
விஜய் மதராசபட்டணம் படத்தை இயக்கி பிரபலமானார். பின்னர் விக்ரமை வைத்து தெய்வத்திருமகள் படத்தை எடுத்து வெளியிட்டார். இப்படத்தில் அமலா பால் முக்கிய கேரக்டராக நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதுகுறித்து அமலாபாலிடம் இரு தினங்களுக்கு முன்னர் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் தவிர்த்தார் அமலா. இந்நிலையில் டைரக்டர் விஜய் இதற்கு பதில் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கும் நடிகை அமலாபாலுக்கும் காதல் என வதந்தி பரவி இருப்பது வருத்தம் அளிக்கிறது. இதனால் என் குடும்பத்தினருக்கும் சங்கடம் ஏற்பட்டு உள்ளது. எனக்கும், அமலா பாலுக்கும் இடையே வெறும் நட்புதான் உள்ளது. வேறு மாதிரி தொடர்பு எங்களுக்குள் இல்லை. நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை.
எனது பணிகள் முழு நேரத்தையும் ஆக்கிரமித்து உள்ளது. அதிகாலை 2.30 மணி வரை வேலை செய்கிறேன். காதர் நவாஸ்கான் ரோட்டில் அமலாபாலுக்கு வீடு வாங்கி கொடுத்து இருப்பதாகவும், எனது பி.எம்.டபுள்யூ 5 சீரீஸ் காரை அமலாபால் உபயோகத்துக்கு கொடுத்து இருப்பதாகவும் வெளியான செய்திகளிலும் உண்மை இல்லை. நான் கஷ்டப்பட்டு உழைத்து எனது பெற்றோருக்கு வீடு வாங்கி கொடுத்துள்ளேன், என்று கூறியிருக்கிறார்.
|
No comments:
Post a Comment