Tuesday, June 14, 2011

இத நாம படிக்காம விட்ருந்தா நம்ம கம்ப்யூட்டரும் தொலயப்பாத்தே...

இது போன்ற அறிவிப்புகளுக்குப் பின்னர், அந்த இணைய தளங்களிலிருந்து புரோகிராம்களை டவுண்லோட் செய்து பயன்படுத்த முனையும்போது கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலான வைரஸ் மற்றும் பிஷ்ஷிங் புரோகிராம்கள் இந்த முறையில் தான் இறங்குகின்றன. பின் நம் கம்ப்யூட்டரை முடக்குகின்றன. பெர்சனல் தகவல்களைத் திருடி அனுப்புகின்றன. எனவே வெப்சைட்டிலிருந்து புரோகிராம்களை டவுண்லோட் செய்திடும் முன் அந்த வெப்சைட் அதிகார பூர்வமானதா என்று ஒரு முறைக்கு இரு முறை கவனிக்கவும். 

கம்ப்யூட்டரில் இணையத்தில் தகவல்களைப் பெற்றுக் கொண்டிருக்கையில், உங்களிடம் உள்ள பிளாஷ் ப்ளேயர், குயிக் டைம் புரோகிராம், ஸ்கைப் போன்ற ஏதேனும் ஒன்றுக்கான அப்டேட் தயாராக இருப்பதாகவும், அதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும் என்று ஒரு பாப் அப் செய்தி கிடைக்கும். உடனே நாம் அதாகத்தானே செய்தி வந்துள்ளது என்று எண்ணி, உடனே அப்டேட் செய்திட இசைவு தரும் பட்டனில் கிளிக் செய்திடுவோம். இங்கு தான் நாம் மாட்டிக் கொள்கிறோம். 

வைரஸ் பரப்பும் நோக்கமுடையவர்கள் பெரும்பாலும் பிரபலமான நிறுவனங்களின் பெயர்களில் மாற்றம் தெரியாத வகையில் ஒரிரு எழுத்துக்களில் மாற்றம் செய்து அல்லது அப்படியே பெயர் அமைத்து வெப்சைட்டுகளை உருவாக்கி இவற்றைப் பரப்புகின்றனர். எடுத்துக் காட்டாக குயிக் டைம் என்ற மீடியா பிளேயர் தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் பெயரில் ஒரு வெப்சைட் திறக்கப்பட்டுள்ளது.

நாம் நம் கம்ப்யூட்டரில் குயிக் டைம் பிளேயரை வைத்திருந்தால் அது அறிந்து கொண்டு இந்த சாப்ட்வேருக்கு அப்டேட் பைல் உள்ளது; இந்த லிங்க்கில் கிளிக் செய்திடவும் என்று மெசேஜ் அனுப்புகிறது. நாம் கிளிக் செய்தால் சிறிது நேரத்தில் வைரஸ் புரோகிராமினை நம் கம்ப்யூட்டரில் பதித்துவிட்டு அப்டேட் புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டரில் பதிக்க இயலவில்லை என்ற செய்தியைத் தந்துவிட்டு மறைந்துவிடுகிறது. 

அடுத்த முறை கம்ப்யூட்டர் இயக்கும்போது வைரஸ் உடனடியாகச் செயல்பட்டு அனைத்து நாச வேலைகளையும் மேற்கொள்கிறது. இதே போல மைக்ரோசாப்ட், விண் ஆம்ப் போன்ற தளங்களின் பெயர்களிலும் போலி வெப்சைட்டுகள் உருவாக்கப் பட்டு வைரஸ்கள் பரப்பப் படுகின்றன. எனவே இது போன்ற தளங்களில் இருந்து புரோகிராம்களை டவுண்லோட் செய்திடும் முன் அந்த தளங்களின் ஹோம் பேஜ் சென்று அவை உண்மையிலேயே அந்த நிறுவனத் தளங்கள் தானா என்று உறுதி செய்து கொண்டு பின் டவுன்லோட் செய்திட வேண்டும். 
அடுத்ததாக டவுண்லோட் செய்திடத் தொடங்கும் முன் நமக்கு அந்த புரோகிராமினை இயக்கவா அல்லது சேவ் செய்திடவா என்று ஆப்ஷன் கேட்கப்படும். அப்போது ஒரு தனி போல்டரில் இதனை சேவ் செய்திடவும். சேவ் செய்தபின் கம்ப்யூட்டரில் உள்ள ஆண்டி வைரஸ் புரோகிராம் மூலம் சோதனை செய்த பின்பே இன்ஸ்டால் செய்திடவும்.

விண்டோஸ் 8 க்கு மாற அம்மி மிதித்து அருந்ததி பாப்பீங்களா?

தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 எப்படி இருக்கப்போகிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மையில் நடைபெற்ற தொழில் நுட்பக் கருத்தரங்குகளில் தெரிவித்துள்ளது. தைபே நாட்டில் இது குறித்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் வல்லுநர் மைக்கேல் உறுதியான சில அம்சங்கள் குறித்து கூறியுள்ளார். 

தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பார்க்கையில், விண்டோஸ் 8, குறைந்த மின்சக்தியில் இயங்கும் ஏ.ஆர்.எம். சிப்களில் செயல்படக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. திரை தொட்டு இயக்கும் திறனும், எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பத்துடன் இணைந்து செயல்படும் திறனும் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மக்களுக்குப் பயன்படும் விஷயங்களில், முதலாவதாக, விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்க, இப்போது விண்டோஸ் 7 பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களை மாற்ற வேண்டிய தேவை இருக்காது. ஏற்கனவே விஸ்டா சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதனை இயக்க புதிய ஹார்ட்வேர் சாதனங்களுடன் கூடிய பெர்சனல் கம்ப்யூட்டர் தேவை என்ற கட்டாயத்தினை மைக்ரோசாப்ட் முன்வைத்ததனால், விஸ்டா கம்ப்யூட்டர் பயனாளர்களிடம் சென்றடையாமல் போனது. அந்த தவற்றை மீண்டும் செய்திடாமல் இந்த முறை மைக்ரோசாப்ட் விழித்துக் கொள்கிறது. எனவே கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு எளிதாக மாறிக் கொள்ளலாம். ஹார்ட்வேர் தேவைக்கென செலவு இருக்காது. புதிய கம்ப்யூட்டர் வாங்கினால் தான், விண்டோஸ் 8 பயன்படுத்த முடியும் என்ற நிலையை உருவாக்கி, புதிய சிஸ்டம் மக்களிடம் செல்லாத ஓர் சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடாது என மைக்ரோசாப்ட் மிகக் கவனமாக இம்முறை செயல்படுகிறது.
அடுத்ததாக, விண்டோஸ் 8 பயன்படுத்த இருக்கும் யூசர் இன்டர்பேஸ் எனப்படும் பயன்படுத்துபவருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு இடையே உள்ள செயல்பாட்டை எளிதாக்கும் வழி முறை ஆகும். இதனை Immersive UI என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. "கவனத்தை முழுவதும் கவர்ந்த இடைமுகம்' என்பது இதன் பொருள். புதிய மற்றும் பழைய ஹார்ட்வேர் கொண்ட கம்ப்யூட்டர் அனைத்திலும் தன்னை மாற்றிக் கொண்டு இயங்கும்படி இது அமைக்கப்படுகிறது. இந்த இடைமுகம் சரிப்பட்டு வராது என எண்ணுபவர்கள், வழக்கம்போல, தற்போதைய ஏரோ வகை இடைமுகத் தினைப் பயன்படுத்தலாம்.

விண்டோஸ் 8 சிஸ்டம் தொடுதிரையில் தொட்டு இயக்கும்படியாக அமைக்கப் படுகிறது. எனவே இதன் முழுப் பயனும் தொடுதிரை உள்ள மானிட்டர்களைக் கொண்டு பெர்சனல் கம்ப்யூட்டர்களை இயக்குபவர்களுக்குக் கிடைக்கும். தொடுதிரை செயல்பாடு மட்டுமின்றி, பல வகையான சென்சார் செயலாக்கமும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்பட்டுள்ளது. இதனால் மோஷன் செயலாக்கம், திரைக்கு அருகில் செல்லும் தூரம் ஆகியன மூலமும் சில பயன்பாடுகள் கிடைக்கும். தொடுதிரை மானிட்டர்கள் இல்லாதவர்களுக்கு வழக்கம்போல பயன் பாட்டினை மேற்கொண்டு அனுபவிக்கலாம். 
புதிய இடைமுகத்தில் பெரிய அளவில் வண்ணங்களில் ஐகான்கள் அமைக்கப் படுகின்றன. விண்டோஸ் போன் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்படும் தொழில் நுட்பமும் தோற்றமும் இந்த வகையில் தரப்படுகின்றன. இருப்பினும் தற்போதைய பழக்கப்படி மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் சிஸ்டத்தினை இயக்கலாம். பேஜ் அப் மற்றும் பேஜ் டவுண் கீகள் மூலம் அப்ளிகேஷன் டைல்ஸ் இடையே செல்லலாம். ஒரு மவுஸ் கிளிக் மூலம் இவற்றை இயக்கலாம். கீ போர்டில் இப்போது போல, ஷார்ட் கட் கீகள் மூலமும் இயக்கலாம். 

இருப்பினும் சில விஷயங்களை இப்படித் தான் இருக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் கூறி வருகிறது. மானிட்டர் திரை விண்டோஸ் 8 சிஸ்டத்தின் முழுமையான பயன்களைப் பெற வேண்டும் என்றால், திரை 16:9 என்ற வகையில் ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டு அமைக்கப்பட வேண்டும். 1366x768 என்ற ரெசல்யூசனுக்குக் குறையாமல் திரை இருக்க வேண்டும். 1024x768 என்ற ரெசல்யூசனில் உள்ள திரைகளிலும் இந்த சிஸ்டத்தின் பயன்பாடுகள் கிடைக்கும் என்றாலும், 1366x768 என்ற வகைதான் சிறப்பான பயன்பாட்டினைத் தரும் என்று மைக்ரோசாப்ட் கூறுகிறது. 

விண்டோஸ் 8 எப்போது வெளியாகும் எனச் சரியான தேதி அறிவிக்கப் படவில்லை. ஆனால் எப்படியும் 2012ல் வெளியாகும் என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

எனவே விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரும்போது, அதனைத்தான் பயன்படுத்த வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்கள், இப்போதே மேலே கூறப்பட்ட மானிட்டர்களையும், தற்போதுள்ள ஹார்ட்வேருக்குச் சற்று கூடுதலான திறன் கொண்ட கம்ப்யூட்டர் களையும் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.