இவ் ஓவியம் 1630ம் ஆண்டுகளைச் சேர்ந்தது. இதனையே டச்சு ஓவியர் Rembrandt இனால் வரையப்பட்ட ஓவியமெனக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஓவியம் அதனை வரைந்தவரின் சுய-உருவந்தானென்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாடியுடனான வயோதிபர்’ எனப்பட்ட இந்த ஓவியம் டச்சு ஓவியரின் கைவண்ணத்தை ஒத்திருந்ததைக் கண்ட ஒரு ஓவியச் சேகரிப்பாளரால் ஓர் ஓவிய வரலாற்று மையத்திற்குக் கொடுக்கப்பட்டது.
இதனைப் பற்றித் தெரியாமலிருந்த நிபுணர்கள் அந்த ஓவியத்திற்குக் கீழே இரண்டாவதாக இன்னொரு ஓவியம் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அது தமது பிரச்சினையைத் தீர்க்குமென்றும் நம்பினர்.

இந்த விம்பத் தொழினுட்பத்தினால் முன்னரும் பல முன்னி ஓவியர்களின் ஓவியங்களில் புதிய கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த ஓவியத்தில் தோல்நிறங்களிலுள்ள புள்ளிகள் மற்றும் பூச்சுக்களுடன் பொருந்தாமல் காணப்படும் செப்புபோன்ற மூலக்கூறுகளிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோது அதன் கீழே தாடியற்ற ஓர் இளைஞர் ஒரு பெரே தொப்பியுடன் இருந்தது தெரிந்தது.
இதில் காணப்பட்ட அம்சங்களே Rembrandt இன் ஏனைய ஓவியங்களிலும் காணப்பட்டிருந்தன. இதனால் முற்றுப்பெற்றிராத சுய-உருவப் படமொன்றின் மேலே புதியதொரு ஓவியம் வரையப்பட்டிருந்ததென முடிவுக்கு வந்தனர்.
|
No comments:
Post a Comment