Wednesday, June 22, 2011

ஜின்களுக்குத் தனி உலகம் உண்டா ?

ஜின்களுக்கு என்று தனியொரு உலகம் இருப்பதாகச் சிலர் கூறி வருகின்றனர். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்சிந்தித்தால் இது தவறான கருத்து என்பதை அறியலாம். 

ஜின்கள் மனிதர்கள் வாழும் பூமியில் தான் வசிக்கின்றன. குறிப்பாக ஓடைகள் மற்றும் மலைக் கணவாய்களில்தங்கி இருக்கின்றன. 

மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்துசெல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள். 

அல்குர்ஆன் (55 : 33) 

பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்லுங்கள் என ஜின்களைப் பார்த்துக் கூறுவதாக இருந்தால் ஜின்கள் இந்தப்பூமியில் வசித்தாலே இவ்வாறு கூற முடியும். 

மேலும் பின்வரும் செய்திகளும் ஜின்கள் பூமியில் இருக்கின்றன என்று கூறுகின்றது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னிடம் "நஸீபீன்' என்னுமிடத்தைச் சேர்ந்த ஜின்களின் குழுஒன்று வந்தது. அவை நல்ல ஜின்களாயிருந்தன. அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான், "அவை எந்தஎலும்பையும் எந்த கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்''என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காகப் பிரார்த்தித்தேன்.''என்று பதிலளித்தார்கள். 

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) 

நூல் : புகாரி (3860) 

அபுத்தய்யாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : வயோதிகராக இருந்த அப்துர் ரஹ்மான் பின் கம்பஷ் (ரலி)அவர்களிடம் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தை அடைந்தவரா? என்று கேட்டேன். அதற்குஅவர்கள் ஆம் என்று கூறினார்கள். ஷைத்தான்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நெருங்கிய போதுநபியவர்கள் என்ன செய்தார்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர் அந்த இரவில் ஷைத்தான்கள்ஓடைகளிலிருந்தும் மலைக் கணவாய்களிலிருந்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி விரைந்தன.

முன்பேர வணிகம் என்றால் என்ன? இதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

எந்தப் பொருளையும் அன்றைய மார்க்கெட் நிலவரப்படி விற்பதும் வாங்குவதும் தான் யாருக்கும் பாதிப்புஏற்படுத்தாத வியாபாரமாகும். நாளைக்கு நமக்கு வரக்கூடிய பொருளுக்கு இன்று விலை நிர்ணயித்துக் கொண்டால்அதில் விற்பவர் அல்லது வாங்குபவர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இத்தகைய வியாபாரம் தான் முன்பேரவணிகம் என்று கூறப்படுகிறது. 

ஒரு விவசாயி தனது வயலில் விளையும் நெல்லை ஒரு மூட்டை 500 ரூபாய்க்குத் தருவதாக வியாபாரியிடம்ஒப்பந்தம் செய்கிறார். அறுவடை நாளில் நெல் விலை 600 ஆகி விட்டால் விவசாயிக்கு அநியாயமாக 100 நூறுரூபாய்ப் நட்டம். அவரது வயிறு எரிய இது காரணமாக ஆகி விடும். நாம் இப்படி ஒப்பந்தம் செய்யாமல் இருந்தால்நமக்கு நூறு நூறு ரூபாய் அதிகம் கிடைத்திருக்குமே என்று என்று ஏக்கம் கொள்வார். 

அது போல் ஒரு மூட்டை நெல் 400 ஆக குறைந்து விட்டால் விவ்சாயிக்கு நூறு ரூபாய் அதிகம் கிடைத்தாலும்வியாபாரிக்கு தண்டமாக நூறு ரூபாய் வீணாகிறது. 

இது தங்கம் டாலர் இன்னும் அனைத்துப் பொருட்களிலும் நடைமுறைபடுத்தப்படுகிறது. 

