
இத்தடைக்கு எதிராகப் பல எதிர்ப்பு நடவடிக்கைகளை சவுதிப் பெண்கள் செய்துமுள்ளனர். நடைமுறையிலுள்ள சிரமங்களுக்கும் அப்பால், இத்தடையானது தங்களை வீடுகளிலேயே கட்டுப்படுத்தி வைக்கும் மற்றும் ஆண்களிடமிருந்து தள்ளிவைக்கும் கருத்தற்ற செயற்பாடுகளையும் செய்கின்றதென இவர்கள் வாதிட்டனர்.
அத்துடன் உண்மையில் மாறாக இச்சட்டத்தினால் ஓர் ஆண் சாரதியுடன் தாங்கள் நாளாந்தம் தொடர்புறும் செயலையே செய்கின்றதென வாதிட்டனர். இந்த விடயம் சர்வதேச அளவில் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
எனினும் சில சவுதிப் பெண்களால் இந்த விடயம் அதிகளவு ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டதென்றும் நினைக்கத் தோன்றியுள்ளது.
தனது முன்னேற்றகரமான நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக அரசர் அப்துல்லா இந்தத் தடை மீள்பரிசீலனை செய்யப்படுமென்ற கருத்துக்களையும் உலவவிட்டுள்ளார். இந்தக் கருத்துக்களால் சமயக்குழுக்கள் மிகவும் கோபமடைந்துள்ளதாகவும் தெரிகின்றது.
இவர்கள் மீண்டும் அந்தத் தடையை ஏற்படுத்துவது பற்றிக் கருத்துத் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பெண்களை விடுவதானது, விபச்சாரம், நீலப்படங்கள், ஓரினச்சேர்க்கை மற்றும் விவாகரத்துக்களில் கொண்டுசென்று விட்டுவிடுமென இவர்களது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த மதக்குழுவின் தலைவருக்கு முற்றுமுழுதாகப் பைத்தியம் பிடித்துள்ளது என இந்த அறிக்கை பற்றி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த சவுதிப் பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.
|
No comments:
Post a Comment