நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க உள்ளார். சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய கமல், விரைவில் ரஜினியுடன் இணைந்து நடிப்பதாக சூசகமாக குறிப்பிட்டார்.

இதற்கிடையில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடிப்பதற்கான பொருத்தமான ஸ்கிரிப்ட் ஒன்றை இயக்குனர் ஷங்கர் எழுதியுள்ளாராம். அனேகமாக அப்படத்தில் ரஜினி, கமல் இணையலாம் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ‘நண்பன்Õ பட ரிலீசுக்கு பிறகு ஷங்கர் வெளியிடுவார் என்று தெரிகிறது. இதற்கிடையில் ‘கோச்சடையான்Õ படத்தை மோஷன் கேப்சரிங் என்ற அனிமேஷன் தொழில்நுட்பத்தில் சவுந்தர்யா படமாக்குகிறார். இதற்கு 20 நாட்கள் மட்டுமே ரஜினியின் கால்ஷீட் தேவைப்படுகிறது.
இதன் ஷூட்டிங் முடிந்த பிறகு ரஜினி - கமல் பட வேலையை ஷங்கர் தொடங்குவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக இருந்த ‘ராணாÕ படத்தின் ஷூட்டிங் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தி படம் ஒன்றை இயக்க ரவிகுமார் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
|
No comments:
Post a Comment