Saturday, December 3, 2011

அடிச்சுக்கூட கேப்பாய்ங்க... அப்பவும் சொல்லிறாதீங்க!

கோலிவுட்டை 'ஜாலிவுட்’ ஆக வைத்து இருக்கும் கிச்சுகிச்சு காமெடியன்கள் பற்றிய மினி சினி பயோடேட்டா இங்கே...

முத்துக்காளை:ராஜபாளையம் பக்கம் திருக்கோவில்புரம் கிராமம்தான் என் சொந்த ஊர். 1990-ல் சென்னை வந்து ஏழு வருஷப் போராட்டத்துக்குப் பிறகு, யூனியனில் ஃபைட்டர் ஆகச் சேர்ந்தேன். ஸ்டன்ட் சிவா மாஸ்டர்கிட்ட 40 படங்களுக்கு மேல் வேலை பார்த்தேன். நான் யார்கிட்டயும் சிரிச்சுக்கூடப் பேச மாட்டேன். ஆனா, 'இந்த உருவம் வேணும்’னு சொல்லி, டைரக்டர் எஸ்.பி.ராஜ்குமார் சார் 'பொன்மனம்’ படத்தில் ஒரு நடிகனா என்னை அறிமுகப்படுத்தினார். 'செத்துச் செத்து விளையாடுவோமா’னு வடிவேலுவோட காமெடி பண்ணதுதான் என் விசிட்டிங் கார்டு.

இப்போ வரை சோறு போடுறதும் அதான். 100 படங்கள் நெருங்கிட்டேன். 'கண்டேன்’ல சாந்தனுவும் சந்தானமும் என்னைத் துரத்திட்டு வருவாங்க. நான் தப்பிப்போய் சகதியில விழணும். இதுதான் ஸீன். ஃபைட்டர்ங்கிறதால உண்மையிலேயே தாண்டி சேத்துல விழுந்தேன். கண்ணுல மண்ணு போய் இப்பவும் மருந்து போட்டுட்டு இருக்கேன். ஏதோ ஒரு ஸீன்லயாவது என் ஃபைட்டிங் திறமையைக் காண்பிச்சு 'ஃபைட் மாஸ்டர்’ ஆகணுங்கிறதுதான் என் ஆசை. யார் யார்னு பேர் சொல்ல மாட்டேன். ஆனா, இப்போ பெரிய ஸ்டாரா இருக்கிற ஹீரோக்கள் பலருக்கு நானும் நண்பர் கோவை பார்த்தசாரதியும் ஜிம்னாஸ் டிக்ஸ், ஸ்டன்ட் பயிற்சிகள் கொடுத்திருக்கோம். நாம பெரிய ரேஞ்சுக்கு வந்த பிறகுதான், அதை அவங்க வெளியே சொல்வாங்கபோல. அக்கா பொண்ணு மாலதியைக் கல்யாணம் முடிச்சேன். ஒரே மகன் வாசன் முரளி. எல்.கே.ஜி. படிக்கிறான். சான்ட்ரோ கார் வெச்சிருக்கேன். ஆனா, தேவைன்னாதான் காரை எடுப்பேன். மத்த நேரம்லாம் கைனடிக் ஹோண்டாதான். பாண்டிச்சேரி சபாநாயகர் ஸ்கூட்டர்ல போனா, 'சிம்பிளா இருக்காருப்பா!’னு கொண்டாடுறாங்க. ஆனா, இந்த முத்துக்காளை பைக்ல போனா, 'இல்லாதவன்’, 'கருமி’ன்னு கடுப்படிக்கிறாங்க. அது ஏண்ணே?''

'அல்வா’ வாசு: ''நம்ம ஒரிஜினல் பேரு ரொம்ப நல்ல பேருண்ணே. வாசுதேவன். 'அமைதிப் படை’ படத்தில் கஸ்தூரிக்கு அல்வாக்குள் அபின் வெச்சுக் கொடுத்ததால், 'அல்வா’ வாசு ஆகிட்டேன். சொந்த ஊர் மதுரை. வீட்டுக்கு ஒரே பையன். எக்கச்சக்க செல்லம். பொத்திப்பொத்தி வளத்தாக. அமெரிக்கன் காலேஜ்ல பி.ஏ. முடிச்சேன். வீட்ல ஓவர் செல்லம் தாங்காம ஃப்ரெண்டோட பாண்டியன் எக்ஸ்பிரஸ் பிடிச்சு மெட்ராஸ் வந்தேன். பீச், பூங்கானு சுத்திப் பார்க்கலாம்னுதான்பிளான். ஆனா, சென்னையில் கால் வெச்சதுமே நேரா வாகினி ஸ்டுடியோ போய் நின்னார் நம்ம நண்பர். காலேஜ்லயே மிமிக்ரி, பாட்டு, நாடகம்னு பட்டையைக் கிளப்பினவய்ங்கதானே நாம. அப்படியே சினிமா எக்ஸ்பிரஸ் ஏறிட்டேன். முதல்ல மணிவண்ணன் சார்கிட்ட 'கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தில் உதவி இயக்குநரா சேர்ந்தேன்.

'வாழ்க்கை சக்கரம்’ படத்துக்கு ஹீரோ, வில்லன் கூடவே டிராவல் பண்ற நக்கல் கேரக்டருக்கு யாரை நடிக்கவைக்கலாம்னு மணிவண்ணன் சார் பயங்கரமா யோசிச்சுட்டு இருந்தப்ப, 'பேசாம நீயே நடிச்சிடுய்யா’ன்னு என் பக்கம் பார்த்துச் சொன்னார் சத்யராஜ் சார். 'அட... கைக்குள்ளயே ஆளை வெச்சுக்கிட்டு, ஊரெல்லாம் தேடிட்டு இருந்திருக்கேனே’னு மணிவண்ணன் சாரும் ஓ.கே. சொன்னார். இப்போ வடிவேலுகூட சேர்ந்து ஏகப்பட்ட படங்கள் பண்ணியாச்சு. சினிமா, டி.வி, கோயில் திருவிழா, காது குத்து, கல்யாணம், வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சிகள்னு வாழ்க்கை பரபரப்பா ஓடிட்டு இருக்குண்ணே. வீட்டுக்காரம்மா அமுதா. ஒரே பையன். சந்தோஷமா இருக்கேண்ணே!''

சிவநாராயண மூர்த்தி: '' 'வேலாயுதம்’ ஷூட்டிங் ஸ்பாட்ல நம்ம நண்பர் ஒருத்தர் பிரியத்துல கொழுக்கட்டை, மட்டன், சிக்கன்னு வந்து இறக்கிட்டார். நானும் ஆர்வத்துல அள்ளி அப்பிட்டேன். ஏற்கெனவே ஷ§கர் இருக்குறதால, உடம்பு அப்படியே மசமசன்னு மசக்கை கணக்கா ஆகிடுச்சு. அப்ப நம்ம கேமராமேன் ப்ரியன்தான், 'க்ரீன் டி குடிங்கண்ணே சரியாயிடும்’னார். அன்னிக்கு க்ரீன் டீ குடிக்க ஆரம்பிச்சவன்தான். இன்னிக்கும் அதுதான் நமக்கு. நீங்களும் ஃபாலோ பண் ணுங்க தம்பி!'' என்கிற சிவநாராயண மூர்த்தி, சமீப காலமாக தமிழ் சினிமாவின் போலீஸ் டிபார்ட்மென்ட் டில் நிரந்த இடம் பிடித்து விட்டவர்!