இது போன்ற வியாபாரம் சிறந்ததல்ல என்றாலும் அன்றைக்கு நபித்தோழர்களுக்கு இருந்த வறுமை காரணமாகசெல்வந்தர்களிடம் முன் கூட்டியே பணம் பெற்றுக் கொண்டு இது போல் வியாபாரம் செய்ய அனுமதிஅளித்தார்கள். 

பின்வரும் புகாரி ஹதீஸ்களைப் பார்க்க 

35-ஸலம் (முன்பணம் பெறுதல்) 

(பொருளைப் பிறகு பெற்றுக் கொள்வதாகக் கூறி விலைபேசி, முன்னரே விலையைக் கொடுத்து விடுவது.) 

பாடம் : 1 

ஸலமில் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் கூற வேண்டும். 

2239 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது, மக்கள் ஒரு வருடம், இரண்டு வருடங்களில் (பொருளைப்) பெற்றுக்கொள்வதாக, பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்து வந்தனர். நபி (ஸல்) அவர்கள், ஒருவர், (குறிப்பிட்டகாலத்திற்குப் பிறகு பெற்றுக் கொள்வதாக) பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்தால் குறிப்பிட்டஎடைக்காகவும் குறிப்பிட்ட அளவுக்காகவும் கொடுக்கட்டும்! என்று கூறினார்கள். 

ஒரு வருடம், இரண்டு வருடங்களில் என்றோ, இரண்டு வருடங்கள் அல்லது மூன்று வருடங்களில் என்றோதமக்கு அறிவிக்கப்பட்டதாக அறிவிப்பாளர் இஸ்மாயீல் பின் உலய்யா (ரஹ்) (ஐயப்பாட்டுடன்) அவிக்கிறார்கள். 

பாடம் : 2 

ஸலமில் நிர்ணயிக்கப்பட்ட எடையைக் கூற வேண்டும். 

2240 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மக்கள் இரண்டு, மூன்று வருடங்களில் பேரீச்சம் பழத்தைப்பெற்றுக்கொள்வதாக (ஒப்புக் கொண்டு, அதற்காக) முன்பணம் கொடுத்துவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ஒருவர்ஒரு பொருளுக்கு முன்பணம் கொடுத்தால், அளவும் எடையும் தவணையும் குறிப்பிடப்பட்ட பொருளுக்காக(மட்டுமே) கொடுக்கட்டும்! என்றார்கள். 

2241 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்த போது, (ஸலம் பற்றி குறிப்பிடுகையில்), அளவும் எடையும் தவணையும்குறிப்பிடப்பட்ட பொருளில் தான் அது அனுமதிக்கப்படும்! என்றார்கள். 

2242 & 2243 இப்னு அபில் முஜாலித் (ரலி) கூறியதாவது: 

அப்துல்லாஹ் பின் த்தா (ரலி) அவர்களும் அபூபுர்தா (ரலி) அவர்களும் ஸலம் வியத்தில் கருத்து வேறுபாடுகொண்டார்கள். அப்போது, என்னை இப்னு அபீஅஃவ்பா (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். அவர்களிடம் சென்றுநான் இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், நாங்கள் நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர்(ரலி)ஆகியோரின் காலத்திலும் கோதுமை, வாற்கோதுமை, உலர்ந்த திராட்சை, உலர்ந்த பேரீச்சம்பழம்ஆகியவற்றிற்காக முன்பணம் கொடுத்து வந்தோம்! என்றார்கள். பிறகு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான்கேட்டேன்; அவர்களும் இவ்வாறே கூறினார்கள். 

பாடம் : 3 

தோட்டம் துரவு மற்றும் விவசாய நிலம் இல்லாதவர்களிடம் விளைபொருட்களுக்காக முன்பணம் கொடுத்தல். 

