Thursday, March 3, 2011

இப்படியும் சில குழந்தைகள்


இமெயிலில் வந்த இந்தக் குறும்புப் புகைப்படங்களை பார்த்துக் கொண்டேயிருந்தபோது திடீரென்று தோன்றிய ஐடியாவில் ஏதோவொன்றை எழுதியிருக்கிறேன்.. கோபிக்க வேண்டாம்.. என்ஜாய் பண்ணுங்க மக்களே..!

நான்தான் வால் பையன்.. இதுக்கு மேலேயும் ஆதாரம் வேணுமா உங்களுக்கு..?


ஐயையோ.. தெரியாத்தனமா தமிழ்மணம் போட்டிக்கு வந்த பதிவுகளையெல்லாம் படிச்சுத் தொலைஞ்சிட்டேன்..



தூயா ஆண்ட்டி உசிரோட சமைக்கிறது எப்படின்னு போஸ்ட் போட்டிருக்காங்க..



ஷக்கலக்க பேபி.. ஷக்கலக்க பேபி.. கானா பிரபா அங்கிள் எனக்காக போட்ட பாட்டு கேக்குது..



அப்பா ஜ்யோவ்ராம்சுந்தர் பதிவைப் படிக்குறாரு.. அதான் என்னைத் திருப்பிப் போட்டுட்டாரு..



சர்வேசன் மாமா 'நச் கதை போட்டி' வைச்சிருக்காரு. 'ச்சும்மா' இதே மாதிரி ஊதிருவேனாக்கும்..


பெருசு தண்டோராவோட பதிவையெல்லாம் படிச்சிட்டு கடைசீல இந்தத் தண்ணில குளிச்சாத்தான் சூடு அடங்குது..


குசும்பன் மாமா எழுதாம இருக்காரே.. ரொம்ப வருத்தமா இருக்கு..


ஐயையோ... ஆசீப் அண்ணாச்சி துபாய்லபோய் கட்சி ஆரம்பிச்சிட்டாராம்..



ஹாலிவுட்பாலா சித்தப்பா எழுதறதையெல்லாம் படிக்கப் படிக்க முடி இப்படி நீண்டுக்குது..



ஐயையோ.. வடகரை அண்ணாச்சிக்கிட்ட வம்பு பண்ணி இப்படி மாட்டிக்கிட்டனே..



சஞ்சய் மாமாவுக்கு இப்போதைக்கு கல்யாணம் இல்லையாம்.. சந்தோஷமா இருக்கு..!



ச்சீச்சீ.. சுகுணாதிவாகரும், கமலஹாசனும் எப்பவுமே குட்பிரெண்ட்ஸ்தான்..



போன மாசம் பைத்தியக்காரன் அண்ணாச்சி காட்டுன படத்துல பார்த்த ஸ்டைல்.. நல்லாயிருக்கா..?



எப்படி என் ஆங்கிள்..? எடுத்தது ஜாக்கிசேகர் அங்கிளாக்கும்..



இப்படி சாதுகளையெல்லாம் கழுத்தை நெரிச்சு கொல்றதுதான் வலையுலக ஸ்டைலு..



அண்ணன் வினவு பதிவையெல்லாம் படிக்கணும்னா இப்படியொரு கண்ணாடியை போட்டுக்கோணும்..!



இதுதான் மொக்கை குரூப்போட ஸ்டைலு.. எத்தனை பேர் தலைல மண்ணையள்ளிப் போட்டிருக்காங்க தெரியுமா?



ஹி..ஹி.. நான் மா.சி.யோட குரூப் மெம்பர்.. இது அவருக்கே தெரியாது. அவர்கிட்ட சொல்லிராதீங்க..



கேபிள் சங்கர் தாத்தாவோட நிதர்சனக் கதைகள் எல்லாத்தையும் படிச்சனா..? தலை அரிக்குது.. அதுதான் கட் பண்றேன்..



ஐயையோ நான் ஜட்டியோட இருக்கேன். அப்புறமா நந்து அப்பாவுக்கு போஸ் தரேன்..



'யூத்' உண்மைத்தமிழன் சின்ன வயசுல இப்படித்தான் இருந்தாராம்.. அதான் இப்பவும் இப்படி இருக்காரு..

படித்தோர் அனைவருக்கும் குழந்தைகளின் சார்பாக எனது நன்றிகள்..!!!



Read more: http://truetamilans.blogspot.com/2009/11/blog-post_3866.html#ixzz1FYuNPKu0

வலைப்பதிவுகளில் வைரஸ்கள்-அபாயம்-எச்சரிக்கை


அதிசயத்திலும், அதிசயமாக 'கதை' எழுதப் போன நம்ம 'மவராசன்' திடீரென்று ஒரு பாட்டில் பினாயிலை ஒரே மூச்சில் குடித்தவரைப் போல் இன்று பதிவுகளைப் போட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறார். என்னவென்று தெரியவில்லை. தலைப்புகளைப் பார்த்தால் படித்தவுடனேயே ராயல் பாருக்கு ஓடிப் போய் ரெண்டு ஸ்மால் கட்டிங் சாப்பிட வேண்டும் போல் தெரிகிறது..


ஆனா.. என் கம்ப்யூட்டர்ல அந்த 'மவராசனோட' http://blog.balabharathi.net இந்த வீடு ஓப்பனே ஆக மாட்டேங்குது.. காரணம் கேட்டா, ஏதோ web filter-ஆமே.. அதை போட்டு என்னையும், என் கம்ப்யூட்டரையும் சில 'வைரஸ்கள்'கிட்ட இருந்து காப்பாத்திருக்கிங்களாம்..

அது 'மவராசன்யா.. வைரஸ் இல்லே'ன்னு 'தல, தல'யா அடிச்சுச் சொல்லிப் பார்த்தேன்.. ம்ஹ¤ம்.. கேக்க மாட்டேங்குறாங்க.. 'மவராசன் மாதிரிதான் தெரியும்.. ஆனா உள்ள விட்டீங்கன்னு வைச்சுக்குங்க.. அப்புறம் உங்க மூளையைக் கழட்டிப் போடுற வைரஸாக கூட மாறலாம்.. எல்லாம் நல்லதுக்கேன்னு நினைச்சுக்குங்க'ன்னு சொல்லிட்டாங்க..

கூடவே நம்ம மா.சிவக்குமார் www.tamilbloggers.org-ன்ற இந்த வீட்ல எதையோ எழுதி விட்டிருக்காரு. ஒருவேளை நம்மளை பத்தி ஏதாவது சொல்லியிருப்பாரோ.. பார்க்கலாம்னு போனா.. அதுவும் ஓப்பன் ஆகலே.. கேட்டா.. அதுவும் தடை செய்யப்பட்ட கொடுமையான வைரஸ்களில் ஒன்றாக இருக்கலாம் என்று எங்களது அலுவலக வைரஸ் எதிர்ப்புக் குழுவினர் கருதுகின்றனர்.

இப்ப நான் என்ன செய்யறது? இந்த 'ரெண்டு வைரஸ்களும்' என்ன எழுதிருக்காங்கன்னு படிச்சுப்போட்டு, யாராச்சும் நம்ம 'வீட்டுல' அதையே ஒரு காப்பி பதிவு போட்டு அனுப்பினீங்கன்னா நல்லாயிருக்கும்..

இல்ல வேண்டாம்.. நீயாச்சும் நல்லபடியா, சூதானமா, புத்திசாலித்தனமா இருந்துக்க ராசான்னு சொன்னீங்கன்னா..

சரீங்க சாமிகளா.. அப்படியே இருந்துக்குறேன்..

அந்த ரெண்டு 'வைரஸ்கள்'கிட்டேயும் இதை மட்டும் சொல்லிருங்க..

"உண்மைத்தமிழனுக்கு Anti Virus கிடைச்ச பின்னாடி இந்த வைரஸ்களை உள்ள விட்டு, படிச்சுப் பார்த்துட்டு அப்புறமா பதில் போடுவாருன்னு.."