''பட்டுக்கோட்டை பக்கத்துல அணைக்காடு சொந்த ஊர். பெரிய பண்ணையாருப்பா நானு. வீடு, வயல் வரப்புன்னு பத்துப் பன்னெண்டு கோடிக்கு சொத்து தேறும். ஆசை வெக்கம் அறியாதுன்னு சொல்ற மாதிரி, சினிமா ஆசையும் வசதி வாய்ப்பு பார்த்து வர்றது இல்லை. 1997-ல் களஞ்சியம் சார் 'பூந்தோட்டம்’ படத்துல அறிமுகப்படுத்தினார். அதுல ஆரம்பிச்சு, இப்போ விஜய் தம்பியின் 'வேலாயுதம்’ வரை ஆசை மட்டுப்படவே இல்லை. சம்சாரம் புஷ்பவள்ளி. ரெண்டு பையன். ஒரு பொண்ணை சிங்கப்பூர்ல கட்டிக் கொடுத்திருக்கேன். உள்ளூர் மந்திரிமாரைக்கூடத் தெரியாத தமிழ் மக்கள் என்னை மாதிரியான காமெடியனை எங்கே போனாலும் அடையாளம் கண்டுக்கிறாங்க. இதுதான் சினிமா பவரு தம்பி. எங்கே போனாலும் கையெழுத்து வாங்குறாங்க. கூட நின்னு போட்டோ எடுத்துக்கிறாங்க. வேற என்ன தம்பி வேணும்?''

'போண்டா’ மணி: ''கொழும்பு மன்னார்தான் என் சொந்த ஊர். சினிமாவில் நடிக்கிற ஆசையில் ஏஜென்ட்டுக்குக் காசு கொடுத்து சிங்கப்பூர் போனேன். மூணு வருசம் வீணாப்போனதுதான் மிச்சம். பிறகு, அகதியா இந்தியா வந்து மெட்ராஸ் ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ்ல சித்தாள் வேலை பார்த்தேன். மறுபடியும் மூணு வருஷம் வேஸ்ட். 88-ல் மறுபடி சிலோனுக்குப் போய் கடைவெச்சு முதலாளி பந்தாவோட இருந்தேன். ஆனா, அதுவும் நிலைக்கலை. கால்ல குண்டடிபட்டு மறுபடியும் அகதியா ராமேஸ்வரம் வந்தேன். சேலம் கேம்ப்புல தங்கி இருந்தப்ப, 'பவுனு பவுனு’ ஷூட்டிங்ல பாக்யராஜ் சார்கிட்ட நடிக்க வாய்ப்பு கேட்டேன். விடாம 20 நாள் அலைஞ்சேன். ஒருநாள் அவர் தங்கி இருந்த ரூமுக்கு ராத்திரி ரெண்டு மணிக்குப் போய் நின்னு, 'எனக்கு வாய்ப்பு கிடைக்குமா... கிடைக்காதா?’னு கோபமாக் கேட்டேன். ஊர்ல வாழ்ந்த வாழ்க்கையில அப்படித் தோரணையாப் பேசிப்புட்டேன். சட்டுனு சிரிச்சவர், 'சிலோன் தமிழரே... உங்களுக்கு சினிமாபத்தி புரியலை. இங்க வருஷக் கணக்குல கஷ்டப்படுறவன்லாம் இருக்கான். சரி, நாளைக் குக் காலையில நடிக்கிறீங்க!’னு சொல்லி, கல்யாண ஊர்வலத்தில் மாப்பிள்ளையா நடிக்கவெச்சார். மு.மேத்தா, இனியன் சம்பத், நெல்லை சிவானு ஏகப்பட்ட பேர் உதவியில் இப்போ சினிமாவில் காலம் ஓடிட்டு இருக்கு. மன்சூர் அலிகான் அண்ணன் ஆபீஸ் மாடிதான் என் அட்ரஸ். அவரோட போன்தான் எனக்கு பி.பி. போன். அவர்தான் எனக்கு மேனேஜர்.'மைனா’ ஹீரோ விதார்த்தை நான்தான் அப்போ மன்சூர் அண்ணன்கிட்ட டிரைவரா சேர்த்துவிட்டேன்.

'ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ படத்துல கவுண்டமணி அண்ணன், செந்தில்கூட பெரிய காம்பினேஷன். அப்பதான் டைரக்டர் எம்.என்.ஜெயசுந்தர், 'கேதீஸ்வரன்’ங்கிற என் பேரை 'போண்டா மணி’னு மாத்தினார். நான் போண்டா நிறைய சாப்பிடுவேன். அந்த போண்டாவையும், கவுண்டமணியில் உள்ள மணியையும் பிச்சி எனக்குப் பேர்வெச்சார். நான் அப்ப ரவுண்டா வெட்டுத் தட்டு மாதிரி முடி வெட்டி இருந்தேன். அதைப் பார்த்துட்டு கவுண்டமணி அண்ணன், 'அட நாயே... நாயே! தெருவுல போற கண்ட நாய்கிட்டலாம் மண்டையைக் கொடுத்தா, இப்படித்தான் நக்கிவிட்ரும்’னு முதல் நாளே ஏக கலாட்டா பண்ணிட்டார்.

'கண்ணும் கண்ணும்’ படத்துல வடிவேலுகிட்ட 'அண்ணே! போலீஸ்காரங்க என்னை விரட்டிட்டு வர்றாங்க. உங்ககிட்ட நான் எங்கேன்னு கேட்பாங்க. எதையும் சொல்லிப்புடாதீங்க. அடிச்சும் கேட்பாங்க. அப்பயும் சொல்லிப்புடாதீங்க’ன்னு காமெடி பண்ணது இப்பவும் என்னைப் பரபரப்பா ஓடவெச்சுட்டு இருக்கு. என்கூடப் பிறந்தவங்க மொத்தம் 16 பேர். குடும்பம் குட்டி என்னாச்சுன்னு ஊருக்குப் போய் பாக்கலாம்னா, எனக்கு இன்னும் இந்திய பாஸ்போர்ட் தர மாட்டேங்கிறாங்க. ஜே.கே.ரித்தீஷ் சார்தான் பாஸ்போர்ட் வாங்கித் தர்றேன்னு சொல்லி இருக்கார். சிங்கமுத்து, ராதாரவி, விஜயகாந்த் அண்ணன்மார்களின் உதவியால் நடிகர் சங்கத்துலவெச்சே எனக்குக் கல்யாணம் நடந்தது. இப்போ ரெண்டு பசங்க. வாழ்க்கை சந்தோசமா இருக்குண்ணே!''