2244 & 2245 முஹம்மத் பின் அபில் முஜாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: 

அப்துல்லாஹ் பின் த்தாத் (ரலி) அவர்களும், அபூபுர்தா(ரலி) அவர்களும் என்னை அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா(ரலி) அவர்களிடம் அனுப்பி, நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபித் தோழர்கள் கோதுமைக்காக முன்பணம்கொடுத்திருக்கிறார்களா? என்று கேள்! என்றனர். (அவ்வாறே நான் கேட்ட போது) அப்துல்லாஹ் பின் அபீ அஃவ்பா(ரலி) அவர்கள், கோதுமை, வாற்கோதுமை, ஸைத்தூன் (ஆலிவ்) எண்ணெய் ஆகியவற்றிற்காக அளவும்தவணையும் குறிப்பிட்டு, ஷாம் வாசிகளான நபீத் எனும் குலத்தாரிடம் நாங்கள் முன்பணம் கொடுத்து வந்தோம்!என்றார். தோட்டம் துரவும் விவசாய நிலமும் யாரிடம் இருக்கிறதோ! அவரிடமா? என்று நான் கேட்டேன்.அதற்கவர்கள் நாங்கள் அது பற்றி விசாரிக்க மாட்டோம்! என்றார்கள். பிறகு, அவ்விருவரும் என்னை அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்களிடம் அனுப்ப, அவர்களிடம் சென்று நான் கேட்ட போது, நபி (ஸல்)அவர்களது காலத்தில் நபித் தோழர்கள் பொருட்களுக்கு முன்பணம் கொடுத்து வந்தனர்; (முன்பணம்பெறுபவர்களிடம்) அவர்களுக்குத் தோட்டம் துரவு அல்லது விவசாய நிலம் இருக்கின்றதா என்று நாங்கள் கேட்கமாட்டோம்! என்று கூறினார்கள். 

2246 அபுல் புக்தரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: 

பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுப்பது பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள்,பேரீச்ச மரத்திலுள்ள கனிகள் உண்ணும் பக்குவத்தை அடையும் முன்பும் அதை எடை போடுவதற்கு முன்பும்அவற்றை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்! என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், (மரத்திலுள்ளதை) எவ்வாறு எடைபோடுவது? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டார். அவர்களுக்குஅருகிலிருந்த மற்றொரு மனிதர் எடை போடுவதன் கருத்து (அதன் எடை இவ்வளவு இருக்கும் என்று)மதிப்பிடுவதாகும்! என்றார்.

பகவத் கீதையில் முஹம்மது நபியைப் பற்றி முன்னறிவிப்பு உண்டா ?

இஸ்லாத்தின் வேதங்களில் ஒன்றாக பகவத் கீதையை நாம் கூற முடியாது. தவ்ராத இஞ்சீல் ஆகிய வேதங்களில்மனிதர்களின் வார்த்தைகள் கலந்து விட்ட போதும் இறைவனிடமிருந்து இறைத்தூதர்களுக்கு அவைவழங்கப்பட்டன என்ற அடிப்படையை அவ்வேதங்கள் ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் பகவத் கீதை அவ்வாறுவாதிடவில்லை. கடவுளே மனித அவதாரம் எடுத்து அதைச் சொன்னதாக கூறுவதால் அது இஸ்லாம் கூறும் வேதஇலக்கணத்தின் படி அமையவில்லை. 

அதில் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் பற்றி முன்னறிவிப்புக்கள் உள்ளன என்றெல்லாம் சிலர் பிரச்சாரம்செய்வதையும் கிருஷ்னர் இறைத்தூதர்களில் ஒருவர் என்று உளறி வருவதையும் நாம் ஏற்றுக் கொள்ள் முடியாது.இப்படி வாதிடுவதன் மூலம் இறைவன் இஅறக்கி அருளாத ஒன்றை இறை வேதம் என்று சொல்லி அல்லாஹ்வின்மீது இட்டுக்கட்டிய மாபாதகச் செயலைச் செய்யும் நிலை ஏற்படும். இறைவன் தூதராக அனுப்பியதற்கு ஆதாரம்இல்லாமல் ஒருவரை இறைத்தூதர் என்று கூறினால் அதுவும் பாவச்செயலாக ஆகி விடும். 

