
அந்தச் செய்தி உண்மையா, இல்லையா என்பதல்ல விஷயம். ஒரு செய்தி உண்மையே ஆனாலும், அதைப் பதிப்பிப்பதன்மூலம் பிறருக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றால், அந்தச் செய்தியால் பொது நன்மை ஏதும் இல்லை என்றால், அப்போதுகூட மானநஷ்ட வழக்கு விதிக்கமுடியும். பொது நன்மை என்ற விஷயத்தின் பின்னால் நின்றுகொண்டு மட்டுமே தனிநபர்கள் தொடர்பான செய்திகளை பத்திரிகைகளில் வெளியிடமுடியும்.
அப்படிப் பார்க்கும்போது தினமலர் செய்தி முழு வதந்தி மட்டுமல்ல, முழு அவதூறும்கூட. பாதிக்கப்பட்ட அனைத்து நடிகைகளும் ஒவ்வொருவராக அந்தப் பத்திரிகையின்மீது வழக்கு தொடர்ந்து, பெருமளவு நஷ்ட ஈடு கேட்டிருக்கலாம். அதன் விளைவாக நடக்கும் வழக்குகளில் மேலும் பல ‘அசிங்கங்கள்’ வெளிவரலாம். அப்படி வருவதைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அல்லது மறைப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள் தாரளமாக வழக்கு தொடர்ந்திருக்கலாம். தினமலர் நிச்சயம் தோற்றிருக்கும்; நிறையப் பணத்தையும் இழந்திருக்கும்.
அப்படிச் செய்யாமல், நடிகர் சங்கத்தில் கூட்டம் போட்டு, கூட்டத்தில் நடிகர்கள் தங்கள் சுயரூபத்தைகாட்டினார்கள். நடிகர் சூர்யா “இந்த மாதிரி செய்தி எழுதுபவர்கள் ஈனப்பயல்கள்” என்றும், நடிகர் சத்யராஜ் “தினமலர் பொறுப்பாசிரியர் ஒரு வேசிமகன் என யாரெல்லாம் ஒத்துக்கொள்கிறீர்கள்?” என்றும், நடிகை ஸ்ரீபிரியா ” தினமலர் ரமேஷை அக்கா தங்கையோடுதான் பிறந்தாயா?” என்றும் கேள்வி எழுப்பினார்கள்.
அவர்கள் தொழில் அப்படி. அவுத்துப்போட்டால்தானே வாரிக்கட்டமுடியும்! அதற்காக பத்திரிகை விபச்சாரத்தையும் அங்கீகரித்துவிட முடியாது.
|
No comments:
Post a Comment