Wednesday, January 5, 2011

யூஸ் அண்ட் த்ரோ மின்னஞ்சல்

நீங்க ஒரு மின்னஞ்சல் கொடுத்த அதுக்கு ஒரு லொள்ளு மெயிலில் இருந்து கரைச்சல் மெயில் வரை அனுப்பி அவர் குஷிப்படுகிறார். அது பத்தாமல் அவர் லாக்கின் பண்ண தளத்துக்கு எல்லாம் உங்களையும் சேர்த்து இன்வைட் செய்வாரு மற்றும் புதிய புதிய ஸ்பேன் மெயிலைக்கூட விடாமல் முடிந்த அளவு பார்வேர்ட் செய்ய முயற்சியாவது செய்வார். அப்ப நம்ம தலைவரு புதுசு புதுசா முளைச்ச தளத்துக்கொல்லாம் தெரியாமல் கொடுத்திருந்த அந்த மின்னஞ்சலுக்கு புதுசு புதுசா யோசிச்சு மெயில் வரும்... நிற்க.


இப்படிப் பட்ட சூழலில் தற்காலிக மின்னஞ்சல்கள் துணைசெய்யும். யாஹூ மின்னஞ்சல் சேவையுடன் இந்த தற்காலிக மின்னனஞ்சல் வசதியை அறிமுகப் படுத்தியுள்ளார்கள். யூஸ் அண்ட் த்ரோ கப்பைப் போல மின்னஞ்சல் முகவரியை மாற்றிக் கொண்டே போகலாம். அடிப்படையில் உங்களைச் சார்ந்த பெயரிட்டுக் கொண்டு கடைசியில் ஏதேனும் எண்களைப் போட்டு முகவரிகளை உருவாக்கலாம் அல்லது உங்கள் விருப்பமே.

உதாரணத்திற்கு எனது யஹூக் கணக்கில் மேலும் ஒரு ellam_summa-test@yahoo.com என்று ஒரு கணக்கை உருவாக்குகிறேன். வேண்டிய தளங்களில் பதிவு செய்கிறேன், வேண்டியவருக்கெல்லாம் கொடுக்கிறேன். கொஞ்ச காலம் கழித்து அந்த மெயிலுக்கு தேவையில்லாத ஸ்பேன் வருகிறதென்றால் அதைப் அப்படியே லேபிள் போட்டு வரும் மின்னஞ்சல்களைப் பிரித்து தேவையான முகவரிகளை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். அதும் சில காலங்களில் யாரும் தேவையில்லை என்றால் அந்த முகவரியை அப்படியே அழித்தும் விடுகிறேன். எப்படி வசதி! மேலும் சில பல முகவரிகளை உருவாக்கி வெவ்வேறு தொடர்புகளுக்கும் நான் கொடுக்கலாம் இப்படி ellam_summa-friends@yahoo.com ellam_summa-jobs@yahoo.com ellam_summa-bloggers@yahoo.com இதில் கவனித்தால் நமது அடிப்படை பெயர் மாற்றாமல் கடைசிப் பெயரை மட்டும் மாற்றிக் கொள்ளலாம் அல்லது மொத்தமாக புதிய முகவரியையும் உருவாக்கலாம்.அதிக பட்சமாக 500 முகவரிகள் உருவாக்கிக் கொள்ளலாம்.


எப்படி?
யாஹூவில் நுழைந்தப் பின் அதன் வலது புற optionயை தேர்வு செய்யவும்

பிறகு Disposable Email address தொகுதியில் புதியதாக தற்காலிக முகவரியை உருவாக்க add செய்யவும்


அடுத்து வேண்டிய அடிப்படை பெயரைக் கொடுக்கவும் அடுத்த பகுதியில் குறியீடுகள் கொடுக்கவும் எல்லாம் உங்கள் வசதிக்கேற்ப


பிறகு சேமித்தப் பிறகு, அந்தப் பக்கத்தில் இந்த முகவரி சேர்ந்துக் கொள்ளும். இனி இந்த முகவரியை யாரிடமும் கொடுக்கலாம். இந்த முகவரிக்கு வரும் அஞ்சல்கள் தானாகவே ஸ்பேன் பெட்டிக்குப் போகும் அதனால் உங்கள் முக்கிய கணக்குக்கு எந்த தொந்தரவும் வராது. சரி, இந்த அஞ்சலுக்கு சிலர் வேண்டிய தகவல்களை அனுப்பினால் ஸ்பேன்னிலிருந்து அதை எப்படி பிரிப்பது?
அதற்கு பில்டர் எனப்படும் வடிப்பானை பயன்படுத்தலாம் அதற்கு முன் folderயை உருவாக்க வேண்டும். இங்கே சென்று புதிய போல்டரை சேர்த்து பெயரிட்டுக் கொள்ளவும்.

அடுத்து வடிக்கட்ட[filter] இங்கே சென்று filter -> add filter கொடுத்து போனாபோகுதுனு வடிப்பானுக்கு ஒரு பெயரைக் கொடுத்திட்டு
அனுப்புனர் வாரியாப் பிரிக்க sender கட்டத்தில் அனுப்புனர் முகவரியைப் போடவும் அல்லது
உங்கள் முகவரி வாரியாப் பிரிக்க recipient கட்டத்தில் உங்களின் தற்காலிக முகவரிகளில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்யவும் அல்லது
தலைப்பு வாரியாகப் பிரிக்க subject கட்டத்தில் வேண்டிய சொற்களைப் போட்டுக் கொள்ளவும்


கடைசியில் எந்த போல்டருக்கு அனுப்ப வேண்டுமோ அதை தெரிவு செய்யவும் கடைசியாக சேமிக்க மறக்காதீர்கள்.அவ்வளவே
இனி அந்த போல்டரில் நீங்கள் பிரித்த வகை அஞ்சல்கள் தானாக வந்து சேர்ந்துவிடும்

தேவையான போது இந்த தற்காலிக முகவரிகளை இந்த Disposalble Email address தொகுப்பில் மாற்றவும் அழிக்கவும் முடியும்பிற்சேர்க்கை:[தடங்கலுக்கு வருந்துகிறேன்.]

இப்போதுதான் கவனிக்கப் பட்டது. சில கணக்கிற்கு இந்த வசதி உடனடியாகத் தெரிவதில்லை, விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக கோரிக்கைக்கு வாடிக்கையாளர் உதவியையும் அணுகலாம். 'Disposable Email Addresses' வசதியைத் தரும் மற்றும் சில தளங்கள்.
இவை இலவசமானவைதான்
http://www.emailias.com/learning/faq2.php
http://www.e4ward.com/
www.gishpuppy.com


பதிவுக்கு ஓட்டுப் போடப் போறீங்களா?
நீங்க பாட்டுக்கு குத்துங்க நான்பாட்டுக்கு எண்ணுறேன்

No comments:

Post a Comment