Thursday, March 10, 2011

சாதா குண்டா... கொழுப்பு குண்டா?


* ஊதினாலும் சுறுசுறுப்பு குறையலே ஓகே தான்

* நடுத்தரமாக இருந்தாலும் "ஒபிஸ்'ன்னா உஷார்
"டேய், நம்ம ஹரியை பாரு, குண்டாகத்தான் இருக்கான்; ஆனா, நல்லா சாப்பிடறான்; சுறுசுறுப்புக்கு குறைவே இல்லை. அது எப்படிடா, அவனுக்கு ரத்த அழுத்தமோ, ஷுகரோ இல்லையே...?'
"ஒனக்கு ஓவர் வெயிட் இல்லை; ஒபிஸ் என்றும் சொல்ல முடியாது; ஆனா, அடிக்கடி சோர்வடைறியே...அதான் சந்தேகமாக இருக்கு. எதுக்கும் டாக்டரை பார்த்துடு...'
"நான் வீட்டுச் சாப்பாடு தான் எப்போதும் சாப்பிடுவேன்; தண்ணீர் கூட வீட்டில் இருந்து பாட்டிலில் பிடித்து ஆபீசுக்கு எடுத்து சென்று விடுவேன்; எனக்கு எப்படி மாரடைப்பு வந்தது?'
"நான் ஊர்மாறி வேலை செய்து வருகிறேன்; ரூம் எடுத்து தங்கியுள்ளேன்; ஓட்டல் சாப்பாடு போரடிக்கத்தான் செய்யுது; என்ன செய்வது? இப்பத்தான் பயமா இருக்கு!'
இப்படி பல தரப்பட்டவர்களும் நம்மில் உள்ளனர். ஆனால், வராது...வராது என்று சொல்லி தைரியமாக இருப்பவர்கள் எல்லாருக்குமே ஏதாவது ஒரு கட்டத்தில் இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வரத்தான் செய்கிறது. இதனால், இப்படிப்பட்ட பலருக்கும் பெரும் குழப்பம் தொடர்கிறது.
எது சாதா? எது "ஒபிஸ்?'
ஒருவர் சராசரியை விட, அதிக எடை உள்ளவராக தோற்றமளிக்கலாம்; ஆனால், அதிக எடை எதனால் வந்தது என்பது தான் முக்கியம். அதன் மூலம் தான் ஒருவர் சாதா குண்டா? கொழுப்பு குண்டா? என்பதை டாக்டர் முடிவு செய்வார்.
சாதா குண்டாக இருந்தால் கலோரி (எனர்ஜி)யை குறைக்கச்சொல்வார்; "ஒபிஸ்' குண்டாக இருந்தால் கூடுதலாக சிகிச்சை, உடல் பயிற்சி தேவைப்படும். சதைப்பற்று, எலும்பு திண்மை, கொழுப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றால் தான் உடல் எடை அதிகரிக்கிறது. இதில், உணவு, பழக்க வழக்கங்களால் கொழுப்பு அதிகரித்து அதன் மூலம் குண்டு ஏற் பட்டால் அது தான் "ஒபிசிட்டி' என்பது.
ஒபிசிட்டி வந்தால்...
சதைப்பற்று, எலும்பு திண்மை, தண்ணீர் போன்றவற்றால் ஏற்படும் குண்டு கரைவது எளிது. ஆனால், "ஒபிஸ்' மூலம் ஏற்படும் குண்டு அதிகரித்தால் ஆபத்து தான். முதலில் ரத்த அழுத்தம், ஷுகர் அளவு லேசாக அதிகரிக்கும்; அப்போது பெரிதாக ஒன்றும் ஏற்படாது. திடீரென, பெரும் கோளாறை ஏற்படுத்தி விடும். இதய நோய், உயர் ரத்த அழுத்தம், டைப் 2 சர்க்கரை நோய் மட்டுமல்ல, பித்தப்பை, கல்லீரல் பிரச்னை, சுவாசக்கோளாறு என்று, கேன்சரில் கூட கொண்டு போய் விட்டு விடும்.
என்ன காரணம்?
