Saturday, April 23, 2011

கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க

இன்றைய சூழலில் கணணி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. ஒரே ஒரு கணணியை வைத்து கொண்டு நமது அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பதால் உலகளவில் கணணியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. கணணி இயங்க முக்கிய தேவைகளில் ஒன்று ஓபரேட்டிங் சிஸ்டம். இது தான் ஒரு கணணியின் அடித்தளம். 

இதில் சிறந்து விளங்குவது விண்டோஸ் எனப்படும் ஓபரேட்டிங் சிஸ்டம் ஆகும். இது பிரபல கணணி நிறுவனமான மைக்ரோசாப்ட்டால் உருவாக்கப்பட்டது. எந்த அளவில் கணணியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது.

நாம் இணையத்தில் உலவும் போதோ, ஏதேனும் தரவிறக்கம் செய்யும் போதோ அல்லது வேறு எதோ டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நம் கணணியில் புகுந்து நம் கணணியில் இருக்கும் முக்கியமான தகவல்களை முடக்கி கடைசியில் நம் கணணியையே செயலியக்க வைக்கிறது.

நாம் கணணியில் என்ன தான் ஆண்டி வைரஸ் போட்டிருந்தாலும் புதிய வைரஸ்கள் அவைகளை ஏமாற்றி நம் கணணியில் புகுந்து விடுகிறது. இது உலகளவில் உள்ள மிகப்பெரிய பிரச்சினையாகும்.



இவைகளை கருத்தில் கொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது Safety Scanner என்ற மென்பொருளை உருவாக்கி பயன்பாட்டிற்கு விட்டுள்ளது. இது 100% இலவச மென்பொருளாகும். மென்பொருளின் பயன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இதனை இலவசமாக இந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது. 

ஏற்கனவே நம் கணணியில் ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் நிறுவி இருந்தாலும் இந்த மென்பொருள் வேலை செய்யும். ஆகவே பழைய ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை நீக்க வேண்டியதில்லை. இது வைரஸ் மட்டுமல்லாது கணணியில் உள்ள மால்வேர், ஸ்பைவேர் ஆகியவைகளையும் கண்டறிந்து நீக்குகிறது. 

இந்த மென்பொருளை விண்டோஸ் XP முதல் அதற்கடுத்து வந்த விஸ்டா, விண்டோஸ் 7 ஆகிய கணணிகளில் பயன்படுத்தலாம். முதலில் தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதன் பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும். 

இதில் உங்கள் கணனியின் பதிப்பை கிளிக் செய்தால் போதும் இந்த மென்பொருள் உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்யப்படும். தரவிறக்கம் முடிந்தவுடன் இந்த மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவச் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள். இந்த மென்பொருள் 10 நாட்கள் வரை உபயோகத்தில் இருக்கும்.

பின்னர் செயல் இழந்து விடும். இதை மீண்டும் பயன்படுத்துவதற்கு இந்த மென்பொருளை திரும்பவும் நிறுவ வேண்டும். இந்த மென்பொருள் செயல்பாடு அனைவருக்கும் பிடித்துள்ளதா என கண்டறியவே இது போன்று வைத்துள்ளனர்.

இரண்டாவது முறை இந்த மென்பொருளை எவ்வளவு பேர் தரவிறக்கம் செய்கிறார்கள் என்பதை பொறுத்தே இந்த மென்பொருளின் தரம் நிர்ணயிக்கப்பட இருக்கிறது. தரவிறக்கம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் மேலும் பல மாற்றங்கள் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தரவிறக்க சுட்

1 comment:

  1. நல்ல முயற்சி
    தேவையான பகிர்வு
    பதிவிறக்க முகவரியையும்
    ஹைபர்லிங்காகக் கொடுத்திருக்கலாமே நண்பா.

    ReplyDelete