Wednesday, November 23, 2011

செல்போன் எனும் பூதம்!

செல்போன் இன்றி நானில்லை
SMS அனுப்பாமல் இருப்பதில்லை
எனக்கொரு செல் இருக்கிறது
அது எனக்கே வில்லன் ஆகிறது..

(கத கேளு கத கேளு... சோகமான கத கேளு...)

"எங்க வீதியிலையே ராசாத்தி மாதிரி அழகா இருக்குறது என் மக மட்டும்தான். ரொம்ப விவரமான பொண்ணு. 'நான் உன்ன லவ் பண்றேன்னு’ சொல்ற பசங்ககிட்ட கூட பேசி அட்வைஸ் பண்ணி ஃப்ரண்ட்ஸ் ஆக்கிக்குவா. ஆனா கொஞ்ச நாளா என்னமோ ஆயிடுச்சு அவளுக்கு. எங்ககிட்ட சரியா பேச மாட்டேங்கறா.. என்ன ஆச்சுன்னு கேட்டா 'என்ன தனியா விடுங்க...ப்ளீஸ்னு’ எரிஞ்சு எரிஞ்சு விழுறா!"

"என் மகன் தம் அடிக்க மாட்டான், தண்ணி அடிக்க மாட்டான், பொம்பளப் பிள்ளைங்களை ஏறெடுத்தும் பாக்க மாட்டான். ஆனா, கொஞ்ச நாளா அவனோட நடவடிக்கைகளே சரியில்லை. ராத்திரி பூராவும் அவன் ரூம்ல பளிச் பளிச்னு விளக்கு எரியுது, அணையுது. என்னடாதுன்னு பக்கத்துல போயி பார்த்தா அசந்து தூங்கிட்டு இருக்குற மாதிரி நடிக்கிறான்"

"நல்லா படிச்சுட்டு இருந்த பையன் இந்த செமஸ்டர்ல மட்டும் நாலு அரியர்ஸ் வச்சிருக்கான். என்ன ஆச்சுடா உனக்குன்னு கேட்டா பதில் பேசாம பொசுக்குன்னு போயி கதவ சாத்திக்கறான். எங்களுக்கு ஒண்ணுமே புரியல. என்னமோ தப்பு நடக்குதுன்னு மட்டும் தெரியுது" 

இப்படிதான் சமீபகாலமா பெத்தவங்க பொலம்பிட்டு இருக்காங்க. இது ஒரு சில பெத்தவங்களோட பொலம்பல் கிடையாது பட்டி தொட்டியில இருக்குற பல லட்சம் பெத்தவங்களட குமுறல்.

இவங்களோட குமுறலுக்கு ஒரே காரணம் 'செல்போன்’. தாயோடும் பேசாத மௌனத்தை நீயே தந்தாய்

'எவன்டா கண்டுபுடிச்சான் இந்த எக்ஸாம, அவன் மட்டும் என் கையில மாட்டுனா'ன்னு படிக்கிற பசங்க கொந்தளிக்குற மாதிரி, கொஞ்ச நாளாவே செல்போன் கண்டுபுடிச்சவன தேடி அலஞ்சுட்டு இருக்காங்க பெத்தவங்க. 




பொண்ணுங்க அடக்க ஒடுக்கமா இருக்கணும்ங்கறதுக்காக குனிஞ்ச தலை நிமிராம நடக்கணும்னு சொல்வாங்க. ஆனா அடக்கத்துக்காக தலை குனிஞ்சு நடக்கற பொண்ணுங்களை விட செல்போன்ல மெசேஜ் அடிச்சுகிட்டே தலைகுனிஞ்சு நடக்குற பொண்ணுங்கதான் இப்ப ஜாஸ்தி. இப்ப இதுல பசங்களும் சேந்துட்டாங்க. குளிக்கும் போது, சாப்பிடும்போது, ரோட்ல நடந்து போகும் போதுன்னு எல்லா நேரத்துலையும் பொண்ணுங்க தலையும் பசங்க தலையும் குனிஞ்சேதான் இருக்கு. இவங்க குனிஞ்சிட்டே இருக்குறத பார்த்தா ஒரு சைடாவே தலை தொங்கிடும் போல இருக்கு.

