Showing posts with label email. Show all posts
Showing posts with label email. Show all posts

Saturday, July 9, 2011

ஒரு EMAIL - லின் பின்னணியில் இத்தனை ரகசியங்களா?

ஒவ்வொரு மின்னஞ்சலிலும் அத்தகவலின் நதிமூலம், ரிஷிமூலம் எல்லாம் சேர்த்தே அனுப்பி வைக்கப்படுகிறது, ஆனால் பொதுப்பயன்பாட்டுக்கு அவை அவசியமல்லாததால் நம் பார்வைக்கு வைக்கப்படுவதில்லை. இணைய மென்பொருள் நிரல்கள் (scripts) எழுதுவது குறித்து அரிச்சுவடி தெரிந்தால் போதும், ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு யார் அனுப்புவது போல்வேண்டுமானாலும் மின்னஞ்சல் அனுப்பலாம்.

 
உங்கள் பதிவைப் பாராட்டி விகடனோ, குமுதமோ அல்லது யாரேனும் ஒரு பிரபலமோ மின்னஞ்சல் அனுப்புவது போல சும்மாக்காச்சுக்கும் அனுப்புவது மிகமிகச் சுலபம். எப்படி என்று பெஞ்ச் மேல் ஏறி நின்று கேட்பவர்கள் பின்னூட்டங்களில் தெரிவித்தால் தனிப்பதிவாக போட தயாராக இருப்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதன் மூலம் அறியப்படும் நீதி என்னவென்றால் நம்ப முடியாத அல்லது சர்ச்சைக்குரிய விஷயங்களை மின்னஞ்சலை ஆதாரமாகக் கொண்டு ஊர்ஜிதப்படுத்தும் சூழ்நிலைகளில் முறையாக ஆய்வு செய்யாமல் திரைக்காட்சி (screenshot) அல்லது வெறும் மின்ன்ஞ்சல்களைப் படித்து முடிவுக்கு வராமல் இருப்பது மிக்க நன்று. மிக அதிமுக்கிய தகவல்களை மின்னஞ்சல் மூலம் தெரியப்பெற்றால் அதையும் சோதித்து உறுதிப்படுத்தி கொண்டால் 'முன் ஜாக்கிரதை முனிசாமி' விருதினை இலகுவாகப் பெறலாம்.உங்களுக்கு ஆப்பிரிக்க, ஆசிய, ஐரோப்பிய, வடஅமெரிக்க, தென் அமெரிக்க, ஆஸ்திரேலிய சமயத்தில் அண்டார்டிக்க நண்பர்கள் கூட உங்களுக்கு சுக்கிரன் சுத்தி சுத்தி அடித்து விட்டதாகவும் அதை அள்ளிச் சுமக்க மிகவும் சிரமப்படுவதால் கொஞ்சமாக பணம் அனுப்ப சொல்லி வரும் மோசடி மின்னஞ்சல்கள் மிகப் பிரபலம் மற்றும் பழங்கஞ்சியான செய்தியும் கூட. இம்மாதிரி மின்னஞ்சல்களைக் கூர்ந்து நோக்கினால் சமயத்தில் hotmail மற்றும் yahoo ஆகியவற்றின் அதிகாரப்பூர்வமான மின்னஞ்சல் முகவரிகளில் இருந்து கூட உங்களுக்கு லாட்டரி அடிச்சிருக்கு, டவுசர் கிழிஞ்சிருக்கு உடனே தைப்பதற்கு அணுகவும் என்று கூவியிருப்பார்கள். அனுப்புநர் முகவரி மிகவும் நம்பத்தகுந்தது போல இருக்கும். உ.தா: admin@yahoo.com, customerservice@hotmail.com.
சில சமயங்களில் பிரபலங்களுக்கு 'வேட்டு வைக்கப் போறோம்' வகையான மின்னஞ்சல்களை சிலர் சில்மிஷமாக அனுப்பும் சம்பவங்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். மறுநாளே இணையக் குற்றவியல் துறையினர் குற்றவாளியைத் தேடி நேமத்தான்பட்டியில் வலைவீசிக் கொண்டிருப்பார்கள். எப்படி மின்னஞ்சலில் நேமத்தான்பட்டியைக் கண்டுபிடிக்கிறார்கள்?. மின்னஞ்சல் மாயாஜாலங்களிலிருந்து எப்படி தப்பிப்பது, மின்னஞ்சல்களின் மூலங்களை எப்படி ஆய்வு செய்வது?

பொதுவாக மின்னஞ்சல் நேரடியாக ஒருவரிடமிருந்து வரலாம் அல்லது 'சாமி கண்ணைக் குத்தும், 18 பேருக்கு அனுப்பு' அல்லது கோலாவில் கழிப்பரை சுத்தம் செய்வது போன்ற வகையிலான முன்பகிர்வு மின்னஞ்சலாகவும் (forwarded emails) இருக்கலாம். எப்படி இருப்பினும் மின்னஞ்சலின் மூலத்தை (origin) மிக எளிதாக கண்டுபிடிக்கலாம். எப்படி கண்டுபிடிப்பது? , ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் தலைப்பகுதி (header) என்று ஒன்று இருக்கும். அவற்றில் ஒரு மின்னஞ்சல் ஓவ்வொரு முறையும் ஒரு முகவரியிலிர்ந்து இன்னொரு முகவரிக்கு பயணிக்கும் போது அனுப்புநரின் வலையிணைப்பு முகவர் எண் (I.P Address), உபயோகப்படுத்திய மின்னஞ்சல் சர்வர், சர்வரில் அந்த மின்னஞ்சலுக்கான பதிவு எண், தேதி, நேரம், நாள், நட்சத்திரம் இவையெல்லாம் பதிவாகும்.

உதாரணத்திற்கு ஒரு மின்னஞ்சலின் தலைப்பகுதி கீழேக் கொடுக்கப்பட்டிருப்பது போல இருக்கும். நீங்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவைக்கேற்ப சிறிது மாறுபடலாம்.


மேலே உள்ள தலைப்பகுதியில் Received என்ற பகுதி மீண்டும் மீண்டும் வருவதைக் காணலாம். இந்த Received என்று தலைப்பிட்ட பகுதிகள் தான் மின்னஞ்சலின் மூலத்தைக் கண்டுபிடிக்க நமக்கு உதவப் போகிறது. முதலில் ஒருவர் அனுப்பும் மின்னஞ்சல் எப்படி பெறுநரிடம் சென்றடைகிறது என்பது குறித்துத் தெரிந்து கொள்வோம். நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் சேர வேண்டிய இடத்தைப் பொருத்து சில/பல மின்னஞ்சல் சர்வர்களில் பயணித்தே பெறுநரைச் சேர்கின்றது (trace route). ஓவ்வொரு முறையும் இடம் விட்டு இடம் தாவும் போதும் ஒரு Received தகவல் மின்னஞ்சலின் தலைப்பகுதியில் சேர்க்கப்படும். இந்த trace route குறித்து கீழ்காணும் முறையில் நீங்களே பரீட்சித்துப் பார்க்கலாம். மிக எளிது.


Start -> Run என்ற இடத்திற்கு சென்று cmd என்று உள்ளிடவும். உங்கள் திரையில் command prompt window தோன்றும். அதில் tracert "IP ADDRESS" அல்லது tracert "DOMAIN NAME" என்று உள்ளிட்டு Enter பொத்தானை அமுத்தினால் வரிசையாக உங்கள் இணைய இணைப்பின் மூலம் உங்கள் தகவல் பறிமாற்றம், கொடுக்கப்பட்ட வலையிணைப்பு முகவர் எண்ணுக்கோ அல்லது வலைத்தளத்திற்கோ எப்படியெல்லாம் பயணிக்கிறது, பயணிக்கும் இடங்களின் வலையிணைப்பு முகவர் எண் அனைத்தையும் காணலாம். நாம் ஒரு முகவரிக்கு அனுப்பும் மின்னஞ்சலும் இம்முறையிலேயே உங்கள் மின்னஞ்சல் சர்வருக்கு சென்று அங்கிருந்து பெறுநரின் மின்னஞ்சல் சர்வருக்கு சென்று அதன் பின் அவர் மின்னஞ்சலைச் சென்றடைகிறது. ஓரளவு உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். உதா. tracert tamilmanam.net, பார்க்க படம் (க்ளிக் செய்து பெரிது படுத்து பார்க்கவும்).

மின்னஞ்சலின் செயல்பாடு குறித்து பார்த்தாகி விட்டது. உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது , அதன் தலைப்பகுதியை எவ்வாறு ஆய்வு செய்து அதன் மூலத்தைக் (origin) கண்டுபிடிப்பது என்று பார்ப்போம். மின்னஞ்சல் ஒவ்வொரு இடத்திலிருந்து இன்னொரு இடம் செல்லும் போது Received தகவல் பதிவு செய்யப்படுவது குறித்துப் பார்த்தோம். பொதுவாக இப்பதிவுகள் கீழிருந்து மேலாகப் பதிவு செய்யும் முறை பின்பற்றப் படுகிறது. உதாரணத்திற்கு ஒரு மின்னஞ்சல் மூன்று நபர்களைத் தாண்டி உங்களிடம் வந்தடைகிறது என்று வைத்துக் கொண்டால் அதன் தலைப்பகுதியில் பல Received தலைப்பிட்டத் தகவல்களைக் காணலாம். அந்த மின்னஞ்சல் முதன் முதலில் யாரிடமிருந்து புறப்பட்டது என்பதை அறிய கடைசியாக இருக்கும் Received தகவலைச் சோதிக்க வேண்டும் (பார்க்க படம்). அதில் அனுப்புநரின் வலையிணைப்பு முகவர் எண் இருக்கும், அதனை எடுத்து அந்த எண்ணுக்கான நாட்டினையோ, ஊரையோ மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். வலையிணைப்பு எண்ணைக் கொடுத்தால் அதன் இடத்தைக் காட்டிக் கொடுக்கும் கருணா வகை வலைத்தளங்கள் ஏராளமாக இருக்கின்றன. கூகிளாடிப் பார்த்துத் தேவைக்கேற்ப தேர்வு செய்து கொள்ளுங்கள். உதாரணம்:http://www.melissadata.com/Lookups/iplocation.asp

அவ்வளவு தான் இப்பொழுது நீங்கள் மின்னஞ்சலின் தலைப்பகுதியை ஆய்வு செய்வதற்கு முழுமையாகத் தயாராகி விட்டீர்கள். இன்னும் ஒரே ஒரு விஷயம் அதுவும் முக்கியமான விஷயம் தான் மிச்சம். இந்த மின்னஞ்சலின் தலைப்பகுதியை எவ்வாறு பார்ப்பது. மின்னஞ்சலின் தலைப்பகுதியைப் பார்வையிடுவது நாம் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவை (yahoo/hotmail/gmail) அல்லது மின்னஞ்சல் பயனாளர் மென்பொருட்கள் (email clients: outlook/outlook express/thunderbird) இவைக்கேற்ப மாறுபடும்.

