Wednesday, January 5, 2011

கலர் கலர் வாசனைகள்

எங்கோ பச்சைக்கொடிக்
காட்டப்பட்டதால்
காடுகள் ஒடிக்கப்பட்டு
மழைக்குச் சிவப்புக்கொடி
செய்யப்படுகிறது


அணைகள் கட்டும் கல்லில்
வெள்ளைச்சட்டை வேந்தருக்கு
சிலைகள் கட்டிவிட்டு
கருப்புச்சட்டையணிந்து நீருக்கு
கலகம் செய்யப்படுகிறது

மஞ்சள் விளக்குப் போட்டாலும்
மதிக்காமல் விரைகிறோம்
சிவப்பு விளக்குப்போட்ட
வாகனத்தில் மருத்துவம் சேருகிறோம்

பனிச்சறுக்கல்களில் மஞ்சள் சூரியனால்
நடத்தப்படும் விரிச்சல்களும் வெடிப்புக்களும்
யாரோ ஒருவர் வீட்டில் திறக்கப்படும்
நீலநிற ஓசோன் குளிருட்டிக்குத் தெரியாது.



அப்பா தூக்கிப் போட்ட
வெளிர் சிவப்பு பாலத்தீன் பைகளால்
வரண்டுவிட்டது அந்த கண்மாய்
மகன் வீட்டு வெள்ளி நிற தண்ணீர் குழாய்களின்
வெளித் துவாரங்களைப் போல

No comments:

Post a Comment