Wednesday, January 5, 2011

யூஸ் அண்ட் த்ரோ மின்னஞ்சல்

நீங்க ஒரு மின்னஞ்சல் கொடுத்த அதுக்கு ஒரு லொள்ளு மெயிலில் இருந்து கரைச்சல் மெயில் வரை அனுப்பி அவர் குஷிப்படுகிறார். அது பத்தாமல் அவர் லாக்கின் பண்ண தளத்துக்கு எல்லாம் உங்களையும் சேர்த்து இன்வைட் செய்வாரு மற்றும் புதிய புதிய ஸ்பேன் மெயிலைக்கூட விடாமல் முடிந்த அளவு பார்வேர்ட் செய்ய முயற்சியாவது செய்வார். அப்ப நம்ம தலைவரு புதுசு புதுசா முளைச்ச தளத்துக்கொல்லாம் தெரியாமல் கொடுத்திருந்த அந்த மின்னஞ்சலுக்கு புதுசு புதுசா யோசிச்சு மெயில் வரும்... நிற்க.


இப்படிப் பட்ட சூழலில் தற்காலிக மின்னஞ்சல்கள் துணைசெய்யும். யாஹூ மின்னஞ்சல் சேவையுடன் இந்த தற்காலிக மின்னனஞ்சல் வசதியை அறிமுகப் படுத்தியுள்ளார்கள். யூஸ் அண்ட் த்ரோ கப்பைப் போல மின்னஞ்சல் முகவரியை மாற்றிக் கொண்டே போகலாம். அடிப்படையில் உங்களைச் சார்ந்த பெயரிட்டுக் கொண்டு கடைசியில் ஏதேனும் எண்களைப் போட்டு முகவரிகளை உருவாக்கலாம் அல்லது உங்கள் விருப்பமே.

உதாரணத்திற்கு எனது யஹூக் கணக்கில் மேலும் ஒரு ellam_summa-test@yahoo.com என்று ஒரு கணக்கை உருவாக்குகிறேன். வேண்டிய தளங்களில் பதிவு செய்கிறேன், வேண்டியவருக்கெல்லாம் கொடுக்கிறேன். கொஞ்ச காலம் கழித்து அந்த மெயிலுக்கு தேவையில்லாத ஸ்பேன் வருகிறதென்றால் அதைப் அப்படியே லேபிள் போட்டு வரும் மின்னஞ்சல்களைப் பிரித்து தேவையான முகவரிகளை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். அதும் சில காலங்களில் யாரும் தேவையில்லை என்றால் அந்த முகவரியை அப்படியே அழித்தும் விடுகிறேன். எப்படி வசதி! மேலும் சில பல முகவரிகளை உருவாக்கி வெவ்வேறு தொடர்புகளுக்கும் நான் கொடுக்கலாம் இப்படி ellam_summa-friends@yahoo.com ellam_summa-jobs@yahoo.com ellam_summa-bloggers@yahoo.com இதில் கவனித்தால் நமது அடிப்படை பெயர் மாற்றாமல் கடைசிப் பெயரை மட்டும் மாற்றிக் கொள்ளலாம் அல்லது மொத்தமாக புதிய முகவரியையும் உருவாக்கலாம்.அதிக பட்சமாக 500 முகவரிகள் உருவாக்கிக் கொள்ளலாம்.


எப்படி?
யாஹூவில் நுழைந்தப் பின் அதன் வலது புற optionயை தேர்வு செய்யவும்

பிறகு Disposable Email address தொகுதியில் புதியதாக தற்காலிக முகவரியை உருவாக்க add செய்யவும்


அடுத்து வேண்டிய அடிப்படை பெயரைக் கொடுக்கவும் அடுத்த பகுதியில் குறியீடுகள் கொடுக்கவும் எல்லாம் உங்கள் வசதிக்கேற்ப


பிறகு சேமித்தப் பிறகு, அந்தப் பக்கத்தில் இந்த முகவரி சேர்ந்துக் கொள்ளும். இனி இந்த முகவரியை யாரிடமும் கொடுக்கலாம். இந்த முகவரிக்கு வரும் அஞ்சல்கள் தானாகவே ஸ்பேன் பெட்டிக்குப் போகும் அதனால் உங்கள் முக்கிய கணக்குக்கு எந்த தொந்தரவும் வராது. சரி, இந்த அஞ்சலுக்கு சிலர் வேண்டிய தகவல்களை அனுப்பினால் ஸ்பேன்னிலிருந்து அதை எப்படி பிரிப்பது?
அதற்கு பில்டர் எனப்படும் வடிப்பானை பயன்படுத்தலாம் அதற்கு முன் folderயை உருவாக்க வேண்டும். இங்கே சென்று புதிய போல்டரை சேர்த்து பெயரிட்டுக் கொள்ளவும்.