முதலில் எவ்வாறு மின்னஞ்சலின் தலைப்பகுதியை பார்வையிடுவது என்று பார்ப்போம்.

யாஹூ : மின்னஞ்சலின் மேல் Right Click செய்து view full headers என்பதைச் சொடுக்கினால் போதும்.

ஹாட்மெயில்: மின்னஞ்சலின் மேல் Right Click செய்து view message source என்பதைச் சொடுக்க வேண்டும்.

ஜிமெயில்: மின்னஞ்சலைத் திறந்த பின் Reply என்ற பொத்தானில் கீழ்நோக்கிய அம்புக்குறியினை சொடுக்கி show original என்பதனைத் தேர்வு செய்ய வேண்டும்.

அவுட்லுக்: மின்னஞ்சலின் மேல் Right Click செய்து options என்பதைச் சொடுக்கினால் message options window திரையில் தோன்றும் அதில internet headers என்ற பகுதியில் தலைப்பகுதியினைக் காணலாம்.

அவுட்லுக் எக்ஸ்பிரஸ்: மின்னஞ்சலின் மேல் Right Click செய்து properties என்பதைச் சொடுக்கினால் தோன்றும் படிவத்தில் details என்ற பகுதியைத் தேர்வு செய்தால் காணலாம்.

தண்டர்பேர்ட்: மின்னஞ்சலைத் திறந்து, மெனுவில் View -> message source என்ற பகுதிக்கு சென்றால் காணலாம்.


இவ்வாறு காணும் தலைப்பகுதியில் நமக்குத் தேவை Received என்று தலைப்பிடப்பட்ட பகுதிகள் மட்டுமே. இந்த Received பகுதிகள் அனுப்புநர், அனுப்புநரின் வலையிணைப்பு முகவர் எண் (ip address), பெறுநர் மற்றும் மின்னஞ்சல் சர்வர்களின் பெயர்கள், சர்வர் குறியீட்டு எண்கள் ஆகியத் தகவல்களைக் கொண்டிருக்கும். பல நபர்களைக் கடந்து ஒரு மின்னஞ்சல் உங்களுக்கு வரும்பட்சத்தில் இந்த received பகுதிகளைக் கீழிருந்து மேலாக ஆய்வு செய்தால் அதில் ஒரு ஒழுங்கு இருக்கும். அதாவது கீழே இருக்கும் received பகுதியின் பெறுநர் அதன் மேலே received பகுதியின் அனுப்புநராக இருப்பார், இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இருந்தால் மின்னஞ்சலில் விவகாரமான விஷயங்கள் இருக்கலாம், காரணம் தேர்ந்த சில்மிஷ மின்னஞ்சல் அனுப்பும் கில்லாடிகள் வலை நிரல்கள் மூலம் இந்த மின்னஞ்சலின் தலைப்பகுதியிலும் கைவைத்து குழப்பி விடுவார்கள். நன்கு வடிவாக வாரியிருக்கும் தலைமுடியை கலைத்து விடுவது போல மேலும் சில received பகுதிகளை நிரல்கள் மூலம் ஆங்காங்கே மானாவாரியாக தலைப்பகுதியில் விதைப்பார்கள். அவற்றை மண்டை காய்ந்தாலும் கவலைப்படாமல் களையெடுப்பது ஆய்வு செய்யும் நிபுணர்களின் வேலை.

மேலே சொன்னபடி அனைத்து received பகுதிகளும் ஒன்றுக்கொன்று தொடர்ச்சியாக இருக்க வேண்டும்(கீழே இருக்கும் received பகுதியின் பெறுநர் அதன் மேலே received பகுதியின் அனுப்புநராக இருப்பார்). அவ்வாறு இல்லாத received பகுதிகளை நீக்கிக் கொண்டே வந்தால் ஒழுங்கு படுத்தி விடலாம். அவ்வாறு ஒழுங்கு படுத்தி விட்டு பார்க்கும் போது கடைசி received பகுதியில் இருக்கும் வலையிணைப்பு முகவர் எண் ("[ ]" என்ற அடைப்புக் குறிக்குள் வழங்கப்பட்டிருக்கும்) தான் நமக்குத் தேவையான தகவல்.
அது போக மின்னஞ்சல் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் தங்களுக்கென சில தலைப்பகுதிக் கட்டமைப்புகளைப் பிரத்யேகமாக வைத்துள்ளன. ஹாட்மெயில் சேவையில் அனுப்பப்படும் மின்னஞ்சல்களின் தலைப்பகுதியில் வழக்கமான received பகுதிகளோடு சேர்த்து X-Origninating-IP என்ற ஒரு பகுதி கூடுதலாக இருக்கும். அதில் மின்னஞ்சலின் மூலம் அதாவது முதன் முதலில் யாரால் அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டதோ அவர்களின் வலையிணைப்பு முகவர் எண் அழகாகக் காண்பிக்கப்படும். நமக்கு ஆய்வு செய்யும் வேலை மிச்சம். வாழ்க மைக்ரோசாப்ட்.

யாஹூ வழக்கம் போல நாம் விவரித்த முறையிலேயே தங்கள் மின்னஞ்சல்களின் தலைப்பகுதியினை கட்டமைத்திருக்கிறார்கள். மேலிருந்து கீழாக received பகுதிகளை ஆய்வு செய்தால் கடைசியாக இருக்கும் பகுதியில் புதையல் இருக்கும்.

ஜிமெயில் தமது மின்னஞ்சல் சேவையின் போது உலாவி மூலம் மின்னஞ்சல் அனுப்பினால் அனுப்புநரின் வலையிணைப்பு முகவர் எண்களை பதுக்கி விட்டு, த்ங்களின் மின்னஞ்சல் சர்வரின் தகவல்களை மட்டுமே அளிக்கிறது. அனுப்புநரின் வலையிணைப்பு முகவர் எண் தேவை என்றால் கூகுளிடம் ஒரு வாரமோ அல்லது பத்து நாட்களோ தொங்கோ தொங்கென்று தொங்கினால் கிடைக்கப்பெறலாம். கூகுள் செய்யும் இணையச் சேட்டைகளில் இதுவும் ஒன்று. உலாவி அல்லாமல் மின்னஞ்சல் பயனாளர் மென்பொருட்கள் (outlook..etc) பயன்படுத்தி அனுப்பினால் தலைப்பகுதியில் அனுப்புநரின் முகவர் எண் கிடைக்கப் பெறலாம்.

இப்பொழுது தலைப்பகுதிகளை பார்வையிடுவது, ஆய்வு செய்து மின்னஞ்சலின் மூலத்தினது வலையிணைப்பு முகவர் எண்ணைக் கண்டுபிடிப்பது வரைக்கும் பார்த்தாகி விட்டது. அடுத்து நாம் கடந்த பகுதியில் குறிப்பிட்டதை போல http://www.melissadata.com/Lookups/iplocation.asp போன்ற வலைத்தளங்களுக்கு சென்று கண்டுபிடித்த வலையிணைப்பு முகவர் எண்ணை உள்ளிட்டால் அதன் இருப்பிடத்தை அறியலாம்.

இப்பொழுது முழுமையாக மின்னஞ்சலின் தலைப்பகுதி குறித்து ஒரு புரிதலுக்கு வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இறுதியாக ஒரு விஷயம் மின்னஞ்சல் இரண்டு விதமாக அனுப்பப்படலாம். ஒன்று நேரடியாக அனுப்புநரால் அனுப்பப்படுவது. இரண்டாவது தானியங்கி நிரல்களால் வெப் சர்வர்களின் மூலம் அனுப்பப்படுவது. முதல் வகை நாம் சாதரணமாக அனுப்பும் முறை. இரண்டாவது வகைக்கு உதாரணம், நீங்கள் வலைப்பதிவுத் திரட்டிகளில் இருந்து பெறும் மின்னஞ்சல்கள் அனேகமாக நிரல்கள் மூலம் வெப் சர்வரில் இருந்து அனுப்பப்படுபவை. அவற்றின் தலைப்பகுதியினை ஆய்வு செய்தால் கிடைக்கும் வலையிணைப்பு முகவர் எண், அவர்களின் வெப் சர்வருக்கு உரியதாக இருக்கும். அதன் இடத்தை கண்டுபிடித்தால் வெப் சர்வர் எங்கிருந்து செயல்படுகிறது என்பதை அறியலாம்.


இவ்வாறு ஆய்வு செய்வதன் மூலம் தான் junk, spam மின்னஞ்சல்கள் கட்டுப்படுத்தப் படுகின்றது. உதாரணமாக உங்கள் மின்னஞ்சல்களில் ஒன்றை junk அல்லது spam என்று நீங்கள் வகைப்படுத்தினால் பின்னணியில் செயல்படும் நிரல்கள் அவற்றின் தலைப்பகுதியை ஆய்வு செய்து மூலத்தின் வலையிணைப்பு முகவர் எண்ணைக் கண்டுபிடித்து குறித்து வைத்து கொள்ளும், அதன் பின்னர் எப்பொழுது அந்த வலையிணைப்பு முகவர் எண்ணிலிருந்து உங்களுக்கு மின்னஞ்சல் வந்தாலும் அவை spam அல்லது junk என்று வகைப்படுத்தப்படும்.
 
