
இந்த எண்ணங்களால் கொஞ்சம் நன்மையும் இருக்கிறது.தாழ்வு மனப்பான்மையில் விழாமல் இருக்க உதவும்.ஆனால் இது ஓரளவுக்கு இருந்தால் சரி.நான் சொல்வது மட்டுமே சரி என்பதுதான் பல நேரங்களில் பிரச்சினை.என்னுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்ற பிடிவாதம் உறவுகளில் சிக்கல்களை தோற்றுவித்து விடுகிறது.
நான் இவ்வளவு படித்திருக்கிறேன்,என் நண்பனோ,மனைவியோ மற்ற உறவுகளோ உலகம் தெரியாதவர்கள் என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள்.அது சரியாக கூட இருக்கலாம்.ஆனாலும் யாரும் எப்போதும் அறிவாளியாக இருப்பது சாத்தியமில்லை.அதே சமயம் மற்றவர்கள் உங்களைப்போலவே எல்லாம் தெரிந்த ஆட்களாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

வெளியில் வந்து ”என்னதான் பிரச்சினை?” என்றேன். வீட்டில் பணம் தராவிட்டால் எல்லாவற்றையும் அடித்து நொறுக்குகிறான், அடிக்கடி இப்படி ஆகிவிடுகிறது.எங்காவது வேலைக்கு சேர்த்தாலும் சில நாட்கள்கூட நிற்பதில்லை.நம்மைப்போல இல்லை.இங்கே வந்து சில வாரங்கள் ஆகிவிட்ட்து.மருத்துவரை பார்த்து பேசவேண்டும்’’ என்றார்.

வெளியில் வந்து அவரது பெற்றோரிடம் கூறியபோது தந்தை சோர்ந்து போனார்.பையனின் தாயார் கூறியது,இருந்து விட்டு போகட்டும்,நான் பார்த்துக்கொள்கிறேன்,அவனும் என் பிள்ளைதான்”. திறனில்லாத ஒருவரை எந்த தாயும் ஒதுக்கிவிடுவதில்லை.பல பெண்களும் திறனில்லாத கணவனுடன் வெற்றிகரமாக குடும்பம் நட்த்திக்கொண்டு இருக்கிறார்கள்.
உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்கலாம் என்பது உண்மைதான்.இருக்கட்டும்.ஆனால் மனிதர்கள் அனைவரும் ஒன்று போலவே படைக்கப்பட்டவர்கள் அல்ல!ஒவ்வொருவருக்கும் சிந்திக்கும் திறன்,புரிந்துகொள்ளும் திறனில் வேறுபாடு இருக்கிறது.நான் சொல்வதே சரி என்பது எப்போதும் இருக்காது.சில காலங்களில் அது மாறிப்போகலாம்.வளைந்து கொடுப்பது சரியானதுதான்.ஆனால் அது தனிமனிதனுக்கோ,சமூகத்துக்கோ கெடுதலை ஏற்படுத்தக்கூடாது.
|
mana pakkuvam thaan ellaa pirachchanaiyaiyum theerkkum...vaalththukkal
ReplyDelete