ஷாம்ஸ்: ''என் பேரு சுவாமிநாதன். சொந்த ஊர் திருச்சி. டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சேன். ஒரு கம்பெனியில் சூப்பர்வைசர் வேலை பார்த்துட்டு இருந்தப்பவே, நான் கலகல பேர்வழி. சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து நொந்து நூலாகி, அந்து அவலாகி, 'காதல் மன்னன்’ படத்தில் ஒரே ஒரு பாஸிங் ஷாட் நடிச்சேன். அதுக்கே வாய்ல நுரை தள்ளிடுச்சு. அப்படியே 'கிரேஸி’ மோகன் சார் டிராமா ட்ரூப்ல 10 வருஷம் செட்டில் ஆகிட்டேன். அதுதான் என் குருகுலம். அப்புறம் பிரபு சாலமன் சாரோட 'கிங்’ பட வாய்ப்பு கிடைச்சு, அப்புறம் சின்னதும் பெருசுமா நடிச்சு, இப்போ 'பயணம்’ என் அம்பதாவது படம். 'அறை எண் 320-ல் கடவுள்’ பட சாஃப்ட்வேர் இன்ஜினீயர் கேரக்டர்ல நம்ம மேல ஹெலிகாப்டர் லைட்டே பாய்ச்சிருச்சு. சினிமாவில் ஏற்கெனவே சில சுவாமிநாதன்கள் இருந்ததால், 'ஷாமா’ன்னு பேரைச் சுருக்கினேன். ஆனா, எல்லாரும் 'சாமான்... சாமான்’னு சொல்லி டார்ச்சர் பண்ணினதால், 'ஷாம்ஸ்’ங்ற செல்லப் பேரையே நிரந்தரமா வெச்சுக்கிட்டேன். என் மனைவி உமா மகேஸ்வரி, ஸ்கூல் டீச்சரா இருக்காங்க. அஸ்வத்னு ஒரு பையன். அக்ஷயானு ஒரு பொண்ணு. ஷாம்ஸ் சந்தோஷமா இருக்கான் சார்!''

ஷங்கர்: ''ஒரு தடவை சிட்டி பஸ்ல போயிட்டு இருந்தப்ப, பக்கத்துல இருந்தவர் செல்போன் காணலைன்னு கத்த ஆரம்பிச்சுட்டார். நானும் பதற்றமாகி 'நம்பர் சொல்லுங்க... கால் பண்ணுவோம். பக்கத்துல இருக்குற யாராவதுதான் எடுத்திருக்கணும்’னு என் செல்போனைக் கையில் எடுத்தேன். உடனே, பக்கத்துல போதையில் நின்னுட்டு இருந்தவர், 'டேய்... இந்தச் சின்ன வயசுல உனக்கேதுடா செல்போன். நீதான்டா திருடி இருக்கே!’னு சண்டைக்கு வந்துட்டாரு. கண்டக்டர்தான் 'யோவ்... தம்பி நம்ம ரெகுலர் கஸ்டமர்யா!’னு சொல்லிக் காப்பாத்தினார். இந்தத் தொல்லையே வேணாம்னு இப்ப டி.வி.எஸ். 50 வாங்கிட்டேன்!''- சிரிக்கும் சங்கர் என்கிற சங்கர நாராயணனின் வயசு 22.

''சொந்த ஊர் மதுரை பக்கத்துல திருமங்கலம். 'சினிமாவில் நடிக்க ஆசை உள்ளவர்கள் அணுகவும்’னு நியூஸ் பேப்பர் விளம்பரத்தை வெட்டி எடுத்துட்டு சென்னைக்கு ரயில் ஏறிட்டேன். திருவொற்றியூர் பக்கத்துல பாத்ரூம் சைஸ்ல ஒரு ரூம் போட்டு காசு வசூல் பண்ணிட்டு இருந்துச்சு ஒரு கும்பல். '500 ரூபாய் கொடுங்க. பிறகு, உங்க பையன் கையத் தூக்கினாலும், காலைத் தூக்கினாலும் காசு கொட்டும்’ னாங்க. டுபாக்கூர் பார்ட்டிங்கன்னு தெரிஞ்சு தப்பிச்சு, பாக்யராஜ் சார் ஆபீஸ்ல போய் நின்னேன். பாக்யா பத்திரிகையில் வேலை பார்த்துட்டு இருந்தேன். அங்கே என்னைப் பார்த்த லிங்குசாமி சார் மூலமா 'ஜி’ பட வாய்ப்பு கிடைச்சது. ஆரம் பத்துல சினிமா ரீச் எனக்குப் புரியலை. ஆனா, இப்போ எங்கே போனாலும் நம்மளைக் கண்டுக்குறாங்க. 'அம்பாசமுத்திரம் அம்பானி’யில் முழு நீள காமெடி கேரக்டர். விகடன்லயே என்னைப் பாராட்டி எழுதி இருந்தாங்க. பாக்யராஜ் சார், இயக்குநர் குருநாத், கருணாஸ் இவங்க எல்லாருக்கும் நன்றி!''

ஓவியத்தை வரைந்தவர் பற்றிய விபரங்களை வெளிப்படுத்திய X- கதிர்கள்

ஓர் ஓவியத்தினை வரைந்தவர் பற்றிய விடயங்கள் X- கதிர்களைக் கொண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இவ் ஓவியம் 1630ம் ஆண்டுகளைச் சேர்ந்தது. இதனையே டச்சு ஓவியர் Rembrandt இனால் வரையப்பட்ட ஓவியமெனக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஓவியம் அதனை வரைந்தவரின் சுய-உருவந்தானென்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தாடியுடனான வயோதிபர்’ எனப்பட்ட இந்த ஓவியம் டச்சு ஓவியரின் கைவண்ணத்தை ஒத்திருந்ததைக் கண்ட ஒரு ஓவியச் சேகரிப்பாளரால் ஓர் ஓவிய வரலாற்று மையத்திற்குக் கொடுக்கப்பட்டது. 

இதனைப் பற்றித் தெரியாமலிருந்த நிபுணர்கள் அந்த ஓவியத்திற்குக் கீழே இரண்டாவதாக இன்னொரு ஓவியம் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அது தமது பிரச்சினையைத் தீர்க்குமென்றும் நம்பினர்.
இதனால் இதனை இவர்கள் பிரான்சிலுள்ள ஐரோப்பிய கதிரியக்க மையத்தின் ஆய்வுகூடத்திற்கும் நியூயோர்க்கிலுள்ள ஆய்வுகூடம் ஒன்றிற்கும் கொண்டுசென்று பரிசோதித்துப் பார்த்தனர்.

இந்த விம்பத் தொழினுட்பத்தினால் முன்னரும் பல முன்னி ஓவியர்களின் ஓவியங்களில் புதிய கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த ஓவியத்தில் தோல்நிறங்களிலுள்ள புள்ளிகள் மற்றும் பூச்சுக்களுடன் பொருந்தாமல் காணப்படும் செப்புபோன்ற மூலக்கூறுகளிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோது அதன் கீழே தாடியற்ற ஓர் இளைஞர் ஒரு பெரே தொப்பியுடன் இருந்தது தெரிந்தது.

இதில் காணப்பட்ட அம்சங்களே Rembrandt இன் ஏனைய ஓவியங்களிலும் காணப்பட்டிருந்தன. இதனால் முற்றுப்பெற்றிராத சுய-உருவப் படமொன்றின் மேலே புதியதொரு ஓவியம் வரையப்பட்டிருந்ததென முடிவுக்கு வந்தனர்.

'விஸ்வரூபம்' அதிக வரி கட்ட வைக்கும் ! : கமல்


வருமான வரித் துறையின் 150-வது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை24 ) சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

அவ்விழாவில் தமிழக ஆளுநர் பர்னாலா கமல்ஹாசனுக்கு வரி ஏய்ப்பு செய்யாமல் இருந்ததற்காகவும், சரியான நேரத்தில் வருமான வரி செலுத்தியதற்காகவும் சான்றிதழ் வழங்கினார்.

அவ்விழாவில் கமல் பேசும்போது " வருமான வரி செலுத்துவது எனது கடமை. அதன்மூலம் எனக்கு வருமான வரித்துறையுடன் நெருக்கம் உள்ளது.