இஸ்லாத்தை உண்மைப்படுத்த மெய்யான சான்றுகள் கணக்கின்றி இருக்கும் போது வேதமல்லாத்தற்கு வேதஅங்கீகாரம் கொடுத்து இஸ்லாத்தைப் பொய்ப்பிக்கும் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.
அல்லாஹ்வுன் பெயரால் இட்டுக் கட்டுவோருக்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளைப் பின்வரும் வசன்ங்கள்கூறுகின்றன. இந்த எச்சரிக்கைகளுக்கு தக்க பதிலை அவர்கள் கூற முடியுமா என்று சிந்தித்துக் கொள்ளட்டும். 

திருக்குர்ஆன் 6:93 3:94 4:50 6:21 7:37 10:17 10:69 11:18 17:73 29:68

கணவர் இறக்கும் போது கர்ப்பமாக இருந்தால் இத்தா அவசியமா?

கணவர் இறக்கும் போது, கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட பெண் இத்தா இருப்பது கட்டாயமா? ஆம் என்றால் விளக்கம்தரவும். இத்தா இருப்பதன் அவசியம் என்ன? 

அக்பர் 

பதில் 

கர்ப்பிணிப் பெண்கள் அவர்கள் குழந்தையை ஈன்றெடுக்கும் வரை இத்தா இருக்க வேண்டும். 

உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும்,மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள். கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள்பிரசவிப்பதாகும். அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான். 

அல்குர்ஆன் (65 : 4) 

கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்று2:234 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. 

இந்தக் காலக் கெடுவிலிருந்து கர்ப்பிணிப் பெண்கள் விதிவிலக்குப் பெறுகிறார்கள். இவ்வசனத்திலிருந்து (65:4)இதை அறியலாம். 

கணவன் மரணிக்கும் போது மனைவி நிறை மாதக் கர்ப்பிணியாக இருந்து, கணவன் இறந்த அன்றே பிரசவித்துவிட்டால் அவளுக்கு இத்தா ஏதும் கிடையாது. 

கணவன் மரணிக்கும் போது முதல் மாதக் கருவை மனைவி சுமந்திருந்தால் அவள் பிரசவிக்கும் வரை மறுமணம்செய்யக் கூடாது. இதற்கு எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் ஆகலாம். 

பின்வரும் நபிமொழியிலிருந்தும் இச்சட்டத்தை அறியலாம். 
4910 حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ حَدَّثَنَا شَيْبَانُ عَنْ يَحْيَى قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عَبَّاسٍ وَأَبُو هُرَيْرَةَ جَالِسٌ عِنْدَهُ فَقَالَ أَفْتِنِي فِي امْرَأَةٍ وَلَدَتْ بَعْدَ زَوْجِهَا بِأَرْبَعِينَ لَيْلَةً فَقَالَ ابْنُ عَبَّاسٍ آخِرُ الْأَجَلَيْنِ قُلْتُ أَنَا وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ قَالَ أَبُو هُرَيْرَةَ أَنَا مَعَ ابْنِ أَخِي يَعْنِي أَبَا سَلَمَةَ فَأَرْسَلَ ابْنُ عَبَّاسٍ غُلَامَهُ كُرَيْبًا إِلَى أُمِّ سَلَمَةَ يَسْأَلُهَا فَقَالَتْ قُتِلَ زَوْجُ سُبَيْعَةَ الْأَسْلَمِيَّةِ وَهِيَ حُبْلَى فَوَضَعَتْ بَعْدَ مَوْتِهِ بِأَرْبَعِينَ لَيْلَةً فَخُطِبَتْ فَأَنْكَحَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ أَبُو السَّنَابِلِ فِيمَنْ خَطَبَهَا رواه البخاري 

அபூ சலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார். அப்போது அவர்களுக்கு அருகில் அபூஹுரைரா (ரலி)அவர்களும் அமர்ந்திருந்தார்கள். (அங்கு வந்த) அந்த மனிதர், "தன் கணவன் இறந்து நாற்பது நாட்களுக்குப் பின்பிரசவித்த ஒரு பெண்(ணின் "இத்தா' பிரசவத்தோடு முடிந்து விடுமா என்பது) பற்றி எனக்குத் தீர்ப்புவழங்கிடுங்கள்'' என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "(நான்கு மாதம் பத்து நாட்கள், நாற்பது நாட்கள் ஆகிய) இரு தவணைகளில் எது அதிகமோ அது தான் இத்தா (அதாவது நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா)'' என்று கூறினார்கள். 