தலைப்பகுதி ஆய்வு செய்யும் முறை - ஓர் உதாரணம்:

Received: by 10.231.11.65 with SMTP id s1cs58301ibs;


Sun, 25 Oct 2009 06:59:40 -0700 (PDT)


Received: by 10.231.48.210 with SMTP id s18mr2579002ibf.3.1256479180680;

Sun, 25 Oct 2009 06:59:40 -0700 (PDT)

Received: from s15246724.onlinehome-server.com (s15246724.onlinehome-server.com [74.208.69.95])

by mx.google.com with ESMTP id 12si13106374iwn.49.2009.10.25.06.59.40;

Sun, 25 Oct 2009 06:59:40 -0700 (PDT)

மேலே உள்ளது தமிழ்மணத்திலிருந்து பெறப்பட்ட ஒரு மின்னஞ்சலின் தலைப்பகுதி. அதில் received என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். எனவே மற்ற பகுதிகள் நீக்கப்பட்டு received பகுதிகள் மட்டுமே மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி கடைசி received பகுதியில் நமக்கு கிடைக்கும் வலையிணைப்பு முகவர் எண்: [[74.208.69.95]). இது உணர்த்தும் தகவல்கள்

IP Address Location

IP Address

74.208.69.95

City

Wayne

State or Region

Pennsylvania

Country

United States

ISP

1&1 Internet Inc.
பி.கு: மேலே உள்ளது நிரல்களால் வெப் சர்வரிலிருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல் என்பதால் சர்வரின் தகவல்களே என்பதனை நினைவில் கொள்க.

இதன் மூலம் ஒருவருக்கு நாம் மின்னஞ்சல் அனுப்புப் போது நாம் வெறும் தகவல் மட்டும் அனுப்புவதில்லை, நமக்குத் தெரியாமல் நம்மைப் பற்றி பல்வேறு குறிப்புகளையும் சேர்த்தே அனுப்புகின்றோம் என்பதனை நினைவில் கொள்ளுமாறும், சந்தேகத்துக்குரிய மின்னஞ்சல்களை நீங்களே ஆய்வு செய்து தெளிவடைந்து மின்னஞ்சல் மோசடிகள், சில்மிஷங்களிலிருந்து காத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தி இத்தொடர் நிறைவு பெறுகின்றது

Wednesday, July 6, 2011

A new look for our Email Newsletter


Email marketing to fit your needs. Start a Free 30-Day Trial Today.

 If you are one among the 21,000 readers who have chosen to subscribe to the Digital Inspiration email newsletter, expect to see something different in your mailbox today!

The email newsletter sports a new look and while it will still carry all the stories from the previous day, the newsletter will also feature select evergreen tips from the archives that you may have missed earlier.

Please visit http://eepurl.com/eCk06 to subscribe to the email newsletter.



Here are some more ways to follow Digital Inspiration.

Saturday, June 4, 2011

மின்னஞ்சல் முகவரிகளை சோதிக்க


வீட்டு முகவரி இருக்கோ இல்லையோ ஆனால் மின்னஞ்சல் முகவரி இல்லாத இணைய பயணார்களே இல்லை என்று கூறும் அளவிற்கு மின்னஞ்சல் சேவையானது இன்று அனைவரிடமும் சென்றுவிட்டது. இதற்கு முக்கிய காரணம் பல்வேறு நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு இலவசமாக ஈமெயில் சேவையினை வழங்குவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். மேலும் மின்னஞ்சல் முகவரி இல்லையெனில் கணினி பயன்பாட்டாளர் என்பதற்கு அடையாளமே இல்லையென்ற நிலை உள்ளது. ஏன் நம்மில் பலர் பல்வேறு நிறுவனங்களின் மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தி வருவோம் இதற்கு காரணம் இலவசம் என்ற ஒன்றே ஆகும். 

ஒரு சில இணைய பயனார்கள் பல்வேறு மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்துவார்கள் அவற்றில் ஒன்றை தன்னுடைய நண்பர்க்கு கொடுத்திருப்பார் ஆனால் அந்த முகவரியை பயன்படுத்தாமல் இருப்பார், இதனால் அந்த மின்னஞ்சல் முகவரி செயல் இழந்துவிடும். அந்த செயலிழந்த மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால், சரியான முகவரி அல்ல என்ற செய்தியே வரும். இதுபோன்ற கோளாருச்செய்திகள் வருமேயானால், அந்த குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியானது உபயோகத்தில் உள்ளதா என்பதை ஆராய வேண்டும். இதற்கு ஒரே வழி குறிப்பிட்ட மின்னஞ்சலுடைய உரிமையாளரிடம் கேட்டால் மட்டுமே மின்னஞ்சல் முகவரி நடப்பில் இருக்கிறதா என்பது சாத்தியம் ஆகும். இதற்கு மற்றுமொரு வழி உள்ளது. சரியான மின்னஞ்சல் முகவரிதான என்று சோதிக்க ஒரு மென்பொருள் உள்ளது அந்த மென்பொருளின் வாயிலாக அறிய முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி







இணையத்தில் உதவியுடன் மென்பொருளை தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் Import என்னும் ஆப்ஷனை தேர்வு செய்து மின்னஞ்சல் முகவரிகளை உள்ளினைத்துக்கொள்ளவும். நாம் txt, CSV, Excel, Access அல்லது Database பைல்களை உள்ளினைத்து கொள்ள முடியும். பைல்களை இணைத்தப்பிறகு Check emails என்னும் பொத்தானை அழுத்தவும், பின் சில நொடிகளில் உங்களுக்கான முடிவு தெரிந்துவிடும். சரியான முகவரி எவைஎவை என்று, பின் தவறான முகவரியை நம்மால் எளிமையா முறையில் அறிந்து கொள்ள முடியும்.





இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். இணைய வசதியுடன் எந்ததெந்த மின்னஞ்சல் முகவரிகள் போலியானவை என்று எளிமையான முறையில் கண்டறிந்து கொள்ள முடியும். இந்த மென்பொருள் வசதியில் மூலமாக டொமைன் மின்னஞ்சல் முகவரிகள் சரியானவைதான என்றும் அறிந்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாகும்.


Saturday, May 14, 2011

NET CONNECTION இல்லேன்னாலும் EMAIL பாக்கவும் அனுப்பவும் முடியும்

மடிக்கணணி வைத்திருப்பவர்கள் பயணம் செய்து கொண்டே மின்னஞ்சல் பார்த்து Reply கொடுக்க வசதியாக இருக்கும். முதலில் உங்கள் ஜிமெயில் லொகின் செய்து settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள்.

நீங்கள் இணைய இணைப்பு கொடுத்தவுடன் மின்னஞ்சல்கள் Desktopக்கு வந்து விடும். இதனால் இணைப்பு இல்லாத போதும் நாம் மின்னஞ்சல்களை பார்க்கலாம். அதே போல இணைப்பு இல்லாத போதும் மின்னஞ்சல் அனுப்பலாம்.
அவ்வாறு அனுப்பும் மெயில் Outboxல் தங்கி விடும் எப்போது இணைப்பு கொடுக்கிறோமோ அப்போது மின்னஞ்சல் சென்று விடும். 

இல்லாவிட்டால் http://tools.google.com/gears/ சென்று நிறுவிக் கொள்ளவும். பிறகு ஜிமெயில் more>> சென்று Labs என்பதை தேர்வு செய்யுங்கள். offline - enable கொடுத்து save செய்யவும். பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக் செய்து click next கொடுக்கவும்.

இதில் install offline access for gmailக்கு next button கிளிக் செய்யவும். அடுத்து கேட்கும் permission ஓகே கொடுக்கவும். ஜிமெயில் உங்கள் desktopக்கு வந்து விடும். உங்கள் மின்னஞ்சல்கள் அனைத்தும் உங்கள் கணணிக்கு தரவிறக்கம் ஆக தொடங்கும். இனி நீங்கள் இணைய இணைப்பு இல்லாமல் கூட மின்னஞ்சல்களை அனுப்பலாம்

Sunday, April 24, 2011

தொலைபேசியில் அனுப்புவதுபோன்று மின்னஞ்சலிலும் ஒலிச் செய்தியை(Voice Mail) நண்பர்களுக்கு அனுப்பலாம்



நண்பர்களுக்கு மின்னஞ்சலானது(E-Mail)அனுப்பும்போது எழுத்து வடிவிலேயே(Text Format)செய்தியை அனுப்புவதுண்டு. இதனால் அலுவலகத் தேவையுடையோர் தவிர ஏனைய பெரும்பாலானோர் மெயில்(Mail) அனுப்புவதில் அக்கறை கொள்வதில்லை. ஏனெனில் நினைக்கும் தகவல்கள் யாவற்றையும் முதலில் டைப்(Type) செய்யவேண்டும். அதிலும் பிரச்சனை ஆங்கிலத்தில் டைப் செய்வது. வசனப் பிழைகள் வருமென்ற அச்சம்.

ஆனால் தொலைபேசியில் அனுப்புவதுபோன்று மின்னஞ்சலிலும் ஒலிச் செய்தியை(Voice Mail) நண்பர்களுக்கு அனுப்பினால் எப்படியிருக்கும் என சிலசமயம் எண்ணியிருக்கலாம். இதனால் நேரமும் மிச்சமே.... உங்கள் எண்ணத்துக்கு பரிகாரமாகவே இவ் இடுக்கை அமைகின்றது.

நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவேண்டிய செய்தியை உங்கள் குரலில் பதிவு செய்து அனுப்ப வேண்டுமா?

இதற்கு நீங்கள் முதலில் கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்து அத் தளத்திற்கு செல்லுங்கள்...

http://vocaroo.com/

இப்போ கீழ் காட்டியவாறு அத் தளத்தின் முகப்பு காணப்படும். இங்கு சிவப்பு வட்டமிடப்பட்டு காட்டப்பட்ட “Click to Record” என்பதை கிளிக் பண்ணியபின் உங்கள் குரல் ஒலியை பதிவு செய்யவும். உங்கள் செய்தியைத் தெரிவித்து முடிந்ததும் “Stop” என்பதை கிளிக் பண்ணவும்.



இப்போ கீழ் உள்ளவாறான பக்கம் தோன்றும்.



இதில் பச்சை வட்டத்தால் காட்டப்பட்ட “Listen” என்பதைக் கிளிக் பண்ணி நீங்கள் பதிவுசெய்த செய்தி சரியா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளலாம். மாற்றவேண்டுமெனத் தோன்றின் சிவப்பு வட்டத்தால் காட்டப்பட்ட “Record Again” என்பதை கிளிக் பண்ணி மீண்டும் பதிவு செய்துகொள்ளலாம்.