சிடி என்னும் குறுந்தகடு


சிடி என்பது  compact disc (CD)  என்பதாகும். இது பாடல்கள்,படங்கள்,தகவல்கள் பதிய பயன்படுகிறது.
பொதுவாக இது 700 mb அளவு கொண்டதாக இருக்கிறது. 1978 ஆம் ஆண்டு பாலிகிராம் நிறுவனம் பாலிகார்பனேட் எனும் பொருள் சிடி தயாரிக்க சிறந்தது என அறிவித்தது. சிடி யின் வட்டம் 115 mm ஆகும். 1979 ஆம் ஆண்டில்  ஒரு சிடி இன் இயக்க நேரம் 74 நிமிடமாக இருந்தது. இப்பொழுது DVD  மற்றும்  BLUE  RAY DISC ம் கிடைக்கிறது. இது HD, FULL HD படங்களை பதிய உதவுகிறது.  இப்பொழுது Dual layer DVD,Blue Ray Disc ம் கிடைக்கிறது.  இது இரண்டு மடங்கு கொள்ளளவு கொண்டதாகும்.

இது எப்படி இருக்கு?


இது எப்படி இருக்கு?


நன்றி : துக்ளக்

ஒரு அம்மாவும் மகளும்


மகள்: "அம்மா, என்னம்மா இவ்வளவு பாத்திரங்கள்.. எதுக்கும்மா இதெல்லாம்?"




அம்மா: "இந்த பாத்திரங்களெல்லாம் உனக்கு சீர் செய்யத்தான்.."


மகள் அத்தனை பாத்திரங்களையும் கலைத்துப் பார்த்தாள்..


மகள்: "இதென்னம்மா.. தோசைக்கல் கூட வைத்திருக்காயே.."


அம்மா: "ஆமாம். உன் புருஷனுக்கு தோசை செஞ்சு கொடுக்க வேண்டாமா?"


மகள்: "அப்படின்னா அவரால தோசைக்கல் கூட வாங்க முடியாதாம்மா?"


அம்மா: "அப்படியெல்லாம் பேசக்கூடாதும்மா.. இதெல்லாம் காலம், காலமாக நடக்கும் சம்பிரதாயம்"


மகள்: "ம்ம்.. சரிம்மா..இந்தப் பாத்திரங்களையெல்லாம் வைத்து நான் என்ன செய்ய?"


அம்மா: "என்னடி கேள்வி இது? உன் புகுந்த வீட்டில் வைத்து சமைப்பதற்கு பாத்திரங்கள் வேண்டாமா? அதற்குத்தான்...."


மக‌ள்: "ஏன் அவர்கள் வீட்டில் பாத்திரங்கள் இருக்காதாம்மா?"


அம்மா: "இருக்கும். இருந்தாலும் உனக்கென்று தனியாக எல்லாம் வேண்டாமா?"



மகள்: "எல்லாத்தையும் இப்போதே அவர்களும் கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள், நீங்களும் தனியாக எனக்கென்று அத்தனையும் ஒதுக்கி விடுகிறீர்கள். அப்புறம் ஏன் கல்யாணத்துக்கப்புறம் என் மகனை மயக்கி தனியாக கூட்டிச்சென்று விட்டாள் என்று எல்லாரும் சொல்கிறார்கள் அம்மா? பக்கத்து வீட்டுல இருக்கிற ஜானகி அக்கா அழுதப்போ பாவமா இருந்துச்சும்மா..."


அம்மா: "!....!" 

கோழி முட்டை பற்றிய சில சுவையான தகவல்கள்



கால்நடைகள் மூலம் நமக்கு கிடைக்கிற உணவுப் பொருட்கள் பால்,முட்டை,இறைச்சி. இதுல பாலை சைவம்னு சொல்றோம்.இறைச்சியை அசைவம்னு முடிவு கட்டிட்டோம். ஆனா இந்த முட்டை மட்டும்  நடுவில் கிடந்து திண்டாடுது.

                        பால் தருவதால் பசு இறப்பது இல்லை. ஆனா இறைச்சி வேணும்னா ஒரு உயிரை கொன்னே ஆகணும் இல்லையா. அப்படி பார்க்கிறபோ முட்டைய சைவ உணவுன்னு சொல்லலாம். முட்டைக்குள்ளேருந்து குஞ்சு வர்ரத தடுத்துதானே முட்டையை சாப்பிடுறீங்க ! அப்படீன்னு நீங்க கேட்கலாம்.
                         
                        இப்போழுதெல்லாம் சேவல் சேராத, உயிர் கரு இல்லாத, அடை வைத்தாலும் குஞ்சு பொரிக்காத  முட்டைகள் தான் பண்ணையிலிருந்து வருது.
கருவுள்ள முட்டை வேணும்னாதான் சேவல் சேரணும். முட்டை உருவாகக் கோழியோட உடம்புல இருக்கிற சத்தே போதும்.
                         பாலை சைவ உணவாக கருதுபவர்கள், உயிர்க்கரு இல்லாத முட்டைகளை சைவ உணவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி சொல்லியிருக்கிறாரே போதாதா ?. சைவம் அசைவம்கிறது மனதை பொறுத்த விஷயம்.நீங்களே யோசிச்சு முடிவெடுங்க. ஆனால் முட்டை ஒரு உயர்ந்த உணவு. 
இனி முட்டையை பற்றிய சில பயனுள்ள தகவல்கள்

*  நாட்டுகோழி முட்டையில்தான் சத்து அதிகமா ?
       பொதுவா மஞ்சள் கரு நிற்ம் அடர்த்தியா இருந்தா அது சத்து நிறைந்ததுன்னு மக்கள் நினைக்குறாங்க.  சாந்தொபில்(xanthophyl) ன்னு சொல்ற ஒரு பொருள் தான் மஞ்சள் நிறத்தை கொடுக்குது. அதுக்கும் சத்துக்கும் சம்பந்தம் கிடையாது. பண்ணை கோழியில் நாம் கொடுக்கிற உணவுல எல்லா சத்தும் இருக்குது. ஆனா நிறம் கொடுக்கிற அந்த பொருள் குறைவா இருக்குது அவ்வளவுதான். நாட்டு கோழி முட்டையைவிட பண்ணை கோழி முட்டை அளவில் பெரிதாய் இருக்கும். அதனால் கூடுதல் சத்து கிடைக்கும்.

*   முட்டை கெட்டுபோய் விட்டதா என்பதை எப்படி கண்டு பிடிப்பது.?
               கேண்ட்லிங்  (candling) என்ற முறையில் ஒளிக்கதிர்களை செலுத்தி முட்டையின் தரம் அறியலாம்.
 அல்லது ஒரு பாத்திரத்தில் ரெண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் உப்பை போட்டுக் கலக்கி  அதுல முட்டைய மெதுவா போடுங்க. நல்ல முட்டையா இருந்தா பாத்திரத்தின் அடியிலே இருக்கும் . பழைய முட்டையா இருந்தா பெருத்த பாகம் மேலே நிக்கும். அழுகிய முட்டைன்னா அப்படியே மிதக்கும்.
  முட்டையை பாதுகாக்க சில டிப்ஸ்

*   அழுக்கான முட்டையை வாங்காதீங்க. அப்படியே வாங்கினாலும் கழுவாமல் உடனேயே உபயேகப்படுதிடுங்க. கழுவினா முட்டையில் ஓட்டில் நிறைய நுண் துழைகள் உள்ளன. அதன் வழியாக  நுண்கிருமிகள் குறிப்பா சூடோமோனஸ் (pseudomonas)  நுழைஞ்சி முட்டையை கெடுத்திடும்.
*   முட்டையை அடுக்கி வைக்கும்போது குறுகிய பகுதி அடியில் வரும்படி வைங்க.

*  முட்டையை அவிக்கும்போது நீரில் கொஞ்சம்  உப்பு போட்டீங்கன்னா ஓடு உரிக்க எளிதா இருக்கும்.
*   வேகவச்ச முட்டைய உடனடியா பச்சை தண்ணீரில் போட்டா பச்சை வளையம் ஏற்படாது.
*    ஸ்பூனால அடிச்சு கலக்கும் போது நுரை எளிதா வந்துச்சினாலும் அது நல்ல முட்டை.
*     எலுமிச்சம் பழச்சாறு கொஞ்சம் ஊத்தி வேகவச்சா உடையாமல் அவிச்சி எடுக்கலாம்.
*     முட்டை அடிச்ச பாத்திரம் கவுச்சி அடிக்குதே என்ன பண்றதுங்கரீங்களா ?
 கவலைப்படாதீங்க ! எலுமிச்சம் பழச்சாறு அல்லது தோலால் துலக்கிப் பிறகு பாத்திரத்தை  சூடுபடுத்தினா வாடை போயிடும்.

