Saturday, April 23, 2011

மறைந்து போகும் இமெயில் கடிதங்கள்

கேள்வி: அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் என் மெயில்களைப் படித்தவுடன் அவை மறைந்து போகின்றன. திரும்ப கிடைக்க என்ன செய்திட வேண்டும். இவ்வாறு மறையாமல் இருக்க எப்படி செட் செய்திட வேண்டும்?
பதில் : இது என்னுடைய கம்ப்யூட்டரிலும் ஏற்பட்டது. இதில் இன்னும் என்ன அதிசயம் என்றால் ஒரு முறை சர்ச் மேற்கொள்கையில் இந்த மறைந்த அல்லது அழிக்கப் பட்டுவிட்டதாக எண்ணப்பட்ட அனைத்து மெயில்களும் காட்டப்பட்டன.

இது விநோதமாக இருந்தாலும் இதற்கான தீர்வு எளிதுதான்.

அவுட்லுக் எக்ஸ்பிரஸ் தொகுப்பில் முதலில் View/Current View செல்லவும். பின் "Show all messages" என்பதனை செலக்ட் செய்திடவும். அநேகமாக முதலில் "Hide Read Messages" என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். தண்டர்பேர்ட் தொகுப்பிலும் இந்த மறைக்கும் மற்றும் மறைக்காத வசதி உள்ளது.



படித்த மெயில்களை மறைப்பது ஒரு வகையில் நல்லதுதான். அப்போதுதான் நீங்கள் படிக்காத மெயில்கள் எவை என்று தெரியும்.

ஆனால் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும் என்றால் மேலே கூறிப்பிட்டுள்ள படி செட் செய்துவிட வேண்டியதுதான்.

No comments:

Post a Comment