
இதுகுறித்து கிரஹாம் நோர்ட்டன் ஷோவின்போது கேட் அளித்த பேட்டியில், அதிகாலை மணி 4.30 மணிக்கு நாங்கள் அனைவரும் எழுந்தோம். அப்போது திடீரென தீவிபத்து ஏற்பட்டு விட்டதாக சத்தம் கேட்டது. இதனால் நான் பயந்து போய் விட்டேன்.
தீவிபத்து நடந்த இடத்தை நோக்கி நான் விரைவாக ஓடினேன். அப்புறம்தான் யோசித்தேன், நம் மீது தீ பரவி விட்டால் என்ன செய்வது என்று. பிறகு எனது குழந்தைகளிடம் சென்று உள்ளே போய் கதவைப் பூட்டிக் கொள்ளுங்கள் என்று கூறினேன். அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனை வந்தது.
உடனே பெட்ரூமுக்கு ஓடினேன். ஒரு பிராவை எடுத்து அணிந்து கொண்டேன். அது எனக்கே வித்தியாசமாக இருந்தது. பின்னர் பிரா நம்மை காப்பாற்றாமல் போய் விடுமோ என்று நினைத்து ஒரு டி சர்ட்டை எடுத்து அணிந்தேன். பிறகு எனது குழந்தைகளை இழுத்துக் கொண்டு ஓடினேன். பின்னர் பிரான்சனின் தாயாரையும் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தேன் என்றார் கேட்.
|
No comments:
Post a Comment