அடுத்து வடிக்கட்ட[filter] இங்கே சென்று filter -> add filter கொடுத்து போனாபோகுதுனு வடிப்பானுக்கு ஒரு பெயரைக் கொடுத்திட்டு
அனுப்புனர் வாரியாப் பிரிக்க sender கட்டத்தில் அனுப்புனர் முகவரியைப் போடவும் அல்லது
உங்கள் முகவரி வாரியாப் பிரிக்க recipient கட்டத்தில் உங்களின் தற்காலிக முகவரிகளில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்யவும் அல்லது
தலைப்பு வாரியாகப் பிரிக்க subject கட்டத்தில் வேண்டிய சொற்களைப் போட்டுக் கொள்ளவும்


கடைசியில் எந்த போல்டருக்கு அனுப்ப வேண்டுமோ அதை தெரிவு செய்யவும் கடைசியாக சேமிக்க மறக்காதீர்கள்.அவ்வளவே
இனி அந்த போல்டரில் நீங்கள் பிரித்த வகை அஞ்சல்கள் தானாக வந்து சேர்ந்துவிடும்

தேவையான போது இந்த தற்காலிக முகவரிகளை இந்த Disposalble Email address தொகுப்பில் மாற்றவும் அழிக்கவும் முடியும்பிற்சேர்க்கை:[தடங்கலுக்கு வருந்துகிறேன்.]

இப்போதுதான் கவனிக்கப் பட்டது. சில கணக்கிற்கு இந்த வசதி உடனடியாகத் தெரிவதில்லை, விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக கோரிக்கைக்கு வாடிக்கையாளர் உதவியையும் அணுகலாம். 'Disposable Email Addresses' வசதியைத் தரும் மற்றும் சில தளங்கள்.
இவை இலவசமானவைதான்
http://www.emailias.com/learning/faq2.php
http://www.e4ward.com/
www.gishpuppy.com


பதிவுக்கு ஓட்டுப் போடப் போறீங்களா?
நீங்க பாட்டுக்கு குத்துங்க நான்பாட்டுக்கு எண்ணுறேன்

கலர் கலர் வாசனைகள்

எங்கோ பச்சைக்கொடிக்
காட்டப்பட்டதால்
காடுகள் ஒடிக்கப்பட்டு
மழைக்குச் சிவப்புக்கொடி
செய்யப்படுகிறது


அணைகள் கட்டும் கல்லில்
வெள்ளைச்சட்டை வேந்தருக்கு
சிலைகள் கட்டிவிட்டு
கருப்புச்சட்டையணிந்து நீருக்கு
கலகம் செய்யப்படுகிறது

மஞ்சள் விளக்குப் போட்டாலும்
மதிக்காமல் விரைகிறோம்
சிவப்பு விளக்குப்போட்ட
வாகனத்தில் மருத்துவம் சேருகிறோம்

பனிச்சறுக்கல்களில் மஞ்சள் சூரியனால்
நடத்தப்படும் விரிச்சல்களும் வெடிப்புக்களும்
யாரோ ஒருவர் வீட்டில் திறக்கப்படும்
நீலநிற ஓசோன் குளிருட்டிக்குத் தெரியாது.



அப்பா தூக்கிப் போட்ட
வெளிர் சிவப்பு பாலத்தீன் பைகளால்
வரண்டுவிட்டது அந்த கண்மாய்
மகன் வீட்டு வெள்ளி நிற தண்ணீர் குழாய்களின்
வெளித் துவாரங்களைப் போல

எல்லாம் ஒரு விளம்பரம்

பாரம்பரிய உடைத்திருவிழாவில்
விளம்பரமில்லாமல்
அம்மணத்தோடு ஒரு
குழந்தை

*****


பிரதான பத்திரிகையில்
இரண்டாம்பக்கம்
இரண்டாம் நிலைப் பத்திரிகையில்
எல்லாம் முதல் பக்கம்
என மணமகள் தேவை விளம்பரம்
கொடுத்தாயிற்று ஆனால்
பக்கத்தில் வரதட்சணை வழக்கில்
இருவர் கைது என்ற செய்தியை
கவனிக்கத் தவறிவிட்டோம்.