இளசுங்களோட உள்ளங்கையில இந்த செல்போன் பண்ற அட்டகாசம் இருக்கே அய்யய்யய்யய்யோ... தெரிஞ்சும் தெரியாமலோ டீ-ஏஜ்ல இருக்குற பசங்களும் பொண்ணுங்களும் செல்போன் செயல்பாடுகளுக்கு அடிக்ட் ஆயிடுறாங்க. விடிய விடிய மெசேஜ், நள்ளிரவு ரகசிய கிசுகிசு, ஒரு மணி நேரத்துக்கு மேல மெசேஜோ அழைப்போ வராம போயிட்டா பரிதவிச்சு போறது, அவங்க செல்போனை வேற யாராவது எடுத்துட்டா பதறிப்போயி ஓடிவந்து கைப்பற்றத் துடிக்கும் பரபரப்புன்னு இளசுங்களோட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே செல்போன் இருந்துட்டு இருக்கு. அப்பா, அம்மா வாரக்கணக்குல ஊருக்கு போனா கூட அலட்டிகாதவங்க ஒரு மணி நேரம் செல்போன் கையில இல்லைன்னா உயிரையே பறிகொடுத்த மாதிரி ஆயிடுறாங்க.

செல்போன் பயன்பாட்டால் நடந்த சோகமான ஒரு உண்மைச் சம்பவம் இது! 

சில செல்போன்ல ஆண், பெண், கிளி, கார்ட்டூன்னு நாம விருப்பப்படுற மாதிரி நம்ம குரலை மாத்தி பேசுற வசதி இருக்கு. அந்த வசதியை பயன்படுத்தி, தன்னோட நெருங்கிய நண்பன் சித்தார்த்கிட்ட பெண் குரல்ல பேசியிருக்கான் அருண். 'இன்னிக்கு நீ ரொம்ப ஹேண்ட்சமா இருக்க’, 'நான் யாருன்னு மட்டும் கேட்காத, கிக் இல்லாம போயிடும்’, 'இன்னைக்கு சாயங்காலம் நம்ம காலேஜ் கேன்டினுக்கு பச்சை கலர் சுடிதார் போட்டுட்டு வருவேன். பாத்தாலும் சிரிக்காத, நானும் உன்ன கண்டுக்க மாட்டேன்'னு ஆசை வார்த்தைகள்ள பேசியிருக்கான் அருண். 

சித்தார்த் தன்கிட்ட பேசுறது ஒரு பெண்தான்னு நெனச்சு சந்தோஷத்தின் உச்சிக்கே போயிருக்கான். ஒரு கட்டத்துல சித்தார்த் நிஜமாவே அந்த கற்பனை காதலியை காதலிக்க, இந்த விஷயம் அருணுக்கு தெரிய வருது. இதுக்கு மேலையும் விளையாடினோம்னா சீரியஸ் ஆயிடும்ன்னு நெனச்சு அருண் சித்தார்த்கிட்ட உண்மையைச் சொல்லியிருக்கான். 

ஆனால், அருண் பொறாமையில பொய் சொல்றான், தன் காதலியை அபகரிக்க பாக்குறான்னு கற்பனைகளை ஓடவிட்டு, மனச் சிதைவுக்கு ஆளாகிட்டான். இன்னைக்கு அவன் நிலைமை படு மோசம். இப்ப அவன் மனநல மருத்துவமனைல இருக்கான்!

இது வெறும் சாம்பிள் சம்பவம்தான். இன்னமும் நாம் எதிர்பார்க்கவே முடியாத பிரச்னைகளுக்குள்ள மாட்டிகிட்டு தவிச்சிட்டு இருக்காங்க இளைஞர்கள். எல்லாத்துக்கும் காரணம் செல்போன்! செல்போன்!! செல்போன்!!!

