Wednesday, December 21, 2011

ஏப்ரல் முதல் மின் கட்டணம் உயர்கிறது:


வரும் ஏப்ரல் மாதம் முதல் மின் கட்டணம் உயர்கிறது என்று மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் எஸ். கபிலன் தெரிவித்துள்ளார்.


கடந்த 2003ம் ஆண்டு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (மின்வாரியம்) மின் கட்டணத்தை உயர்த்தியது. அதன் பிறகு கடந்த 2010ம் ஆண்டு குறிப்பிட்ட சில பிரிவினருக்கு மட்டும் மின் கட்டணம் சிறிதளவு உயர்த்தப்பட்டது. இதனால் மின்வாரியத்திற்கு கடும் கடன் சுமை ஏற்பட்டது. இதையடுத்து மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான மனுவை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அது தாக்கல் செய்தது.

அந்த மனுவின் விவரம் கடந்த 2ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் மின் கட்டண உயர்வு எப்பொழுது அமலுக்கு வரும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் எஸ். கபிலனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது, 

மின்வாரியம் மின் கட்டணத்ததை உயர்த்துவதற்கான மனுவை தாக்கல் செய்தது. இந்த உத்த்சே புதிய கட்டண விவரம் ஏற்கனவே வெளியிடப்பட்டது. இது குறித்து மக்களின் கருத்துகளை கேட்டுக் கொண்டிருக்கிறோம். வரும் ஜனவரி மாதம் வரை மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க அவகாசம் உள்ளது. 

பிப்ரவரி மாதம் பல்வேறு நகரங்களில் பொது இடங்களில் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும். மக்களின் கருத்து, மின் வாரியத்தின் கடன் சுமை ஆகியவற்றை கருத்தில கொண்டு தான் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படும். மேலும் மாநில ஆலோசனை குழுவிடமும் கலந்தாலோசித்த பிறகு தான் புதிய கட்டணம் அறிவிக்கப்படும்.

இந்த நடைமுறைகள் மார்ச் மாத இறுதியில் நிறைவடையும் என்பதால் ஏப்ரல் மாதம் முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்றார்.

No comments:

Post a Comment