உடனே நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "கர்ப்பிணிகளுக்கான இத்தா காலம் அவர்கள் குழந்தைபெற்றெடுக்கும் வரையிலாகும்'' (என்று குர்ஆன் 65:4ஆவது வசனம் கூறுகிறதே!) என்று கேட்டேன். 

அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், "நானும் என் சகோதரர் மகன் அபூசலமா(வின் கருத்துடன்) உடன்(பட்டு)இருக்கிறேன் என்று கூறினார்கள். அப்போது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம் பணியாளர் "குரைப்' என்பவரை, (இது குறித்து) கேட்பதற்காக உம்மு சலமா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதற்கு உம்மு சலமா (ரலி)அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: 

சுபைஆ (பின்த் அல்ஹாரிஸ்) அல் அஸ்லமிய்யா கர்ப்பிணியாக இருந்த சமயத்தில், அவருடைய கணவர் (சஅத்பின் கவ்லா -ரலி) இறந்து விட்டார். அவர் இறந்து நாற்பது நாட்களுக்குப் பின்னால், சுபைஆ குழந்தைபெற்றெடுத்தார். உடனே அவரைப் பெண் பேசப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குத்திருமணம் முடித்து வைத்தார்கள். அவரைப் பெண் கேட்டவர்களில் அபுஸ் ஸனாபில் (பின் பஅக்கக் -ரலி)அவர்களும் ஒருவராவார். (எனவே, கர்ப்பிணிக்கு "இத்தா' பிரசவம் வரையில் தான்.) 

புகாரி (4909) கர்ப்பம் உறுதியாகி விட்டால் முதல் கணவரால் உருவான குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் தான் அவள் இன்னொரு கணவனை மணக்க வேண்டும்

தாயாகப்போகும் அழகுராணி ஐஸ்வர்யா ராய்


தனது மருமகள் ஐஸ்வர்யா ராய் கர்ப்பம் தரித்துள்ளதாக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது பிளாக்கில் குறிப்பிட்டுள்ளார்.

37 வயதாகும் ஐஸ்வர்யா ராய் முன்னாள் உலக அழகியாவார். பாலிவுட் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமான முகம் ஐஸ்வர்யாவுடையது. 2007ம் ஆண்டு அவருக்கும், நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் திருமணம் நடந்தது. அதன் பின்னர் இருவரும் பெற்றோராகும் நாளை அத்தனை பேரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இதுதொடர்பாக பல்வேறு விதமான தகவல்களும் வந்தவண்ணம் இருந்தன.

இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் கர்ப்பமடைந்திருப்பதாக அவருடைய மாமனார் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமிதாப் எழுதுகையில், செய்தி, செய்தி, செய்தி! நான் தாத்தாவாகப் போகிறேன். ஐஸ்வர்யா ராய் தாய்மயடைந்துள்ளார். மிகவும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது என்று உற்சாகத்துடன் கூறியுள்ளார் அமிதாப்.

மேலும், இந்த செய்தியை வெளியிட்ட அரை மணி நேரத்திற்குள் வாழ்த்துகள் தெரிவித்து 2843 டி்விட்டர் செய்திகள் வந்து குவிந்து விட்டதாகவும், இந்த வாழ்த்துகள், ஆசிர்வாதங்களைப் பார்த்து தான் நெகிழ்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார் அமிதாப்.

எப்போது குழந்தை பிறக்கும் என்பது குறித்த செய்தியையும், ஐஸ்வர்யாவுக்கு இப்போது எத்தனையாவது மாதம் என்பதையும் அமிதாப் கூறவில்லை.

ஐஸ்வர்யாவைப் போல அழகான குழந்தை பிறக்க வாழ்த்துவோம்.