முதல் காதல் அனுபவம்


மொதமொதல்லா நம்ம வூட்டுக்குள்ளப் பூந்து ஒரு கமெண்ட் அடிச்சிட்டாரே மனுஷன்னு பார்த்தா.. கிடா சாப்பிட வாடான்னு கூப்பிட்டு கைல தீச்சட்டியைக் கொடுத்த மாதிரி ஏதோ weird-ஆமே.. அதைத் தூக்கிக் குடுத்துட்டாரே இந்த மனுஷன்..


இப்படி மாட்டி விட்டுட்டீங்களே சென்ஷி.. ஏதோ சாப்பிட்டியா? தூங்கினியான்னு கேக்குற மாதிரி "உங்க முதல் காதல் எது?"ன்னு கேட்டுப்புட்டீகளே..? சொல்லக்கூடிய விஷயமா இல்ல.. நினைக்கக்கூடிய விஷயமா அது? ம்.. சரி.. சொல்லிப்புடறேன்.. கேட்டுக்குங்க..

ஏற்கெனவே 'ஆட்டோகிராப்'ன்னு ஒரு படம் வந்தது பாருங்க.. அந்தப் படத்தைப் பார்த்துப்புட்டு நம்ம பய மக்கா அல்லாரும் அஞ்சாறு நாளைக்கு தூக்கம் வராம புரண்டு புரண்டு படுத்திருக்கானுக.. அதுல நானும் ஒருத்தன்.. இப்ப அதையே கிளறச் சொல்றீங்களே சாமி.. சரி.. 'மனசுல இருக்குறதை வெளில கொட்டிட்டா பாரம் குறையும்'னு எங்க ஆயி அப்பப்ப சொல்லும்.. சொல்றேன்.. கேளுங்க.. ஆனா யார்கிட்டேயும் சொல்லிராதீங்க. ஏன்னா எனக்கு எதையும் மூடி மறைச்சு எழுதத் தெரியாது.. எல்லாம் ஸ்ட்ரெயிட்டுத்தான்..

அப்ப நான் திண்டுக்கல்ல செயிண்ட் மேரீஸ் ஸ்கூல்ல பத்தாப்பு படிச்சிருட்டிருந்தேனுங்க.. படிப்புல நம்ம எப்பவும் ஒண்ணுல இருந்து அஞ்சு ரேங்க்குக்குள் வந்திருவேங்க.. ஆனா பாருங்க.. இந்த இங்கிலீஷ் சனியனும், கணக்கு பிசாசும் நம்ம மண்டைல ஏறவே மாட்டேன்றுச்சு.. அப்புறம் எப்படி அஞ்சுக்குள்ளன்னு யோசிக்குறீங்களா? மத்த மூணுலேயும் நம்ம எப்பவுமே 90க்கு மேலதான் அப்பு..

அப்பத்தான் 'பைனல் எக்ஸாம் வரப் போகுது'ன்னு 'விடாது கருப்பு' மாதிரி வீட்ல பயமுறுத்துக்கிட்டே இருந்தானுங்க.. சரி நாம அடுத்த வருஷமும் பத்தாம்கிளாஸ்தான் நினைச்சுக்கிட்டேன். திடீர்ன்னு எங்கண்ணன் என்ன பண்ணாரு.. திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் பக்கத்துல மெங்கிள்ஸ் ரோட்டுல 'மெக்காலே'ன்னு ஒரு வாத்தியார் இருந்தார். அவர் அப்ப டட்லி ஸ்கூல்ல வாத்தியார். அவர்கிட்ட கொண்டு போய் என்னை நிறுத்தி, "இந்தப் பய இங்கிலீஷை கண்டா பயந்து ஓடுறான் ஸார்.. கணக்கைத் தொடவே மாட்டேங்குறான் ஸார்"ன்னு வண்டி வண்டியா கம்ப்ளையிண்ட் பண்ணிட்டார்.. எனக்கு, "என்னடா எழவு இது? நம்ம ஸ்கூல்ல சொல்லித் தர்றதே மண்டைல ஏறலை.. இவர் வேற ஸ்கூல் வாத்தியார்.. இவர் என்ன சொல்லித் தரப் போறாரு?"ன்னு நினைச்சுக்கிட்டு முதல் நாள் டியூஷனுக்குப் போனேங்க..

அங்கதாங்க எனக்கு ஆப்பு.. உள்ள நுழைஞ்சா தலையே சுத்துது.. கண்ணை சிமிட்டிக்கிட்டே இருந்துச்சு. என்னன்னா..? உள்ளாற ஒரு பத்து, பன்னெண்டு பாவாடை, தாவணிக உக்காந்திருந்துச்சுக.. அம்புட்டுத்தான்.. அப்படியே சுவரோட சுவரா போய் ஒட்டிக்கிட்டோம்ல..

அதுல பாருங்க ஒரு விஷயம்.. அந்த மெக்காலே ஸார் ரொம்ப தங்கமான மனுஷன்.. அடிக்கடி இடைல இடைல ஜோக்கடிச்சு கலகலப்பாக்கிருவாரு.. டியூஷனும் ஆரம்பிச்சிருச்சுங்க. ஆனா நமக்கு வேற கணக்கு ஆரம்பிச்சிருக்குங்க. அதாங்க லுக் விடுறது.. அதுல பாருங்க.. நம்மளை கிறுக்குப் பிடிக்க வைக்கணும்னா கணக்கும், இங்கிலீஷ¤ம் வேணாம்ங்க.. லேசா ஒரு கண் பார்வை போதும்ங்க.. அதேதான் அன்னைக்கும் நடந்துச்சு.. செத்தேன் போங்க..

ராத்திரி வீட்ல எங்கக்கா தட்டுல என்னத்தையோ வைச்சுது.. என்னத்தையோ ஊத்துச்சு.. மோட்டு வளையை பார்த்துட்டு நானும் என்னத்தையோ தின்னுத் தொலைச்சிட்டு வாயைக்கூடத் தொடைக்காம படுத்துட்டேன்.. எங்க தூக்கம் வர்றது? அந்த முகம்.. லேசான உதட்டுச் சுழிப்பு.. குறுகுறுன்னு ஓரக்கண்ணுல பார்க்குற பார்வை.. (ஐயையோ சென்ஷி.. இன்னிக்குத் தூங்க முடியாதே..) முடியல அண்ணாத்தே..

மறுநாள்தான் பேர் என்ன? குலம் என்ன? கோத்திரம் என்னன்னு லேசுபாசா விசாரிக்க ஆரம்பிச்சேன்.. பேரு சாந்தியாம்.. ஆஹா.. அமைதியான பொண்ணுக்கு ஏத்த அழகான பேராச்சேன்னு மனசு குதிக்க ஆரம்பிச்சிருச்சு.. இந்தப் பக்கம் நம்ம மெக்காலே ஸார் வாங்குற பீஸ¤க்கு வஞ்சகம் இல்லாம பாடம் சொல்லிக் கொடுத்தாரு.. ஆனா நாம கேக்கணுமே.. நாமதான் ஓணானுக்கே தண்ணி காட்டுறவனுகளாச்சே..

