Wednesday, April 20, 2011

கணினியில் வேலை செய்கிறீர்களா?


Monitor your health: Tips for working with computers - Tips for Women
பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்று வரிசை கட்டும் பிரச்சினைகள் ஏராளம். இவற்றைச் சரிச்செய்து கொள்ள நமக்கு சில எளிய டிப்ஸ்களை தருகிறார் சென்னையைச் சேர்ந்த ஹோமியோபதி மற்றும் நேச்சுரோபதி டாக்டர் ஜீவா சேகர்.
* காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையைத் தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும்.

* நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத 'குஷன்' நாற்காலிகளைப் பயன்படுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.
* முதுகை வளைத்து, கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால், முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
* பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே, அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை ரிலாக்ஸ்டாக நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள். கூடவே தண்­ணீர் குடிப்பது, முகத்தைக் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்து விட்டு வருவது... என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை என்றால் குனிந்து கைகளால் பாதத்தை தொடுவது, இடுப்பில் கை வைத்துக் கொண்டு பின்புறம் வளைவது, இடது மற்றும் வலது புறம் சாய்வது போன்ற எளிமையான பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்யுங்கள் (முதுகு மற்றும் இடுப்பு வலி இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்த பிறகே இவற்றைச் செய்ய வேண்டும்). இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தசைப் பிடிப்பும் விலகும்.
* கணினி முன் வேலை செய்யும் போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான் கண்களில் எரிச்சல் ஏற்படும். இதைத் தவிர்க்க அயர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை மூடி, அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து முடிக் கொள்ளுங்கள். இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது, அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும். தவிர, கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம். 'ஆன்ட்டி ரேடியேஷன் கிளாஸ்' ஐ கம்ப்யூட்டர் திரையில் பொருத்துவதும் ஒளியினால் கண்கள் எரிச்சலடைவதைத் தடுக்கும்.
* உடல் உழைப்புக் குறைவாக இருப்பதால் மாலை நேர சிற்றுண்டிக்கு எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்ப்பது, அஜீரணக் கோளாறுகளைத் தடுக்கும். அதற்கு பதில் அவல், அவல் புட்டு, பிரெட் சாண்ட்விச், பழக்கலவை, சுண்டல், சன்னா மசாலா, முளை கட்டிய பயிறு, பொரி, மசாலா பொரி, வேர்க்கடலை, பட்டாணி... போன்றவற்றை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாவதுடன் அதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கும் அதிக சக்தி கொடுக்கும்.
* இரவு வெகு நேரம் தூங்காமல் கண் விழித்து வேலை செய்வதாலும் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதனால் மறுநாள் காலை மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இதைத் தவிர்க்க, மாலை நேரத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்த அவல் அல்லது காய்ந்த திராட்சை அல்லது பப்பாளிப்பழம் சாப்பிடலாம். கூடவே நிறைய தண்­ணீரும் குடிக்க வேண்டும். இதனால் அஜீரண கோளாறுகள் வெகுவாகக் குறைவதுடன் உடலின் வெப்பநிலையும் சீராக இருக்கும்.