வருமான வரியை செலுத்த வேண்டியவர்கள் அதை தவிர்க்காமல், முறையாக செலுத்த வேண்டும். இது நாட்டுக்கு நாம் செய்யும் கடமையாக கருத வேண்டும்.

இப்போது நான் நடிக்க இருக்கும் 'விஸ்வரூபம்' படத்தின் மூலம் அடுத்த வருடம் நான் அதிக வருமான வரி செலுத்த வேண்டியவனாக இருப்பேன் " என்று கூறினார்.

நடிகை அஞ்சலி – பிடித்ததும் பிடிக்காததும்

கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அங்காடித்தெரு படம் மூலம் பிரபலமாகி, இப்போது எங்கேயும் எப்பவும் அஞ்சலி என்ற ரேஞ்சுக்கு உயர்ந்து இருக்கிறார். தமிழில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் அஞ்சலி, தன்னை பற்றி நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நிஜ பெயர் : பாலா திரிபுர சுந்தரி

சினிமா பெயர் : அஞ்சலி

பிறந்தது : ஈஸ்ட் கோதாவரி (ஆந்திரா)

படித்தது : பத்தாவது, இப்போது படிப்பது சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி.,

முதல்படம் : தெலுங்கு – போட்டோ, தமிழ் – கற்றது தமிழ்

முதல் படம் வெளியூர் சூட்டிங் : ஹைதராபாத் (போட்டோ பிலிம் – தெலுங்கு)

மறக்கமுடியாத நபர் : பாட்டி

அதிகமுறை பார்த்த படம் : மொழி

அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை : உனக்கு ஒன்னு தெரியுமா..?

பிடித்த உணவு : நூடுல்ஸ்

தவிர்க்க விரும்புவது : சாப்பாடு (மீல்ஸ்)

போக விரும்பிய வேலை : இன்ஜினியர்

பிடித்த கலர்/உடை : கருப்பு – ஜீன்ஸ்

எதைப்பார்த்தால் பொறாமை வரும் : ஒல்லியா இருப்பவர்களை பார்த்தால்

பயப்படும் ஒரே விஷயம் : பேய்

அடிக்கடி ஞாபகத்துக்கு வர்ற விஷயம் : ஸ்கூல் படிக்கும்போது விழுந்து விட்டேன். கையில் உள்ள காயத்தை இப்போதும் பார்க்கும் போதெல்லாம் அதே நினைவு தான் வரும்.

வெளிப்படையாக பேசி, மற்றவர்களிடம் மாட்டிக்கொண்ட அனுபவம் : நிறைய இடங்களில் சக நடிகர், நடிகைகளிடம் ஏதாவது பேசி மாட்டிகிடுவேன். இதி‌ல் எனக்கு நிறைய அனுபவம் இருக்கு.

எந்த விஷயத்தில் அதிக ஆசை : குழந்தைகள்

நன்றி சொல்ல விரும்புவது : அம்மா-அப்பா, டைரக்டர்கள் வசந்தபாலன் மற்றும் ராம்.

நினைவில் இருக்கும் பள்ளி ஆசிரியர் : சேசு (கணக்கு)

அதிக உடைகள் வாங்கும் இடம் : ஸ்கை வாக், அவன்யூ எக்ஸ்பிரஸ்

உணவுப்பழக்கம் தினமும் : கார்ன், சப்பாத்தி, தோசை

ஆண்களின் பழக்கம் ஏதாவது கற்றுக்கொள்ள விரும்புவது : ஏதும் இல்லை

உணர்ச்சி வசப்பட்டால் : கதறி அழுவேன்

சுட்டு போட்டாலும் வரவே வராதுனு நினைக்கிற விஷயம் : கணக்கு தான். ஸ்கூல் படிக்கும் போது கணக்கால, ரொம்ப அவஸ்தபட்டேன். யாராச்சும், ரூ.100 தர்றேன், இந்த கணக்கை போட்டு காட்டுனு சொன்னா, அப்படியே எஸ்கேப் ஆகிடுவேனா பாருங்க.

கிடைச்ச பாப்புலாரிட்டியை வைத்து உருப்படியா செய்ய நினைப்பது : நிறைய பேர்க்கு நல்லது செய்ய ஆசை

உங்க ப்ளஸ் : சிரிப்பு

உங்க மைனஸ் : கோலம் போட வரலியே பீல் பண்ணுவேன்

ரொம்ப அலர்ஜி : பாம்பு

பிடிவாதம் : அடிக்கடி ஷாப்பிங், சினிமா போக விரும்புவேன்

மறக்க முடியாத நாள், வருஷம் : 2010 மார்ச் 23, அங்காடித்தெரு ரிலீஸ்

தனுஷின் Why This கொலவெறி பாடலுக்கு Youtube இணையதளம் தங்க மெடல்!

தனுஷின் Why This Kolaveri புரோமோ பாடலுக்கு, யூடியூப் நிறுவனம் கடந்த 7 நாட்களில் அதிகம் பார்வையிடப்பட்ட வீடியோக்கள் பட்டியலில் தங்க பதக்கம் கொடுத்துள்ளது.


மேலும் பிரபலமாகி வரும் பாடல்கள் பட்டியலில் வெண்கல பதக்கத்தையும் வழங்கியுள்ளது. ஐஷ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 3 படத்திற்காக இப்பாடல் புரோமாவாக படமாக்கப்பட்டது.

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமா பாடலொன்று யூடியூப்பில் வேகமாக முன்னிலை பெற்று வருவதற்கு, அப்பாடலின் கிராமத்திய மெட்டு, ஆங்கில மொழிக்கலவை, படம்பிடித்த விதம், தனுஷின் குரல், இளைஞர்களுக்கு சார்பான இலகுவில் புரிந்து கொள்ள கூடிய வரிகள் என பல காரணங்கள் சொன்னாலும், அதெல்லாம் இல்லை… Sony Music இன் புரோமோதான் என்கிறார்கள் பலர்.

இதுவரை இந்த கொலவெறி பாடலை யூடியூப்பில் பார்த்தவர்கள் எண்ணிக்கை 14 மில்லியனை தாண்டியுள்ளது. இது Sony Music india இன் உத்தியோகபூர்வ தளத்திலிருந்து பெறப்பட்ட எண்ணிக்கை பதிவு. பலர் தமது தனிப்பட்ட யூடியூப் சேனலிலும் இப்பாடலை பதிவேற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பலர் வயலின் வேர்ஷன், கிட்டார் வேஷன், Female வேர்ஷன் என தமக்கு பிடித்த மாதிரியெல்லாம் இதே பாட்டை பல்வேறு கோணங்களில் படம்பிடித்து பதிவு செய்ய தொடங்கிவிட்டார்கள். தனுஷின் Why This கொலவெறி பாடலுக்கு யூடியூப் இணையதளம் தங்க மெடல்!

அண்மையில் மத்திய அமைச்சர் ஷரத் பவார் மீது சீக்கியர் ஒருவர் கன்னத்தில் அறைந்தது, தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஆகியோரை மையமாக வைத்து வெளிவந்த இப்பாடலின் வேர்ஷன்களும், அநியாயமாக படுஹிட்டாகி வருகின்றன.

