இன்னும் பல குடும்பங்கள் அப்படித்தான் சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.. அப்படி பட்ட ஊரில் 1500கோடி பணத்தை விரியமாக்குவது எந்த வகையில் நியாயம்.??

கோடி கோடியாக கலைஞர் குடும்பம் கொள்ளை அடித்தது என்றால் நிருப்பித்து உள்ளே தள்ளுங்கள்..ஒரு கையெழுத்தில் ஒரு கட்டிடத்தையே மாற்றும் அதிகார சக்தி இருக்கும் உங்களுக்கு கலைஞர் அவர் ஆட்சியில் தவறு செய்து இருந்தால் இந்நேரம் அவர் மீது வழக்கு பதிந்து இருக்கலாமே...??? ஒரு வேளை சட்டியில் எதுவும் இல்லையோ???

கலைஞர் கருணாநிதி மேல் வன்மம் என்றால் அவர் கடந்த ஆட்சியில் அடித்த தில்லுமுல்லுகளை வெளியே எடுத்து வாருங்கள் வழக்கு பதியுங்கள்... அதை விட்டு விட்டு பல பேர் இரவு பகல் பாராமல் அரும்பாடு பட்டு மக்கள் வரிப்பணத்தில் கட்டிய அரசு கட்டடிடங்களை அதிகாரம் இருப்பதால் ஒரு கையெழுத்தில் மாற்றலாம் என்று நினைக்கின்றீர்கள்..

போன ஆட்சியில் நிறைய நல்லதிட்டங்கள் செய்தார்கள்.. மக்கள் வெறுப்பினை அமோகமாக சாகுபடி செய்தார்கள்.. வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்..அதனால்தான் சென்னை திமுகவின் கோட்டையாக இத்தனைநாளா இருந்தும், இந்த முறை பல நகராட்சிகளை அதிமுக கைபற்ற காரணமாக அமைந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்..

ஆனால் நல்ல பெயரை தக்க வைத்துக்கொள்ளாமல் நீங்களும் அதே தவறைத்தான் செய்கீன்றீர்கள்..

ஒரு அரசு ஊழியன் 60 வருடம் அவன் வகித்த பதவியில் நிலைத்து இருக்கலாம்..நீங்கள் 5 வருடம்தான்..அதை ஒரு முறை திரும்பவும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்..

நீங்கள் மிகபெரிய வல்லரசு நாட்டின் பிரதமரோ அல்லது அதிபரோ அல்ல.. இந்தியாவில் இருக்கும் ஒரு மாநிலத்தின் முதல்வர்...அவ்வளவே..

மனிதனாக பார்த்தால் பிளாக் ஹோல்,மிகப்பெரிய அண்டவெளி,அதில் இருக்கும் துகளான சூரிய குடும்பம்,அந்த சூரிய குடும்ப துகளில் நாம் வாழும் பூமி, அந்த பூமியில் மூன்று பங்கு நீர், ஒரு பகுதி நிலப்பரப்பில்,இந்தியாவில்,தமிழ்நாட்டில், சென்னையில் இருக்கும் மிகச்சிறிய மைக்ரோ துகள்தான் நீங்களும் நானும் என்பதை மட்டும் மறந்து வீடாதீர்கள்..

ஆனால் இவ்வளவு சொன்னாலும், எனக்கு தெரிந்து ஒரே ஒரு விஷயத்தில் உங்களுக்கு காலம் எல்லாம் நன்றி சொல்ல நான் கடமைபட்டு இருக்கின்றேன்..இந்த விஷயத்தில் யார் எது சொன்னாலும் நான் உங்களை விட்டுக்கொடுக்கவே மாட்டேன்...அது சென்னையின் தாகத்தை போக்கியவர் நீங்கள்..