லேசா பேச ஆரம்பிச்சேன்.. ஆரம்பிச்சோம்.. நோட்டு வாங்கி எழுதுற மாதிரி கையெழுத்தைப் பார்த்து 'அடியாத்தீ'ன்னு மூக்குல விரல் வைச்சு என்னை நிமிர்ந்து பார்த்தப்ப அப்படியே அப்துல்கலாம் ரேஞ்சுக்கு போயிட்டேன் போங்க.. அடுத்த நாள் அவுக நோட்டை நான் வாங்கி அழகா எழுதிக் கொடுத்தேன் பாருங்க.. அவுக பார்த்த பார்வையும் உதடு குவிச்சு சொன்ன 'தேங்க்ஸ¤ம்' அம்சமாத்தான் இருந்துச்சு..அடுத்த நாள் எங்கண்ணன்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி ரெண்டு ரூபா வாங்கி அதுல எட்டணாவுக்கு கடலை மிட்டாய் வாங்கி டியூஷனுக்கு இடைல எல்லாருக்கும் தானதர்மம் கொடுத்து 'கர்ணன்'னு மெக்காலே ஸார்கிட்ட பேர் எடுத்தேன்.. அப்ப நம்ம மயிலுக்கு என் கையால கொடுத்து அதை அது வாங்கி லேசா ஒரு 'பார்வை' பார்த்து வாயில் போட்டது பாருங்க.. இப்பவும் நான் பிச்சைக்காரன்களைப் பார்த்தா ஒத்த ரூபா.. ரெண்டு ரூபான்னு போட்டுக்கிட்டுத்தான் இருக்கேன். எவனும் அப்படியொரு தேங்க்ஸ் சொல்லலீங்க..

எக்ஸாம் வேற பக்கத்துல நெருங்கிருச்சு.. நம்ம பசங்க நம்மளை கரெக்ட்டா புடிச்சிட்டானுங்க. "டேய்.. வேணாம் விட்ரு.. அவுங்க அப்பன் ஒரு மாதிரி ஆளு.. பார்த்து நடந்துக்க.."ன்னு ஏகப்பட்ட அட்வைஸ்.. அதெல்லாம் நம்ம மண்டைல ஏறுமா.. ம்ஹ¤ம்.. அடிபடப் போறன்னாங்களா.. அடிபடாம இருக்கிறதுக்கு என்ன வழின்னு யோசிச்சேன். நேரா அவுங்க வீட்டுக்கே போயிட்டா என்னன்னு ஒரு கிறுக்கு..

போயிட்டேன்ல.. அடுத்த நாள்.. அது என்னன்னா.. அப்பத்தான் 'வைதேகி காத்திருந்தாள்' படம் ரிலீஸான சமயம்.. மெக்காலே ஸார் வீட்ல டேப் ரிக்கார்டர் இருந்துச்சு. சமயத்துல அவர் வர்றதுக்கு லேட்டாயிருச்சுன்னா அவரோட வூட்டுக்காரம்மா (இவுகளும் அதே டட்லி ஸ்கூல்ல டீச்சர்தான்) அந்த கேஸட்டை போட்டு பாட்டு போடுவாங்க.. அதைக் கேட்டுக்கிட்டு ஸார் வர்றவரைக்கும் அமைதியா இருப்போம்.. அதுல பாருங்க.. அந்த 'ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு'ன்ற பாட்டு அப்படியே என்னை உருக்கிருச்சு.. அது அப்படியே என்னை நினைச்சுத்தான் ஆர்.சுந்தர்ராஜன், இளையராஜாகிட்ட சொல்லி பாட்டு வாங்கிருப்பாரோன்னு நினைப்பு..

அந்த கேஸட் வேணும்னு நம்ம மயிலு, மெக்காலே ஸார்கிட்ட ஒரு நாள் கேட்டுச்சு. "வேற ரிக்கார்ட் போட்டு தர்றேம்மா"ன்னாரு ஸார்.. சரின்னு தலையாட்டிக்கிட்டு கிளம்புச்சா.. நமக்கு கோபம்னா கோபம்.. 'என்ன இந்தாளு.. கேக்குறது யாரு? நம்ம மயிலு.. கேட்டு இல்லைன்னு சொல்லலாமா?' அப்படீன்னுட்டு பட்டுன்னு அந்த கேஸட்டை சுட்டுட்டேன்.. முதல் திருட்டு. (ம்ஹ¤ம்.. லவ் மேட்டர் என்னல்லாம் பாடு படுத்துச்சு பாருங்க)

நம்ம மயிலு அவுக வீட்டுக்குப் போயிட்டிருந்தாக.. நானும் பின்னாடியே அவுகளுக்குத் தெரியாம போயிட்டேன். அவுக வீடும் திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் பக்கத்துல இடது பக்கம் ஒரு சின்ன சந்துக்குள்ள இருந்துச்சு. அவுக உள்ள போயி பத்து நிமிஷம் கழிச்சு, நானும் வீட்டு வாசல்ல போய் நின்னேனா.. ஷாக்குன்னா ஷாக்.. அப்படியொரு ஷாக்..

ஆனாலும் வரவேற்பு பலம்ல.. "வாங்க.. வாங்க.."ன்னு கூப்பிட்டு அப்படியொரு பாசத்தைக் கொட்டிட்டாகல்லே.. "இந்தப் பக்கமா வந்தேன். நீங்க உள்ள நுழைஞ்சதை பார்த்தேன்.. உங்க வீடா இருக்குமோன்னு சந்தேகம். அதான் வந்தேன்ணேன்(எப்படி சமாளிப்பு)".. "காபி குடிங்க"ன்னாங்க.. வேணாம்னுட்டு.. அப்படியே நைஸா நான் சுட்டுட்டு வந்த கேஸட்டை கொடுத்தேன். பார்த்தவுடனே அவுக முகத்துல இருந்த சந்தோஷம் பாருங்க.. அப்படியே செத்துட்டேன் போங்க. எந்தக் கேள்வியும் கேக்காம வாங்கிட்டு "அம்மா கோட்டை மாரியம்மன் கோவிலுக்குப் போயிருக்காக.. வந்தவுடனே நாளைக்குப் பணம் வாங்கிட்டு வர்றேன்"னாங்க.. பணத்துக்கா இவ்ளோ அலப்பறை.. "இல்லங்க.. வேணாங்க.. என் பிரெண்ட் மூணு கேஸட் வைச்சிருந்தான். எனக்கு ரெண்டு கொடுத்தான். அதுல ஒண்ணுதான் இது.."ன்னு சொல்லி நம்ப வைச்சேன்.

இப்படியே ஆரம்பிச்சுதுங்க.. நம்ம ஒன் சைடு லவ்வு.. இடைல ஒரு நாள் அவுகளை அப்படியே படமா வரைஞ்சு அவுக நோட்ல வைச்சுக் கொடுத்தேன். மறுநாள் பார்த்தேன். ஏதாவது பலன் கிடைக்குமான்னு.. ஒண்ணுமே சொல்லாம.. கிளாஸ் முடிஞ்சப்புறம்.. வெளில வரும்போது ரகசியமா "படம் பார்த்தேன்.. நல்லாயிருந்துச்சு. தேங்க்ஸ்.. என் வீட்ல ஒட்டி வைச்சிருக்கேன்.."னு சொல்லிட்டு போச்சா.. அம்புட்டுத்தான்.. அன்னிக்கும் தூக்கமில்லாம போச்சுங்க..

என் பிரெண்ட்ஸ்லாம் "சீக்கிரம் லெட்டரை குடுறா.. லெட்டரை குடுறான்"னு அனத்துனாங்க.. என்ன எழுதுறது? எப்படி எழுதுறதுன்னு தெரியலை.. எப்படியோ நாலு வரில ஒரு கடுதாசியை எழுதி வைச்சுப்புட்டு "நாளைக்கு குடுக்கலாம்.. நாளன்னிக்கு கொடுக்கலாம்"னு அப்படியே பொத்தி பொத்தி வைச்சிருந்தேனுக.. அப்படியே டைமும் ஓடிருச்சு. டெய்லி சாயந்தரம் அவுககூட அவுங்க வீடுவரைக்கும் போய் பத்திரமா விட்டுட்டு அப்புறம்தாங்க நம்ம வீடு இருக்குற குமரன்திருநகருக்கு போவேன். இப்படியொரு செக்யூரிட்டி வேலை..

