Friday, December 31, 2010

ஷிட்னி ஷெல்ட்டன்



1911 ல் அமெரிக்காவில் பிறந்தவர்தான் எங்கள் ஷிட்னி ஷெல்ட்டன். திரைப்படங்கள், தொலைக்காட்சிச் தொடர்கள் போன்றவற்றிற்கு திரைக்கதை, வசனம் எழுதியதன் மூலம் பிரபலமான இவர் தனது 50வது வயதின் பின்னர் எழுதிய நாவல்கள் உலகை இவரை நோக்கிப் பார்க்க வைத்தது.


இவர் எழுதிய நாவல்களில் உலகப் புகழ் பெற்றது...
1. மாஸ்டர் ஒப் த கேம்
2. ரேஜ் ஒப் ஏன்ஞல்ஸ்
3. தி அதர் சைட் ஓஃப் த மிட் நைட்

இவர் ஒரு ஜூத இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் தாயார் ருசிய யூத இனத்தையும் தந்தை ஜேர்மன் ஜூத இனத்தையும் சேர்ந்தவர்கள்.

உலக யுத்தம் II ல் விமான ஓட்டியாகப் பணியாற்றினார் என்பதையும் குறிப்பிட வேண்டும். Dooms day conspiracy எனும் நாவலில் இதன் தாக்கத்தைக் காணலாம்.

The Naked Face எனும் முதலாவது நாவலை 1969 ல் எழுதினார். அடுத்த நாவல் The Other Side of Midnight விற்பனையில் சாதனை படைத்ததோடு, பல விருதுகளையும் பெற்றது.

இவர் நாவல்கள் ஒரு சாதூரியமான ஒரு பெண் பாத்திரத்தை நோக்கியே அல்லது சுற்றியே நடக்கும். ரமணிச்சந்திரனைப் போல இவருக்கும் பெண் வாசகிகளே அதிகம். திரைப்படங்களில் இல்லாத சுகந்திரம் நாவல் எழுதுவதில் கிடைப்பதால், நாவல் எழுதுவதையே தான் விரும்புவதாக கூறியிருந்தார்.

2005 ல் வெளி வந்த The other side of me, என்ற சுயசரித்தின்படி 17ம் வயதில் தற்கொலை முயற்சி செய்த போதும் அவரது தந்தையால் காப்பற்றப்பட்டாராம்.

இத்தனை சிறப்பான எழுத்தாளர் 2007ல் நியூமோனியாவால் பாதிக்கப்பட்டு இறையடி சேர்ந்தார்.

இவர் எழுதியுள்ள நாவல்கள்...
• The Naked Face (1970)
• The Other Side of Midnight (1973)
• A Stranger in the Mirror (1976)
• Bloodline (1977)
• Rage of Angels (1980)
• Master of the Game (1982) – வாசித்தாகி விட்டது
• If Tomorrow Comes (1985)
• Windmills of the Gods (1987)
• The Sands of Time (1988) – வாசித்தாகி விட்டது
• Memories of Midnight (1990)
• The Doomsday Conspiracy (1991) – வாசித்தாகி விட்டது
• The Stars Shine Down (1992)
• Nothing Lasts Forever (1994)
• Morning, Noon and Night (1995) – புத்தகம் வாங்கியாச்சு, ஆரம்ப்பிக்கணும்
• The Best Laid Plans (1997)
• Tell Me Your Dreams (1998)
• The Sky is Falling (2001)
• Are You Afraid of the Dark? (2004)
• Catoplus Terror

வாசித்த புத்தகங்களின் விமர்சனம் விரைவில்!!!

No comments:

Post a Comment