இணையத்தில் உலாவும் தமிழர்களில் யாரும் இந்த பாடலை இதுவரை பார்க்காமல் விட்டிருக்க மாட்டீர்கள். அப்படி பார்க்க தவறியிருந்தால் அப்பாடலின் வீடியோ காட்சியும், அப்பாடல் அறிமுக விழா காட்சிகளும் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

பாலா பதறணும்... அமீர் அலறணும்! - படபடக்கிறார் பவர் ஸ்டார்


வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரிகளைப் புரட்ட முடியவில்லை. பல பக்கங்களிலும் லகலகவெனச் சிரித்துக்கொண்டு இருக்கிறார் சீனிவாசன்... 'பவர் ஸ்டார்’ சீனிவாசன்!

'லத்திகா’, 'இந்திரசேனா’, 'ஆனந்த தொல்லை’ என விளம்பரங்களில் அநியாய அலப்பறை கொடுக்கும் பவர் ஸ்டாரின் லேட்டஸ்ட் மிரட்டல் அதிரடி... 'லத்திகாவின் வெற்றிகரமான 100-வது நாள்’ என மெகா ஃப்ளெக்ஸ். சமீப காலமாக கோடம் பாக்கத்தைக் கதறடிக்கும் புண்ணியவான் இவர்தான்!

அக்குபஞ்சர் மருத்துவராக மதுரையில் இருந்து கிளம்பி வந்து, பவர் ஸ்டாராகப் பரிணமித்த சீனிவாசனைச் சந்திக்கப்போனால், முரட்டுக் கூட்டம் மிரட்டுகிறது. ''ஐ.டி. கார்டு காட்டுங்க!'' என ஒன்றுக்குப் பத்து முறை பரிசோதிக்கிறார்கள். நான்கு, ஐந்து கட்டங்களைத் தாண்டித்தான் பவர் ஸ்டாரின் உதவியாளரையே சந்திக்க முடிகிறது. விசிட்டிங் கார்டு உள்ளே போக, அலறி அடித்து வெளியே வருகிறார் பவர்.
''எத்தனையோ பேர் என்னை வாழ்த்த வந்தாங்க சார். ஆனா, நீங்க நேர்ல வந்து வாழ்த்துவீங்கன்னு நினைக்கலை. இது போதும் சார் எனக்கு!'' என ஏதேதோ சொல்லி உருகத் தொடங்கிவிட்டார்.

''சார், நாங்க ஜாலியா ஒரு பேட்டி எடுக்கத்தான் வந்தோம்!'' எனச் சொல்ல, ''அப்படியா?'' என 'மாயி’ பட மாமனார் கணக்காக இழுவைபோட்டு, ''என்னோட 'லத்திகா’ 100 நாட்கள் தாண்டி ஓடியதை வாழ்த்தத்தான் வந்திருக்கீங்களோனு நினைச்சிட்டேன்!'' என்கிறார் அசடுவழிய.

''டாக்டர் சீனிவாசனும் பவர் ஸ்டார் சீனிவாசனும் சந்தித்தால்?'' என பேட்டியின் ஐடியா சொன்னதும், ''ஹாஸ்பிடலில் இருந்து கோட் எடுத்துட்டு வாங்கப்பா... அப்படியே என்னோட விக்கும்!'' எனக் கட்டளைகள் பறக்கின்றன.

'ரெடி ஸ்டார்ட்’ சொல்ல... சந்திப்பு களைகட்டுகிறது.

டாக்டர்: ''ஒரு டாக்டரா மக்கள் சேவை பண்ண வந்துட்டு, சினிமா பக்கம் போய் ஜிங்கிலி ஆட்டம் போடுறது நியாயம்தானா?''


பவர்: ''டாக்டரா மக்கள் சேவை பண்ணிக்கிட்டு இருந்தா, இந்நேரம் இத்தனை பத்திரிகைகள்ல மின்னி இருக்க முடியுமா? ஈரோட்டுக்குப் போனாக்கூட, 'ஏய்! நம்ம பவர் ஸ்டார்’னு எட்டி எட்டிப் பார்க்குறானுங்க. இந்த அளவுக்குப் பேரும் புகழும் கிடைக்குமா? லத்திகாவோட 100-வது நாளுக்கு எத்தனை பேர் வாழ்த்தினாங்க தெரியுமா? என்னதான் மருத்துவ உலகத்தில் மகத்துவங்களைப் படைச்சாலும், இந்த பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி கிடைச்சிருக்காதே!''

டாக்டர்: ''மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க... 'லத்திகா’ 100 நாள் ஓடுச்சா? இல்லே, ஓட வெச்சீங்களா?''

பவர்: ''இதில் மறைக்க என்ன இருக்கு? தானா ஓடுச்சுன்னு சொல்றதைவிட, நானா ஓட்டினேன்னு சொல்றதுலதான் எனக்கும் பெருமை. இன்னிக்கு படம் எடுக்கிறது சுலபம். ஆனா, தியேட்டர் கிடைக்கிறது சாதாரண காரியம் இல்லை. பெரிய பெரிய தயாரிப்பாளர்களே தியேட்டர் கிடைக்காமத் தவிக்கிறப்ப, கமலா, சாந்தி, மகாலட்சுமின்னு அத்தனை தியேட்டர்காரங்களையும் நான் காக்கா பிடிச்சுவெச்சிருக்கேன். போன ஆட்சியில என்னோட படங்களை முடக்கிப்போட, எப்படி எல்லாம் திட்டம் போட்டாங்க தெரியுமா? ஆனாலும், 'உனக்காக ஒரு கவிதை’, 'மண்டபம்’னு தொடர்ந்து ஹிட் கொடுத்தேன். இன்னிக்கும் 'லத்திகா’ படத்தைப் பார்க்க, ஒரு நாளைக்கு 40 பேருக்கு மேல வர்றாங்க. கடைசி ஒரு ஆள் வர்ற வரைக்கும் படத்தை ஓட்டுங்கனு சொல்லிட்டேன். 150-வது நாள் விளம் பரத்தைப் பக்கம் பக்கமாக் கொடுக் கப்போறேன். கோடம்பாக்கம் அன்னிக்குத்தான் வயித்தெரிச் சல்ல தீ பிடிக்கப்போகுது பாருங்க!''


டாக்டர்: ''நடிப்புங்கிற பேர்ல நீங்க பண்ற அட்ராசிட்டியைத் தாங்க முடியாம பலரும் தவிக்கிறதா பேச்சு இருக்கே?''

பவர்: ''தவிச்சாலும் சரி... தாக்குதல் நடத்தினாலும் சரி... எனக்கு பப்ளிசிட்டி தேவை. அதுக்காகத்தான் சினிமா உலகுக்கு வந்தேன். 'பணத்தை வெச்சுக்கிட்டு ஆட்டம் போடுறான்’னு பலரும் என்னைத் திட்டுறாங்களாம். சில பேர் என் போஸ்டரை வெறிச்சுப் பார்த்து, கிழிக்கிறாங் களாம். என்ன வேணும்னாலும் பண்ணட்டும். நான் எதுக்கும் வெட்கப்பட மாட்டேன். நான் நடிக்கிறது என் மனைவிக்கே பிடிக்கலை. மத்தவங் களுக்குப் பிடிச்சா என்ன... பிடிக் கலைன்னா என்ன? இன்னொரு விஷயம் தெரியுமா? என்னோட மூணு மகள்களில் ரொம்பப் பிரியமான பொண்ணு லத்திகா. அவங்க மேல உள்ள பாசத்துலதான் என் படத்துக்கும் 'லத்திகா’னு பேர் வெச்சேன். படத்தைப் பார்த்த நாள்ல இருந்து, லத்திகா என்கிட்ட பேசுறதே கிடையாது. இதுக்கு அப்புறமும் நான் நடிக்கிறேன்னா... என்னோட தில்லை நீங்க ரசிக்கணும்... வரவேற்கணும்... கொண்டாடணும்!''