எக்ஸாம் நெருங்கின உடனே மெக்காலே ஸார் எங்களுக்கெல்லாம் வீட்லயே ஒரு பார்ட்டி வைச்சு எங்களை உற்சாகப்படுத்தி பேசினார். சரி.. இன்னிக்காச்சும் சொல்லிரலாம்னு சொல்லி என் பேண்ட் பாக்கெட்ல இருந்த லெட்டரை எடுத்து வசதியா இருக்கும்னு நினைச்சு சட்டைப் பாக்கெட்ல வைச்சுக்கிட்டு திரிஞ்சேன்.. சனியன் புடிச்ச அன்னிக்குப் பார்த்து அவளோட அண்ணன்காரன் தங்கச்சியைக் கூப்பிடுறதுக்காக நேராவே வந்துட்டான். அவனைப் பார்த்தவுடனே "ஏதோ வேலை இருக்கு.. சீக்கிரம் போகணும். வரேன் ஸார்"ன்னு சொல்லிட்டுப் போயிட்டா..

நானும் விடலை.. "எனக்கும் வேலை இருக்கு ஸார்"ன்னு சொல்லிட்டு கிளம்பி வாசலுக்கு வந்தா... மச்சான்காரன் பைக்ல கூட்டிக்கிட்டுப் போறான். நம்மளோ நடராஜா பஸ் சர்வீஸ்.. இதுல எங்க போய் ஒட்டுறது? வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.. போங்க..

அன்னிக்கு சாயந்தரமே அவுக வீட்டுக்கு நான் போக.. அவுக வீட்ல இருந்த பெரிசுக.. ரெண்டு வார்த்தை பேசறதுக்குள்ள "எக்ஸாமுக்கு படிக்க வேணாமா? நீ உள்ள போய் படிம்மா.. நீ போப்பா.."ன்னு கழுத்தைப் புடிச்சுத் தள்ளாத குறையாத் தள்ளிட்டானுக.. வெறுத்தே போச்சுங்க.. இதுல எங்க வூட்ல வேற ஏதோ நான் படிச்சு கலெக்டராகப் போறேனாக்கும் என்ற நினைப்பில் "படி.. படி.. வீட்டை விட்டு வெளில போகக்கூடாது. போன.. கால் இருக்காது"ன்னு தடா, பொடா உத்தரவெல்லாம் போட்டுக் கொன்னுட்டானுக..

ஒரு வழியா எக்ஸாம் முடிஞ்சு மயில பார்க்க அவசரம் அவசரமா அவுக வீட்டுக்குப் போறேன்.. வூடு பூட்டிருக்கு. "அவுக எங்கயோ வீடு மாறிப் போயிட்டாங்க"ன்னு அக்கம்பக்கத்துல சொன்னாங்க.. என்னடா இது கருமாந்திரம்..? எப்படியும் கண்டுபிடிச்சிருவோம்னு நினைச்சு திண்டுக்கல் முழுக்க அலையோ அலைன்னு அலைஞ்சு எனக்கு வெறுத்துப் போச்சு..

வருஷம் ஓடிருச்சுங்க.. ஒரு அஞ்சாறு வருஷமாயிருக்கும். திண்டுக்கல் எம்.வி.எம். காலேஜ்ல படிச்ச என்னோட சொந்தக்கார அக்கா ஒருத்தங்க சர்டிபிகேட் வாங்க காலேஜுக்கு போனாங்க. நானும் துணைக்குக் கூடப் போயிருந்தேன். காலேஜ் ஆபீஸ்ல அவுங்க சர்டிபிகேட் வாங்க உள்ள போக நான் வெளியே காத்திருக்க..
அப்ப பாருங்க.. அந்தக் கண்ணு.. அதாங்க நம்ம மயிலு.. கண்ணு காட்டிக் கொடுத்திருச்சே.. எதுத்தாப்புல வருது.. நமக்கு அப்படியே காணாததைக் கண்டவன் மாதிரியாயிருச்சுங்க.. ஏதோ கவிதை, கதைல எழுதுவாங்களே.. மூளைல நட்சத்திரம் வெடிச்ச மாதிரி.. பல்பு எரியற மாதிரின்னு.. அப்படித்தான்.. நானும் அவுங்களை நோக்கிப் போறேன்.. அவுங்களும் நம்மளை நோக்கி வர்றாக. திடீர்ன்னு பார்த்தா நம்மளை பார்த்துக்கிட்டே உள்ள போறாக.. அப்படியே அசந்துட்டேன் போங்க.

பின்னாடியே ஒரு ஆள் வேற போறான்.. 'என்னடா இது? இவன் யாரு புதுசா இருக்கு?'ன்னு யோசிச்சுக்கிட்டே நிக்கேன்.. நிக்கேன். நின்னுக்கிட்டே இருக்கேன்.. பத்து நிமிஷம் கழிச்சு மயிலு வெளில வந்து வாசல்ல நின்னுச்சா.. இப்பத்தான் சாமி முழுசா பார்த்தேன் என் மயில..! வயிறு வீங்கிப் போயிருந்துச்சு..

"எனக்கு எப்படி இருந்திருக்கும்?" கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.. சினிமால வர்றா மாதிரி கூட வந்தவன் அவ தோள்ல கை போட்டு நடக்க அதுவும் நடக்குது.. நானும் அப்படியே பின்னால நடக்குறேன்.. என்ன செய்றதுன்னே தெரியலை..

மயிலோட வூட்டுக்காரன் வண்டியை ஸ்டார்ட் செஞ்சு கிளப்புறான்.. மயிலு வண்டில உக்காருது.. நான் பார்த்துக்கிட்டே இருக்கேன். வண்டி கிளம்புது. நான் முன்னால நடக்குறேன்.. காலேஜ் மெயின் கேட் பக்கத்துல வந்தவுடனே மயில் லேசா திரும்பி என்னைப் பார்த்து தன்னோட இடது கையை தன் வயித்து மேல வைச்சு லேசா ஒரு சிரிப்பு சிரிச்சுச்சு பாருங்க..

அதே சிரிப்புதான்.. என் கையெழுத்தைப் பார்த்து சிரிச்ச அதே சிரிப்புத்தான்.. கடலைமிட்டாய் வாங்கிட்டு சிரிச்ச சிரிப்புத்தான்.. நான் வரைஞ்சு கொடுத்த ஓவியத்தைப் பார்த்து சிரிச்ச அதே சிரிப்புத்தான்.. எந்த வித்தியாசமும் இல்லீங்கண்ணேன்.. சென்ஷியண்ணேன்.. சத்தியமா சொல்றேன்.. அடுத்த ஆறு மாசத்துக்கு அண்ணன் தேவதாஸ் மாதிரிதான் திரிஞ்சேனுங்க..

இன்னிவரைக்கும் அந்தச் சிரிப்புக்கான அர்த்தம் என்னன்னுதான் தெரியலீங்க.... என்னை அடையாளம் கண்டுக்கிட்டதா நினைச்சு சிரிச்சாளா? இல்ல.. எவனோ ஒருத்தன் தன்னை பார்த்துக்கிட்டு நிக்குறானேன்னு நினைச்சுப் பார்த்தாளா? படிக்கிற நீங்களாச்சும் எனக்குச் சொல்லுங்க..

ஆனா ஒண்ணு சாமி.. எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் சரி.. இந்தக் 'கண்ணு' மேட்டர்ல மட்டும் ஒருத்தன் சிக்குனான்னு வைங்க.. அவன் நாயுடு கடை கொத்து புரோட்டாதான். இது என் அனுபவம்.. சொல்லிப்புட்டேன்.. பார்த்து நடந்துக்குங்க..

அண்ணன் சென்ஷி அவர்களே.. உங்க புண்ணியத்துல என் மனசுல இருந்ததைக் கீழ கொட்டிட்டேன்.. இம்புட்டுத்தான் நம்மளோட பர்ஸ்ட் லவ்வு மேட்டர்.. இதைப் படிச்சுப்புட்டு இளதாரிப் பயலுக அல்லாரும் சுதாரிப்பா இருந்துக்கணும்னு நாலு பயபுள்ளைகளுக்கு புத்தி சொல்லி திருத்துங்க.. இன்னா.. வரட்டா..?

காலத்தின் வாசனை



"டேய்...மாப்ள..."

