Wednesday, November 23, 2011

பெண்களின் நிர்வாண படங்கள் வைத்திருந்த கணவனை கொன்ற பத்தினி!

பெண் குழந்தைகளின் நிர்வாண படங்களை கணவன் தனது கம்ப்யூட்டரில் வைத்திருந்ததை கண்டுபிடித்த மனைவி ஆத்திரத்தில் அவரை சுட்டுக் கொன்றார். அவருக்கு 50 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் ஜோனா பின்ட்லே (41). இவருடைய கணவர் கேரி டிரோக்டான் (55). அமெரிக்க விமான படையில் அதிகாரியாக பணியாற்றியவர். இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறினர்.


மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியராக ஜோனா பணியாற்றினார். இந்நிலையில், கணவர் கேரியின் கம்ப்யூட்டரில் ஏராளமான பெண் குழந்தைகளின் நிர்வாண படங்கள் சேகரித்து வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் ஜோனா. இதுபற்றி கணவனிடம் தகராறு செய்தார். வாக்குவாதம் முற்றியதில், கைத் துப்பாக்கியால் கேரியை சுட்டார். மார்பில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார் கேரி. துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிர்த் தப்பினாலும், அவமானம் தாங்காமல் தன்னை தானே மீண்டும் சுட்டுக் கொண்டார் கேரி. இதில் அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து போலீசார் ஜோனாவை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். மேரிலேண்ட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. கணவனை கொல்ல முயற்சித்ததற்காக 30 ஆண்டு சிறை தண்டனையும், கொலை செய்வதற்கு கைத் துப்பாக்கி பயன்படுத்தியதற்கு அதிகபட்சம் 20 ஆண்டு சிறை தண்டனையும் என மொத்தம் 50 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஜோனா கூறுகையில், கணவரின் கம்ப்யூட்டரில் பெண் குழந்தைகளின் நிர்வாண படங்கள் சேகரித்திருப்பது குறித்து தகராறு செய்தேன். மனநிலை பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதாக அவர் கூறினார். திடீரென என்னை பலமாக தாக்கினார். அவரிடம் இருந்து தப்பிக்கவும், பயமுறுத்தவும் கைத் துப்பாக்கியால் தரையில் சுட்டேன். அவரை நான் கொலை செய்யவில்லை என்று மறுத்துள்ளார்.

No comments:

Post a Comment