மின்னஞ்சல் மூலமாக நண்பர்களுக்கு அனுப்பவேண்டின் நீல வட்டத்தால் காட்டப்பட்ட “Send to a Friend” என்பதையும்; உங்கள் வலைத்தளம் மூலமாக அனுப்பவேண்டின் மண்ணிற வட்டத்தால் காட்டப்பட்ட “Post on the Internet”என்பதையும் தெரிவு செய்யலாம். நீங்கள் “Send to a Friend” என்பதை தெரிவுசெய்திருப்பின் கீழுள்ள பக்கம் தோன்றும்.



இதில் “Your email” என்பதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் “Friend’s email(S)” என்பதில் அனுப்பவேண்டிய உங்கள் நண்பர்களின் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்து “Send” என்பதை அழுத்தினால் போதும். உங்கள் ஒலிச் செய்தி அவர்களுக்கு அனுப்பப்பட்டுவிடும்.

இனி நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்

Saturday, April 23, 2011

email முகவரியில் @ சின்னம் எப்படி வந்தது...?



ஒவ்வொருவருடைய மின் அஞ்சல் முகவரியிலும் "@" என்ற சின்னம் வருவது யாவரும் அறிந்ததே. இந்தச் சின்னம் எப்படிப் புழக்கத்தில் வந்தது?

மின் அஞ்சல் முகவரியில் முதன் முதலாக இந்த @ சிம்னத்தை உபயோகித்தது "ரே டாம்லின்ஸன்" (Ray Tomlinson) என்னும் ஒரு கம்ப்யூட்டர் பொறியாளர். இவர் 1971ஆம் ஆண்டு முதலில் தனக்குத் தானே ஒரு மின் அஞ்சலை இந்தச் சின்னத்தை உபயோகித்துஅனுப்பிக்கொண்டார்.

ஏன் இவர் இந்தச் சின்னத்தை தேர்ந்தெடுத்தார்? அவர் சொல்கிறார், " கீ போர்டில் அக்கரையுடன் பார்த்தேன் எவருடைய பெயரிலிலும் வராததும், குழப்பம் விளைவிக்காததுமாக சின்னம் இருக்கிறதா என்று, பின் இதைத் தேர்ந்தெடுத்தேன்." என்று சொன்னார்.
இந்த @ சின்னம் கம்ப்யூட்டர் கீ போர்டில் எப்படி இடம் பெற்றது? மொழி வல்லுனர்கள், எப்படி என்பதில், ஒத்துப்போகவில்லை. சிலர் நினைத்தனர், மத்திய காலத்தில் (Early Middle ages), துறவிகள் கையெழுத்துப் ப்ரதிகளை சிரமத்துடன் படிக்கும்பொழுது லத்தீன் மொழி வார்த்தை "ad", "at" or "towards" or "By" என்று பல அர்த்தங்களைக் கொண்டிருப்பதைக் கண்டனர்.

அநேக வல்லுனர்கள் இந்த @ சின்னம் சமீப காலத்தில், அதாவது 18ஆம் நூற்றாண்டில் புழக்கத்திற்கு வந்ததுதான், பொருட்களின் விலையை குறிப்பிட ஏற்பட்டதுதான் என்று வாதாடினர். அதாவது உதாரணமாக 10 பென்சுக்கு 5 ஆப்பிள் ("5 apples @ 10 pence." ).மற்றும் ஒரு மொழி வல்லுனர், ஆராய்ச்சியாளர் Denis Muzerelle சொல்கிறார், இது ஃப்ரெஞ்ச், ஜெர்மானிய, வியாபாரிகள் எழுத்து "a"யை வேகமாக உச்சரிக்கும் பொழுது ஏற்பட்ட திரிபு என்கிறார்.

ஆனால் ஜூலை மாதம் 2000 ஆண்டில் இத்தாலிய ஆரய்ச்சியாளர் ஒருவர், இந்த சின்னம் @ 14ஆம் நூற்றாண்டின் வியாபார தஸ்தாவேஜுகளில் இந்தக் குறி காணப்படுவதைக் கண்டுபிடித்தார். இந்தச் சின்னம் ஒரு அளவை the "anfora," or jar குறிக்க உபயோகிக்கப்பட்டது என்றார்.

Giorgio Stabile 1492ஆம் வருடத்திய லத்தீன் - ஸ்பானிஷ் அகராதியில் "anfora" என்பது "arroba" ( ஒரு நிறுவளளவை) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்தார். ஆகையால், 1885ல் வியாபரரீதியான "a" (the "commercial a") முதல் மாடலான அண்டர்வுட் தட்டச்சு மெஷினில் சேர்க்கப்பட்டது இயற்கையே.

80 வருடங்களுக்குப் பிறகு அங்கிருந்து ஸ்டாண்டெர்ட் கம்ப்யூட்டர் கேரக்டரில் (Such as ASCII) இடம் பெயர்ந்துவிட்டது. (It's therefore natural that, in 1885 the "commercial a" was included on the keyboard of the first model of Underwood typewriter and from there migrated into the standard set of computing characters (such as ASCII) 80 years later. )

தற்போதைய பிரச்சனை இந்த @ சின்னத்தை எப்படி உச்சரிப்பது? ஸ்பானியர்கள் இதை "arroba" என்றும், ஃப்ரெஞ்ச்காரர்கள் "arobase." என்றும், அமெரிக்கர்களும், பிரிட்டிஷாரும் "at-sign." என்றும், ஜெர்மானியர் ("at-Zeichen"), என்றும், எஸ்தோனியர் ("ät-märk") என்றும், ஜப்பானியர் ("atto maak"). என்றும் உச்சரிக்கிறார்கள்.


ஆயினும், அதிகமான பாஷைகளில், இந்த சின்னம், பலதரப்பட்ட உருவகம், பொதுப்படையாக, பிராணிகளுக்கு ஒப்பிட்ப்படுகிறது. ஜெர்மானியர், ஃபின்ஸ், ஹங்கேரியன், போல்ஸ், தெற்கு ஆப்பிரிக்கர்கள், இந்தச் சின்னத்தைக் குரங்க்கின் வாலாகப் பார்க்கிறர்கள். மற்றும் சிலர் நத்தைக்கு ஒப்பிடுகிறார்கள். இப்படியாகப் பலவிதம்.

மறைந்து போகும் இமெயில் கடிதங்கள்

கேள்வி: அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் என் மெயில்களைப் படித்தவுடன் அவை மறைந்து போகின்றன. திரும்ப கிடைக்க என்ன செய்திட வேண்டும். இவ்வாறு மறையாமல் இருக்க எப்படி செட் செய்திட வேண்டும்?
பதில் : இது என்னுடைய கம்ப்யூட்டரிலும் ஏற்பட்டது. இதில் இன்னும் என்ன அதிசயம் என்றால் ஒரு முறை சர்ச் மேற்கொள்கையில் இந்த மறைந்த அல்லது அழிக்கப் பட்டுவிட்டதாக எண்ணப்பட்ட அனைத்து மெயில்களும் காட்டப்பட்டன.

இது விநோதமாக இருந்தாலும் இதற்கான தீர்வு எளிதுதான்.

அவுட்லுக் எக்ஸ்பிரஸ் தொகுப்பில் முதலில் View/Current View செல்லவும். பின் "Show all messages" என்பதனை செலக்ட் செய்திடவும். அநேகமாக முதலில் "Hide Read Messages" என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். தண்டர்பேர்ட் தொகுப்பிலும் இந்த மறைக்கும் மற்றும் மறைக்காத வசதி உள்ளது.



படித்த மெயில்களை மறைப்பது ஒரு வகையில் நல்லதுதான். அப்போதுதான் நீங்கள் படிக்காத மெயில்கள் எவை என்று தெரியும்.

ஆனால் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும் என்றால் மேலே கூறிப்பிட்டுள்ள படி செட் செய்துவிட வேண்டியதுதான்.

Friday, April 15, 2011

உங்கள் GMAIL ACCOUNT - ம் HACK செய்ய படலாம். அப்படி HACK செய்யப்பட்டால் சுலபமாக மீட்கலாம்


முதலாவதா நீங்க உங்க கம்ப்யூட்டர் ல வைரஸ் இருக்கான்னு ஸ்கேன் பண்ணுங்க. நல்ல ஆண்டி வைரஸ் மட்டும் பத்தாது அத அடிக்கடி அப்டேட் பண்ணனும். பெரும்பாலும் உங்கள் அக்கௌன்ட் இதனால் தான் ஹாக் செய்யப்படும். அப்படி ஹாக் பண்ணிட்ட வர பிரச்சினைகளை எப்படி சமாளித்து நமது அக்கௌன்ட் ஐ திரும்ப பெறுவது??.

முதலாவதா கூகுள் ஹோம் பேஜில்  இருந்து உங்கள் அக்கௌன்ட்க்கு sign in ஆகுங்க இப்போ அக்கௌன்ட் செட்டிங்க்ஸ்ல நீங்க இருக்கணும்.


இதுல "Personal Settings " ல "Change password recovery options" இந்த பக்கத்துக்கு போங்க. இப்போ recovery email address ல உள்ள email id இப்போ நீங்க உபயோகிக்கிற உங்களோட இரண்டாவது அக்கௌன்ட் ஐ அதில் கொடுத்துடுங்க.

எப்போதும் பயன்படுத்துகிற உங்கள் மொபைல் நம்பர் மூலமாகவும் நீங்கள் உங்கள் recovery option ஐ செட் செய்ய முடியும். ஆனா முக்கியமான ஒன்று அந்த எண்ணை நீங்கள் எப்போதும் மாத்தவே கூடாது.

அடுத்தது security question , நீங்கள் ரொம்ப நாள் முன்னாடி உங்கள் அக்கௌன்ட் உருவாக்கி இருந்தால் இந்த கேள்வி அதில் இருந்திருக்காது(எனக்கும் இல்லை.)அந்த option ஐ நீங்கள் இப்போது உருவாக்கி கொள்ளுங்கள். இதில் நீங்கள் உங்களது சொந்த கேள்வியை கேட்டும் பதில் செட் செய்து கொள்ளலாம். எப்போதும் இதை மறந்து விட கூடாது.