சாதா குண்டாக இருந்தாலும், "ஒபிசிட்டி' குண்டாக இருந்தாலும் இரண்டு தரப்பினருமே கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், உணவு முறை ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தால் மேற்சொன்ன உடல் பிரச்னைகள் அணிவகுப்பது உறுதி.
"எனக்கு தான் கொழுப்பே இல்லைன்னு டாக்டர் சொல்லிட் டாரே என்று கண்டபடி சாப்பிட்டாலோ, பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டாலோ, அடுத்த சில ஆண்டில் உங்கள் சாதா குண்டு, "ஒபிஸ்' குண்டாக மாறி விடும் என்பதை மறந்து விட வேண்டாம். வைட்டமின், கனிம, நார்ச்சத்துள்ள உணவு சாப்பிடுவது முக்கியம்; போதுமான உடல் பயிற்சியும் முக்கியம். "டென்ஷன்' வாழ்க்கையில் பயிற்சிக்கு எங்கே போவது என்று கடுப்பாக வேண்டாம்; வீட்டு வேலையை செய்தோ, தோட்ட வேலை செய்தோ உடலில் இருந்து கலோரியை குறைத்து கொள்ளலாமே.
எனர்ஜி இன் - அவுட்உணவு, உடற்பயிற்சியில் சம நிலையை கடைபிடித்தாலே, ஒருவர் சீரான உடல் எடையை கொண்டிருக்கலாம். நாம் உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் மற்றும் இதர நொறுக்குத்தீனிகள், குளிர்பானங்கள் மூலம் நம் உடலில் சேரும் கலோரியை "எனர்ஜி இன்' என்று டாக்டர்கள் அழைக்கின்றனர். அதுபோல, சுவாசம், ஜீரணம் மட்டுமின்றி, நடப்பது, குனிந்து ,கை, காலை மடக்கி வேலை செய்வது போன்ற உடலை அசைத்து செய்யும் சில செய்கைகள், தனியாக செய்யும் உடற்பயிற்சிகள் போன்றவை மூலம் வெளியேற்றப்படும் கலோரி தான் "எனர்ஜி அவுட்' என்பது.
நீங்கள் எந்த அளவுக்கு "எனர்ஜி இன்' சேர்க்கிறீர்களோ, அந்த அளவுக்கு "எனர்ஜி அவுட்' டில் சமப்படுத்தி விட்டால், உங்கள் ஆரோக்கியம் சூப்பராக இருக்கிறது என்று பொருள்.
இப்போது புரியுமா?
ஏன் கொழுப்பு, இனிப்பு கலந்த பர்கர், பிட்சா, கூல் டிரிங்க், பாக்கெட் நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை குறைவாகவும், காய்கறி, பழங்களை அதிகமாகவும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் "கத்தோ கத்து' என்று கத்துகின்றனர்.
டாக்டர்கள் இப்படி கத்துவதை பலரும் கண்டுகொள்ளாமல் வியாதிகளை வரவழைத்துக்கொண்டு, கடைசியில் "அந்த டாக்டர் பகல் கொள்ளைக்காரன்பா...' என்று மட்டும் வாய் நோகாமல் சொல்வது சரியா?
சமமான "எனர்ஜி இன்' + "எனர்ஜி அவுட்' = ரத்த அழுத்தம், ஷுகர் வரவே வராதுங்க.
அதிக "எனர்ஜி இன்' + குறைவான "எனர்ஜி அவுட்' = ஒபிசிட்டி நிச்சயம்.
குறைவான "எனர்ஜி இன்' + அதிக "எனர்ஜி அவுட்' = எடை குறையும்; ரத்த சோகை உட்பட தொல்லை அணிவகுக்கும்.