குரல் கேட்டு அதிர்ந்து திரும்பினேன். கையில் கிளாசுடனும், முனை கிள்ள தயாராய் இருந்த தண்ணி பாக்கெட்டுடனும், கண்களில் தளும்பிய நீருடனும், சொல்லொண்ணா புன்னகையுடனும் நின்று கொண்டிருந்தான் அவன். மனசிற்கு பிடித்த எவ்வளோவோ இடங்களில் இந்த திருப்பதி ஓய்ன்சும் ஒன்று. தற்சமயம், டாஸ்மாக் கடைகள் என்று மாறி இருந்தாலும், பார்களை எல்லாம் பழைய அடையாளங்களுடன்தான் அழைக்க நேரிடுகிறது உள்ளூர் மனசுகளுக்கு!பிடிக்கிற இடங்களுக்கும், மனிதர்களுக்கும் காரணம் சொல்ல இயலாது. எது நகர்த்தி நம்மை, மனிதர்களிடமும், இடங்களிடமும் பொருத்துகிறது என அறுதியிட முடிவதில்லைதான்.

அப்படியான ஒரு இடத்தில் இருந்து, பழைய வாசனை வீசும் ஒரு குரலும், முகமும், புன்னகையும்!...உள்ளிருந்த சாராயமா, வழக்கம் போலான என் ஞாபக குறைவா தெரியவில்லை. பார்த்தது போல் இருக்கிறது. ஆளை பிடிபடவில்லை. தயாரற்ற ஒரு நிலையில், அவன் தந்தது மாதிரியான ஒரு சிரிப்பை தர இயலாவிட்டாலும் சிரித்து,

"ஹலோ" என்றேன்... வேறு தோணாது.

"ஹலோவா.. வக்காளி மறந்திட்டில்ல" என்றான் என் நெஞ்சை தள்ளி.

தூக்கிவாரிபோட்டது. சற்று கூசினாலும், கயிறு வீசி சர சரவென மனசில் இறங்குகிற மனிதர்களை என்ன செய்துவிட முடியும், தவிப்போடும், இனி காட்ட இயலாத சூழலோடும், நானும்,

"டேய்...மாப்ள... அடையாளமே தெரியலைடா" என்று மார்போடு அணைத்து தோராயமாய் வலைக்குள் நுழைந்தேன். "வக்காளி...மறந்துட்டியோன்னு பயந்துட்டேன் மாப்ள..அப்பா இறந்ததுக்கு வந்திருந்தேண்டா. கல்யாணியும் வந்திருந்தாள். நீ சவுதியில் இருந்து கிளம்பிட்ட, இந்தா வர்ற, அந்தா வர்றன்னு சொல்லிகிட்டே இருந்தாங்க. புள்ளைகள் ஸ்கூல்ல இருந்து வந்துருங்கன்னு சொல்லுச்சு. சரி அப்ப நீ கிளம்புன்னு பஸ் ஏத்தி அனுப்பிவிட்டேன். நல்ல கூட்டம் மாப்ள. காடு வரைக்கும் கூட்டத்தோடு வந்துட்டு, உன் கையை கூட பிடிக்க முடியாமல் போயிட்டேன். ரொம்ப பிடிச்சவுங்க இறப்புக்கு வர்ற மாதிரி கொடுமையான விஷயம் இல்லைடா மாப்ள"
கடவுளே!..என்றிருந்தாலும் காட்டிகொள்ளாமல்.."எத்தனை குழந்தைகள்டா மாப்ள?" என்றேன்.

"ரெண்டு பொம்பளை பிள்ளைகள்டா. மாமனார் பலசரக்கு கடையில்தான் நிக்கிறேன். மரியாதை குறைவுதான். வேறு போக்கிடம் இல்லை மாப்ள".

இவன் முகத்திலேயே குரலையும் வைத்திருந்தான். குரலுக்கேற்ப முகம் மாறுவது அவ்வளவு அழகாய் இருந்தது.

"பரமக்குடி வந்த வண்டியில, அப்பா காண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் பார்த்தேன். இந்தா, இந்த திருப்பதி ஓயின்சுலதான் அப்பாவை கடைசியாக பார்த்தது. ஏழெட்டு வருஷம் இருக்கும், ஆனாலும், முகம் மறக்கலை. டீ குடிச்சுட்டு வர்றேன்னு மாமனார்ட்ட சொல்லிட்டு, வீட்டுக்கு வந்து, புறப்புடு புள்ளைன்னு கல்யாணியையும் கூட்டிட்டு வந்தேன். சரி அதைவிடுசவுதி வாழ்க்கைல்லாம் எப்படிடா போகுது?”

"ம்...போகுது மாப்ள..."

ஏதோ தீர்மாணித்தவன் போல,"மாப்ள...எதுல வந்த?"என்று கேட்டான்.

"TVS-50 இருக்குடா"

"சரி அப்ப கட்டிங்கோட நிறுத்து. காலேஜ் கிரவுண்டு போய் மீதியை பேசுவோம். இரு, இந்த வாடகை சைக்கிளை விட்டுட்டு வந்திர்றேன்." என்று என்னை யோசிக்க விடாது போனான்.

எதிர்பாரா பொந்திற்குள் இருந்து, இவன் புறப்பட்டு வந்ததுபோல், அப்பா இறப்பிற்கு பிறகு, இழுத்து செல்லும் எந்த நதிக்குள்ளும் முகம் மேலே மலர்த்தியபடி நீரோட்டத்தோடு போய் கொண்டிருக்க எனக்கும் பிடித்திருந்தது. கல்லூரி மைதானம் வரையில் என்னென்னவோ பேசிக்கொண்டு வந்தான்.மைதானம் வந்ததும்,

"அந்த உதிய மரத்துல வண்டியை நிறுத்து" என்றான்.

விரும்பியோ,விரும்பாமலோ பிடித்த முதலாளி ஆகி இருந்தான் எனக்கு. வெயில் வேறு. தீபாவளி மதியத்தில் அருகில் தூங்குகிற மனைவி போல் இணக்கமாக இருந்தது. எவ்வளவு காலமாச்சு! இந்த மைதானத்தில் என் கால் படாத இடமே இல்லை என நான் யோசித்து கொண்டிருக்கும் போதே,

"பார்த்தியா, என்ன வாசைனைன்னு.... இந்த உதிய மர வாசனைக்காகவே, மாசம் ஒரு தடவையாவது இங்கு வந்துருவேன். பஸ் ஸ்டாண்டுல இறங்கி, வேலவன்னுல சைக்கிள் எடுத்து, திருப்பதி ஓயின்சுல ஒரு கட்டிங்கை போட்டுட்டு நேர இந்த உதிய மரம்தான்"

பேச்சு பேச்சாக இருந்தாலும், கை, மீதி குவளையை திறக்கவும், நீரை சரிக்கவும், ஊறுகாய், முறுக்கு பொட்டலங்களை பிரிக்கவுமாக இருந்தது.

"மீதி கட்டிங்கை இங்க போட்டேன்னா...பூரணமாயுரும்...இங்கதான் நீ ஓடிட்டு இருப்ப...அப்பா வாடகை சைக்கிளில் ஸ்டாண்டு போட்டு கேரியரில் உக்கார்ந்து இருப்பார்...உன் அப்பாதான்னு ரொம்ப நாள் வரையில் தெரியாதுடா. சுந்தர்தான் சொன்னான், ராஜா அப்பாடா அது, அவன் ப்ராக்டிஸ் செய்றதை பார்த்துக்கிட்டிருப்பார்ன்னு. வாடகை சைக்கிளில் உக்கார்ந்திருப்பவர்தானேன்னு, நானாதான் பேச்சு கொடுத்தேன். ராஜா கிளாஸ்மேட் தான் நானுமுன்னு...கை எடுத்து கும்பிட்டார்....ஆடி போயிட்டேன் அப்படியே. ஏழரை மணிக்குத்தான் பஸ்ஸு. அது வரையில் இப்படி உட்கார்ந்திருப்பேன் என்று தொடங்குச்சு. தினம் வருவாரு..தினம் பேசுவாரு... எனக்கும் அவருக்கும் பேச என்ன இருக்குண்ணே தோணாது. எனக்கும் ஏழரை வரையில் நேரம் போகணும்,அவருக்கும் உன்னை பார்த்துகிட்டே பேச ஒரு துணை மாதிரி இருக்கும்".