இப்பல்லாம் டீன் - ஏஜ் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே குழந்தைங்ககிட்ட செல்போன் குடுத்து பழக்கி வச்சுடுறாங்க. பதிமூணு வயசு பையன் மாசத்துக்கு பத்தாயிரம் இருபதாயிரம்னு மெசேஜ் அனுப்புற மாதிரியான பூஸ்டர் கார்டை போட்டு, முப்பது நாள் முடியறதுகுள்ளையே அந்த பூஸ்டர் கார்டை முடிச்சுட்டு, இன்னொரு பூஸ்டர் கார்டு போட்டு மெசேஜ் அனுப்ப ஆரம்பிச்சுடுறான். 

விளையாடாம, சரியா தூங்காம, சாப்பிடாம, அம்மா, அப்பா கூட முகம் குடுத்து பேசாம இப்படியாக நாள் முழுக்க செல்போனை கையில வச்சுகிட்டு மெசேஜ் தட்டிகிட்டே இருக்குற வாழ்க்கை முறையிலதான் 'இந்தியாவின் வருங்காலத் தூண்கள்' இப்ப வாழ்ந்துகிட்டு இருக்காங்க.

இவங்க எப்பவும் செல்போனே கதின்னு இருக்காம ஒரு நாளுக்கு எத்தனை மணி நேரத்தை செல்போனுக்காக செலவு செய்யலாம்னு திட்டமிட்டு நேரத்தை செழவழிக்க கத்துக்கணும். விழிப்புடன் இருக்குற சமயத்துல ஒரு நாளைக்கு சில மணி நேரங்களையாவது 'நோ செல்போன் ஹவராக’ கழிக்க கத்துக்கணும்.

செல்போன் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க நாளுக்குநாள் மனிதனோட மூளை மழுங்கிட்டேதான் வருது. எத்தன பேருக்கு நம்ம வீட்டோட லேண்ட்லைன் நம்பர், ஃப்ரண்ட்ஸ் மற்றும் சொந்தக்காரங்க நம்பர் ஞாபகத்துல இருக்குதுன்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இன்னும் பலருக்கு அவங்களோட பர்ஸனல் நம்பரே ஞாபகத்துல இருக்காதுங்கறதுதான் வேதனையான விஷயம். வெளிய போயிருக்குற சமயத்துல செல்போன் சார்ஜ் இல்லாம சுவிட்ச் ஆஃப் ஆயிடுச்சுன்னா, போச்சு! அவ்வளவுதான்... வெளி உலகத்துடனான அவங்களோட தொடர்பு பவர்கட் ஆகுற மாதிரி டப்புன்னு கட் ஆகிடும். இப்படி 'செல்'லரிச்சு போயிட்டிருக்கு இளைய சமுதாயம்.

செல்போன்ங்கறது நாம மத்தவங்ககிட்டயும், மத்தவங்க நம்மகிட்டையும் பேசுறதுக்கு பயன்படுற ஒரு தகவல் தொடர்புசாதனம்தான். ஆனா கீபேட் தேய, கட்டை விரல் நோக, நிமிஷத்துக்கு நூறு மெசேஜ் பறக்க விடுறது, நைட் தூங்கும்போது போர்வைக்குள்ள மொபைல ஒளிச்சு வச்சு நைட் ஃபுல்லா மெசேஜ் அனுப்பி பார்வை கோளாறு உண்டு பண்ணிக்கறது, மணிக் கணக்கில் பேசி பேசி காதை டமாரமாக்கிக்கறதுன்னு பிறருடனான நம்மளோட தகவல் தொடர்பு அங்கங்களை நாமளே ஊனமாக்கிக்கிறோம். அதனால செல்போன் பயன்பாட்டில் மட்டுமே கவனத்தை சிதற விடாம, நல்ல நல்ல சிந்தனைகள்ள எண்ணங்களை சிறகடிக்க விட்டா நாமளும் நல்லா இருக்கலாம். நம்மள பெத்தவங்களும் சந்தோஷமா இருப்பாங்க!

No comments:

Post a Comment