நீ பல் தேய்ச்சினா நான் உனக்கு சாக்லேட் தருவேன்


How to handle your kid's gift receiving etiquette - Child Care Tips and Informations in Tamil
இரண்டு குழந்தையாக இருந்தாலும் சரி, ஒரு குழந்தையாக இருந்தாலும் சரி அந்த வீட்டின் காலை பொழுது மிகவும் பரப்பரப்பாக இருக்கும். குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்புவதற்கு போதும், போதும் என்றாகிவிடும். காலையில் பல் துலக்குவது ஆரம்பித்து, ஈவினிங் ஹோம் வொர்க் செய்வது அத்தனைக்கும் தொல்லைப்படுத்திவிடுவார்கள். நான் பால் குடிக்க வேண்டும் என்றால் நீ என்னை கடைக்கு கூட்டிட்டு போகவேண்டும் என நிபந்தனையுடன் தான் அவர்களின் அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்கிறார்கள். இப்படி குழந்தைகள் தங்கள் செய்யும் அத்தனை வேலைக்கும் பதிலாக கொசுராக ஏதாவது வேண்டாதா பொருளையே அல்லது தேவையற்ற காரியங்களை செய்வதற்கும் லஞ்சமாக எதையாவது கேட்கிறார்கள். குழந்தைகளின் இந்த பழக்கத்தை பெற்றோர்கள் எப்படி சமாளிப்பது? இந்த பழக்கம் வருவதற்கான காரணம் என்ன? என்பது பற்றி விளக்குகிறார் கேலிபர் அக்டாமி பள்ளியில் குழந்தைகள் மனநல ஆலோசகாராக பணிபுரிந்துவரும் வந்தனா மனோஜ்.
குழந்தைகள் இப்படி தங்களுடைய வேலை செய்வதற்கு ஏதாவது தர வேண்டும் என சொல்லும் பழக்கம் பெற்றோரிடம் இருந்துதான் வந்தது. அவர்கள்தான் ஆரம்பத்தில் குழந்தை எதையாவது செய்ய மறுத்தால் உடனே குழந்தைக்கு பிடித்த பொருளை கொடுத்து அந்த காரியத்தை செய்யுமாறு சொல்வோம். நீ பல் தேய்ச்சினா நான் உனக்கு சாக்லேட் தருவேன் அப்படின்னு ஆரம்பத்தில் பெற்றோர்கள்தான் குழந்தைகளிடம் கேட்பார்கள். பிறகு குழந்தைகள் அதையே பழக்கமாக வைத்துக்கொள்கிறார்கள். இப்படி அவர்கள் அன்றாடம் செய்ய வேண்டிய வேலைக்கு நீங்கள் ஏதாவது தருவது என்பது மிக மேசமான பழக்கம். இது நீண்ட கால தீர்வும் கிடையாது. இதன் விளைவாக குழந்தையும் எப்போதும் உங்களிடமிருந்து எதையாவது எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும். அதோடு உங்களையும் கிப்ட் வாங்கி தரும் ஒரு மெஷினாகதான் பார்க்கும். அவர்கள் அன்றாட வேலைகளை ஏன் செய்ய வேண்டும். அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை குழந்தைக்கு புரியும் வகையில் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் கடினமாகதான் இருக்கும். குழந்தைக்கு புரியும் வரை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு எந்த சமயத்திலும் நீ இதை செய்தால் நான் உனக்கு இதை வாங்கி தருகிறேன் என வாக்கு தரக்கூடாது. அப்படி வாக்கு தந்தால் அதை வாங்கி கொடுத்தே தீர வேண்டும். ஏனெனில் வாங்கி தரவில்லை எனில் உங்களைப் பற்றி குழந்தைகள் தன்னுடைய நண்பர்களிடம் தவறாக பேசுவார்கள். பாராட்டுகள் அனைத்தும் வாய்மொழியாகதான் இருக்க வேண்டும். குழந்தைகள் ஏதாவது சாதித்தால், உங்களுக்கு தோன்றினால் மட்டும் குழந்தைகளுக்கு தேவைப்படுவதை வாங்கி தரலாம். அதையும் முன்கூட்டி சொல்லக் கூடாது. அப்படி சொன்னால் எனக்கு தேவையானப் பொருள் கிடைக்கிறது. அதற்காக இதை நான் செய்தே தீரவேண்டும் என்ற எண்ணம்தான் வளருமே தவிர வேறு எந்தவிதமான வளர்ச்சியும் இருக்காது.
அடிக்கடி கிப்ட் வாங்கி தருவதால் குழந்தைகள் கிப்டுகளின் அடிமையாகிவிடுவார்கள். அது இல்லாமல் எதுவும் நடக்காது என்றாகிவிடும். நம்மிடம் எதிர்பார்ப்பதைப்போலவே மற்றவர்களிடத்திலும் குழந்தைகள் எதிர்பார்ப்பார்கள். அதோடு அப்படி மற்றவர்களிடமிருந்து எதுவும் கிடைக்கவில்லை என்றால் அதுவே அவர்களை மனசோர்வு அடைய செய்யும். இந்த மனசோர்வு பல பின்விளைவுகளை ஏற்படுத்த கூடியது என்பதை பெற்றோர்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட குழந்தைகள் கிப்டை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த சமயத்தில் குழந்தையை சமாதானம் செய்ய நான் வாங்கி தருகிறேன் என்று சொல்லிவிட்டு வாங்கித்தராமல் இருந்தால் அது தவறு. நாம் தான் குழந்தைகளின் முதல் ரோல்மாடல். நாளை குழந்தையும் நம்மைப்போலவே வாக்கு கொடுக்கும். ஆனால் செய்யாது. மேலும் வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தை திறமையாக ஏதாவது செய்தால் அதற்கு நீங்கள் பரிசு வாங்கி தருகிறீர்கள் என்றால் மற்றொரு குழந்தையிடம் இருக்கும் நல்ல விஷயத்தை கண்டுபிடித்து அதற்கு பரிசு வாங்கி தரவேண்டும். இந்த சமயத்தில் நீங்கள் மேலும் ஒன்றை செய்ய வேண்டும். திறமையை வெளிப்படுத்திய குழந்தையிடம் அவளுக்கு வாங்கி தரவில்லை என்றால் அவள் வருத்தப்படுவாள் என்பதை தெளிவாக சொல்லி புரியவைக்க வேண்டும்.