இப்போது முடிந்து விட்டதா என்றால், இல்லை. ஏன் என்றால், இதை எல்லாம் உங்கள் அக்கௌன்ட் ஐ ஹாக் செய்பவன் மாற்றி விட வாய்ப்பு உள்ளது. இதை எல்லாம் மாற்றி விட்டால் பின்னர் எப்படி அக்கௌன்ட் ஐ திரும்ப பெறுவது ?

இதற்கு ஒரு form fill up செய்து கூகுள்க்கு அனுப்ப வேண்டும். அதில் நீங்கள் கூறியது எல்லாம் சரியாக இருந்தால் உங்கள் அக்கௌன்ட் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்??

உங்கள் account க்குள் நீங்கள் நுழைய முடியவில்லை என்றால் உங்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன.


1 . revovery ஈமெயில் அட்ரஸ் மூலம் உங்கள் அக்கௌன்ட் ஐ திரும்ப பெறலாம்.

2 . security question மூலம் பெறலாம்.

3 . account recovery form fill up செய்து பெறலாம்.


இதில் முதல் இரண்டு வாய்ப்புகளில் உங்களால் முடியவில்லை என்றால் நீங்கள் மூன்றாவது வழியை பயன்படுத்த வேண்டும். அந்த form கீழே உள்ளது.



இதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நாம் சரியாக தரும் பட்சத்தில் நாம் நம் அக்கௌன்ட் ஐ திரும்ப பெற முடியும்(நான் இதன் மூலம் தான் பெற்றேன்).வந்த பின் வருந்துவதை விட வருமுன் காப்பது சிறந்தது இல்லையா. எனவே நான் கூறப் போகும் விவரங்களை நீங்கள் முதலில் தயார் செய்து பாதுகாத்துக் கொள்ளவும்.

அதற்கான லிங்க்:  account recovery form


• உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் ஆரம்பித்த தேதியை நீங்கள் உங்கள் ஜிமெயில் இன் முதல் மெயிலில் சென்று குறித்து கொள்ளுங்கள்.

• இந்த gmail id மூலம் நீங்கள் பயன்படுத்திய google product களை பயன்படுத்த ஆரம்பித்த தேதி.

• இதுவரை கவனிக்க தவறினாலும் இனி குறித்து கொள்ளவும்

• உங்கள் வலைப்பூ முகவரி

• உங்கள் orkut profile முகவரி

• கடைசியாக வைத்திருந்த password .

• நீங்கள் அடிக்கடி(frequent ) தொடர்பு கொள்ளும் mail id க்கள்

• உங்கள் நான்கு label களின் name .


இந்த பதிவை நீங்கள் copy செய்து கொள்ளவும் இது உங்களுக்கு பின்னாளில் பயன்படலாம்.அந்த பக்கத்திற்கு சென்று பாருங்கள் ஏதேனும் புரியவில்லை என்றால் கேட்கவும்.

தொடர்பு  கொள்ள  

மெயில் id: krishnaprabu2710@gmail.com
phone: +91 9566887721

டிஸ்கி:
Contact information and problem details பாகத்தில் நீங்கள் கொடுக்க வேண்டியது உங்கள் புது ஜிமெயில் id. 

product information மற்றும் அதன் பின்னர் வரும் பகுதியில் இருந்து நீங்கள் உங்கள் ஹாக் செய்யப்பட id விவரங்களை  கொடுக்க வேண்டும்.  இதை மறந்து விடாதீர்கள்.

Saturday, April 9, 2011

கம்ப்யூட்டர் படை


சைக்கோ தாக்குதல் இப்படித்தான் இருக்கும் என்று கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது. போகிறபோக்கில் பொதுக் கிணற்றில் விஷத்தைக் கலப்பது, ரயில் தண்டவாளங்களைத் தகர்ப்பது என எந்த எல்லைக்கும் போவார்கள். விஞ்ஞானம் வேறு வளர்ந்துவிட்டதா? உட்கார்ந்த இடத்தில் இருந்தே சகலக் கலகமும் நடக்கிறது!
ஒரு வங்கியை முடக்குவது, அல்லது வெப்சைட்டு களைச் செயல் இழக்கச் செய்வது போன்ற காரியங் களை வேலையாகவே வைத்துக்கொண்டு சைக்கோத் தனமாகத் திரிகிறார்கள் சிலர். தேடுதல் வலைதளமான கூகுள் துவங்கி டிவிட்டர், ஃபேஸ்புக் வரை அத்தனை பழுத்த மரங்களுமே இப்படிப்பட்ட அட்டாக்கைச் சந்தித்து இருக்கின்றன. 2009-ம் ஆண்டில் இப்படி நடந்த ஒரு அட்டாக்கின் பாதிப்பில் இருந்து கூகுள் ஒரு சில நிமிடங்களிலேயே மீண்டுவிட்டது என்றாலும், டிவிட்டரும் ஃபேஸ்புக்கும் இதில் இருந்து மீள ஒரு சில மணி நேரங்கள் ஆயிற்று.
சைக்கோ நோயாளிகளின் கையில் இருந்த சைபர் அட்டாக் என்ற ஆயுதத்தை ஒரு சில அரசாங்கங்களே கையில் எடுக்கும் விபரீதமும் இருக்கிறது. கடல் படை, விமானப் படை, காலாட் படை பட்டியலில் சில நாடுகள் கம்ப்யூட்டர் அட்டாக்கையும் ஒரு தனிப் படையாகத் சேர்க்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. உதாரணம், சீனாவில் கூகுள் படும் பாடு. ‘சென்ஸார்’ என்ற பெயரில் அரசுக்கு எதிரான வார்த்தைகளைக்கூட காட்டக் கூடாது என்று சீன அரசு கூகுளைத் துவக்கத்தில் இருந்தே குட்டிக்கொண்டு இருந்தது. ஒரு கட்டத்தில் சீனா, மனித உரிமை ஆர்வலர்களின் இ-மெயிலை உளவுபார்க்கத் தொடங்க, பொறுத்தது போதும் எனப் பொங்கி எழுந்தது கூகுள்.

ஒரு நாட்டின் அரசாகவே இருந்தாலும் சரி, தங்களின்வாடிக்கையாளர்கள் அனுப்பும் அல்லது பெறும் கடிதங்களை உளவுபார்ப்பதைச் சகித்துக்கொள்ள முடியாது என்று சொல்லி, கூகுள் சீனாவில் இருந்து வெளியேறிவிட்டது. கூகுள் தரப்பு நியாயங்களை ஏற்றுக்கொண்ட அமெரிக்கா, சீனாவின் கட்டுப்பாடுகளையும் செயல்களையும் ‘புதிய பெர்லின் சுவர்’ என்று வர்ணித்துக் கண்டனம் செய்தது. சீனாவில் இருந்து வெளியேறிவிட்டாலும் சீன மொழி பேசும் தனது வாடிக்கையாளர்களுக்காக சீன அரசின் கட்டுப்பாடுகள் அவ்வளவாக இல்லாத ஹாங்காங்கில் இருந்தபடி கூகுள் இப்போது செயல்படுகிறது. ஆனால், சீனாவுக்குள் இப்போது யாரும் கூகுளைப் பயன்படுத்த முடியாதபடி சீன அரசு அட்டாக் பாண்டியாக மாறி அதைத் தடுத்துவிட்டது!

Friday, April 8, 2011

ஒரே நேரத்தில் மூன்று மின்னஞ்சல்களை திறக்க



கூகுள் ஜிமெயிலில் புதிய சிறப்பம்சமாக ஓரே நேரத்தில் இரண்டு மின்னஞ்சல் முகவரிகளில் நுழைந்து இரண்டு இன்பாக்ஸ்களை கையாளலாம்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது.
1. முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
2. நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்தவுடன் Settings செல்லவும். பின்பு Accounts and Import செல்லவும். பின்பு அங்கு இருக்கும் Google Accounts Settings செல்லவும்.
3. அங்கு Multiple Sign In என்பதற்கு நேராக off என்று இருக்கும். பின்பு Edit க்கு செல்லவும்.
4. பின்பு அங்கு On – Use multiple Google Accounts in the same web browser என்னும் Option தேர்வு செய்யவும். அதன் கீழ் இருக்கும் அணைத்து Option களையும் தேர்வு செய்யவும். பின்பு Save செய்துவிடுங்கள். ஒருமுறை Logout செய்யவும்.
5. பிறகு Login செய்யவும். பிறகு உங்கள் இன்பாக்சில் மேலே உங்கள் மெயில் மின்னஞ்சல் முகவரி அருகே ஒரு முக்கோணம் தலைகீழாக இருக்கும். அதை கிளிக் செய்தல் Sing in to Another Account என்று இருக்கும். அதை தேர்வு செய்தல் உடனே ஒரு விண்டோ திறக்கும்.
6. அங்கு உங்களுக்கு தேர்வையான அடுத்த மின்னஞ்சல் முகவரி மற்றும் Password தட்டச்சு செய்து நுழைந்தால் போதும். அடுத்த மின்னஞ்சலின் ஜிமெயில் இன்பாக்ஸ் உங்களுக்கு கிடைத்துவிடும்.
7. உங்களிடம் மூன்று ஜிமெயில் முகவரிகள் இருந்தால் மூன்றிலும் நுழைந்து. 3 இன்பாக்ஸ்களை கையாளலாம்.

Friday, January 7, 2011

உங்களுக்கு வரும் மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய முடியும்


நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துபவர் என்றால் உங்களுக்கு வரும் மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய முடியும். எளிய வசதி ஒன்றை பயன்படுத்தி ஜிமெயில் க்கு வரும் மின்னஞ்சலின் ஐபி முகவரி(Ip Address) மற்றும் மேலதிக தகவல்களை பெற முடியும்.

இன்பாக்ஸ் இல் உள்ள மின்னஞ்சலை திறக்கவும். வலது புறத்தில் உள்ள Reply என்பதின் பக்கமுள்ள கீழ் அம்புக்குறியை கிளிக் செய்தால் மேலும் சில வசதிகள் கொண்ட ஆப்சன்கள் கிடைக்கும். அதிலிருந்து Show Original என்பதை தேர்வு செய்யவும்.
உடனே வலையுலாவியில் இன்னொரு விண்டோ திறக்கப்படும். அதில் நமக்கு வந்த மின்னஞ்சலின் என்கோடிங் (Encoding)செய்யப்பட்ட தகவல்கள் அதில் காட்டப்படும்.

