.jpg)
இந்த விவகாரத்தில் ப.சிதம்பரம் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரவும் பிஜேபி முடிவு செய்துள்ளது.
மக்களவை தொடங்கியதும் கேள்வி நேரத்தின்போது, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசத் தொடங்கினார்.
அப்போது, அவருக்கு எதிராக பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். அவர் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை புறக்கணிப்பது என்றும் பிஜேபியினர் முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே, நாடாளுமன்றத்துக்கு வெளியே கருத்து கூறியதற்காக, ப.சிதம்பரம் மீது உரிமை மீறல் பிரச்னையைக் கொண்டுவர இருப்பதாக, பிஜேபி மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
இதே பிரச்னை, மாநிலங்களவையிலும் எதிரொலித்ததால், அவை நடவடிக்கைகள் வெகுவாக பாதித்தது.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனது பதவியை தவறாக பயன்படுத்தி தனியார் ஹோட்டல் நிறுவன உரிமையாளர் மீதான முதல் தகவல் அறிக்கையினை ரத்து செய்ய வைத்த விவகாரம், அண்மைக்காலமாக நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பி வருகிறது.
'டெல்லியைச் சேர்ந்த தனியார் ஹோட்டல் மற்றும் அதன் உரிமையாளர் குப்தா ஆகியோருக்கு வழக்கறிஞராக பணியாற்றிய ப.சிதம்பரம், மத்திய உள்துறை அமைச்சரான பிறகு அந்த நிறுவனத்தின் மீதான எஃப்.ஐ.ஆரை, ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளதால், ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும்,' என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
|
No comments:
Post a Comment