*****


கோரிக்கைகளும்
விளம்பரங்களும்
இல்லாத உண்ணாவிரதம்
பட்டிணிச்சாவு



*****


பசுமை சூழ்ந்த புல்வெளி
பிம்பம் கொண்ட விளம்பரப் பலகையை
வெறித்துப் பார்க்கிறாள் தாய்.
வெற்று பால் பாக்கெட்டுகளை
நுகர்ந்துப் பார்க்கிறாள் மகள்.
இனி பால் தரப்போவது அந்த பசுயில்லையே ..

ஒரு டைரி குறிப்பு -1

எங்க குடும்பம் கொஞ்சம் பெருசுங்க. தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா ந்னு ஒரு 100, 150 பேரு எங்க ஊருல இருப்பாங்க எனக்கு வயாசாகிட்டு இருக்குன்னு ஊரு முழுக்க கவலை. பாசக்காரனுகன்னு நினைச்சேன், அவனவன் அவனவனுடைய ஆசைய நிறைவேத்திக்க என்னைய பலிகடாவா நிக்க வைச்சிருக்கானுகங்க அப்படிங்கறது ரொம்ப லேட்டா எனக்கு இப்போத்தான் தெரிஞ்சுது...

எனக்கு இப்போத்தான் ஏழரை சனி ஜாதகக் கட்டம் முழுசுமா ஒரு சுத்து சுத்தி கபடி ஆடிட்டு போயிருக்கிறாரு... அவரு ஆடுன ஆட்டத்துல செவ்வாய், புதன், வெள்ளி எல்லாம் எடம் மாறி அவங்க வீட்டையெல்லாம் வாடகைக்கு விட்டுட்டு தெறிச்சு ஓடி போயிட்டாங்க. கல்யாணத்துக்கு நான் ரெடின்னு சொன்னா பத்தாது, குருவாம்... அவர் வீட்டை இப்போ யாரோ பார்த்துட்டு இருக்காங்களாம், அவர் அவர் வீட்டுல காலடி எடுத்து வைச்சாத்தான் கல்யாணம்ன்னு சொல்லீட்டாங்க... ஏங்க, நான் தெரியாமத்தான் கேக்கிறேன், அவரு வீட்டுக்கு அவரு வரட்டும் போகட்டும். அதுக்கு ஏன் என் வாழ்க்கையில் விளையாடணும்?

சரி, விசயத்துக்கு வருவோம். தம்பிக்கு குரு பலன் மட்டும் வரட்டும், கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடுன்னு பல ஊருல இருந்து பொண்ணுக ஜாதகத்தை இறக்கிற மாட்டோம்னு வீட்டுக்கு வந்தா வாய் ஓயாம பேசிட்டே இருப்பாங்க.

அவங்க பாச மழையில் நனைஞ்சு போய் ஒரு நாள் என் பாங்காளிகிட்ட என் மேல உனக்கு அவ்வளவு பாசமாடான்னு கேட்டா, "பங்கு, ஜான் வாக்கர்ன்னு ஒருத்தர் கருப்பு லேபிள், சிவப்பு லேபிள்ன்னுட்டு 1820 லிருந்து காய்ச்சிட்டு இருக்காராம். அதெல்லாம் நாங்க எப்ப கண்ணுல பாக்கறது? உனக்கு கல்யாணம்ங்கற சாக்குலதானே இதெல்லாம் நினைச்சுக்கூட பார்க்க முடியும். அது மட்டுமில்லாம டாஸ்மாக் சரக்கு குடிச்சி குடிச்சி உடம்பு பழகிடுச்சி. அது ஒசத்தி சரக்கு, ஒத்துக்காம போயிடுச்சின்னு ரெண்டு நாள் வீட்டு பக்கம் போகலைன்னா கூட யாரும் கண்டுக்க மாட்டாங்கள்ல???" ன்னு அவன் கனவை நினைவாக்க நாள் பாத்துட்டு இருக்கான்.