கீழ் உள்ள படத்தில் உள்ள வட்டமிட்டுள்ள பகுதியில் Received from என்ற வரியில்
நமக்கு வந்துள்ள மின்னஞ்சலை அனுப்பியவரின் ஐபி முகவரி எண் இருக்கும். அதை வைத்து ஒருவரின் ஐபி எண்ணை அறியலாம்.


அந்த ஐபி எண்ணை வைத்து தகவல்கள் பெற உதவும் வலைதளங்களின்(Tracing websites) மூலம் அது எங்கிருந்து வந்தது, நாடு, செர்வர் பெயர் போன்ற தகவல்களையும் பெற முடியும். www.cqcounter.com/whois தளத்தில் உங்களுக்கு வேண்டிய ஐபி எண்ணை கொடுத்து மேலதிக விவரங்களை பெறலாம்.

Wednesday, January 5, 2011

யூஸ் அண்ட் த்ரோ மின்னஞ்சல்

நீங்க ஒரு மின்னஞ்சல் கொடுத்த அதுக்கு ஒரு லொள்ளு மெயிலில் இருந்து கரைச்சல் மெயில் வரை அனுப்பி அவர் குஷிப்படுகிறார். அது பத்தாமல் அவர் லாக்கின் பண்ண தளத்துக்கு எல்லாம் உங்களையும் சேர்த்து இன்வைட் செய்வாரு மற்றும் புதிய புதிய ஸ்பேன் மெயிலைக்கூட விடாமல் முடிந்த அளவு பார்வேர்ட் செய்ய முயற்சியாவது செய்வார். அப்ப நம்ம தலைவரு புதுசு புதுசா முளைச்ச தளத்துக்கொல்லாம் தெரியாமல் கொடுத்திருந்த அந்த மின்னஞ்சலுக்கு புதுசு புதுசா யோசிச்சு மெயில் வரும்... நிற்க.


இப்படிப் பட்ட சூழலில் தற்காலிக மின்னஞ்சல்கள் துணைசெய்யும். யாஹூ மின்னஞ்சல் சேவையுடன் இந்த தற்காலிக மின்னனஞ்சல் வசதியை அறிமுகப் படுத்தியுள்ளார்கள். யூஸ் அண்ட் த்ரோ கப்பைப் போல மின்னஞ்சல் முகவரியை மாற்றிக் கொண்டே போகலாம். அடிப்படையில் உங்களைச் சார்ந்த பெயரிட்டுக் கொண்டு கடைசியில் ஏதேனும் எண்களைப் போட்டு முகவரிகளை உருவாக்கலாம் அல்லது உங்கள் விருப்பமே.

உதாரணத்திற்கு எனது யஹூக் கணக்கில் மேலும் ஒரு ellam_summa-test@yahoo.com என்று ஒரு கணக்கை உருவாக்குகிறேன். வேண்டிய தளங்களில் பதிவு செய்கிறேன், வேண்டியவருக்கெல்லாம் கொடுக்கிறேன். கொஞ்ச காலம் கழித்து அந்த மெயிலுக்கு தேவையில்லாத ஸ்பேன் வருகிறதென்றால் அதைப் அப்படியே லேபிள் போட்டு வரும் மின்னஞ்சல்களைப் பிரித்து தேவையான முகவரிகளை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். அதும் சில காலங்களில் யாரும் தேவையில்லை என்றால் அந்த முகவரியை அப்படியே அழித்தும் விடுகிறேன். எப்படி வசதி! மேலும் சில பல முகவரிகளை உருவாக்கி வெவ்வேறு தொடர்புகளுக்கும் நான் கொடுக்கலாம் இப்படி ellam_summa-friends@yahoo.com ellam_summa-jobs@yahoo.com ellam_summa-bloggers@yahoo.com இதில் கவனித்தால் நமது அடிப்படை பெயர் மாற்றாமல் கடைசிப் பெயரை மட்டும் மாற்றிக் கொள்ளலாம் அல்லது மொத்தமாக புதிய முகவரியையும் உருவாக்கலாம்.அதிக பட்சமாக 500 முகவரிகள் உருவாக்கிக் கொள்ளலாம்.


எப்படி?
யாஹூவில் நுழைந்தப் பின் அதன் வலது புற optionயை தேர்வு செய்யவும்

பிறகு Disposable Email address தொகுதியில் புதியதாக தற்காலிக முகவரியை உருவாக்க add செய்யவும்


அடுத்து வேண்டிய அடிப்படை பெயரைக் கொடுக்கவும் அடுத்த பகுதியில் குறியீடுகள் கொடுக்கவும் எல்லாம் உங்கள் வசதிக்கேற்ப


பிறகு சேமித்தப் பிறகு, அந்தப் பக்கத்தில் இந்த முகவரி சேர்ந்துக் கொள்ளும். இனி இந்த முகவரியை யாரிடமும் கொடுக்கலாம். இந்த முகவரிக்கு வரும் அஞ்சல்கள் தானாகவே ஸ்பேன் பெட்டிக்குப் போகும் அதனால் உங்கள் முக்கிய கணக்குக்கு எந்த தொந்தரவும் வராது. சரி, இந்த அஞ்சலுக்கு சிலர் வேண்டிய தகவல்களை அனுப்பினால் ஸ்பேன்னிலிருந்து அதை எப்படி பிரிப்பது?
அதற்கு பில்டர் எனப்படும் வடிப்பானை பயன்படுத்தலாம் அதற்கு முன் folderயை உருவாக்க வேண்டும். இங்கே சென்று புதிய போல்டரை சேர்த்து பெயரிட்டுக் கொள்ளவும்.

அடுத்து வடிக்கட்ட[filter] இங்கே சென்று filter -> add filter கொடுத்து போனாபோகுதுனு வடிப்பானுக்கு ஒரு பெயரைக் கொடுத்திட்டு
அனுப்புனர் வாரியாப் பிரிக்க sender கட்டத்தில் அனுப்புனர் முகவரியைப் போடவும் அல்லது
உங்கள் முகவரி வாரியாப் பிரிக்க recipient கட்டத்தில் உங்களின் தற்காலிக முகவரிகளில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்யவும் அல்லது
தலைப்பு வாரியாகப் பிரிக்க subject கட்டத்தில் வேண்டிய சொற்களைப் போட்டுக் கொள்ளவும்


கடைசியில் எந்த போல்டருக்கு அனுப்ப வேண்டுமோ அதை தெரிவு செய்யவும் கடைசியாக சேமிக்க மறக்காதீர்கள்.அவ்வளவே
இனி அந்த போல்டரில் நீங்கள் பிரித்த வகை அஞ்சல்கள் தானாக வந்து சேர்ந்துவிடும்

தேவையான போது இந்த தற்காலிக முகவரிகளை இந்த Disposalble Email address தொகுப்பில் மாற்றவும் அழிக்கவும் முடியும்பிற்சேர்க்கை:[தடங்கலுக்கு வருந்துகிறேன்.]

இப்போதுதான் கவனிக்கப் பட்டது. சில கணக்கிற்கு இந்த வசதி உடனடியாகத் தெரிவதில்லை, விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக கோரிக்கைக்கு வாடிக்கையாளர் உதவியையும் அணுகலாம். 'Disposable Email Addresses' வசதியைத் தரும் மற்றும் சில தளங்கள்.
இவை இலவசமானவைதான்
http://www.emailias.com/learning/faq2.php
http://www.e4ward.com/
www.gishpuppy.com


பதிவுக்கு ஓட்டுப் போடப் போறீங்களா?
நீங்க பாட்டுக்கு குத்துங்க நான்பாட்டுக்கு எண்ணுறேன்

Monday, December 27, 2010

ஜிமெயிலில் குறிப்பிட்ட மின்னஞ்சலை தடை செய்வது எப்படி?

தற்போதைய இணைய உலகில் மின்னஞ்சல் சேவை என்பது பலருக்கும் அவசியமான ஒன்றாகிவிட்டது. சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் கணக்கு வைத்திருக்கிறார்கள். மின்னஞ்சல் வைத்திருப்போருக்கு இருக்கும் பெரிய தொல்லை தங்களது நண்பர்களிடமிருந்து வருவதை விட விளம்பரங்கள் அடங்கிய மின்னஞ்சல்கள், Spam என்று சொல்லக்கூடிய குப்பை மின்னஞ்சல்களும் வருவதே. இந்த மாதிரி குப்பை மின்னஞ்சல்கள் அனுப்பும் நிறுவனங்கள் இணையத்தில் அங்கங்கே வெளியிடப்பட்டிருக்கும் நமது மின்னஞ்சல் முகவரிகளை சேகரித்து மொத்தமாக அனுப்புகின்றன.

மேலும் நமது மின்னஞ்சல் முகவரிகளை புதியவர்களுக்கு தெரியாத்தனமாக கொடுத்திருப்போம். தொல்லை செய்வதற்கு என இருக்கும் சிலர், பழகிய நண்பர்கள் கூட தேவையில்லாத ஆபாச மின்னஞ்சல்களை அனுப்பிவைப்பர். ஜிமெயில் கணக்கில் (Gmail Account ) குறிப்பிட்ட நபரின் மின்னஞ்சலையும் குறிப்பிட்ட தளத்திலிருந்து வரும் மின்னஞ்சல்களையும் எப்படி தடை செய்வது என்று பார்ப்போம்.


1. ஜிமெயில் கணக்கில் நுழைந்தவுடன் வலது மேல் ஒரத்தில் Create a Filter என்று இருக்கிறதா எனப்பாருங்கள். இல்லாவிட்டால் Settings -> Filters செல்லவும்.


2. பின்னர் From என்ற பெட்டியில் உங்களுக்கு வேண்டாத நபரின் மின்னஞ்சலை அடிக்கவும்.குறிப்பிட்ட தளத்திலிருந்து வரும் மின்னஞ்சல்களைத் தடுக்க “@amazon.com” இந்த மாதிரி கொடுக்கவும்.

ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்களைத்தடுக்க ஒவ்வொன்றுக்கும் இடையில் | குறியீடைக்கொடுக்கவும்.
(எ.கா) mail1@example.com | mail2@example.com

3. பின்னர் Next step என்பதைக் கிளிக் செய்யுங்கள். இதில் மின்னஞ்சல்களை என்ன செய்ய வேண்டும் எனக்குறிப்பிட வேண்டும்.


இதில் Delete it என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும். மேலும் வலது ஒரத்தில் உள்ள Also apply Filter to _ conversations below என்பதையும் டிக் செய்யவும். இதனால் ஏற்கனவே வந்த மின்னஞ்சல்களும் தானாகவே அழிந்துவிடும். பின்னர் Create Filter என்பதை கிளிக் செய்து உறுதிசெய்யவும்.

4. இதில் உள்ள இன்னொரு வசதி என்னவென்றால் குறிப்பிட்டவரின் மின்னஞ்சல்களை அழிக்க வேண்டாம்; அவற்றை ஒரு தொகுப்பாக போட்டு அதற்கு பெயரிட்டுக்கொள்ள Skip the inbox( Archive it) என்பதை தேர்வு செய்து Apply the label பகுதியில் வேண்டிய பெயரை கொடுத்துக்கொள்ளவும். இவை மொத்தமாக குறிப்பிட்ட பெயரில் சேமிக்கப்பப்பட்டிருக்கும்.


5. இன்னும் சில மின்னஞ்சல்களை இதே மாதிரி தடை செய்ய
“ | “ குறியீடைக்கொடுக்கலாம். அல்லது மீண்டும் Create a Filter கிளிக் செய்து
தடை செய்யலாம்.

நன்றி : பொன்மலர் பக்கம்

Monday, December 20, 2010

USE & THROGH E-MAIL

 
முன்பெல்லாம் சும்மா நடந்துபோவோர் திரும்பிப் பார்ப்பவருக்கெல்லாம் நமது மின்னஞ்சல் முகவரியை இனாமாக தந்துவிட்டு குஷிப்படுவோம், அவரும் அதைப் வைத்து என்ன செய்யவென தெரியாமல் 'துரை இங்கிலீஸ்' எல்லாம் பேசுதுன்னு போவாரு. ஆனா இப்ப இருக்கிறவுங்க அப்படியில்ல நீங்க ஒரு மின்னஞ்சல் கொடுத்த அதுக்கு ஒரு லொள்ளு  மெயிலில் இருந்து கரைச்சல் மெயில் வரை அனுப்பி அவர் குஷிப்படுகிறார். அது பத்தாமல் அவர் லாக்கின் பண்ண தளத்துக்கு எல்லாம் உங்களையும் சேர்த்து இன்வைட் செய்வாரு மற்றும் புதிய புதிய ஸ்பேன் மெயிலைக்கூட விடாமல் முடிந்த அளவு பார்வேர்ட் செய்ய முயற்சியாவது செய்வார். அப்ப நம்ம தலைவரு புதுசு புதுசா முளைச்ச தளத்துக்கொல்லாம் தெரியாமல் கொடுத்திருந்த அந்த மின்னஞ்சலுக்கு புதுசு புதுசா யோசிச்சு மெயில் வரும்... நிற்க.


இப்படிப் பட்ட சூழலில் தற்காலிக மின்னஞ்சல்கள் துணைசெய்யும். யாஹூ மின்னஞ்சல் சேவையுடன் இந்த தற்காலிக மின்னனஞ்சல் வசதியை அறிமுகப் படுத்தியுள்ளார்கள். யூஸ் அண்ட் த்ரோ கப்பைப் போல மின்னஞ்சல் முகவரியை மாற்றிக் கொண்டே போகலாம். அடிப்படையில் உங்களைச் சார்ந்த பெயரிட்டுக் கொண்டு கடைசியில் ஏதேனும் எண்களைப் போட்டு முகவரிகளை உருவாக்கலாம் அல்லது உங்கள் விருப்பமே. 

உதாரணத்திற்கு எனது யஹூக் கணக்கில் மேலும் ஒரு ellam_summa-test@yahoo.com என்று ஒரு கணக்கை உருவாக்குகிறேன். வேண்டிய தளங்களில் பதிவு செய்கிறேன், வேண்டியவருக்கெல்லாம் கொடுக்கிறேன். கொஞ்ச காலம் கழித்து அந்த மெயிலுக்கு தேவையில்லாத ஸ்பேன் வருகிறதென்றால் அதைப் அப்படியே  லேபிள் போட்டு வரும் மின்னஞ்சல்களைப் பிரித்து தேவையான முகவரிகளை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். அதும் சில காலங்களில் யாரும் தேவையில்லை என்றால் அந்த முகவரியை அப்படியே அழித்தும் விடுகிறேன். எப்படி வசதி! மேலும் சில பல முகவரிகளை உருவாக்கி வெவ்வேறு தொடர்புகளுக்கும் நான் கொடுக்கலாம் இப்படி ellam_summa-friends@yahoo.com ellam_summa-jobs@yahoo.com ellam_summa-bloggers@yahoo.com இதில் கவனித்தால் நமது அடிப்படை பெயர் மாற்றாமல் கடைசிப் பெயரை மட்டும் மாற்றிக் கொள்ளலாம் அல்லது மொத்தமாக புதிய முகவரியையும் உருவாக்கலாம்.அதிக பட்சமாக 500 முகவரிகள் உருவாக்கிக் கொள்ளலாம்.

எப்படி?
யாஹூவில் நுழைந்தப் பின் அதன் வலது புற optionயை தேர்வு செய்யவும்
பிறகு Disposable Email address  தொகுதியில் புதியதாக தற்காலிக முகவரியை உருவாக்க add செய்யவும்

அடுத்து வேண்டிய அடிப்படை பெயரைக் கொடுக்கவும் அடுத்த பகுதியில் குறியீடுகள் கொடுக்கவும் எல்லாம் உங்கள் வசதிக்கேற்ப

பிறகு சேமித்தப் பிறகு, அந்தப் பக்கத்தில் இந்த முகவரி சேர்ந்துக் கொள்ளும். இனி இந்த முகவரியை யாரிடமும் கொடுக்கலாம். இந்த முகவரிக்கு வரும் அஞ்சல்கள் தானாகவே ஸ்பேன் பெட்டிக்குப் போகும் அதனால் உங்கள் முக்கிய கணக்குக்கு எந்த தொந்தரவும் வராது. சரி, இந்த அஞ்சலுக்கு சிலர் வேண்டிய தகவல்களை அனுப்பினால் ஸ்பேன்னிலிருந்து அதை எப்படி பிரிப்பது?
அதற்கு பில்டர் எனப்படும் வடிப்பானை பயன்படுத்தலாம் அதற்கு முன் folderயை உருவாக்க வேண்டும். இங்கே சென்று புதிய போல்டரை சேர்த்து பெயரிட்டுக் கொள்ளவும்.
அடுத்து வடிக்கட்ட[filter] இங்கே சென்று filter -> add filter கொடுத்து போனாபோகுதுனு வடிப்பானுக்கு ஒரு பெயரைக் கொடுத்திட்டு 
  • அனுப்புனர் வாரியாப் பிரிக்க sender கட்டத்தில் அனுப்புனர் முகவரியைப் போடவும்  அல்லது
  • உங்கள் முகவரி வாரியாப் பிரிக்க recipient கட்டத்தில் உங்களின் தற்காலிக முகவரிகளில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்யவும் அல்லது
  • தலைப்பு வாரியாகப் பிரிக்க subject கட்டத்தில் வேண்டிய சொற்களைப் போட்டுக் கொள்ளவும் 

கடைசியில் எந்த போல்டருக்கு அனுப்ப வேண்டுமோ அதை தெரிவு செய்யவும் கடைசியாக சேமிக்க மறக்காதீர்கள்.அவ்வளவே
இனி அந்த போல்டரில் நீங்கள் பிரித்த வகை அஞ்சல்கள் தானாக வந்து சேர்ந்துவிடும் 

தேவையான போது இந்த தற்காலிக முகவரிகளை இந்த Disposalble Email address தொகுப்பில் மாற்றவும் அழிக்கவும் முடியும்
பிற்சேர்க்கை:[தடங்கலுக்கு வருந்துகிறேன்.]

இப்போதுதான் கவனிக்கப் பட்டது. சில கணக்கிற்கு இந்த வசதி உடனடியாகத் தெரிவதில்லை, விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக கோரிக்கைக்கு வாடிக்கையாளர் உதவியையும் அணுகலாம். 'Disposable Email Addresses' வசதியைத் தரும் மற்றும் சில தளங்கள்.
இவை இலவசமானவைதான்

Thursday, December 16, 2010

GMAIL BACKUP

ஜி-மெயிலை பேக்அப் எடுக்க!

      ஈ-மெயில் சேவையில் முதலிடத்தில் இருப்பது ஜிமெயில் நிறுவனம் ஆகும், இது கூகுள் நிறுவத்தின் ஈ-மெயில் சேவையாகும், ஈ-மெயில் என்றால் முன்னொரு காலத்தில் ஈ-மெயில் என்றாலே யாகூ மெயில் என்ற ஒரு நிலை இருத்து வந்தது. ஆனால் இப்போதோ பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு சிறப்பான ஈ-மெயில் சேவையினை வழங்கி வருகிறன. உதாரணமாக Gmail, Hotmail, Myway, Inbox.comRediff போன்ற நிறுவனங்கள் ஆகும். அதில் முதலிடத்தில் இருப்பது GMAIL ஆகும், இந்த ஈ-மெயில் சேவையின் மூலமாகவே பல்வேறு விதமான பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.

தினமும் பல ஈ-மெயில்கள் வரும், அதில் சில ஈ-மெயில்கள் மிகவும் முக்கியமானது ஆகும். அப்போது நமக்கு தெரிந்தோ, தெரியாமலேயோ நமது இன்பாக்சில் இருக்கும் ஈ-மெயிலை நீக்கி விடலாம். அப்போது நாம், பல தகவல்களை இழக்க நேரிடும். இது போனற சூழ்நிலையை தவிர்க்க  நமது இன்பாக்சில் உள்ள ஈ-மெயில்களை பேக்அப் எடுத்து வைத்திருந்தால் சமாளிக்க முடியும். இதற்கு Gmail-Backup என்னும் மெபொருள் உதவுகிறது.