டாக்டர்: ''சில பத்திரிகைகள்ல உங்களைப்பத்தி கிசுகிசுலாம் வருதே?''

பவர்: ''அதெல்லாம் நானா பரப்பிவிட்ட கிசுகிசு. அப்படியும் ஒண்ணு ரெண்டுதான் பேப்பர்ல வந்துச்சு. எத்தனை நடிகர்- நடிகை கள் கிசுகிசுவுக்காக ஏங்குறாங்கன்னு தெரியுமா உங்களுக்கு? 'அவரோடு கொஞ்சல்... இவரோடு கெஞ்சல்’னு வந்தா, அந்த வாரம் முழுக்க நம்ம போன் பிஸி. ரசிகனும் முக்கியமான விஷயமா நெனச்சு, மூளையைக் கசக்கிக்கிட்டு அலைவான். மார்க்கெட்ல நம்ம பேர் நிலைக்க ணும்னா, தாரை தப்பட்டைகள் கிழியுற அளவுக்குக் கிசுகிசுக்களைக் கிளப்பிக் கிட்டே இருக்கணும். அதே நேரம், அதுபத்தி யாராவது கேட்டா... எரிஞ்சு விழணும். அப்போதான் கிசுகிசுவுக்கு ஒரு கில்மா எஃபெக்ட் இருக்கும்!''

டாக்டர்: ''சரி, சினிமாவில் உங்களுக்கு என்னதான் இலக்கு?''

பவர்: ''ரஜினி சார் எப்போ ரிட்டர்ன் வருவார்னு ஆசையா எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன். சூப்பர் ஸ்டாரா... பவர் ஸ்டாராங்கிற ஒரு போட்டியை உருவாக்கி, தமிழ் சினிமா உலகில் டெரரைக் கிளப்பணும். என்னோட அடுத்த படமான 'ஆனந்த தொல்லை’யை 'லத்திகா’வோட 150-வது நாள் அன்னிக்கு ரிலீஸ் பண்ணப்போறோம். அதுக்கு அடுத்த படம், 'ராணா’ என்னிக்கு ரிலீஸ் ஆகுதோ... அன்னிக்கு களத்துக்கு வரும். அதுல சி.பி.ஐ. ஆபீஸரா வர்றேன். ஸீனுக்கு ஸீன் பட்டாசு பறக்கும். 'லத்திகா’ ஓர் இயக்குநராகவும் என்னை ஜெயிக்கவெச்சிருக்கு. நானும் மதுரைக்காரன்தான். இப்போ வர்ற மதுரைக் கதைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடுற கதைகள், என்கிட்ட டஜன் டஜனா இருக்கு. ஒவ்வொண்ணா ரிலீஸ் ஆகிறப்ப... பாலா பதறணும்... அமீர் அலறணும்... சசி இன்டஸ்ட்ரியைவிட்டே ஓடணும்!''

டாக்டர்: ''நேற்று வரைக்கும் திருமாவளவனோடு நெருக்கமா இருந்துட்டு, ஆட்சி மாறியதும் எம்.நடராஜன், ஓ.பன்னீர்செல்வம்னு சந்திப்பு நடத்தி இருக்கீங்களே... ஒழுங்கா டாக்டர் வேலையை மட்டும் பார்த்து இருந்தா, இப்படி எல்லாம் அல்லாட வேண்டிய அவசியம் இல்லையே?''

பவர்: ''அரசியல் வேறு, நட்பு வேறு! எம்.என். சார் எனக்கு அஞ்சு வருஷமாப் பழக்கம். ஓ.பி.எஸ். அமைச்சரான உடனே ஓடோடிப் போய் வாழ்த்து தெரிவிச்சேன். அடுத்து, அம்மாவைச் சந்திக்கவும் அனுமதி கேட்டு இருக்கேன்.

என் தலைமையில் என் ரசிகர்கள் ஒரு லட்சம் பேரை கார்டனுக்கு அழைச்சுட்டுப் போவேன். நம்பிக்கையானவங்களுக்கு அம்மா நிறைய செய்வாங்க. நாளைக்கே நான் சுகாதாரத் துறை அமைச்சர் ஆனாலும் ஆச்சர்யம் இல்லை. வெறும் டாக்டராவே இருந்தா, இப்படி எல்லாம் எதிர்பார்ப்புகளை எகிறவெச்சு சந்தோஷப்பட முடியுமா? புரொடக்ஷன்ல இருக்கும் நம்ம படத்தோட டிரைலர் பார்க்குறீங்களா?'' என்று கேட்டு ரிமோட் பட்டனைத் தட்டுகிறார்.

பஞ்சு மிட்டாய் மேக்கப், குருவிக் கூடு விக்குடன் 'பவர் ஸ்டார்’ முகபாவங்களைப் பிழிந்துகொண்டு இருக்க, அவரிடம் கெஞ்சிக் கதறிக்கொண்டு இருக்கிறார் ஒரு பெண்...

'கட்டின பொண்டாட்டியையே கட்டிவெச்சுக் கற்பழிச்சவன்தானே நீ... உன்கிட்ட எனக்கு என்ன நியாயம் கிடைக்கும்?’

ஏன், ஏன் இந்தக் கொலை வெறி பவர் ஸ்டார்?!

கமல் ஒரு பைத்தியம்

கமல் ஒரு பைத்தியம். ஆம் ஒரு சினிமா பைத்தியம். சினிமாவுக்காக உயிரைக் கொடுக்கும் அறிவு ஜீவிக் கலைஞர்களுள் கமலும் ஒருவர். அவரைப் பற்றி சில குறிப்புகள்.


'களத்தூர் கண்ணம்மா'வில் கையெடுத்துக் கும்பிட்ட சிறுவனை இன்று இந்திய சினிமா வணங்குகிறது. தாகங்களின் தசாவதாரம். தலைமுறைகளை வென்ற தனி அவதாரம். இப்போது 'விஸ்வரூபம்' எடுத்து நிற்கிறார்.

முதல் படத்திலேயே (களத்தூர் கண்ணம்மா) சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றவர் கமல்!

'களத்தூர் கண்ணம்மா', 'ஆனந்த ஜோதி', 'பார்த்தால் பசி தீரும்', 'பாதகாணிக்கை', 'வானம்பாடி' என 5 படங்களில் நடித்த பிறகு, அவ்வை டி.கே.சண்முகத்திடம் சேர்ந்தார் கமல். அவர் வேறு திசைக்குப் பயணப்பட்டது அதற்குப் பிறகுதான்!

களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும்கூட, தனது குழந்தைப் பருவத்து நடிப்பில், பெரிய நடிகர்கள் யாருக்கும் மாஸ்டர் கேரக்டரில் கமல் நடித்ததே இல்லை!

கமல் நடித்த படங்களைப் பாராட்டி பாலசந்தர் எழுதும்போது 'மை டியர் ராஸ்கல்' என்றுதான் அழைப்பார்!