எனக்கு அரவம் தட்ட தொடங்கியது. கடைசி பெஞ்சில் சுந்தர் அருகில் உட்காந்திருப்பான். மனசின் ஆழத்தில் கிடந்த இவன் பெயரை மேலெழுப்பி கொண்டு வருவதில் தோற்று கொண்டே இருந்தேன்.

"நீ, sn, ஸ்ரீகண்டன் எல்லாம் ஒரு செட்டு. என்னோடல்லாம் அவ்வளவா பேச மாட்டீங்க. சுந்தர் மட்டும் உங்க செட்லயும் இருப்பான், என் செட்லயும் இருப்பான். என்ன அருமையான காலங்கள்டா மாப்ள. எவ்வளவு சந்தோசம். அம்மா சேலை வாசனை மாதிரி, இந்த உதிய மரத்து வாசனையும் மனசோடையே தங்கிப்போச்சு. தாயளி...சுந்தர் செத்ததை கூட யாரும் சொல்லலைய்டா நம்ம முத்து கிருஷ்ணன், இப்ப ரபீக் ராஜா லாரில டிரைவரா ஓட்றான்....பரமகுடியில எதார்த்தமா பார்த்தேன்....பத்து பதினஞ்சு நாள் ஆச்சு மாப்ளன்னான்....வீட்டுக்கு போய், கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டு.....சுந்தர் கிளாஸ்மேட்... இப்பதான் தெரியுமுன்னு சொல்லிட்டு வந்தேன்."

காலத்தை தூக்கி மடியில் வைத்து கொண்டு படம், படமாக விரித்து காட்டி கொண்டிருந்தான். பரமக்குடியான் என்று இவனை கூப்பிடுவது வரையில் என் ஞாபகம் வலுபெற்று இருந்தது. இப்படியே இவன் போய் கொண்டிருந்தால் போதும். இந்த முக்கு போய் அந்த முக்கு திரும்புவதற்குள் இவன் பெயரை மீட்டெடுத்துவிட முடியும். உள்ளிருந்த சாராயம் பூ மாதிரி இளக்கிக்கொண்டிருந்தது ரெண்டு பேரையும்.

"மாப்ள...இரு...சரக்கு பத்தலை...வாங்கிட்டு வந்துரட்டுமா?" என்று கேட்டேன். "நானும் வரவாடா...?" என்றான் உதிய மரத்தை விட்டு வர மனசில்லாமல்.

"இல்லை மாப்ள இரு...ரெண்டு நிமிஷம்..." என்றபடி வண்டியை கிளப்பினேன். திரும்பி வருவதற்குள் இவன் பெயரை பிடித்து விட எனக்கும் தனிமை தேவையாக இருந்தது.

விரட்டிப்போகிற வண்ணத்து பூச்சி, விரல்களில் வண்ணத்தை ஈஷி, பூ பூவாய் நகர்ந்து கொண்டிருப்பது போல் இவனின் பெயரும் தட்டுப்பட்டு தட்டுப்பட்டு விட்டுப்போயிற்று. பேர் அவஸ்தையோடு திரும்பி வந்தேன். உதிய மரத்து வேரில் சாய்ந்தபடி, நெளிந்த சிரிப்பொன்றை தூரத்திலேயே வீசினான்.

"என்னடா பூரணமாயிட்ட போல" என்று சிரித்து அருகிலேயே உட்கார்ந்தேன்.

"போடு மாப்ள...எப்பவும் ஒரு குவாட்ட்டார்தான் நமக்கு கணக்கு...அதுவும் இங்கு வரும் போது மட்டும்தான்" என்றான்.

"அப்பாவை கடைசியில் திருப்பதி ஒயின்ஸில் பார்த்ததாக சொன்னியேடா" என்றேன், இவனை மேலும் நகர்த்த.

”ஆமாடா மாப்ள...ஏழெட்டு வருஷம் இருக்கும்...அப்பா மாதிரி ஆட்களை பார்ல பாக்கறதுக்கு கூச்சம். ஒளியவும் மனசில்லை, தண்ணிய வாங்கிட்டு அவர் எதிரிலேயே உட்கார்ந்தேன்." இங்கு அவன் எதிரில் இருந்த குவளையவும் முழுக்க ஒட்டுமொத்தமாக சரித்தான்...வார்த்தைகள் குழறி குழறி வர தொடங்கியது.

"எதில விட்டேன்?"

"அப்பா எதிரிலேயே உட்கார்ந்தாய்?"

"என்னை அடையாளம் தெரியலை அவருக்கு. அப்பான்னு கூப்பிட கூச்சம். ஐயா பாதி அடிக்கிறீங்கலான்னு கேட்டேன். அப்பா அப்படியேதான் இருந்தார். அதே கும்பிடு, வேணாம்ப்பு...சாப்பிடுங்கன்னாரு...ஒரு ரவுண்டு போனாதான் தைரியம் வந்துரும்ல்ல நமக்கு. அப்பா...நினைவிருக்கா என்னைன்னு கேட்டேன். இல்லேயப்பூ...வயசாயிருச்சுல்லன்னாரு. இன்னாருன்னு சொல்லி, உதிய மரத்தை சொன்னதும். நல்லா ஞாபகம் இருக்கு மாப்ள...ஆத்தீ..ஆத்தீ...ன்னு கையை பிடிச்சுகிட்டாரு. அப்ப நீ அவர் முகத்தை பார்த்திருக்கணும்டா. வேற எதுவுமே சொல்லலே திருப்பி திருப்பி அந்த ஆத்தீ ஆத்தீ தான். எனக்கு கண்ணுல்லாம் நெறஞ்சு போச்சு".

எனக்கும் கண்கள் நிறைந்து. அவன் அறியாமல் துடைத்து கொண்டேன். அசங்கினால் சம்பவம் உடை படுமோ என பயமாக இருந்தது.

"பேரனைப்போய் ஸ்கூல்ல பார்த்துட்டு வரும்போது அப்படியே கொஞ்சம் சாப்புட்டு போகலாமுன்னு வந்தேன்னாரு. பய சவுதியில இருக்கான் தெரியும்லப்பான்னு கேட்டாரு. தெரியும்பா..கேள்விபட்டேன்னு சொன்னேன். எல்லோரும் ஒண்ணாத்தானே இருக்கீங்கண்ணு கேட்டேன். இல்லைப்பா, நானும் அம்மாவும், ஊருல கிராமத்துல இருக்கோம், பிள்ளைகளுக்கு ஸ்கூல் பக்கமுன்னு தம்பி டவுனுக்கு வந்துட்டான்...எங்க போய்ட்டான்...ரெண்டு கிலோ மீட்டர்...இந்தா ரெண்டு மிதியில வந்து பேரனை பார்த்துட்டேன். இந்த பய தான் காசுக்காக அம்புட்டு தூரத்துல கிடக்கான். பொம்பளை புள்ளையை வச்சுருக்கான், கரையேத்தட்டும், அப்புறம் எல்லாம் சரியா வந்துரும்ப்பான்னு பேசிக்கிட்டே வாடகை சைக்கிளை எடுத்தாரு...மாப்ள... அதே வசந்தி வாடகை சைக்கிள்.”

“நீங்கல்லாம் என்னத்துக்குடா வெளிநாடு போறீங்க? எல்லா மயித்தையும் தொலைக்கிறதுக்கா..." என்று சற்றும் எதிர் பாராமல் வழியும் கண்ணீரை துடைத்த படியே....மூசு....மூசென்று மூச்சுவிட்டான்.

"மூணு வருசமா பரமகுடியான், பரமகுடியான்னு கூப்பிட்டு, கூப்பிட்டே....மூணு வருஷமும் என் பேரே எனக்கு மறந்து போச்சு...நீங்கல்லாம் என்னங்கடா மனுஷங்க... அப்பா, சுந்தர், கேன்டீன் ஜலாலுதீன் பாய் இந்த மூணு பேரும்தான் மனசு நெறஞ்சு பேர் சொல்லி கூப்பிடறது, போங்கடா நீங்களும் உங்க பரமக்குடியானும்.”