மழை நீர் சேகரிப்பின் மூலம் மெட்ரோ வாட்டர் லாரிகளின் இரைச்சல் சத்தத்தை சென்னையில் ஒடுக்கியவர் நீங்கள்தான்..இன்று தண்ணீர் பிரச்சனையில் சென்னை ஒரளவு தன்னிறவு அடைய உங்கள் அந்த அரசானை வாழ்நாள் முழுவதும் உங்கள் பேர் சொல்லும்...விராணம் திட்டம் சாத்தியமே இல்லை என்று உதடுபிதுக்கினார்கள். ஆனால் நீங்கள் வசப்படுதினீர்கள்..திறமை இல்லாதவர் அல்ல நீங்கள்.. உங்கள் திறமை ஈகோவினால் வீணடிக்கபடுகின்றது என்பதே மறுக்கமுடியாத உண்மை...

இது போல மக்கள் பணிகளில் உங்கள் திறமையை நிறுபித்துகாட்டுங்கள்..தமிழகசாலையில் நீர் தேங்காத உலகத்தர சாலைகள் அமைப்பேன் என்று சூளுரையுங்கள்..

ஊழல் இல்லாத அரசு நிர்வாத்தை நடத்தி காட்டுவேன் என்று சவால் விடுங்கள் .. அதைவிட்டு விட்டு பலர் வியர்வை சிந்தி இரவு பகலாய் உழைத்து உருவாக்கியதை உதாசினப்படுத்தி உருகுலைக்காதீர்கள்.. காரணம் ஒவ்வோரு கட்டிடத்திலும் உழைத்தவனின் வலிகள் இருக்கின்றது என்பதையும் உயிர்தியாகங்கள் இருப்பதையும் மறந்து வீடாதீர்கள்..

சென்னையில் அண்ணா சாலையில் அந்த பக்கம் போகும் போது எல்லாம் பொலிவிழந்து இருட்டில் 1200கோடியில் உருவாக்கப்பட்ட தலைமைசெயலகம் இருளில் மூழ்கி இருப்பதை நேரில் பார்க்கும் போது எல்லாம் நெஞ்சம் விம்முகின்றது..

கலைஞர் பெயரை இது போன்ற கட்டிடங்களை மாற்றி விடுவதால் அழித்து விட முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது மிகப்பெரிய முட்டாள்த்தனம்.

இல்லை நான் கலைஞர் பெயரை வராலாற்றில் இருந்து அழித்து விட்டுதான் மறுவேலை என்று நீங்கள் விரும்பினால்...

குமரியில் வள்ளுவர் சிலை இருக்கும் வரை கொள்ளை அடித்தரோ? குடும்ப அரசியல் செய்தாரோ?? அந்த சிலை இருக்கும் வரை கலைஞர் புகழ் காலமெல்லம் நிலைத்து நிற்கும்.. அதுக்கு என்ன செய்ய போகின்றீர்கள்..??

செய்தால் எதையும் சுத்தமாக செய்யுங்கள்.. பாரபடசம் கட்டிடங்களுக்கு மட்டும் வேண்டாம்..சென்னை பாலங்கள், வள்ளுவர் கோட்டம், என்று நிறைய கலைஞர் பெயர் சொல்ல நிறைய இருக்கின்றது...இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றது.. உங்களை அசைக்க ஆளே இல்லை...

இதுவரை உங்கள் பெயர் சொல்லுவது போல ஏதாவது கட்டிட்ங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றதா? என்றால் எதுவும் எனக்கு தெரிந்து இல்லை...நான் சொல்லுவது பிரமாண்டமான கட்டிடங்கள், பாலங்கள்....இல்லை...நேரு விளையாட்டு அரங்கம்.. அதுகூட மத்திய அரசின் நிதியால் தெற்காசிய விளையாட்டு போட்டி நடக்கும் போது கொடுக்கபட்டு கட்டப்பட்டது....இடத்தை மட்டும் ஒதுக்கி கொடுத்தீர்கள்.. மாநில அரசு பணத்தில் உதாரணத்துக்கு புதியதலைமைசெயலகம்..,கிண்டி,கோயம்பேடு,பாடி போன்ற பெரிய மேம்பாலங்கள்.. மெட்ரோ ரயில்,தலைமைசெயலகம்,வள்ளுவர் கோட்டம், அண்ணா நூற்றாண்டு மேம்பாலம் என்று குறிப்பிட்டு சொல்லுங்கள்.. சரி.. நேரு விளையாட்டு மைதானத்தை இரண்டு வருடத்தில் கட்டி முடித்தீர்களாமே?200 கோடி செலவில் சென்னை அரசு பொது மருத்தவமணை கட்டினீர்கள்..அதே போல 10 வருடத்தில் வேறு எதாவது பாலங்கள் மற்றும் கட்டிடங்கள் கட்டி இருக்கின்றீர்களா??

