
இது குறித்து, சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வலி மற்றும் மயக்க மருந்தியல் நிபுணர் டாக்டர் கார்த்திக் பாபு நடராஜனிடம் பேசினோம்.
'எந்த ஒரு அறுவை சிகிச்சை என்றாலும், அனஸ்தீஷியா கொடுக்காமல் செய்யவே முடியாது. முன்பு மயக்க மருந்தை உடல் முழுவதுக்கும் கொடுப்பார்கள். அதனால் உடல் முழுக்கவே உணர்ச்சி இருக்காது. இதை பொது அனஸ்தீஷியா என்று சொல்வோம். இதை அடுத்து வந்ததுதான் ரீஜனல் அல்லது லோக்கல் அனஸ் தீஷியா. இந்த முறையில், எந்தப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமோ, அந்தக் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மரத்துப்போகச் செய்வோம். உதாரணத்துக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அந்த இடத்தில் மட்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், அந்தப் பகுதிக்கு உரிய நரம்பைத் தேடிப் பிடித்து அதில் லோக்கல் அனஸ்தடிக் கொடுத்தால் போதும். கைப் பகுதி முழு வதும் மரத்துப்போகும். உடனே அறுவை சிகிச்சை செய்யலாம். இதனால், உடல் முழுமைக்கும் மயக்க மருந்து கொடுப்பது தேவையற்றதாகி, செலவும் குறைந்து போனது.
அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் தொடர்ந்து குறிப்பிட்ட காலம் வரை, கொஞ்சம் கொஞ்சமாக நோயாளிக்கு உணர்வு நீக்க மருந்தைச் செலுத்த வேண் டும். அப்போதுதான் நோயாளிக்கு வலி உணர்வு இருக்காது. இதய அறுவை சிகிச்சை போன்ற மேஜர் சர்ஜரிகளில் உணர்வு நீக்க மருந்தைத் தொடர்ந்து செலுத்தும்போது, புண் ஆறுவது விரை வாகிறது. அதனால், மருத்துவமனையில் தங்க வேண்டிய நாட்களின் அளவு குறைகிறது.
ஒரு சில வலிகளை நீக்குவதற்காக காலையில் அட்மிட் ஆகி, முற்பகல் அறுவை சிகிச்சை முடிந்து, மாலை வரை ஓய்வெடுத்த பிறகு வீட்டுக்குச் செல்வதை 'டே கேர்’ என்று சொல் வோம். இந்த சிகிச்சை முறை மேலை நாடுகளில் பல ஆண்டுகளாக இருக்கிறது என்றாலும் நம் நாட்டுக்கு வந்து ஒன்றிரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றன. மருத்துவமனையில் தங்கும் நேரம் குறைவதால் நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து, செலவும் குறைகிறது. வேலைக்குச் செல்லாமல் விடுப்பு எடுக்கும் நாட்களின் அளவும் குறைகிறது. பெரும்பாலும் இந்த சிகிச்சைக்கு ரீஜனல் அனஸ்தடிக் முறையே பயன்படுத்தப்படுகிறது.

உதாரணத்துக்கு, கை மரத்துப்போக வேண்டும் என்றால் அதற்கான நரம்பு கழுத்துப் பகுதியில் உள்ளது. அது மிக முக்கியமான பகுதி. அங்கே துல்லியமாகப் போடாவிட்டால், அருகே இருக்கும் ரத்தக் குழாய், மூச்சுக் குழாயில் ஊசி போட்டுவிடுவதற்கான வாய்ப்பு அதிகம். தவறு தலாக ஊசி போட்டுவிட்டால், வேறு மாதிரி யான பிரச்னை, பாதிப்பு ஏற்படும்.
இந்தச் சிக்கலைத் தீர்க்கும் வகையில், தற்போது இரண்டு புதிய தொழில்நுட்பங்களை மயக்க மருந்தியல் துறையில் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறோம். முதலாவது அல்ட்ராசவுண்ட், இரண்டாவது நெர்வ் ஸ்டிமு லேட்டர்.
அல்ட்ராசவுண்ட் இயந்திரத்தை கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளின் உடல் உள் உறுப்புகளின் செயல்பாடுபற்றி அறிந்துகொள்வதற்காக இது வரை பயன்படுத்தினார்கள். இப்போது அந்தக் கருவியை மயக்க மருந்தியல் துறையிலும் பயன் படுத்துகிறோம். அறுவை சிகிச்சை செய்யப்படும் நோயாளியை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்தபடியே, உணர்வு நீக்க மருந்து செலுத்து வதற்காக ஊசியை உள்ளே செலுத்தி, அது குறிப்பிட்ட நரம்பைத்தான் அடைந்துள்ளதா என்பதை உறுதி செய்த பிறகே, மருந்து செலுத்தப்படும்!
இதே போன்று நெர்வ் ஸ்டிமுலேட்டர் என்ற கருவி மூலம், கைப் பகுதி மட்டும் மரத்துப்போக வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட நரம்பு பகுதியில் ஊசியைக் கொண்டுசெல்வோம். அதன் முனையில் மைக்ரோ அளவுக்கு மின்சாரம் செலுத்தப்பட்டு இருக்கும். அதனால் சரியான நரம்பைத் தொட்டதும் கை அசையும். இதன் மூலம் சரியான நரம்பை அடையாளம் கண்டு மருந்தை செலுத்தி அந்தப் பகுதியை மட்டும் மரத்துப்போகச் செய்வோம். இந்த இரண்டு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்து வதன் மூலம் வெற்றி விகிதம் 98 சதவிகிதமாக அதிகரித்துவிட்டது. மற்ற உறுப்பு மண்டலம் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. எதிர் காலத்தில், தொடர்ந்து மருந்து செலுத்தும் அனுபவத்தின் மூலம் வெற்றி விகிதம் 100 சதவிகிதத்தைத் தொட்டுவிடும் என்று உறுதி யாகச் சொல்லலாம்...'' என்றார்.
|
No comments:
Post a Comment