கமலின் தந்தை உடல் தகனத்துக்காக மயானத்தில் வைக்கப்பட்டு இருந்தது. சாருஹாசன், சந்திரஹாசன், கமல் மூவரும் சிதையின் அருகில் நிற்க, திரும்பிப் பார்த்த கமல் 'அண்ணா, நீங்களும் வாங்க' என இருவரை அழைத்தார். அவர்கள் ஆர்.சி.சக்தி, ஸ்டன்ட் மாஸ்டர் கிருபா. கதறித் துடித்தபடி அவர்களும் கொள்ளிவைத்தனர்!

ஃபிலிம்ஃபேர் விருதை 18 முறைக்கு மேல் வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமல்தான்!

எண்பதுகளின் மத்தியில் 'மய்யம்' என்ற இலக்கியப் பத்திரிகையைக் கொஞ்ச காலம் நடத்தினார் கமல்!

எம்.ஜி.ஆருக்கு 'நான் ஏன் பிறந்தேன்', சிவாஜிக்கு 'சவாலே சமாளி', ஜெயலலிதாவுக்கு 'அன்புத்தங்கை' படங்களில் டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி இருக்கிறார் கமல்!

ஆரம்பத்தில் 'சிவாலயா' என்ற நடனக் குழுவை ஆரம்பித்து நடத்தினார் கமல். அதற்குப் பிறகுதான் நடன உதவியாளராக தங்கப்பனிடம் சேர்ந்தார்!

ஆர்.சி.சக்தியின் இயக்கத்தில் வந்த 'உணர்ச்சிகள்'தான் கமலைத் தனி கதாநாயகனாக ஆக்கியது. ஆனால், முந்திக்கொண்டு வெளிவந்த படம் 'பட்டாம்பூச்சி'!

'நினைத்தாலே இனிக்கும்' படம்தான் கமலும் ரஜினியும் சேர்ந்து நடித்த கடைசிப் படம்!

கமல் ரொம்பவும் ஆசைப்பட்டு, இதுவரை முற்றுப்பெறாத கனவுகளில் ஒன்று... 'மருதநாயகம்'!

கடவுள் மறுப்புக்கொள்கையைக் கொண்டவர் என்றாலும், ஆத்திகத்தை கமல் விமர்சனம் செய்வதில்லை!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, பெங்காலி மொழிப் படங்களில் நடித்திருக்கிற ஒரே தமிழ் நடிகர் கமல்தான்!

தன் உடலைத் தானம் செய்திருக்கிறார் கமல். சினிமாவில் இத்தகைய முன் மாதிரி இவர்தான்!

கமலுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் இரண்டு பேர். ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா!

கமல், சாருஹாசன், சுஹாசினி என அவரது குடும்பத்தில் இருந்தே மூன்று பேர் தேசிய விருது பெற்றிருக்கிறார்கள்!

'ராஜபார்வை' முதல் தம்பியுடன் இருந்து அலுவலகத்தைக் கவனிக்கிறார் அண்ணன் சந்திரஹாசன். கல்லாப்பெட்டி அவரது கவனத்தில்தான் இருக்கிறது!

ஏதோ மன வருத்தம்... சாருஹாசனும் கமலும் இப்போதும் பேசிக்கொள்வது இல்லை!

பிரசாத் ஸ்டுடியோவில் அகேலா கிரேன் இறக்குமதி ஆகியிருந்தது. அதை இரவோடு இரவாகச் சென்று பார்த்த முதல் நபர் கமல். பிறகுதான் பி.சி.ஸ்ரீராம் போன்றவர்கள் வந்து பார்த்தார்கள். தொழில்நுட்பத்தின் மீதுகொண்ட தீராத ஆர்வம்தான் காரணம்!




வீட்டில் நிறைய நாய்களை வளர்க்கிறார். கொஞ்ச காலத்துக்கு முன்பு இறந்துபோன நாய்க்காகக் கண்ணீர்விட்ட தருணங்களும் உண்டு!

'ஹே ராம்' படம் முதல் டைரக்ஷனாக வெளிவந்தாலும், முன்னமே 'சங்கர்லால்' படத்தை, டி.என்.பாலு இறந்து போக, முக்கால்வாசிக்கு மேல் இயக்கியிருக்கிறார்!

கமல் மிகவும் ஆத்மார்த்தமாக நேசித்த மனிதர் மறைந்த அனந்து. தன்னை வேறு தளத்துக்கு அழைத்து வந்த நண்பர் என்ற அன்பு அவர் நெஞ்சு நிறைய உண்டு!

அதிஅற்புதமான உலக சினிமாக்களின் டி.வி.டி. அணிவகுப்பு கமலின் ஹோம் தியேட்டர் கலெக்ஷனில் இருக்கிறது!

பட்டு வேட்டி பிடிக்கும். தழையத் தழையக் கட்டிக்கொண்டு ஆபீஸ் வந்தால், அன்று முழுக்க உற்சாக மூடில் இருப்பார்!

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், பெங்காலி, கன்னடம், பிரெஞ்சு என எட்டு மொழிகள் கைவந்த வித்தகர்!

ரஜினி எப்போது கேட்டாலும், " முள்ளும் மலரும் எனக்கு பிடித்த படம் " என்று கூறுவார். அந்தப் படம் முடிவடையாமல் நின்ற போது முழுவதுமாக முடிக்க கமல் தன் சொந்த பணத்தை மகேந்திரனுக்கு கொடுத்து உதவினார். 

'உங்களது படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது?' என்று கேட்டால், 'நான் நடிக்கப் போகும் எனது அடுத்த படம்' என்பார்.

கமல் மெட்ராஸ் பாஷை பேசிய 'சட்டம் என் கையில்', 'அபூர்வ சகோதரர்கள்' ஆகிய படங்கள் மெகா ஹிட். மெட்ராஸ் பாஷைக்கு கமலின் குரு லூஸ் மோகன்!

'சட்டம் என் கையில்' படம்தான் கமல் இரட்டை வேடங்களில் நடித்த முதல் படம் என்பது பலரும் சொல்லும் தகவல். ஆனால், அவர் 'பார்த்தால் பசி தீரும்' படத்திலேயே சின்ன வயதில் டபுள் ரோல் பண்ணியிருக்கிறார்!

ஊர்வன, பறப்பன, ஓடுவன என அனைத்தையும் சாப்பிடும் அசைவப் பிரியர் கமல். ஆக்டோபஸை எவ்வாறு பிடித்து, சமைத்துச் சாப்பிடுவது என்பதை நடித்தே காட்டுவாராம். அந்த நடிப்பிலேயே எதிரே உள்ளவர்கள் பசியாறி விடுவார்களாம்!

ஆஸ்கர் விருது பெற்ற 'டிராஃபிக்' படத்தை இயக்கிய ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீபன் சோடர்பெர்க்கைப் போன்று ஒரு ஸ்டெடிகேம் கேமராவை இடுப்பில் கட்டி, லென்ஸைத் தன்னை நோக்கித் திருப்பிக்கொண்டு 'சிங்கிள்மேன் யூனிட்'டாக ஒரு படத்தை இயக்கி நடிப்பது கமலின் நீண்ட நாள் ஆசை!

நடிகர் நாகேஷுக்கும் கமலுக்குமான உறவு 'அப்பா-மகன்' உறவு போன்றது. தன்னை 'கமல்ஜி' என்று நாகேஷ் அழைக்கும்போது, 'எதுக்கு அந்த ஜி' என்ற கமலிடம், 'கமலுக்குள்ள ஒரு நாகேஷ் இருக்கலாம். ஆனால், நாகேஷுக்குள்ள ஒரு கமல் இருக்க வாய்ப்பே இல்லை' என்பாராம் நாகேஷ்!

