வாகை சூட வா படத்தில் என்னை அவமரியாதையாக நடத்தியதால் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டேன்’ என்றார் நடிகை சாந்தினி. ‘நாடோடிகள்’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தவர் சாந்தினி. இவர் கூறியதாவது: சினிமா தொழிலை வெறுக்கிறேன். எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமே இதற்கு காரணம். நாடோடிகள் படத்தில்தான் முதலில்

நடித்தேன். அப்போது நடிப்பை ரசித்தேன். அதன்பிறகு கசப்பான அனுபவங்களே மிஞ்சியது. ‘மதில்மேல் பூனை’ என்ற மலையாள படத்தில் நடித்தேன். 5 நாள் ஷூட்டிங்குக்கு ஒரு லட்சம் தருவதாக தயாரிப்பாளர் பிரபா கண்ணன் கூறி இருந்தார். ஆனால் பேசியபடி சம்பளம் கொடுக்கவில்லை. பாதிதான் கொடுத்தார்.
சற்குணம் இயக்கிய ‘வாகை சூட வா’ பட ஷூட்டிங்கில் பங்கேற்றபோது அவமரியாதையாக நடத்தப்பட்டேன். 4 நாட்கள் நடித்தால் மட்டும் போதும் என்று கூறி கால்ஷீட் பெற்றனர். ஆனால் ஒரு வாரம் இழுத்தடித்தார்கள். தங்குவதற்கு அறைகூட தரவில்லை. என்னிடம் கடுமையான வார்த்தைகளில் இயக்குனர் பேசினார்.
இதெல்லாம் என் மனதை பாதித்துவிட்டது. இத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு மலேசியாவுக்கு திரும்பி செல்கிறேன். புதிய படம் ஒன்றில் நடிக்க கேட்கிறார்கள். இனி நடிப்பதாக இல்லை. இவ்வாறு சாந்தினி கூறினார்.
|
No comments:
Post a Comment