மென்பொருளை பதிவிறக்க:Download


இந்த Gmail-Backup னை பதிவிறக்கி கணினியில் பதிந்துவிட்டு, ஒப்பன் செய்யவும் அதில் உங்களின் ஈ-மெயில் முகவரி, கடவுச்சொல் எந்த இடத்தில் Backup னை பதிய வேண்டிய இடத்தினை தேர்வு செய்து விட்டு பின் எந்த தேதியிலிருந்து எந்த தேதிவரை பேக்அப் எடுக்க வேண்டும் என்பதையும் உள்ளிட வேண்டும், பிறகு  Backup பொத்தானை அழுத்த வேண்டும். இனி உங்களின் மெயில்கள் பேக்அப் ஆக தொடங்க்கும், Restore செய்ய இதே வழிமுறையினை கையாண்டு எந்த இடத்தில் Backup தகவல் உள்ளதோ அதனை தேர்வு செய்து Restore பொத்தானை அழுத்த வேண்டும்.

அனுப்பிய ஈ-மெயில் ஓப்பன் செய்யப்பட்டதா, இல்லையா

தங்களின் கருத்துக்களை பரிமாறி கொள்ளவோ அல்லது வேறு அலுவலகம் தொடர்பான செய்திகளை பரிமாறிக்கொள்ளவோ, முக்கியமான பல்வேறு அலுவல்கள் அனைத்துமே தற்போது ஈ-மெயில் மூலமாகவே அனுப்பபட்டு பெறப்படுகிறது, முன்பெல்லாம் ஒரு செய்தியை பரிமாற்றம் செய்ய வேண்டுமெனில் தபால் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகத்தான் பரிமாறிக்கொள்ளும் சூழ்நிலை இருந்து வந்தது, ஆனால் தற்போதோ எந்த ஒரு செய்தியை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்றாலும் நாம் ஈ-மெயில் மூலமாகத்தான் பரிமாறிக்கொள்கிறோம். 

சாதாரணமாக நண்பர்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்புவதிலிருந்து, பெரிய அலுவல்கள் வரை அனைத்துமே ஈ-மெயில் மூலமாகத்தான் நடைபெறுகிறது, ஏனெனில் ஈ-மெயில்கள் அதிவிரைவாக செய்திகளை பரிமாறிக்கொள்ள பயன்படுகிறது. இவ்வாறு நாம் அனுப்பு ஈ-மெயிலானது பார்க்கப்பட்டதா, இல்லையா என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியாது, ஈ-மெயிலானது செல்லவில்லையெனில் மட்டுமே செய்திவரும் மற்றபடி நாம் அனுப்பிய ஈ-மெயில் திறக்கப்பட்டதா இல்லையா என்பதை நம்மால் அறிந்து கொள்ள இயலாது, இதை அறிந்து கொள்ள அருமையான நீட்சி உள்ளது, ஆனால் இந்த நீட்சியானது ஜி-மெயிலுக்கு மட்டுமே பொருந்தும்.

நீட்சியை பதிவிறக்க சுட்டி





இந்த நீட்சியானது, மொசில்லா பயர்பாக்ஸ், சபாரி, கூகுள் குரோம் போன்ற உலவிகளில், செயல்படக்கூடியது ஆகும், இந்த நீட்சியினை நிறுவிக்கொள்ளவும். பின் உங்களுடைய ஜிமெயில் முகவரியை ஒப்பன் செய்த உடன்  Email Oracle யை Allow செய்யவும். பின் நீங்கள் கம்போஸ் மெயில் சென்றவுடன் Track என்பதற்கு நேராக உள்ள செக்பாக்சில் டிக் செய்து Track Days னை குறிப்பிட்டு Send Track என்பதை கிளிக் செய்து ஈ-மெயிலை அனுப்ப வேண்டும்.



பின் நீங்கள் அனுப்பிய ஈ-மெயிலானது, எப்போது ஒப்பன் செய்யப்பட்டது என்பதை அறிந்து கொள்ள TrackedEmail என்பதை தேர்வு செய்து, தெரிந்து கொள்ள முடியும். இந்த சேவையின் மூலம் மாதத்திற்கு 20 ஈமெயில்களை மட்டுமே Track செய்ய முடியும். அதற்கு மேல் Track செய்ய வேண்டுமெனில் கட்டண சேவையின் மூலமாகவே Track செய்ய முடியும். இனி நாம் அனுப்பிய ஈ-மெயில் எப்போது ஒப்பன் செய்யப்பட்டது என்பதை நம்மால் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

Wednesday, December 15, 2010

ஜிமெயிலில் மிகவும் பயனுள்ள புதிய வசதி- Restore deleted Gmail Contacts

பெரும்பாலானவர்கள் உபயோகிக்கும் கூகுள் நிறுவனம் வழங்கும் ஜிமெயில் வசதியை பயன்படுத்துகிறோம். முன்பு இதில் நாம் தவறுதலாக நம்முடைய காண்டக்ட் லிஸ்ட்டை ஒட்டுமொத்தமாக டெலீட் செய்து விட்டால் அவ்வளவு தான் அந்த காண்டக்ட் லிஸ்ட் திரும்ப பெற மிகவும் சிரமம் பட வேண்டி இருக்கும். சில முக்கிய முகவரிகளை அழித்து விட்டால் நமக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும்.
இந்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டு ஜிமெயில் நிறுவனம் தற்போது புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளது. அதாவது நம்முடைய மெயிலில் உள்ள காண்டக்ட் லிஸ்ட் ஓட்டு மொத்தமாக டெலீட் செய்தால் கூட அடுத்த வினாடியே அதை திரும்பவும் கொண்டு வந்து விடலாம். ஆனால் நீங்கள் டெலீட் செய்து 30 நாட்களுக்குள் இருக்க வேண்டும்.

* உங்கள் ஜிமெயிலில் www.gmail.com அக்கௌன்ட்டில் நுழைந்து கொள்ளுங்கள். நுழைந்து Contact என்பதை க்ளிக் செய்யுங்கள்.


* படத்தில் காட்டியுள்ளதை போல Contacts என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
* அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் More Actions என்பதை க்ளிக் செய்யுங்கள்.

* அதில் குறிப்பிட்டு காட்டி இருக்கும் Restore contact என்பதை க்ளிக் செய்யுங்கள். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும்.

* இதில் உங்களுக்கு தேவையான கால இடைவெளியை தேர்வு செய்து Restore என்ற பட்டனை அழுத்துங்கள். முக்கியமானது இதில் அதிகபட்சமாக நீங்கள் 30 நாட்களுக்குள் டெலீட் செய்து இருந்தால் மட்டுமே முகவரிகளை திரும்ப கொண்டு வரமுடியும்
* நீங்கள் Restore பட்டனை அழுத்திய அடுத்த வினாடியே நீங்கள் தேர்வு செய்த கால இடைவெளிக்குள் அழித்த அனைத்து முகவரிகளும் வந்து விடும்.


* நீங்கள் வேண்டுமென்றே உங்கள் காண்டக்ட் லிஸ்ட் அழித்து திரும்பவும் கொண்டும் வரலாம் (என்ன காசா பணமா).

டுடே ஸ்பெஷல்: குரோம் நீட்சி
நாம் சில நம் இணைய பக்கங்களை Screen shot எடுக்க சில மென்பொருளோ அல்லது நம்முடைய கீபோர்டில் உள்ள Screenshot வசதியின் மூலமோ நாம் பயன்படுத்துகிறோம். அந்த வரிசையில் மிகவும் எளிமையான மிகவும் பயனுள்ள குரோம் நீட்சியை கூகுள் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இந்த படத்தில் உள்ள அனைத்து வேலைகளையும் இந்த நீட்சியின் மூலம் சுலபமாக செய்யலாம்.

Monday, December 13, 2010

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டாதா இல்லையா என்று அறிவது எப்படி ?



சில சந்தர்பங்களில் நாம் அனுப்பிய மின்னஞ்சல் திறந்து படிக்கப்பட்டதா அல்லது படிக்கப்படவில்லையா என்று அறிய வேண்டிய அவசியத்தில் இருப்போம் அவ்வாறு அறிவதற்கு உதவுவது தான் SpyPic என்ற இந்த இணையத்தளம். இது ஒரு இலவச சேவையாகும்.
இதன்
மூலம் நாம் அனுப்பும் மின்னஞ்சலை எந்த நாட்டில் இருந்து எத்தனை
மணிக்குப் படிக்கிறார், எத்தனை தரம் படிக்கிறார். அவர் மின்னஞ்சலை
படிக்கும் கணணியின் IP Address போன்ற தகவல்களை இந்த இணையத்தளம்
உடனுக்குடன் எமக்குத் தெரியப்படுத்தும்.

இதற்கு
நீங்கள் செய்யவேண்டியது மின்னஞ்சலை எழுதி முடிந்தவுடன் இந்த
இணையத்தளத்துக்கு சென்று உங்கள் மினஞ்சல் முகவரியையும் உங்கள்
மின்னஞ்சலுக்கான தலைப்பையும் கொடுக்க வேண்டும்

பின் Select your SpyPig tracking image என்ற இடத்தில் உள்ள எதாவது ஒரு படத்தினை தெரிவு செய்து Number of notifications to receive என்ற இடத்தில் உங்களுக்கு மின்னஞ்சல் பெறுபவர் எத்தனை முறை உங்கள்

மின்னஞ்சலைப் படிக்கும் போது உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதனையும் தெரிவு செய்யவும்

பின் கீழ் உள்ள click to activate my spypic என்ற
Button ஐக் click செய்யவும் அப்போது கீழ் உள்ள பெடடியில் நீங்கள் தெரிவு
செய்த படம் தோன்றும் அந்த படத்தினை ஒரு நிமிடத்துக்குள் Copy செய்து
நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலில் ஏதாவது ஒரு இடத்தில் paste செய்து அந்த
மின்னஞ்சலை சாதரண மின்னஞ்சல் போல் அனுப்பவும். அந்த மின்னஞ்சல் திறந்து
படிக்கும் போது உங்களுக்கு தகவல் அனுப்பப்படும்.

தள முகவரி : http://www.spypig.com/