கமலுக்கு சினிமா சென்டிமென்ட்களில் துளியும் நம்பிக்கை கிடையாது. 'ஹே ராம்' படத்தின் முதல் வசனமே இப்படித்தான் இருக்கும்... 'சாகேத்ராம் திஸ் இஸ் பேக்-அப் டைம்'!

நல்ல மூடு இருந்தால், நண்பர்களிடம் தன் கவிதைகளை வாசித்துக் காட்டுவார். விரல் ஜாலங்களை, குரல் ஜாலங்களுடன் கேட்கக் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள். இருந்தும் ஏனோ, இன்னமும் தொகுப்புகளாக வெளியிடாமல் தாமதிக்கிறார் கமல்!

''சந்திக்கும் மனிதர்களின் பேச்சுக்களை, நடவடிக்கைகளை நகலெடுப்பது போல் கவனிக்கும் ஆற்றல் எனக்குத் தெரிந்து சிலருக்கே உண்டு. இந்த ஆற்றல் கைவரப்பெற்றவர்கள் வரிசையில் முக்கியமான இடம் கமலுக்கு உண்டு'' என்கிறார் யூகி சேது!

'மர்மயோகி'யில் கமல் ஒரு அகோரி கேரக்டர் செய்வதாக இருந்தார். கொஞ்ச காலத்துக்கு முன்பு நீண்ட தாடி வளர்த்தது அதற்காகத்தான். 'சாமா சானம்' என்று தொடங்கும் பாடல் ஒன்றைக்கூட இதற்காகத் தயார் செய்துவைத்திருந்தார். 'மர்மயோகி' டிராப் என்றவுடன் தாடியை எடுத்துவிட்டார்!

'காலையில் எழுந்ததும் யார் முகத்தில் விழிக்க விருப்பம்?' என்று கமல் முன்பு நடத்திய 'மய்யம்' பத்திரிகையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. கமல் சொன்ன பதில், 'காட்டில் இருந்தால் நரி முகத்தில், கட்டிலில் இருந்தால் ஸ்த்ரீ முகத்தில்'!

பாபர் மசூதி இடிப்பின்போது யதேச்சையாக டெல்லியில் இருந்தார் கமல். விஷயம் கேள்விப்பட்டதும் உடனடியாக அப்போதைய பிரதமர் நரசிம்மராவைச் சந்தித்து, தமிழ் திரையுலகம் சார்பாக எதிர்ப்பைப் பதிவு செய்தார். பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக சினிமா உலகில் இருந்து முதன்முதலில் எழுந்த எதிர்க்குரல் கமலுடையது!

முட்டையின் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவில் மிளகுப்பொடி தூவிச் சாப்பிடுவது கமலுக்குப் பிடித்தமானது. கூடவே பிளாக் டீ!



இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டி.வி-யில் கமலின் பிறந்த நாளுக்காகப் புகழ்பெற்ற கவிஞர்களை அழைத்து ஒரு கவியரங்கம் நடத்தினார்கள். ஒரு நடிகரைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து நடத்தப்பட்ட முதல் கவியரங்கம் அதுதான்!

'ஆளவந்தான்' ரிலீஸின்போது, 'இனிமேல் 100 நாட்கள் எல்லாம் படம் ஓடாது. சினிமா பார்ப்பது வாழைப்பழம் சாப்பிடுவது மாதிரி. சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டால் அருகில் உள்ள பெட்டிக் கடையில் வாழைப்பழம் கிடைக்க வேண்டும்' என்று சொல்லி, அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியவர் கமல்தான்!

'யாரையாவது டின்னருக்கு அழைக்க வேண்டும் என்றால் யாரை அழைப்பீர்கள்?' என்று ஒருமுறை கமலிடம் கேட்கப்பட்டபோது, 'காந்தியடிகளை டின்னருக்கு அழைத்து, ஆட்டுப் பாலும் நிலக்கடலையும் பரிமாற விருப்பம்' என்று பதில் சொன்னார்!

'நாகேஷ், தன்னுடைய திரையுலக காமெடி வாரிசை உருவாக்காமல் போய்விட்டார். அந்தத் தவறை நானும் செய்ய மாட்டேன்!' அண்மையில் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை நடத்துவதற்கான காரணமாக நண்பர்களிடம் கமல் பகிர்ந்து கொண்டது இது!

சென்னை புறநகரில் ஒரு மல்டிப்ளெக்ஸ் கட்டுவதற்காக கமல் இடம் வாங்கிப்போட்டிருக்கிறார். அனைத்துவிதமான தொழில் நுட்பங்களுடன் கூடிய சினிமா தியேட்டர்களும், கேளிக்கை பூங்காக்களும், ரெஸ்டாரென்ட்டுகளும் அங்கு இருக்கும்!

தமிழ் சினிமாவை 'கோலிவுட்' என்று பலரும் சொன்னாலும் கமல் அந்த வார்த்தையை உச்சரிக்க மாட்டார். அப்படிச் சொல்ல வேண்டாம் என மேடைகளிலும் சொல்லியிருக்கிறார். தமிழ்த் திரையுலகம் என்று அழுத்தி உச்சரிப்பதே அவரது ஸ்டைல்!
ரசிகர்களுக்கு கமலின் பிறந்த நாள் செய்தி:
Dim lights Embed 
'உனக்குள்ள நடமாடிக்கிட்டு இருக்குற மிருகம்தான் எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்கு', 'போங்கடா... போய் புள்ள குட்டிங்களைப் படிக்க வைங்கடா', 'வீரம்னா என்ன தெரியுமா..? பயம் இல்லாதது மாதிரி நடிக்கிறது', 'ஓநாயா இருந்து பார்த்தாதான் அதோட நியாயம் என்னான்னு தெரியும்', 'சந்தோஷம்னா என்னன்னு அதை அனுபவிக்கும்போது யாருக்கும் தெரியுறதில்லை', 'மன்னிக்கிறவன் மனுஷன், மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய மனுஷன்' - இவை எல்லாம் வசனகர்த்தா கமல் எழுதிய புகழ்பெற்ற வசனங்கள்!


மணிரத்னத்தின் படம் ஒன்றில் நடிக்க மறுத்ததாக கமல் பற்றிப் பேச்சு எழுந்த நேரம், அதைப்பற்றி சொன்ன கமல், 'நான் ஒரு விலை உயர்ந்த யானை. அதற்குரிய பணம் கொடுத்து என்னைப் பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு நான் ஒத்துழைப்பேன்' என்றார்!


ஒரு முறை கமல் படப்பிடிப்பில் இருந்த போது அவரை பார்க்க ஸ்டில்ஸ் ரவி தனது மகளோடு சென்று இருந்தார். அந்த குழந்தையிடம் கொஞ்சிய கமல் உன் பேர் என்ன என்று கேட்க அது 'ஸ்ருதி' என்றது. அந்த நேரம் கமலை தேடி ஒருவர் ஓடிவந்து "உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது " என்றார். சந்தோஷப்பட்ட கமல் மகளுக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசனையில் இறங்கினார். ரவி மகள் பெயர் நினைவுக்கு வரவே அப்போதே ஸ்ருதி என்று பெயர் சூட்டினார்.