ஜப்பான் நிகழ்வின் ஒரு மணி நேரத்துக்குள், அமெரிக்க அரசின் கால நிலை சேவை வலைதளம், சுனாமி அலைகள் எத்தனை மணிக்கு கலிஃபோர்னியா கடற்கரையை வந்தடையும் என்பதைச்சொல்ல, சான்பிரான்சிஸ்கோ பகுதிக்கு சுனாமி அலர்ட் அறிவிக்கப்பட்டது.
சில இடங்களில் மக்கள் தாமாகவே வெளியேற, கடலுக்கு மிக அருகில் வாழும் சிலர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டனர். இந்த விழிப்பு உணர்வால், சாண்டா குரூஸ் போன்ற சில இடங்களில் சிறிய அளவே பொருட்சேதம் உண்டானது. இது போலவே வசதி இருந்தால், ஐந்து வருடங்களுக்கு முன் இந்தோனேஷிய நிலநடுக்க சுனாமியில் இருந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம் என்ற சோக உணர்வு எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை. அடுத்த சில மணி நேரங்களில் ஜப்பானில் இருந்து வரத் தொடங்கிய புகைப்படங்களும், வீடியோக் களும் நெஞ்சைப் பிசைந்தன.
இதில் நான் முக்கியமாகக் கவனித்தது, இதுபோன்ற தருணங் களில் இணைய தொழில்நுட்பத்தின் மிகப் பெரிய பலன். ஹாலிவுட்டில் இருந்து, கோலிவுட் வரை பல படங் களில் இந்தக் காட்சியை நீங்கள் பார்த்திருக்கலாம். அழிவு நிகழ்ச்சி ஒன்று நிகழ்கிறது. மக்கள் தெருக்களில் கூடி நின்று கடைகளின் ஷோரூமில் வைக்கப்பட்டு இருக்கும் டி.விபெட்டி களில் வெளியிடப்படும் செய்தி களைப் பார்க்கிறார்கள். இன்னொரு விதத்தில் சொல்லப்போனால்,மீடியா தகவல் கொடுக்கிறது, மக்கள் பார்க் கிறார்கள். மீடியாவுக்கு மக்களை விட வலிமையான தகவல் தொடர்பு சாதனங்கள் இருப்பதால், இதுதான் இயல்பாக நடக்க முடியும். இணையம் மொபைல் தொழில்நுட்பம் பரவலாக வளர்ந்துவிட்ட இந்த நாட்களில், இது தலைகீழாக மாறி வருவது தெரிகிறது. மக்கள் தங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைத் தகவலாகச் சேகரித்துப் பகிர்ந்துகொள்ள traditional மீடியா அதைப் பயன்படுத்திக்கொள்கிறது. இதில் பயன்படுத்தப்பட்ட குறிப்பிட்ட சில தொழில்நுட்பங்களை/வலைதளங்களைப் பார்க்கலாம்...
ustream.tv: ஒரு Webcam, ஓரளவுக்கு வேகம் கொண்ட இன்டர்நெட் இணைப்பு - இவை இரண்டும் இருந்தால், யார் வேண்டுமானாலும், நிகழ்நேரத்தில் (Real Time) ஒளிபரப்ப முடியும் என்பதுதான் ustream.tv தளத்தின் அடிப்படை. சமீபத்தில் இந்த நிறுவனம் மொபைல் மென்பொருளை வெளியிட, கேமரா போன் இருந்தால் போதும், நீங்கள் நடமாடும் டி.வி நிலையமாகிவிட முடியும். ustream.tv-யைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உறவினர், நண்பர்களிடம் தாங்கள் சிக்கிக்கொண்ட இடத்தின் நிலைமைகளைக் காட்ட முடிந்தது!

Youtube: மிக எளிதாகக் காணொளிகளைப் பதிவேற்றம் செய்ய முடிகிறது என்பதால், நுகர்வோர் தயாரிப்பு வீடியோ என்றாலே யூ டியூப் என்றாகிவிட்டது. நிலநடுக்கம் நடந்துகொண்டு இருக்கும்போதும், நடந்து முடிந்ததும், சுனாமி அலைகள் கரை கடந்து வருவதையும், கார்/படகு/வீடுகள் எனச் சரமாரியாக வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்படுவதையும் காட்டும் வீடியோக்களின் எண்ணிக்கை பல நூறைத் தாண்டும். யூ டியூபில் 'Japan earthquake 2011’ என்பதைத் தேடிப் பார்த்தால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாகத் தெரிய வரும்!


இதுபோன்ற நன்மைகள் ஒருபுறம் இருக்க, இதே தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிகம் பேரை விரைவில் தொடர்புகொள்ள முடியும் என்பதால், விஷமிகள் பரபரப்பான வதந்திகளைப் பரப்ப இவற்றைப் பயன்படுத்திய எரிச்சலும் நடந்தேறியது.
குறிப்பாக, பிலிப்பைன்ஸ் நாட்டில் அமில மழை பெய்யப்போவதாகக் கூறும் இ-மெயில் பரபரப்பை ஏற்படுத்த, அதைக் கட்டுக்குள் கொண்டுவர ரொம்பவும் சிரமப்பட்டது அந்த நாட்டு அரசு. 'குறுஞ்செய்தி, இ-மெயில் மற்றும் இணைய தளங்கள் வழியாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம்!’ என்று மீண்டும் மீண்டும் டி.வி, ரேடியோ, செய்தித்தாள் விளம்பரங்கள் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது. கட்டுப் பாடு இல்லாத இணையம் இப்படியும் விளைவுகளை உண்டாக்கும் என்ற உண்மையை உணர்த்தியது!
|
No comments:
Post a Comment