மேலே இருக்கும் படங்கள் புதியதலைமைசெயலவம் எப்படி உங்களால் இரவில் உதாசனபடுத்தபட்டு இருப்பதை தெரிவிக்கவே நான் புகைபடங்கள் எடுத்தேன்..பல பேர் இரவு பகலாக உழைத்து உருவாக்கிய கட்டிடத்தையும் பெரிய வளாகத்தையும் மனசாட்சி இருப்பவர் யாரும் இப்படி செய்யவே மாட்டார்கள்.. சாரி நான் உங்களிடம் மனசாட்சி பற்றி பேசிவிட்டேன்.. மன்னிக்கவும்...

சடுதியில் மாறும் வாழ்க்கை நம்முடைய வாழ்க்கை இதில் எதுக்கு இவ்வளவு ஈகோ உங்களுக்கு என்று தெரியவில்லை...?? நான் நான் என்று நீங்கள் பேசுவதை தமிழகம் அறியும்...

கடவுள் நம்பிக்கை உங்களுக்கு இருக்கும் என்று நினைக்கின்றேன்.... எல்லா வினைக்கும் எதிர் வினை உண்டு...ஆனால் நீங்கள் வணங்கும் கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கின்றார் என்பதை மட்டும் மறவாதீர்கள்.

உங்கள் அமைச்சரவை சகா மரியம் பிச்சை, நீங்கள் நடத்திய எம்எல்ஏ பதவி ஏற்ப்பு விழாவில் கலந்து கொள்ள, திருச்சியில் இருந்து காலையில் சென்னைக்கு கார் எறும் போது, தான் இன்னும் ஐந்து வருடத்துக்கு அமைச்சர் என்று நினைவில்தான் பயணப்பட்டு இருப்பார். ஒரு நொடியில் அவர் வாழ்க்கை மாறிப்போனதை நீங்கள் அறியாதவர் அல்ல...

கூத்தப்பாக்கத்தில் உங்கள் அரசியல் பயண ஊர்வலம் தொடங்கிய போது உங்கள் வாகனத்தை கை அசைத்துக்கொண்டு துரத்திய படி ஓடி வந்த பல சிறுவர்களில் நானும் ஒருவன்...நீங்கள் சர்ச் பார்க்கில் மெத்த படித்தவர்..நான் அப்படி அல்ல.. எனக்கு தெரிந்து இருப்பதை எழுதி இருக்கின்றேன்..

பிரியங்களுடன்
பயணன்

உங்கள் பேஸ்புக் கணக்கும் ஹாக் செய்யப்பட்டுள்ளது.


நீங்கள் பேஸ்புக் அக்கௌன்ட் வைத்திருக்கிறீர்களா? உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது என்று பார்ப்போம்.

உங்களுக்கு தெரியாமல் ஒருவர் ஐ டி இல் போய் ஒரு அசிங்கமான சைட்டுடைய பக்கத்தை லைக் செய்தால் என்னவாகும் நிலைமை?

அதனால் அடிக்கடி பேஸ்புக் சைட்டில் சென்று யாராவது எப்போதாவது உங்களுடைய அக்கௌன்டை ஹேக் செய்திருக்கிரார்களா என்று பார்ப்பது நல்லது தானே..

இதை செய்வதற்கு பேஸ்புக் லாக்இன் செய்து வலது பக்கத்திலுள்ள அக்கௌன்ட் செட்டிங்க்ஸ் சென்று செக்யூரிட்டி என்ற டேப் எடுத்து ஆக்டிவ் செஷன்ஸ் என்பதில் கிளிக் செய்து பாருங்கள். இப்போது தெரியும். யார் யார்,எங்கிருந்தெல்லாம் உங்கள் அக்கௌண்டில் நுழைந்திருக்கிறார்கள் என்று. 

இனி எல்லாம் உங்கள் கையில் ...