வார்த்தை தடித்திருந்தாலும் பிடித்திருந்தது. எழுந்து தடுமாறி. மண்ணை தட்டி நடக்க தொடங்கினான். நான் வண்டியை ஸ்டார்ட் பண்ணி "டேய்...வண்டியில ஏறுடா போகலாம்" என்றதுக்கு.

"போ...போ...போய்கிட்டே இரு..." நிமிடத்தில் காட்சி மாறிப்போனது. அழுகையும் பீரிடலுமாக கெஞ்ச கெஞ்ச, கேட்காமல் மெயின் ரோடு வந்து விட்டான். எனக்கு வண்டியை உருட்ட மூச்சு வாங்கியது.

"டேய்...வண்டியில ஏறு மாப்ள, பஸ் ஏத்தி விடுறேன்..."


"போ...மாப்ள...போ...போய்கிட்டே இரு..." என்று சொல்லி கொண்டே சற்றும் எதிர்பாராமல். ரெண்டு கைகளையும் விரித்து. எதிரில் வந்த பேருந்தை மறித்து, நின்ற பேருந்தில் ஏறியும் விட்டான்.

செய்ய ஏதுமின்றி,ஓட்டுனரை, "மன்னியுங்கள்" என்பதாக கை கூப்பினேன். அவரும் அப்பா மாதிரியான மனிதராக இருக்க வேணும். "பரவாயில்லை....நான் பார்த்துக்கிறேன்" என்று சைகையில் சிரித்தார். வண்டியை ஓரமாக சரித்து, ஓட்டுனர் ஜன்னலோரமாக வந்து, "பரமக்குடி வண்டியில் அவனை ஏற்றி விட வேணும்"என்று கேட்டு கொண்டேன்.

"தெரியும்..சண்முக அண்ணாச்சி மருமகன்தானே" என்று சிரித்தார்.

குனிந்து ஜன்னல் வழியாக இவனை தேடியபோது, கையை மேலே தூக்கி, "போ...போ..போய் கிட்டே இரு..." என்றான் உக்கிரம் மாறாமல்.

வீடு வந்து என் தடுமாற்றம் உணர்ந்த மகன், வண்டியை வாங்கி ஸ்டாண்டு போட்டு தந்தான். "வரும்போதே....தள்ளாடித்தான் வர்றது...சவுதியில் கிடைக்கலைங்கிறதுக்காக இப்படியா....வீடே தண்ணி நாத்தம்....போய் குளிச்சுட்டு வாங்க" என்று கதவு திறந்து தந்தாள் மனைவி.

குளிப்பதற்கு முன்பாக என் பீரோ திறந்து, துணிகளுக்கு அடியில் நியூஸ் பேப்பர் சுற்றியிருந்த அந்த புகை படம் எடுத்தேன். முகம் முகமாக இவனை தேடினேன்...இருந்தான்...அதே விரிந்த புன்னகையுடன்! மன்னர் துரைசிங்கம் நினைவு கலை கல்லூரி மூன்றாம் ஆண்டு இயற்பியல் மாணவர்கள் இடமிருந்து வலமாக.....பெயர் பெயராக வாசித்து வந்ததில்...

"p. நடராஜன்!"

"டேய்.... மாப்ள...நடராஜா..."

என்று நான் பெயரை கூப்பிடுவதற்க்கும்...வெளிச்சத்திற்காக மகள் வந்து ஜன்னலை திறப்பதற்கும் சரியாக இருந்தது. மழை நின்ற பிறகு மரக்கிளைகளை உலுக்கி நனைவது போல் உதியமரத்து வாசனை சரம் சரமாக இறங்க தொடங்கியது!

விருப்பமான வரி...



குடிவரி கேட்டு
நீள் செவ்வக நோட்டேந்தி
நாலு பேர் வருவதுண்டு
ஊர் கோவில்
திருவிழாவிற்கு.

சிறகு முளைத்த
அதே
நீள் செவ்வக
கடிதமொன்று
நான்கு முனை
மஞ்சள் அணிந்து
கடல் கடந்த களைப்போடு
கை அடைகிறது
வருடா வருடம்.

வீடு விட்டு
வீடு மாறி
நாடு விட்டு
நாடு போனாலும்
விட்டு விடுவாளா
வீரமாகாளி?....

மூன்று காலங்கள்




காலம் ஒன்று
நீ தினம் நடக்கிற
சாலையில் இருந்ததென் மரம்.

திர்படும் எல்லாவற்றையும்
கடப்பதுபோல் என் நிழலை
நீ தாண்டுவது இல்லை.

ரு புன்முறுவல்...
ஒரு உடல் சிலிர்ப்பு...
ஒரு ஆசுவாசம்...

டக்கிறபோதும்
கடக்கிறபோதும்
தந்து செல்வாய்.

ழை குறித்த நினைப்பு
பெரிதொன்றும் இல்லாது
பஞ்சம் பிழைத்து
கொண்டதென் மரம்!
காலம் இரண்டு
நிறம் மங்கிய ஐஸ் குச்சி...
சிணுங்கி உடைத்த கண்ணாடி வளையல்...
தங்கி சுகித்த லாட்ஜ் ரசீது...
பாதிகிழித்த திரையரங்கு நுழைவுசீட்டு...
குறுஞ்சி மலையாண்டவரின்
குங்கும பிரசாதம்.... என,
கைபையில் சேகரித்த எல்லாவற்றையும்
"நல்லவேளை மறக்க தெரிஞ்சேன்" என்றபடி
கைகளில் திணிச்சு செல்வாய் நீ!
விடை பெரும்போது தரும்
வலி மிகுந்த சிரிப்பையும் சேகரித்து
பத்திரபடுத்த திரும்புவேன் நான்!

காலம் மூன்று
தூரம் அதிகமாகி போச்சு.
தவறு உனதா எனதா
அருதியிடமுடியவில்லை.

வேண்டவும் வேண்டாம்.

சொல்லிற்கும் பேச்சிற்க்கும்
அப்பாற்பட்டதான ஒரு விஷயம்
இடையோடுவதை யறிவாய் நீ.
நானும்தான்.

நீயும் அறியும்படி
அல்லது
உணரும்படி
பொய்யொன்றும் இல்லை
என்னிடம்.

ன்றாலும்...

வறு நேர்ந்ததற்காக
ஏழு ஜென்மத்து ஏக்கங்களும் உள்ளது.

ரே ஒரு ஜென்மமும்
ஒரே ஒரு வாழ்வும்
போதுமென பேசியிருந்திருக்கலாம்
வசந்த காலங்களில்
நாம்!

ஞாபகங்கள்


(கல்கியில் பிரசுரமான எனது படைப்பு)




ல்லாம் நாம் மறந்திருப்போம்...

ரு நாள்
உன் தலையில் இருந்த
ரோஜாவை பிடுங்கி
தெருவில் எறிந்தேன்.
நீ அழுது புரண்டாய்.
உன் அம்மாவும் என் அம்மாவும்
அடித்து கொண்டார்கள்.
தெரு ரெண்டுபட்டது.

ல்லாம் நாம் மறந்திருப்போம்...

பிறகொரு நாள்
என் தோட்டத்தில் மலர்ந்த
ரோஜாவை பிடுங்கி
உன் கூந்தலில் சூட்டினேன்.
நீ அழவுமில்லை புரளவுமில்லை.
ஆனாலும்
உன் அப்பாவும்
என் அப்பாவும்
அடித்து கொண்டார்கள்.
தெரு ரெண்டுபட்டது.
ல்லாம் நாம் மறந்திருப்போம்...

நேற்று
என் மகள் வந்து
அழுது புரண்டாள்
உன் மகன் ரோஜாவை
பிடுங்கி தெருவில்
எறிந்ததற்காக.
என் மனைவியும்
உன் கணவனும்
அடித்து கொண்டார்கள்.
தெரு ரெண்டு பட்டது.

நீயும் நானும்
விட்டேத்தியாய் வேடிக்கை
மட்டுமே பார்த்தோம்.

நாம் என்ன
எல்லாமுமா மறந்துவிட்டோம்?...