சரி இவன் சின்ன பையன், நம்ம கிட்ட காமெடி பண்ணறான்னு நினைச்சுட்டு ஒரு பெருசு கிட்ட எனக்கு கல்யாணம் பண்ணி பார்க்க உங்களுக்கு அவ்வளவு ஆசையான்னு கேட்டேன். "நாம தட்டை கையில கொண்டு போய் வரிசையா நின்னு வாங்கி சாப்பிடுவோமே அதுக்கு பேரென்ன பஃபே தானே?" ன்னு கேட்டார். ஆமா தாத்தா, அதுக்கென்ன இப்போ??? என நான் திருப்பி கேட்டேன். காங்கிரசம்புதூர்காரர் பையன் கல்யாணத்துல சீட்டு விளையாண்டுட்டு இருந்தோம். அந்த கல்யாணத்துல சாப்பாடு அது மாதிரிதான். பேச்சு வாக்குல இதே மாதிரி எங்க ஊரு பசங்க கல்யாணத்துலையும் போடணும்னு சொல்லிட்டு இருந்தேன். உடனே இந்த ஆயிக்கவுண்டன் பாளையத்துக்காரங்க "எச்சை கையில காக்கைய கூட துரத்தாதவங்க சாப்பாடு போடறாங்களாம்ன்னு கிண்டல் பண்ணுனாங்க. அன்னைக்கு என் துண்டை உதறி சபதம் போட்டிருக்கேன்னு அவரு ஒரு கொசுவர்த்தியை சுத்தி முடிச்சாரு.

பிச்சைக்காரங்க மாதிரி "கையில ஏந்தி சாப்பிடறது, ஜெயில களி வாங்க லைன்ல நிக்கறது மாதிரியான சாப்பாடெல்லாம் தேவையில்லை, வந்தவங்களுக்கு உக்கார வைச்சு தலை வாழையில் வடை பாயசத்தோட சாப்பாடு போடறதுதான் மரியாதைன்னு சொல்லிட்டு நீங்க பாட்டுக்கு ரம்மியை கன்டினியூ பண்ணிருக்கலாம். எதுக்கு வயசான காலத்துல இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகிட்டு??" ந்னு அவரை சமாதானம் பண்ணலாம்னு பார்த்தா "உன்னோட ஒரு கல்யாணந்தான் பாக்கி, அதுல இதை பண்ணியே ஆகணும்ன்னு திரும்பவும் துண்டை உதறி தோளில் போட்டார்.

தாத்தா, இதெல்லாம் நீங்க பார்த்து கல்யாணம் பன்னினா? நான் பெங்களூரிலிருந்து ஒரு பொண்ணை இழுத்துட்டு வந்து நான் இவளை கல்யாணம் பண்ணிட்டேன், ஆசிர்வாதம் பண்ணுங்கன்னு சொன்னா என்ன பண்ணுவீங்கன்னு அப்பாவியாய் அவங்களோட ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குன்னு பார்க்கறதுக்காக கேட்டேன்.

உன்னை வெட்டி போட்டுற மாட்டோம், நம்ம சாதியென்ன, சனமென்ன?? கனவுலகூட நீ இதை நினைச்சிறக்கூடாது என கட்டளை போட்டார். தாத்தா, எனக்காக சபதம் எல்லாம் போட்டிருக்கிறீங்க, இப்போ என்னை வெட்டிடுவீங்கன்னு அசோகன், நம்பியார், பி.எஸ்.வீரப்பா மாதிரி பேசறீங்க, என்ன தாத்தா இதெல்லாம்ன்னு கேட்டேன். ஆமா, நீ பாட்டுக்கு கல்யாணம் பண்ணிட்டு பெங்களூருக்கு போயிடுவ, இங்க டீக்கடை, ஆலமரம்ன்னு எங்க போனாலும் எங்களை எளக்காரமாத்தான் பார்ப்பாங்க. உன்னைய வெட்டுனும்ன்ன வைச்சுக்க, எங்க பார்த்தாலும் எந்திரிச்சு நிப்பாங்க என மீசையை முறுக்கினார்.

சிம்ரன் கடுங்கோபக்காரின்னு தினமலரில் போட்டிருக்கிறதை 10 தடவை படிக்கறதுக்கு டீக்கடைக்கு போவீங்க... தாயம் ஆடுவதுக்கு ஆலமரத்துக்கு போவீங்க. அங்க இருக்கறவங்க எல்லாரும் ஐநா சபையில நிரந்தர உறுப்பினர்கள். அவங்ககிட்ட மரியாதை வாங்கறதுக்கு ஆடு வெட்டுவேன் கோழி வெட்டுவேன்னு சொல்லற மாதிரி என்னைய வெட்டுறன்னு சொல்லறீங்கன்னு சொல்லிட்டு (எல்லாம் மனசுக்குள்ளதான்) சொல்லிட்டு எஸ்ஸாகி அமெரிக்கா வந்தாச்சு.