இதையும் பாருங்கள்



கூகுளின் இணைய அகராதி


கூகிளின் (தமிழ் – ஆங்கிலம் ) (ஆங்கிலம் – தமிழ்) இணைய அகராதி சேவை மிகவும் பயனுள்ள  சேவை.

இச் சேவையை பயன்படுத்த www.google.com/dictionary என்ற முகவரிக்கு சென்று English — Tamil தேர்ந்தெடுத்து ஆங்கில சொற்களுக்கு இனையான தமிழ் சொற்களை அறிந்து கொள்ளலாம்.





கூகிள் ஆங்கிலம் தமிழ் அகராதி
கூகிள் தமிழ் – ஆங்கில அகராதி
கூகிள் தமிழ் - ஆங்கில அகராதி

இப்படியும் சில ஆபத்தான சாதனைகள்





இந்த படங்களையும் பாருங்கள்


 








ஜிமெயிலை ஆஃப்லைனில் படிக்க...


 சில சமயங்களில் இணைய இணைப்பு தடைபட்ட தருணங்களில், நமக்கு ஏற்கனவே வந்திருந்த மின்னஞ்சலை திறந்து ஒரு முக்கியமான விபரத்தை காணவேண்டுமெனில் என்ன செய்ய முடியும்?

 
மைக்ரோசாப்ட் Outlook, Thunder Bird போன்ற வசதிகள் நமக்கு மின்னஞ்சல்  வசதியை Offline -இல் பணிபுரிய பெரிதும் உதவுகின்றன. ஆனால் ஜிமெயிலில் இந்த வசதியை கொண்டுவர என்ன செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம். (எல்லாவற்றிற்கும் முன்பாக இந்த வசதியை உருவாக்கப் போகும் கணினி/லேப்டாப்  உங்களால் மட்டுமே கையாளப்படுகிறதா.. என்பதை தெளிவாக உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்)
முதலில் இந்த வசதியை நிறுவ நமது கணினியில் கூகிள் கியர்ஸ் பதியப்பட்டிருக்க வேண்டும். கீழே தரப்பட்டுள்ள சுட்டியிலிருந்து கூகிள் கியர்சை தரவிறக்கி கணினியில் பதிந்து கொள்ளுங்கள்.


உங்கள் உலாவி ரீ ஸ்டார்ட் ஆகி வந்தவுடன், உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.  ஜிமெயில் திரையில் வலது மேற்புற மூலையில் உள்ள Settings லிங்கை க்ளிக் செய்திடுங்கள். 
இனி வரும் திரையில் Offline டேபை திறக்கவும். 


பிறகு Offline Mail க்கு நேராக உள்ள  Enable Offline Mail for this Computer ஐ தேர்வு செய்து கொண்டு, கீழே உள்ள Save Changes பொத்தானை சொடுக்குங்கள். 



அடுத்து வரும் வசனப் பெட்டி  கீழே தரப்பட்டுள்ளது போல இருக்கும். 


இதில்  I trust this site. Allow it to use Gears என்பதை தேர்வு செய்து Allow பொத்தானை சொடுக்கவும். 

அடுத்த வசனப் பெட்டியில் நீங்கள் விரும்பும் Shortcut வசதியை தேர்வு செய்து OK பொத்தானை சொடுக்கவும். 


இப்பொழுது உங்கள் ஜிமெயில் திரையில் மேல் வலது புறத்தில் Installation நடந்து கொண்டிருப்பதை காணலாம். உங்கள் மெயில் பாக்ஸின் அளவைப் பொருத்து நேரம் மாறுபடும். 

இனி  இணைய வசதி இல்லாத பொழுதும், உருவாக்கப்பட்டுள்ள shortcut ஐ க்ளிக் செய்வதன் மூலம், உங்கள் மெயில் பாக்சை திறக்க முடியும், மெயில் பாக்ஸில் தேடமுடியும், மேலும் புதிதாக மின்னஞ்சலை கம்போஸ் செய்து send கொடுத்தால் அது otubox இல் சென்று, பிறகு நீங்கள் எப்பொழுது இணையத்தில் தொடர்பு ஏற்படுத்துகிறீர்களோ,   அப்பொழுது  அவை தானாக அனுப்பப் பட்டுவிடும். 

மேலும்  விவரங்களுக்கு கூகுளின்https://mail.google.com/mail/exp/197/html/en/help.html தளத்திற்கு  சென்று பாருங்கள்.