"இனி மேல் இந்த மாதிரி யாருகிட்டையும் கேக்க மாட்டேன்" அப்படின்னு 100 தடவை எழுதிருந்தது. (இம்போசிசன் போலிருக்கு!!!).
இது ஒரு வருத்தமுள்ள வாலிபனின் டைரிக் குறிப்பு. டைரி அதுக்கப்புறம் காலியா இருந்தது. ஒரு வேளை பயலுக்கு டைரி எழுதறக்கெல்லாம் நேரம் இல்லை போலிருக்கு... படிச்சது தப்புத்தான், ஆனா அடுத்தவன் வகையா ஆப்பு வாங்குறப்போ மட்டும் பல்லு மொத்தமும் வெளிய குதிக்குதே... அதுக்காகவே திரும்பவும் அவனோட பழைய டைரிய படிக்கலாம்ன்னு இருக்கேன், படிக்கட்டுமா?

கம்ப்யூட்டர் யுகத்தின் அடுத்த புரட்சி

உள்ளங்கையில் வைத்து பட்டனை செல்லமாக தட்டினால் கம்ப்யூட்டர் இயங்கத்துவங்கும். நீங்களும் அதை இயக்கலாம். இன்டர்நெட் பார்க்கலாம். இ-மெயிலும் தரலாம்.என்னது இப்படி ஒரு அதிசயமா என்று வியக்கிறீர்களா? ஆம், கையடக்க… இல்லையில்லை; உள்ளங்கை அடக்க, மிகவும் சிறிய அளவில் “ஸ்டிக்கர்’ வடிவ கீ போர்டு வந்து விட்டது. இந்தப் புதிய கருவிக்கு, “ஸ்கின்புட்’ என்று பெயர். நம் காதால் கேட்க முடியாத மிகக் குறைந்த சத்தங்களைக் கண்டறியும் அடிப்படையில் இக்கருவி இயங்கும். நம் உள்ளங்கையில் இதை வைத்துக் கொண்டு, லேப்-டாப், கம்ப் யூட்டர், மொபைல், ஐபாட் ஆகியவற்றை இயக்க முடியும்.

மைக்ரோசிப் வடிவிலான புரஜக்டர்கள் தான் கீபோர்டு வடிவில் இருக்கும். அதில் உள்ள பட்டன் களை நீங்கள் தட்டினால் அதிலிருந்து எழும் சத்தத்தை வைத்து அதற்கான விளைவுகள் திரையில் உருவாகும்.முன்னங்கைகளில் எந்த இடத்தில் எந்த சிப் இருக்கிறதோ அந்த, “சிப்’பில் உள்ள பட்டனை மிகவும் செல்லமாக நீங்கள் தட்டினால் போதும்; என்ன எழுத்து வரவேண்டுமோ அதுவரும் வகையில், கைகளில் பல்வேறு கோணங் களில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்களிலிருந்து செய்தி கடத்தப்படும் வகையில் இந்தப் புதிய கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.


இந்தக் கருவி, 20 வாடிக்கையாளர்களைக் கொண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது சந்தைக்கு வரக்கூடும்.

பிறக்கப்போகும் குழந்தை ஆணா?? பெண்ணா???

உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கிறாரா? இருப்பினும் பிறக்கும் குழந்தை ஆணா?? அல்லது பெண்ணா??? அறியும் ஆவல் எல்லோருக்கும் இருக்கும் இந்த அட்டவனை மூலம்.. உங்கள் ஐயத்தினை போக்க முடியும். உங்கள் மனைவியின் வயதினையும் கருத்தரித்த மாதத்தினையும் இணைத்து பார்க்கும் பொழுது ஆணா? பெண்ணா? என்று தெரிந்துவிடும். இது சீனர்கள் இற்றைக்கு 700ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்துள்ளனர். இது முற்றிலும் உண்மையாகவே உள்ளது. நீங்கள் பரீட்சித்து பார்த்து உங்கள் கருத்தை கூறுங்கள்.

உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா- பொண்ணா என் பார்க்க உதவும் ஒரு அட்டவணை. மேலிருந்து கீழாக உள்ள வயதில் தாயின் வயதையும், இடமிருந்து வலமாக தாய் கருத்தரித்த மாதத்தையும்(கடைசி மாதவிடாய் மாதம்) இணைத்து பிறக்கும் குழந்தையை கண்டுபியுங்கள்.



(An ancient Chinese secret: This chart can be used to predict the sex of your unborn child. It has been said to be 99% accurate. The chart was buried in a tomb near Beijing for 700 years and now can be viewed at the Institute of Science in Beijing. To predict what sex your baby will be, locate the age the mother will be when she gives birth and the month the child was conceived. )




This chart is for entertainment value only. Although the results have been found to be incredibly accurate, illamai.tk or any affiliate thereof cannot guarantee the findings of the chart below.